Baby Care
4 April 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் செய்யப்படும் ஒரு விழா பெயர் சூட்டுதல்.இந்த விழாவை நாமகரணம் என்று பலரால் அழைக்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு நடக்கும் முதல் சடங்கு என்பதால் அதை அவர்களின் பொருளாதார வசதியைப் பொறுத்து வெகு விமர்சியாக கொண்டாடுகின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பெயர் என்பது ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. நம் வாழ்நாளில் நம்மை விட மற்றவர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் நமது பெயரை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் எவ்வளவு கவனம் செலுத்துவார்கள் அல்லவா?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜாதக முறைப்படியோ அல்லது எண்கணித(Numorology)அடிப்படையிலோ அல்லது அவர்கள் குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்கள் அதாவது பெற்றோர்களின் தாத்தா,பாட்டி ஆகியோர்களின் பெயரையோ அல்லது அவர்கள் மனதிற்கு பிடித்தவர்களின் பெயர்களையோ சூட்டுவார்கள்.
உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் ஒரு புனித சடங்கு பெயர் சூட்டு விழா.
குழந்தை பிறந்து பன்னிரெண்டாவது நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சிலர் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து நல்ல நாள் பார்த்து அவர்களின் மதகுருவிடம் கேட்டு செய்கின்றனர் .
குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் பொருளாதார வசதிக்கேற்ப கோவில்களிலோ அல்லது பெரிய மண்டபங்களிலோ அல்லது அவர்களின் வீட்டிலோ இந்த பெயர் சூட்டு விழாவை பிரம்மாண்டமாகக் கொண்டாடுகின்றனர்.
குழந்தையின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நீண்ட ஆயிளுக்காகவும்,எதிர் காலத்தில் வளந்து வரும் போது நல்ல குணநலங்களையும் கொண்டு வளற வேண்டும் என்றும் இந்த விழா கொண்டாடப் படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரானது அந்த குழந்தையின் வாழ்நாள் ஆரோக்கியத்தையும் சகல செல்வங்களையும் அள்ளித் தரும் என்ற நம்பிக்கையில் பெயரைத் தேர்வு செய்கின்றனர்.
இந்த சடங்கு தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு பிரிவினரையும் பொறுத்து மாறுபடுகிறது.மதங்களின் அடிப்படையிலும் மாறுபட்டு பெயர் சூட்டு விழா கொண்டாடப்படுகிறது.பிறந்த குழந்தையின் பன்னிரெண்டாவது நாளில் கொண்டாடப்படும் இந்த விழாவானது,குழந்தைக்கு பட்டுப்பாவாடை அணிவித்து கையில் வளையல் ,கழுத்தில் சங்கிலி ஆகியவற்றை அணிவித்து அழகுக்கே அழகு சேர்த்து பின்பு குழந்தையை வீட்டுப் பெரியவர்களின் கையில் கொடுத்து மலர்களாலும்,மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட அழகிய தொட்டிலில் போட்டு குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் பல நாட்களாக யோசித்து அனைவரிடமும் ஆலோசனைக் கேட்டு இறுதியில் முடிவு செய்த பெயரை குழந்தையின் காதில் ஒவ்வொருவராக மூன்று முறை கூறி அதன் பிறகு தேனை குழந்தையின் வாயில் வைத்துக் கொண்டாடுவர் .
சில குழந்தையின் பெற்றோர்கள் மடியில் தங்கள் குழந்தையைப் படுக்க வைத்து அரிசியில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை எழுதி அந்த பெயரை குழந்தையின் காதில் கூறி கொண்டாடுவர்.
தங்கள் குழந்தைக்காக பெற்றோர்கள் முதன் முதலில் கொண்டாடப்படும் இந்த புனிதமான நிகழ்வு குழந்தையின் நலனுக்காகவும் பெற்றவர்களின் சந்தோஷத்திற்காகவும் குடும்பத்தில் உள்ள அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
Yes
No
Written by
Mohana Priya
Get baby's diet chart, and growth tips
வளைகாப்பு (சீமந்தம் )
ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய(கர்ப்பம் பொருத்துதல்) பிரக்னன்ஸி இம்பிலாண்டேஷன் அடையாளங்களும் அறிகுறிகளும்!
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |