Pregnancy Journey
5 April 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட உன்னதமான பிரசவத்தை கடக்க அந்த 10 மாதங்களும் ஒரு பெண்ணின் மனதில் ஏற்படும் ஆசைகள்,எதிர்பார்ப்புகள்,விதவிதமான பயம்,பதட்டம் அனைத்தும் ஏராளம்.
மனதில் எழும் குழப்பங்களும் மிக அதிகம். ஆனால் இவ்வாறு எதையும் யோசிக்காமல் எந்த பதட்டமும் படாமல் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தன் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா?நல்ல நிறமாக இருக்குமா?யாரைப் போல இருக்கும் என பல கேள்விகளை தனக்குள் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
அதில் ஒன்று தான்,தன் குழந்தை நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்று ஒரு தாய் ஆசைப்படுவது. இயல்பாக மரபியல் வழி எப்படியோ அதைப் பொறுத்தான் குழந்தையின் நிறம் இருக்கும்.இருப்பினும் கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் குழந்தையின் நிறத்தில் சிறிது மாற்றங்களைக் கொடுக்கலாம்.
அவகேடோ
மாதுளை
தேங்காய் மற்றும் தேங்காய் பால்
பாதாம்
சீரகம்
திராட்சை ஜூஸ்
அவகேடோ வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்ததாக அறியப்படுகிறது. இந்த இரண்டு வைட்டமின்களும் அவற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு அறியப்படுகின்றன. வைட்டமின் சி உடலில் கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் அவசியம். கொலாஜன் உற்பத்தி உங்கள் குழந்தையின் தோல் நிறத்தை மேம்படுத்துகிறது.
கர்ப்ப காலத்தில் மாதுளை சாப்பிடுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகளை அளிக்கிறது.உடலில் உள்ள இரத்ததில் ஹீமோகுலோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.இது குழந்தைக்கும் தாய்க்கும் தேவையான ஹீமோகுலோபின் அளவை முழுமையாகக் கொடுக்கிறது.
மாதுளை குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தோலின் நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
பாலில் குங்குமப்பூ கலந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை நிறமாக பிறக்கும் என்பது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த உண்மை அது தவிர பல நன்மைகள் இதில் அடங்கியுள்ளது.பாலில் குங்குமப்பூ சேர்த்து சாப்பிடுவதால் கர்ப்பப்பை முழுவதும் சீரான மற்றும் முழுமையான இரத்த ஓட்டம் கிடைக்கச் செய்கிறது.
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு மன அழுத்தம்,சோர்வு அதிகமாக இருக்கும். குங்குமப்பூ இவை அனைத்தையும் கட்டுக்குள் வைக்க உதவும்.இருப்பினும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ எடுப்பது நல்லதல்ல.
கர்ப்பிணி பெண்கள் தினமும் தேங்காய்த் தண்ணீரைக் குடிப்பதால் தாய் மற்றும் குழந்தை இருவரின் நிறத்திலும் வித்தியாசங்களைக் காண முடியும்.நிறம் மட்டுமல்லாது மேனியின் பளபளப்பும் அதிகமாகும்.
தேங்காயும், தேங்காய்த் தண்ணீரும் நல்ல நிறமான குழந்தையைப் பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேங்காய்த் தண்ணீரில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் இருப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான மிக முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீரை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கலாம். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், ஏராளமான தண்ணீர் இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது.
பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிறம் அதிகம் மேம்பட வாய்ப்புள்ளது.
நல்ல நிறமான குழந்தை பிறக்க சீரகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் சீராகத் தண்ணீர் குடித்து வந்தால் குழந்தையின் நிறத்தில் மாறுதல்கள் ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் திராட்சை ஜூஸ் குடிப்பதால் குழந்தையின் மேனி பளபளப்பாவதுடன் மிகவும் மென்மையாகவும்,நல்ல நிறத்துடனும் காணப்படும். அது மட்டுமல்லாது குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்
கர்ப்பகாலத்தில் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டு, நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற வேண்டும் என்பதை தாய்மார்கள் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தையின் நிறம் என்பது இந்த உணவுகளுக்கு அப்பாற்பட்டு, மரபியல் ரீதியின் அடிப்படையில் குழந்தையின் நிறம் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
Yes
No
Written by
Mohana Priya
Get baby's diet chart, and growth tips
பிறந்த, 8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் கவனத்திற்கு... நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் இவைதான்!
குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா செய்முறைகளும்,வழக்கங்களும்
வளைகாப்பு (சீமந்தம் )
ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய(கர்ப்பம் பொருத்துதல்) பிரக்னன்ஸி இம்பிலாண்டேஷன் அடையாளங்களும் அறிகுறிகளும்!
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |