Baby Care
11 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பொதுவாக கைக் குழந்தைகள் இரவு நேரத்தில் தூங்காமல் அப்படி இப்படி புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் குழந்தையும் அவ்வாறு இருந்தால் நீங்கள் இதனை சரிசெய்வதற்கு கண்டிப்பாக ஏதாவது செய்யத் தான் வேண்டும்.
ஒரு தாயாக நீங்கள் உங்கள் குழந்தை எப்படி, எப்போது தூங்குகிறது என்பதை முதலில் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தையை தூங்க வைக்க டிப்ஸ் தேடுகிறீர்களா? அப்படி என்றால் இந்த நிரூபிக்கப்பட்ட குறிப்புகள் உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும்.
வயிற்றுக்குள் இருந்து வெளிவந்த குழந்தைக்கு எல்லாமே புதிதாகத் தான் இருக்கும். அவர்கள் புரோகிராம் செய்யப்பட்டு பிறப்பதும் இல்லை. அதாவது அவர்களின் 'சர்காடியன் இசைவு' அல்லது அவர்களின் தூக்கம்-முழிப்பு சுழற்சியானது இரவு பகலுடன் ஒத்துப்போகாமல் இருக்கும். அதற்கு ஏற்றவாறு அவர்களை மாற்றுவது என்பது முழுக்க முழுக்க உங்கள் அதாவது தாயின் கையில் தான் உள்ளது. அதனால் குழந்தையை தினமும் கொஞ்ச நேரம் காலை வெயில் படும்படி பார்த்துக் கொள்வது அவசியமாகும். பரபரப்பான சூழலில் நாம் தினமும் செய்யும் அன்றாட வேளைகளில் அவர்களையும் முடிந்த வரை ஈடுபடுத்த வேண்டும். அதே போல் மாலை நேரங்களில் செயற்கை வெளிச்சத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது மூளைக்கு சிக்னல் அனுப்பி தூங்குவதை தாமதப்படுத்திவிடும்.
இரவு நேரத்தில், அவர்கள் ஓய்வெடுப்பதற்கும் மற்றும் எளிதாக தூங்குவதற்கும், அமைதியான சூழலை உருவாக்குவதும் அவசியமாகும்.
உங்களுடைய குழந்தை இரவு நீண்ட நேரம் வரைக்கும் தூங்காமல் இருந்தால், முதலில் நீங்கள் செயற்கை விளக்குகள் அவர்களை தொந்திரவு செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக நீங்கள் தினமும் மதிய நேரம் எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தை வளரும் போது, அவர்களுக்கு குட்டித்தூக்கம் நல்லது தான் என்றாலும், பகலில் தாமதமாகத் தூங்குவது அல்லது நீண்டநேரம் தூங்குவது கூடாது. ஏனெனில், இதன் காரணமாக இரவு நேரங்களில் குழந்தைகள் அதிக நேரம் தூங்காமல் இருப்பார்கள்.
இதனால் நீங்களும் இரவு நேரத்தில் சரியாக தூங்க முடியாது. அதோடு நீங்கள் குழந்தையை தூங்க வைக்க முயற்சித்தாலும் அவர்கள் வம்பு செய்வார்கள். இவ்வாறு நடக்காமல் இருக்க, உங்களுடைய குழந்தை எவ்வளவு நேரம் தூங்குகிறது, எப்பொழுது தூங்குகிறது என்பதை எல்லாம் கண்காணிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - வெவ்வேறு வயதுகளில் உங்கள் குழந்தைக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
உங்களுடைய குழந்தை சிறிய குழந்தையாக இருக்கும்போது இரவு நேர உணவுகளைத் தவிர்க்க முடியாது. கைக் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பால் கொடுப்பதை நம்மால் தவிர்க்க இயலாது. ஆனால் அது அவர்களின் தூக்கத்தை கெடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது உங்களுடைய குழந்தையின் வாழ்க்கையில் நீங்கள் தான் அவர்களின் உலகம் என்றும் கூட சொல்லலாம். உங்கள் குழந்தையுடன் கண் ஜாடைகள் மூலமாகப் பேசுதல் போன்றவை கூட உங்களுடைய குழந்தைக்கு உற்சாகமளிக்கும். எனவே, குழந்தை படுத்துக் கொண்டிருக்கும் அறையை இருட்டாக வைத்திருப்பதுடன், அமைதியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதோடு அனைவரும் எளிதாகத் தூங்குவதற்கு கண் சைகை மூலமாகத் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
குழந்தைகளுடைய பாட்டில் ஸ்டெர்லைசரில் பூஞ்சை வராமல் தடுக்கும் வழிகள்
குறுநடை போடும் குழந்தையை எவ்வாறு தனியாக தூங்க ஊக்குவிப்பது
இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பது பற்றி நீங்கள் அறிந்திராத விஷயங்கள்
புதிதாக பிறந்துள்ள உங்கள் குழந்தையை அவர்களின் மூத்த சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்துதல்
பேரண்ட்டிங் முறை குழந்தை வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது?
தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |