Updated on 11 May 2023
உங்கள் குழந்தைக்கான பாட்டில் ஸ்டெர்லைசரில் பூஞ்சை இருக்கிறது என்றால், அதை முழுமையாக அகற்றும் வரையில் பயன்படுத்துவது பாதுகாப்பானது கிடையாது.
சிலசமயம், பூஞ்சையை சுத்தம் செய்த பிறகும் கூட, அதன் திட்டுக்கள் அங்கேயே இருக்கும். பூஞ்சை திட்டுக்கள் ஆபத்தானவை கிடையாது என்றாலும், அவை மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஈரமான இடங்களில் பூஞ்சை வளரக் கூடும், மேலும் அதன் செல்கள் பரவக் கூடும். பூஞ்சை படர்ந்த பாட்டில் ஸ்டெர்லைசரை பயன்படுத்தும்போது பாட்டில்களுக்குள் பூஞ்சை செல்கள் ஊடுருவி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பூஞ்சை என்பது நஞ்சு கிடையாது. ஆனால், சில பூஞ்சை வகைகள் நஞ்சை உற்பத்தி செய்யக் கூடும். இந்த நஞ்சுகளை உட்கொண்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும். உங்கள் குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட அவையே காரணமாக அமையும். பூஞ்சை உள்ள பகுதிகளில் சுவாசித்தால் அலர்ஜிகள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.
எனவே, உங்கள் பாட்டில் ஸ்டெர்லைசரை முதல் கட்டமாக பூஞ்சை படருவதில் இருந்து தடுக்க வேண்டும்.
ஈரமான மற்றும் குளிர்ச்சியான சூழல்களில் தான் பூஞ்சை வளரும், எனவே, உங்கள் வீடு மற்றும் சமையலறையை சுத்தமாகவும், ஈரமின்றியும் வைத்துக் கொள்வதை உறுதி செய்யுங்கள். முடிந்தவரை காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் படர வேண்டும்.
ஸ்டெர்லைசர் மற்றும் குழந்தைகளுக்கான இதர சாதனங்களை சுத்தமானதாகவும், ஈரமின்றியும் வைத்துக் கொள்ளவும். அவற்றை சுத்தம் செய்யும்போது, புதிய, தூய்மையான துணி மற்றும் டிஸ்போசபிள் பேப்பர் டவல் போன்றவற்றை வைத்து துடைப்பது அல்லது காற்றோட்டத்தில் முழுமையாக உலர விடுவதன் மூலமாக ஈரமின்றி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த பிறகும், ஸ்டெர்லைசர் மீது பூஞ்சை இருப்பதை பார்த்தீர்கள் என்றால், ஸ்டெர்லைசரை மீண்டும் பயன்படுத்தும் முன்பாக பூஞ்சை அகற்றப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இடைப்பட்ட சமயத்தில், உங்கள் குழந்தையின் பாட்டில்களை ஸ்டெர்லைஸ் செய்வதற்கு வேறு முறைகளை நீங்கள் முயற்சி செய்யலாம். கொதி நீரில் சுத்தம் செய்வதும் நீங்கள் பயன்படுத்தக் கூடிய முறைகளில் ஒன்றாகும்.
ஸ்டெர்லைசர் உடன் குறிப்பிடப்பட்டிருக்கும் தூய்மைக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றவும். பூஞ்சையை அகற்றுவதற்கு குளிர்ந்த நீர் ஸ்டெர்லைசிங் திரவம் அல்லது டேப்லட்டுகள் இருக்கக் கூடும். எனினும், குறிப்பிட்ட சில ஸ்டோர்களில் மட்டுமே இவை கிடைக்கும். வெள்ளை வினிகர் மற்றும் கொதிக்க வைத்த தண்ணீர் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதுவும் அழுக்குகளை அகற்ற உதவும்.
ஸ்டெர்லைசரை சுத்தம் செய்யும் முன்பாகவும், சுத்தம் செய்த பிறகும் உங்கள் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். ஸ்டெர்லைசரில் அழுக்கு படர்ந்த இடங்கள் அல்லது கைகளால் சுத்தம் செய்ய முடியாத பகுதிகளை சுத்தம் செய்ய பாட்டில் ப்ரெஷ் அல்லது டூத் ப்ரெஷ் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
பூஞ்சை அகற்றப்பட்ட பிறகு, ஸ்டெர்லைசரை முழுமையாக கழுவி, காய விடவும். அதேபோன்று பாட்டில் ப்ரெஷ்-ஐ கழுவி, காய வைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைக்கு பாட்டில் பால் (புட்டி பால்)கொடுப்பதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
உங்கள் செல்லக் குழந்தைகளின் பாட்டில் ஸ்டெர்லைசரில் இருக்கும் பூஞ்சையை எப்படி பாதுகாப்பாக அகற்றுவது மற்றும் தடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் செல்லக் குழந்தைகளின் ஸ்டெர்லைசரில் உள்ள எந்தவொரு பூஞ்சையையும் பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
Giant Congenital Melanocytic Nevus: Causes, Symptoms, & Treatment
Tokophobia: How to Manage Your Phobia of Pregnancy & Childbirth
Low BP in Pregnancy: Symptoms, Effects & Treatments
Helping your twins to sleep at the same time
Baby Brain Development: What You Should Know
Tummy Tuck (Abdominoplasty) Procedure, Risks, Preparation & Recovery
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |