Allergies
19 April 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
மகரந்தம், பூஞ்சை அல்லது தூசிப் பூச்சிகள் போன்றவற்றை சுவாசிக்கும்போது ஏற்படும் ஒவ்வாமை குழந்தை பிறந்த முதல் ஆண்டில் அரிதாகத்தான் இருக்கும். இருந்தாலும், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை அல்லது அரிப்பு மற்றும் தோலழற்சி ஏற்படலாம். குறிப்பாக, குழந்தையின் குடும்பத்தில் யாருக்காவது இந்த ஒவ்வாமை இருந்தால், இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
3 முதல் 5 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு பருவகால ஒவ்வாமைகள் ஏற்படும். 10 வயதில் குறிப்பிடத்தக்க அறிகுறிகளுடன் கூடிய ஒவ்வாமை ஏற்படும்.
கோடைக்காலம், குளிர்காலம் அல்லது இலையுதிர் காலம் என எந்தவொரு நேரத்திலும் பருவகாலத்திற்கான ஒவ்வாமை ஏற்படலாம். நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து ஒவ்வாமை மாறுபடலாம்.
உங்களுடைய குழந்தை பருவகால ஒவ்வாமைகளை சுவாசிக்கும்போது, அவர்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பானத் அதைச் சமாளிப்பதற்கு அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இதன் மூலமாக ஹிஸ்டமைன் என்ற புரதத்தை வெளியிடுகிறது. இது ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டுகிறது.
ஒரு குழந்தையானது பின்வரும் ஒவ்வாமை அறிகுறிகளால் பாதிக்கப்படலாம்:
அரிப்பு
கண்ணில் இருந்து நீர் வடிதல்
அடிக்கடி சுவாசித்தல்
வறட்டு இருமல்
அதிக சோர்வு
மூக்கடைப்பு
தூங்குவதில் சிக்கல்
தலைவலி
ஆண்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், அது வெளிப்புற ஒவ்வாமைக்கான அறிகுறியாகவும் கூட இருக்கலாம்.
மெல்ல நடை பழகும் உங்களுடைய குழந்தைக்கு பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் ஒவ்வாமையைத் தவிர வேறு ஏதாவது நிலையான ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இருந்தால் அதற்கு பிற காரணிகளும் கூட காரணமாக இருக்கலாம்.
செல்லப்பிராணிகளிடம் இருந்து ஒவ்வாமை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சருமத்தின் இறந்த செல்கள். ஆனால், சிறுநீர் அல்லது உமிழ்நீர் காரணமாகவும் ஒவ்வாமைக்கான எதிர்விளைவு ஏற்படலாம். ரோமத்தினைக் கொண்ட அனைத்து வகையான உயிரினங்களும் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும். உங்களுடைய பிள்ளைக்கு பிராணிகள் மூலமாக ஒவ்வாமை ஏற்பட்டு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், பின்வருவனவற்றின் மூலமாக நீங்கள் அதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுடைய செல்லப்பிராணியை தனி அறையில் வைக்கவும்
உங்களுடைய குழந்தை இருக்கும் பகுதி முழுவதையும் காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களுடைய குழந்தை செல்லப்பிராணியை கட்டிப்பிடித்து கொஞ்சுவதற்கு ஊக்கம் கொடுக்காதீர்கள்
ஒவ்வாமை ஏற்படுவதற்கு தூசியில் இருக்கும் சிற்றுண்ணிகள் தான் காரணமாக இருக்கும். மேலும் இது பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாமைக்கான அறிகுறிகளைத் தூண்டுகிறது. தூசி ஒவ்வாமை சம்பந்தப்பட்ட அறிகுறிகள் ஏதாவது இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்:
உங்களுடைய தலையணை மற்றும் பெட்ஷீட்டை அடிக்கடி மாற்றவும்
இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒருமுறை போர்வைகளைத் துவைக்கவும்
உங்களுடைய குழந்தை தூங்கும் இடத்தில் லேசான தரைவிரிப்புகள் மற்றும் கனமான திரைச்சீலைகளைப் போடவும்
இதையும் படிக்கலாமே! - குழந்தையை பாதுகாக்கும் முறை
ஒவ்வாமைக்கான அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், இது காது அல்லது தொண்டை தொற்று போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒவ்வாமைக்கான அறிகுறிகளை சமாளிப்பதற்கும் அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்குமான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வெளியில் இருந்து மகரந்தம் போன்றவை உள்ளே வராமல் இருப்பதற்கு வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
ஏர் கண்டிஷனிங் ஃபில்டர்களில் தூசு மற்றும் பூஞ்சை போன்றவை உருவாகமல் இருப்பதற்கு இதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
எந்தவொரு தொற்றுநோயையும் தடுப்பதற்கு மக்கள் தங்களுடைய காலணிகளை வீட்டிற்கு வெளியே விட்டு விட வேண்டும்.
துணிகளில் ஏதாவது மகரந்தம் இருந்தால் அதை அகற்ற துணிகளை எப்போதும் துவைக்க வேண்டும்
விலங்கு மூலமாக தொற்று எதுவும் ஏற்படாமல் இருக்க உங்களுடைய நாயை தவறாமல் குளிப்பாட்ட வேண்டும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் இதயத்துடிப்பு எப்போது தொடங்கும்?
கர்ப்பிணி பெண்கள் கர்ப்பத்தின் நான்காவது வாரத்தில் எவ்வாறு உணர்கிறார்கள்?
மார்பக கட்டிகள்: வெவ்வேறு வகைகள், காரணங்கள், சிகிச்சைகள் & வீட்டு வைத்தியம்
3 மாத குழந்தை வளர்ச்சியின் மைல்கற்கள்
குழந்தை வெள்ளையாக பிறக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
பிறந்த, 8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் கவனத்திற்கு... நீங்கள் மனதில் கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் இவைதான்!
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |