Rituals & Customs
4 April 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
நிறைமாத கர்பிணியின் கைகள் நிறைய வளையல்கள் பூட்டி முகம் முழுவதும் சந்தனம்,குங்குமம் மணக்க மங்களகரமாக நடக்கும் ஒரு நிகழ்வு தான் வளைகாப்பு .
தாய்மையின் அடையாளமான வளைகாப்பு தமிழர்களின் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும்.திருமணமான பெண்களுக்கு நடக்கும் முதல் சடங்கு இது .இதை சீமந்தம் எனும் இன்னொரு பெயரிலும் அழைப்பர்.
திருமணமான பெண்கள் கருத்தரித்த நாளிலிருந்து 7 வது மாதத்தில் நடக்ககூடிய சடங்கு வளைகாப்பு.மஞ்சள் ,குங்குமம்,கண்ணாடி வளையல்கள் மலர் மாலைகள் என கலகலப்பாக நடக்கக் கூடிய சடங்குகளில் ஒன்று வளைகாப்பு என அழைக்கப்படும் சீமந்தம்.
நிறை மாத கர்ப்பிணி பெண்களின் உற்றார் ,உறவினர்கள் அனைவரும் சூழ நடக்கும் இந்த விழாவில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பொருட்களை தட்டு நிறைய அலங்கரித்து வைப்பர்.
வளைகாப்பு தமிழர்களின் சடங்காக மட்டுமல்லாது அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளைத் தருவதே இதை நடத்துவதற்கான முக்கிய காரணமாகும். தாய் மட்டும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை இருவரின் நலன் கருதியே வளைகாப்பு என்னும் சடங்கு நடத்தப்படுகிறது.
தாயின் கன்னங்களிலும் கைகளிலும் பூசப்படும் சந்தனம் அவரின் உடல் சூட்டை குறைக்க உதவும்.
அதுமட்டுமல்லாது தாய்க்கு இருக்கும் பிரசவத்தைப் பற்றிய பயத்தைப் போக்கி குழந்தையையும் தாயின் மனதையும் சந்தனம் ,அமைதிப்படுத்தும் என்று நம்புகின்றனர்.
அடுத்ததாக வளைகாப்பின் கதாநாயாகியான கண்ணாடி வளையல்களை கருவுற்றத் தாய் தன் கைகளில் அணியும் போது அந்த வளையல் சத்தம் தாயின் மன அழுத்தத்தைக் குறைத்து ,குழந்தையின் அசைவை அதிகரிக்கச் செய்கிறது.
இவ்வாறு செய்வதானால் சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் அவர்களின் குடும்ப வழக்கப்படி ஒவ்வொரு விதமாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.ஒவ்வொருவரின் பொருளாதார வசதியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது.
ஐந்து அல்லது ஏழு வகையான கலவை சாதங்கள் வளைகாப்பின் மிக முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது . அதனால் ஒரு சில ஊர்களில் வளைகாப்பை கட்டுச்சோறு விருந்து என்றும் அழைப்பர்.
இது மட்டுமல்லாது இனிப்பு ,காரம் ,பாயாசம் ,ஊறுகாய் என பல விதவிதமான உணவு வகைகளை இந்த சடங்கில் நம்மால் காண முடியும். குழந்தையைப் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணுக்கு ,அவருக்குப் பிடித்த வண்ணம் இந்த உணவு முறைகள் அமைந்திருக்கும்.
தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் தாயின் உடல் மற்றும் மன நலனுக்காகவும் , அவர் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவும்,பிரசவத்தைப் பற்றிய எந்த பயமும் இல்லாமல் நல்ல விதமாக சுகப்பிரசவம் நடப்பதற்காக அறிமுகப்படுத்திய ஒரு அழகிய ,மங்களகரமான ,கலகலப்பான சடங்கு இந்த வளைகாப்பு.
கணவனும்,மனைவியும் பெற்றோர்களாக மாறும்,சொந்த பந்தங்கள் தாய்யையும் ,சேய்யையும் வாழ்த்தி வரவேற்கும் உன்னதமான தருணம் அது!
Yes
No
Written by
Ravish Goyal
Official account of Mylo Editor
Read MoreGet baby's diet chart, and growth tips
குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா செய்முறைகளும்,வழக்கங்களும்
ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய(கர்ப்பம் பொருத்துதல்) பிரக்னன்ஸி இம்பிலாண்டேஷன் அடையாளங்களும் அறிகுறிகளும்!
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |