hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Stem Cell Banking arrow
  • ஸ்டெம் செல் பாதுகாப்பின் நன்மைகள் என்ன? |What Are The Benefits Of Stem Cell Preservation in Tamil arrow

In this Article

    ஸ்டெம் செல் பாதுகாப்பின் நன்மைகள் என்ன? |What Are The Benefits Of Stem Cell Preservation in Tamil

    Stem Cell Banking

    ஸ்டெம் செல் பாதுகாப்பின் நன்மைகள் என்ன? |What Are The Benefits Of Stem Cell Preservation in Tamil

    5 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    சமீபத்திய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, ஸ்டெம் செல் தெரபி என்பது வேகமாக வளர்ச்சியடைந்து வரும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையூட்டுகிற ஆராய்ச்சித் துறையாக விளங்குகிறது. உலகமெங்கும் ஸ்டெம் செல் வங்கிகளை நிறுவவதன் நோக்கமென்பது, ஸ்டெம் செல்களின் சிறப்பியல்புகளை பாதுகாப்பதற்கும், தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கும், மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் அவற்றை திறம்பட பயன்படுத்துவதற்கும், மேலும் சமீபத்திய, எதிர்கால மருத்துவ பயன்பாடுகள் போன்றவைகளுக்காகவும் ஆகும்.

    கடந்த சில வருடங்களாகவே, ஸ்டெம் செல்லை பாதுகாத்து வைப்பதற்கான துறை வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பல பொது மருத்துவமனைகள், கல்விசார் மருத்துவ மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை பல்வேறு வகையான ஸ்டெம் செல்களை கொடையாளிகளிடமிருந்தும் (டோனர்) மற்றும் பொது மக்களிடமிருந்தும் பெற்று பாதுகாத்து வைப்பதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருவதால் இது சாத்தியப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நிகழக் கூடிய ஸ்டெம் செல் தெரபி சிகிச்சைகளுக்கு இது கிடைக்கப்பெறும்.

    மனித உடலில் ஸ்டெம் செல்கள் எனப்படும் சிறப்பியல்புடைய செல்கள் உள்ளன. முளைக்கருக்களின் (எம்பிரியோ) உடல்களிலும், பெரியவர்களின் உடல்களிலும் கூட ஸ்டெம் செல்கள் உள்ளன. ஸ்டெம் செல்கள் "உலகளாவிய செல்கள்" அல்லது "விதை செல்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன, சுயமாக புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் காரணமாகவும், பல்திசை வேறுபாட்டுத் திறன் காரணமாகவும் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. ஸ்டெம் செல்களை சேகரித்து, தயார் செய்து, ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவதற்கு உதவுவதால், இது "லைஃப் பேங்க்" என்றும் கருதப்படுகிறது.

    உயிரியல் பொருட்களை சேகரித்து, பயன்படுத்தும் முறை நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. எனினும், ஸ்டெம் செல்களின் சமீப கால ஆராய்ச்சிகளின் விளைவாக ஸ்டெம் செல்களின் தேவை அதிகரித்து, அதன் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமின்றி, ஆராய்ச்சித் தேவைகளுக்காகவும் அவை பயன்படும் விதமாக கிடைக்கப்பெறுகின்றன.

    ஸ்டெம் செல்லை பாதுகாத்து வைப்பது என்றால் என்ன? (What Is Stem Cell Preservation in Tamil)

    ஸ்டெம் செல் பாதுகாப்பு என்பது ஸ்டெம் செல் ஸ்டோரேஜ் அல்லது ஸ்டெம் செல் பாங்க்கிங் என்றும் அழைக்கப்படுகிறது. இது மனித உடலிலிருந்து ஆக்க வளமுடைய ஸ்டெம் செல்களை எடுத்து, அவற்றை பதப்படுத்தி, எதிர்காலத்தில் ஸ்டெம் செல் சிகிச்சைகளுக்காக வேண்டி அவற்றை சேமித்து வைக்கும் முறையாகும்.

    ஸ்டெம் செல் வங்கிகள், ஸ்டெம் செல்களின் உயிரியல் பண்புகளை பாதுகாப்பதன் பொருட்டு குறைவான வெப்பநிலையை பயன்படுத்துகின்றன. மேலும், தொற்று ஏற்படுவதிலிருந்தும், சிதைவு ஏற்படாமலும் பாதுகாக்கின்றன. நீண்ட காலத்திற்கு செல்களை பாதுகாப்பதற்கு, தரப்படுத்தப்பட்ட, தர-கட்டுப்பாட்டு பாதுகாப்பு நடைமுறைகள் ஸ்டெம் செல் வங்கிகளால் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தை பிறக்கும் போது, குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்திலிருந்து சேகரிக்கப்படும் ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைப்பதனால், உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு மட்டுமின்றி, உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    ஸ்டெம் செல்களின் வகைகள்(Types Of Stem Cells in Tamil)

    ஸ்டெம் செல்கள் பிற வகை செல்களாக மாறி செயல்படும் திறனுக்கேற்ப, அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்:

    1. யுனிபொடென்ட் செல்கள் (Unipotent cells)

    இந்த செல்கள் ஒரே ஒரு வகை செல்களை மட்டுமே உருவாக்குகிறது, அதாவது அதன் வகையை மட்டுமே உருவாக்கும். இவை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கும் காரணத்தால், இவை ஸ்டெம் செல்லின் ஒரு வகையாக கருதப்படுகின்றன.

    2. ஆலிகோபொட்டென்ட் செல்கள் (Oligopotent cells)

    இந்த செல்கள் வெவ்வேறு வகையான செல்களாக மாறி செயல்படும் தன்மை கொண்டது. அடல்ட் லிம்பாய்டு அல்லது மைலாய்டு ஸ்டெம் செல்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.

    3. மல்டிபொட்டென்ட் செல்கள் (Multipotent cells)

    இந்த செல்கள், நெருங்கிய தொடர்புடைய செல் குடும்பத்தின் செயல்பாட்டினை உருவாக்க வல்லது. உதாரணமாக, ஹெமாட்டோபாய்ட்டிக் ஸ்டெம் செல்களை கூறலாம், இந்த ஸ்டெம் செல்கள் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள், பிளேட்லெட்கள், லிம்பாய்டு ஸ்டெம் செல்கள் மற்றும் மசில் ஸ்டெம் செல்களாக உருவாகின்றன.

    4. டாட்டிபொட்டென்ட் செல்கள் (Totipotent cells)

    எல்லா வகையான செல்களாகவும் உருவாகும் திறனுள்ள செல்கள், டாட்டிபொட்டென்ட் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதற்கான சிறந்த உதாரணம், முட்டை கருவுறும் சமயத்தில் பெறப்படும் எம்பிரியானிக் ஸ்டெம் செல்கள், மற்றும் அவை பிரியும் போது உருவாகும் சில செல்கள் போன்றவை, இவை எந்தவொரு செல்லாகவும் உருவாகின்ற ஆற்றல் கொண்டவை.

    5. ப்ளூரிபொட்டென்ட் செல்கள் (Pluripotent cells)

    இந்த செல்கள் ஏறக்குறைய எந்தவொரு செல்லாகவும் மாறும் தன்மை கொண்டது. முளைக்கருவின் ஆரம்ப கட்ட செல்கள், பனிக்குடத்திலிருக்கும் செல்கள் நீங்கலாக, ப்ளூரிபொட்டென்ட்-ஆக கருதப்படுகின்றன. முளைக்கருவின் ஆரம்பகட்டத்தின் போது உருவாகும் ஸ்டெம் செல்கள், மற்றும் கருவுற்ற முட்டையின் மேற்புற, உட்புற, நடுப்புற அடுக்குகளான எக்டோடெர்ம், எண்டோடெர்ம், மீசோடெர்ம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் செல்கள் போன்றவை இதன் உதாரணங்களாகும்.

    ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைப்பதின் நன்மைகள் (Benefits of Preserving Stem Cells in Tamil)

    எம்பிரியானிக் ஸ்டெம் செல்கள், உடலுக்குத் தேவையான வெவ்வேறு வகையான செல்களாக மாறி செயல்படக் கூடிய ப்ளூரிபொட்டென்ட் செல்களாகும். முளைக்கருவின் ஆரம்ப நிலை பிளாஸ்டோசிஸ்ட் என்று அழைக்கப்படுகிறது. பிளாஸ்டோசிஸ்ட்-இன் உட்புற செல் பொருண்மையானது, எம்பிரியானிக் செல்களை உருவாக்குகிறது. ஸ்டெம் செல்லை பாதுகாப்பதன் மூலம், அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருக்கிறது. அது மட்டுமின்றி, சமரசமில்லாத பாதுகாப்புணர்ச்சியும், தரம் குறித்தான மன நிறைவும் கூட ஏற்படுகிறது.

    ஸ்டெம் செல்லை பாதுகாப்பதின் சில நன்மைகள்:

    1.உயிரை காக்க உதவும் (It can save lives)

    ஸ்டெம் செல்கள் மிக அதிகளவில் தொப்புள் கொடி இரத்தத்தில் நிறைந்திருக்கிறது. இதன் மூலம் இரத்த புற்றுநோய், மரபணு கோளாறுகள், நோயெதிர்ப்பு அமைப்பு கோளாறுகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்கும், உடல்நலக் கேடுகளுக்கும் சிகிச்சையளிக்க முடியும். இதனை எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக கூட பயன்படுத்தலாம், ஏனென்றால் கீமோதெரபிக்கு பிறகு நோயெதிர்ப்பு அமைப்பினை மீண்டும் உருவாக்க முடியும்.

    2. தொப்புள் கொடி இரத்த ஸ்டெம் செல்கள் உங்கள் குழந்தைக்கு எப்போதுமே பொருத்தமாக இருக்கும் (Cord blood stem cells will always be a perfect match for your baby in Tamil)

    ஸ்டெம் செல்கள் ஒரு வேளை உங்கள் குழந்தையின் செல்கள் காயம் அல்லது சேதமடைந்திருந்தால், அவற்றை சரி செய்வதற்கும், மீட்டுருவாக்கம் செய்வதற்கும் உதவுகின்றன. பிற குடும்ப நபர்களுக்கும் கூட இது பொருந்தும்.

    3. தொப்புள் கொடி இரத்த ஸ்டெம் செல்கள் உடன்பிறந்தார்க்கு அல்லது குடும்ப நபருக்கு பயன்படும் (Cord blood stem cells can be of use to a sibling or a family member)

    உங்கள் உடன்பிறந்தவருக்கு ஸ்டெம் செல்கள் பொருந்துவதற்கு 25% வாய்ப்புள்ளது. தொப்புள் கொடி இரத்த மாற்றுச் சிகிச்சை விஷயத்தில், எப்போதும் முழுமையாக பொருந்துவதற்கு அவசியமில்லை. மேலும் தேவைப்படும் ஸ்டெம் செல்களின் எண்ணிக்கையை பொறுத்து, குறைவாக பொருந்தியிருப்பது ஏற்கத்தக்கது.

    3. ஸ்டெம் செல் ஆராய்ச்சி அருமையான எதிர்கால பயன்பாடுகளை கொண்டுள்ளது (Stem cell research has exciting future uses)

    அறிவியல் வளர்ச்சியடைந்து வரும் இந்த காலத்தில், அநேக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொப்புள் கொடி இரத்த மற்றும் தொப்புள் கொடி திசு ஸ்டெம் செல்கள் மருத்துவ பரிசோதனைகளில் இரத்தம் சார்ந்த கோளாறுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் ஆட்டிஸம், பக்கவாதம், பெருமூளை வாதம் (செரிப்ரல் பால்சி), மற்றும் மூளைக் காயம் போன்ற நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

    4. தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் நன்கு சிகிச்சையளிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது (Umbilical cord stem cells have greater therapeutic potential)

    தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதால், எலும்பு மஜ்ஜை போன்ற பிற இடங்களிலிருந்து பெறப்படும் ஸ்டெம் செல்களை விடவும் ஒப்பீட்டளவில் வேகமாக இயங்கக் கூடியது. தொப்புள் கொடி இரத்த ஸ்டெம் செல்கள், நோய்த்தொற்று போன்ற வெளிப்புற நோயெதிர்ப்பு தூண்டுதலை இது வரை சந்திக்கவில்லையாதலால், அவை மிகவும் "நோயெதிர்ப்பு ரீதியாக கபடமற்றதாக" அறியப்படுகிறது. மேலும் அவை உடன்பிறந்தாருக்கு செய்யும் மாற்று அறுவை சிகிச்சையின் போது நேரக் கூடிய சிக்கல்களை உண்டாக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    உங்கள் குழந்தை பிறக்கும் போதே ஸ்டெம் செல்களை சேமித்து வைப்பதற்கான இன்னொரு காரணம் என்னவென்றால், அவற்றை உடனடியாக சேகரித்து, சேமித்து வைத்துக் கொள்ளும் பட்சத்தில், எப்போது தேவை ஏற்படுகிறதோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின் போது, நீங்கள் ஒரு கொடையாளியை (டோனர்) தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான கொடையாளியை கண்டுபிடிக்கும் வாய்ப்புகள் 1,00,000-ல் ஒன்றுக்கும் குறைவாக உள்ளது.

    5. உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்-ஐ 20 வருடத்திற்கும் மேல் பாதுகாத்து வைக்கலாம் (Your baby's stem cell can be preserved for more than 20 years)

    ஸ்டெம் செல்கள் பிரத்யேகமான கிரையோ-ப்ரிசர்வேஷன் பைகளில் அடைக்கப்பட்டு, பாதுகாப்பான அலுமினியம் உறைகளில் தனியாக சுற்றி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதிரியின் மீதும் தனிப்பட்ட அடையாள குறியீடு இடப்பட்டு, அவை கிரையோ-ப்ரிசர்வேஷன் டேங்க்-களில் சேமித்து வைக்கப்படுகின்றன. இது போன்று உலகத் தரத்தில் சேமித்து வைக்கப்படும் போது, ஸ்டெம் செல்களை 23 வருடங்களுக்கு பிறகும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    6. உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்களை உள்ளூரிலோ அல்லது வெளிநாட்டிலோ உங்கள் விருப்பப்படி சேமித்து வைத்துக் கொள்ளலாம் (Your baby's stem cells can be stored locally or internationally based on your choice)

    நீங்கள் வேறு இடத்திற்கு செல்லும் போது, ஸ்டெம் செல் ஸ்டோரேஜ்-ஐ உங்களுக்கு பக்கத்திலேயே இடமாற்றும் படி, ஸ்டெம் செல் வங்கியை நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். இதனை உறைந்த நிலையில் உலகின் எந்த ஒரு மூலைக்கும் அனுப்பி வைக்கலாம். எனினும், இவ்வாறு இடமாற்றி கொண்டு செல்வதற்கான செலவுகளை நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ஸ்டெம் செல்கள் மிகவும் சுவாரசியமான, புதுமையான துறைகளில் ஒன்றாக இருக்கிறது. ஸ்டெம் செல்கள் மீதான ஆராய்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் குணப்படுத்த முடியாத நோய்களென்று கருதப்பட்ட பல நோய்களையும் குணப்படுத்துவதற்கான பெருமளவிலான ஆற்றலினை இந்த செல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆரோக்கியமான புதிய திசுக்களையும், செல்களையும் உருவாக்கும் திறன் ஸ்டெம் செல்களுக்கு இருப்பதால், அநேக நோய்களையும், கோளாறுகளையும் குணப்படுத்துவதற்கு உதவியாய் இருக்கும். சேமிக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட ஸ்டெம் செல்களின் மூலம் குணப்படுத்தக் கூடிய சில நோய்கள் பின்வருமாறு:

    7. மனித திசு மற்றும் உறுப்பு மீளமைப்பு (Human tissue and organ regeneration)

    சேமிக்கப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட ஸ்டெம் செல்களை பயன்படுத்தி, திசுக்களையும், உறுப்புகளையும் மீளுருவாக்கம் செய்யலாம். உறுப்புகள் தேவைப்படும் போது, உதாரணத்திற்கு சரும திசு போன்றவை, உறுப்புகளை உருவாக்கி, உறுப்பு தானம் செய்யலாம் அல்லது உறுப்பு செயலிழக்கும் பட்சத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.

    8. டைப் 1 சர்க்கரை நோய்(Type 1 diabetes treatment)

    இன்சுலினை உற்பத்தி செய்யும் கணைய செல்கள் ஒழுங்காக வேலை செய்யவில்லையென்றால், டைப் 1 சர்க்கரை நோய் ஏற்படுகிறது, இதனால் மிகக் குறைந்த அளவிலான இன்சுலினையே உடல் உற்பத்தி செய்யும். பாதுகாக்கப்பட்ட ஸ்டெம் செல்களை பயன்படுத்தி, டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு கணைய ஸ்டெம் செல்களை பொருத்தி சிகிச்சை அளிக்கலாம். சிலருக்கு நோயெதிர்ப்பு அமைப்பானது இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்களை பலவீனப்படுத்தி விடும். அந்த நோயாளிகளின் செல்களுக்கு பதிலாக இந்த பாதுகாக்கப்பட்ட ஸ்டெம் செல்களை செலுத்தும் போது, பிரச்சினை சரியாகி விடும்.

    9. கார்டியோவாஸ்குலர் நோயிற்கான சிகிச்சை (Cardiovascular disease treatment)

    கார்டியோவாஸ்குலர் நோய்கள் பெரும்பாலும் இரத்தக் குழாய்களில் தோன்றும் பிரச்சினைகளின் காரணமாகவே ஏற்படுகின்றன. ஸ்டெம் செல்களிலிருந்து, தோற்றத்திலும், செயல்பாட்டிலும் இயற்கையான இரத்தக் குழாய்களை போலவே உள்ள புதிய இரத்தக் குழாய்களை ஆராய்ச்சியாளர்களின் குழு உற்பத்தி செய்துள்ளது. ஸ்டெம் செல்களின் மூலம் அநேக திசுக்களை சரி செய்து, மீளுருவாக்கம் செய்ய முடியும், இதனால் வாஸ்குலர் (இரத்தக் குழாய் தொடர்பான) மற்றும் கார்டியோவாஸ்குலர் (இதயம் மற்றும் இரத்தக் குழாய் தொடர்பான) நோய்களுக்கு சிகிச்சையளிக்கலாம்.

    10. இரத்தம் சார்ந்த பிரச்சினைகளுக்கான சிகிச்சை (Blood-related issues treatment)

    தொப்புள் கொடி இரத்தமும், பனிக்குடமும் ஹெமாட்டோபாய்ட்டிக் ஸ்டெம் செல்களால் நிறைந்திருக்கின்றன, இந்த ஸ்டெம் செல்கள் மற்ற எல்லா இரத்த செல் வகைகளை போல செயல்பட வல்லது. இதன் மூலம் லுகேமியா, சிக்கில் செல் அனீமியா மற்றும் பிற நோயெதிர்ப்பு குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

    11. மூளை நோயிற்கான சிகிச்சை (Brain disease treatment)

    காயம் ஏற்பட்டவுடன், நரம்பியல் கோளாறுகள் பலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற கோளாறுகளுக்கு ஸ்டெம் செல்களின் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.

    பார்கின்சன் வியாதியில் மூளை செல்கள் சேதமடைந்திருப்பதின் காரணமாக தசை இயக்கம் இயல்பானதாக இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் இருக்கும். இந்நிலையில் மூளையில் சேதமடைந்திருக்கும் திசுக்களை மீட்டெடுப்பதற்கு, ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். இந்த புதிய மூளை செல்கள், சுய கட்டுப்பாடில்லாத தசை இயக்கங்களை தடுப்பதற்கு உதவக் கூடும்.

    12. ஸ்டெம் செல் பாங்க்கிங் தொடர்பான பிரச்சினைகள் (Stem Cell Banking Issues)

    மனித உடலில் ஏற்படும் வியாதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஸ்டெம் செல்கள் தேவையாக இருப்பதால், மருத்துவ ரீதியாக தொடர்புடையதும், திறன்மிக்கதுமான அத்தகைய செல் வகைகளை பாதுகாத்து வைப்பது அவசியமாகும். ஸ்டெம் செல்களை பாதுகாத்து வைப்பதற்கு ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. ஹெமாட்டோபாய்ட்டிக் ஸ்டெம் செல்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படும் நெறிமுறைகளை, மெசன்கைமல் ஸ்டெம் செல்கள் மற்றும் எம்பிரியானிக் ஸ்டெம் செல்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு வகையான செல்லுக்கும் ஒரு உயிரியல் இருப்பதால், அந்த உயிரியலின் அடிப்படையிலேயே பாதுகாக்கும் உத்திகள் அமைக்கப்பட வேண்டும்.

    செல்களை பாதுகாப்பதற்கு பல நடைமுறைகள் உள்ளன, ஆயினும் கூட அறிவியல் வளர்ச்சிக்கு தகுந்தவாறு புதிய நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் அல்லது பழையனவற்றை மாற்றி அமைக்க வேண்டும். உறைய வைத்தல், சேமித்து வைப்பது, வெப்பமாக்குவது போன்ற நெறிமுறையின் ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் கையாளப்பட வேண்டும், இல்லையெனில் செல்கள் சேதமடைந்து விடும் அபாயமுள்ளது. பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை துல்லியமாக செய்வதன் அவசியம் குறித்து தனிநபர்களுக்கு பயற்சியளிக்கப்பட வேண்டும்.

    தற்போது, செல்களை உயிர்ப்புடன் பாதுகாத்து வைப்பதற்கு நிறைய காரியங்கள் செய்ய வேண்டியுள்ளது, மேலும் அதனை தொடர்ந்து கவனமாக பார்த்துக் கொள்வதற்கு ஆட்தேவையும் உள்ளது. அது மட்டுமின்றி, எளிதில் கிடைக்கப்பெறாத உபகரணங்களும் கூட இதற்கு தேவைப்படலாம். நீங்கள் பரிசீலிக்க வேண்டிய முதல் விஷயம் இது தான். ஸ்டெம் செல்கள் நன்முறையில் பாதுகாக்கப்படுவதையும், அதன் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு மருத்துவ, அறிவியல் வளர்ச்சிகளும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

    13. ஸ்டெம் செல் பேங்க்கிங் தொடர்பான சவால்கள் (Stem Cell Banking Challenges)

    உயர்தர ஸ்டெம் செல்களை எடுப்பது தான் ஸ்டெம் செல் பாங்க்கிங்-இல் சவாலானதொரு காரியமாகும். ஸ்டெம் செல்கள் ஆரோக்கியமான, நோய் பாதிப்பேற்படாத திசுக்களிலிருந்து எடுக்கப்பட வேண்டும். அவற்றின் ஆற்றலை தக்க வைப்பதற்கு, சரியான முறையில் அவற்றை பதப்படுத்த வேண்டும்.

    இன்னொரு சவால் என்னவென்றால், அனைத்து மக்களுக்கும் எளிதாக கிடைக்கப்பெறுமாறு ஸ்டெம் செல் வங்கிகளை உருவாக்குவது தான். தனியார் ஸ்டெம் செல் வங்கிகள் மலிவானதாக இருக்காது, பொது ஸ்டெம் செல் வங்கிகள் சிலருடைய தேவைகளை பூர்த்தி செய்கின்ற அளவு திறன் அமைய பெற்றிருக்காது.

    14. ஸ்டெம் செல் பாதுகாப்பிற்கு எவ்வளவு செலவாகும்? (How Much Does Stem Cell Preservation Cost?)

    இது ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்றவாறு மாறுபடுகிறது, நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தையும், பிளானையும் பொறுத்து இது மாறுபடும். பல தனியார் நிறுவனங்கள் வெவ்வேறு கட்டண பிளான்களையும், பிரத்யேகமான பேக்கேஜ்களையும் அறிமுகப்படுத்தினாலும் கூட, ஸ்டெம் செல் பாங்க்கிங் என்பது ஒரு கணிசமான முதலீடாகும். இதனால் ஏற்படும் நன்மைகள், அதற்கு ஆகப் போகும் செலவுகள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் உங்களுக்கான சரியான பிளானை தேர்வு செய்ய வேண்டும்.

    இந்தியாவில் ஸ்டெம் செல் பாதுகாப்பிற்கான கட்டணங்கள் ஒவ்வொரு நகரத்திற்கும் ஏற்றவாறு மாறுபடும், இது வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வங்கிகளிலும், ஸ்தாபனங்களிலும் அவை வெவ்வேறு விதமாக மாறுபடும். ஸ்டெம் செல்லை பிரித்தெடுக்கும் முறைக்காகும் செலவு அல்லது பாதுகாக்கும் முறை என்பது ஸ்டெம் செல் பாதுகாப்பிற்கு ஆகும் செலவுகளை தீர்மானிக்கும் இன்னொரு காரணியாகும். இந்த நடைமுறையை செயல்படுத்துவதற்கு எந்த வகையான நிபுணர் பயன்படுத்தப்படுகிறார் என்பதும் கூட ஸ்டெம் செல் பாதுகாப்பிற்கு ஆகும் செலவுகளை தீர்மானிக்கிற காரணிகளுள் ஒன்றாகும்.

    இந்தியாவில் உள்ள ஸ்டெம் செல் பேங்க்கிங் வகைகள் (Types Of Stem Cell Banking In India in Tamil)

    இந்தியா நாட்டில், ஸ்டெம் செல் பேங்க்கிங் கீழ்க்கண்டோரால் செய்யப்படுகிறது:

    1. தனியார் வங்கிகள் (Privately held banks)

    இந்த வங்கிகள் பொதுவாகவே குடும்ப வங்கிகள் என்று அறியப்படுகின்றன, இங்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தினை எதிர்கால தேவைக்காக சேமித்து வைத்துக் கொள்வார்கள். இந்த நடவடிக்கை ஒரு வகையான உயிரியல் காப்பீடாக கருதப்படுகிறது, ஏனென்றால் ஸ்டெம் செல்களை குழந்தையோ அல்லது உடன்பிறந்தார் போன்ற குடும்ப நபர் யாரேனும் ஒருவரோ கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

    2. பொது வங்கிகள் (Public banks)

    இந்த ஸ்டெம் செல் வங்கிகள் பொது மக்கள் வழங்கும் நன்கொடைகளின் அடிப்படையில் இயங்குகின்றன. இங்கு பெற்றோர் தங்கள் குழந்தையின் தொப்புள் கொடி இரத்தத்தினை தானமாக வழங்கலாம். அரசாங்கத்திற்கு சொந்தமான பொது வங்கிகளில் உள்ள இந்த தொப்புள் கொடி இரத்த மாதிரிகளை வேண்டியவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேமிக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் ஆராய்ச்சித் தேவைகளுக்காகவும் கூட பயன்படுத்தப்படுகிறது. எனினும், ஸ்டெம் செல்களை தானம் செய்வதற்கு பெற்றோரும் தகுதியுடையவராய் இருத்தல் வேண்டும், அவர்களுக்கும் தகுதி பெறுவதற்கான அளவுகோல்கள் உள்ளன. பொதுவங்கிகளின் மாதிரி தரவுத்தளம் (டேட்டாபேஸ்) மருத்துவர்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் சிகிச்சைத் தேவைக்காக அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    3. கம்யூனிட்டி ஸ்டெம் செல் வங்கிகள் (Community Stem Cell Banks)

    இந்த வகையான ஸ்டெம் செல் வங்கிகளில் பொது, தனியார் வங்கிகள் இரண்டிற்குமான சாதகங்களும் உள்ளன. இங்கு, தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் ஒரு சமூக கூட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றன, இந்த சமூக கூட்டமைப்பினை சேர்ந்த வங்கி உறுப்பினர்கள் அவசரமாக தேவைப்படும் போது சேமிக்கப்பட்ட எல்லா யூனிட்களையும் பெற்றுக் கொள்ளலாம். எனவே தான் இந்த மாடல் தனிச்சிறப்புடையது, இந்தியாவில் விரும்பத்தக்கதாக இருக்கிறது.

    முடிவுரை (Conclusion)

    ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் எதிர்கால மேம்பாட்டிற்கு ஸ்டெம் செல்லை பாதுகாத்து வைப்பது முக்கியமாக கருதப்படுகிறது. எளிதாக கிடைக்கப்பெறுவதும், உயர்தர உயிரியல் மாதிரிகளுக்குமான தேவையை இது அதிகரிக்கும். அநேக சவால்களை இது சந்திக்க வேண்டியிருந்தாலும், ஸ்டெம் செல் பாங்க்கிங் ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டு தானிருக்கிறது. ஸ்டெம் செல் பாதுகாப்பின் மூலம் பல்வேறு நோய்களுக்கு ஏற்கனவே வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. எதிர்கால மருத்துவத் துறையிலும், உடல்நல பாதுகாப்பிலும் ஸ்டெம் செல் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க பங்கினையாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெம் செல் பாதுகாப்பின் மூலம் 80-க்கும் மேற்பட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். எனினும், ஸ்டெம் செல்லை பாதுகாத்து வைப்பது பற்றி பரிசீலிப்பது ஒரு தனிநபரின் சொந்த விருப்பமாகும்.

    Tags

    What Are The Benefits Of Stem Cell Preservation in English, , What Are The Benefits Of Stem Cell Preservation in Bengali, What Are The Benefits Of Stem Cell Preservation in Telegu

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |