Postnatal Care
28 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) என்பது நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டின் ஒரு வடிவமாகும். இது கருப்பைக் குழாய்களைத் தடுப்பதன் மூலமாக கருத்தரிப்பதைத் தடுக்கிறது. ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) என்பது மற்ற கருத்தடை முறைகளிலிருந்து வேறுபட்டது. இது ஒரு நிரந்தர செயல்முறையாகும். பிற கருத்தடை முறைகள் எதிர்காலத்தில் கர்ப்பத்தை அனுமதிக்கும். ஆனால் ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) அனுமதிக்காது. மறுபுறம், ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) ஹார்மோன்களை உள்ளடக்காது.
ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) முறையானது பொதுவாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று உறுதியாக நம்புபவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகான கருத்தடை என்றால் என்ன?, அது எவ்வாறு செய்யப்படுகிறது?, அதன் நன்மைகள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் சில பொதுவான கருத்தடை சிக்கல்கள் பற்றி இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.
பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) என்பது ஒரு பெண் சிசேரியன் மூலமாகக் குழந்தை பெற்றவுடன் (அல்லது சுகப்பிரசவம் ஆகி 8 முதல் 12 மணி நேரத்திற்குள்) செய்யப்படும் அறுவை சிகிச்சை ஆகும். இது ஒரு நிரந்தர பிறப்பு கட்டுப்பாடு முறையாகும். மிகவும் பொதுவான வகையான பிரசவத்திற்குப் பிறகு செய்யப்படும் ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) ஆனது டியூபல் லிகேஷன் (குழல்சார் இணைப்பு) என்று அழைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் கருப்பைக் குழாய்களை கட்டுதல் அல்லது வெட்டிவிடுதல் போன்றவை அடங்கும். இது கருப்பையில் இருந்து கருப்பைக்கு, முட்டைகள் செல்வதைத் தடுக்கிறது. பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) என்பது கர்ப்பத்தைத் தடுக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். இந்த அறுவை சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம்.
பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) பல நன்மைகளைக் கொண்டுள்ளது, அதில் பின்வருபவை அடங்கும்:
இது மிகவும் பயனுள்ள கருத்தடை வடிவமாகும். 10 ஆண்டுகளில் இதன் தோல்வி விகிதம் 1.85% மட்டுமே.
இது ஒரு நிரந்தர கருத்தடை முறையாகும். எனவே உங்களுடைய வாழ்நாளில் இதைப் பற்றிய கவலைகள் இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.
இது தாய்ப்பால் கொடுப்பதை தொந்திரவு செய்யாது.
தொடர்ந்து கருத்தடை செய்யத் தேவை இல்லை. நீண்ட காலத்திற்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது.
பிரசவத்திற்குப் பிறகு இந்த செயல்முறை உடனடியாகச் செய்யப்படுகிறது. எனவே இனி காத்திருக்கத் தேவையில்லை.
இது ஒரு பாதுகாப்பான மற்றும் குறைந்தபட்சமாக ஊடுருவக்கூடிய அறுவை சிகிச்சை ஆகும்..
இதற்கு வழக்கமான சோதனைகள் அல்லது பராமரிப்பு எதுவும் தேவையில்லை.
இதையும் படிக்கலாமே! - When Will My Menstrual Cycle Resume After Pregnancy in Tamil |கர்ப்பத்திற்குப் பிறகு எனது மாதவிடாய் சுழற்சி எப்போது மீண்டும் தொடங்கும் ?
பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) என்பது ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இதில் கருப்பைக்குழாய்கள் அடைக்கப்பட்டு அல்லது மூடப்பட்டு, முட்டைகள் கருப்பையை சென்றடைவதைத் தடுக்கிறது. மருத்துவர்கள் இதை வயிற்றில் ஒரு சிறிய கீறல் மூலமாக அல்லது லேப்ராஸ்கோப்பி (கீஹோல் அறுவை சிகிச்சை) மூலமாகச் செய்யலாம்.
பிரசவத்திற்குப் பிறகான பிற ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) முறைகளில் சுருள்கள் அல்லது கிளிப்புகள் போன்றவை கருப்பைக் குழாய்களில் வைக்கப்படும் சாதனங்கள் ஆகும். இவை காயங்கள் அல்லது அடைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் முட்டைகளை கடந்து செல்வதை தடுக்கின்றன (இதுபோன்ற பெரும்பாலான செயல்முறைகள் நிறுத்தப்பட்டுள்ளன).
பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) செயல்முறைகளில் நிறைய உள்ளன. ஒவ்வொன்றிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. இதில் மிகவும் பொதுவான முறை குழாய் இணைப்பு, நிரந்தர கருத்தடை வடிவம் ஆகும்.
இது பொதுவாக பொது மயக்க மருந்துகளின் கீழ் செய்யப்படுகிறது மற்றும் கருப்பைக் குழாய்களை அணுகுவதற்கு அடிவயிற்றில் ஒரு சிறிய கீறல் ஏற்படுத்தப்படுகிறது. குழாய்கள் தடுக்கப்படுகின்றன அல்லது வெட்டப்படுகின்றன. இதனால், கருமுட்டைகள் அவற்றின் வழியாக செல்ல முடியாது. சுகப்பிரசவத்திகுப் பிறகு 8 முதல் 12 மணி நேரத்திற்குள் இந்தக் குழாய் இணைப்பு செய்யப்படுகிறது, மற்றும் சிசேரியன் பிரசவத்தின் போது, இது சி-பிரிவு நேரத்தில் செய்யப்படுகிறது.
காப்பர் ஐ.யூ.டி (IUD) போன்ற சில அறுவை சிகிச்சை அல்லாத பிரசவைத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) முறைகளும் உள்ளன. ஐ.யூ.டி (IUD) என்பது பிரசவத்திற்குப் பிறகு கருப்பையில் செருகப்படும் ஒரு தற்காலிக கருத்தடை ஆகும். இது கருப்பையின் மேலடுக்கில் அழற்சியை ஏற்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது. இது முட்டைகளை பொருத்துவதை கடினமாக்குகிறது.
பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷனில் (கருத்தடையில்) எச்சரிக்கையா இருக்க வேண்டிய சில சாத்தியமான பக்க விளைவுகளும் உள்ளன, அவை:
வயிற்று வலி.
தொற்று.
குமட்டல்.
தலைச்சுற்றல்.
இரத்தப்போக்கு.
இரத்தக் கட்டிகள்.
டியூபல் லிகேஷன் (குழல்சார் இணைப்பு) (இடுப்பு வலி, மாதவிடாய் முறைகேடுகள் மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அரிய நிலை).
மொத்தத்தில், பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) என்பது எதிர்காலத்தில் கர்ப்பமடையாமல் தடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். இந்த செயல்முறையை செய்வதற்குக் கருத்தில் கொள்ளும்போது, இது ஏற்றதா அல்லது இல்லையா என்பதை உறுதி செய்வதற்கு மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) செயல்முறையானது ஒரு நிரந்தர கருத்தடை முறையாகும். எனவே, இந்த செயல்முறையை செயல்படுத்துவதற்கு முன்பு, பெண்கள் தங்களுக்கு இனி எந்த குழந்தையும் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஸ்டெரிலைசேஷனில் (கருத்தடையில்) செய்யப்படும் அறுவை சிகிச்சையில் தொற்று மற்றும் இரத்தப்போக்கு போன்றவை இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். இருப்பினும், இம்மாதிரியான ஆபத்துக்கள் ஏற்படுவதென்பது பொதுவாக மிகக் குறைவாக இருக்கும். மேலும் ஒட்டுமொத்த செயல்முறையும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
தேவையில்லாத கர்ப்பம் அல்லது அறுவைசிகிச்சை பிரிவுகளுக்குப் பிறகு ஏற்படும் பயம் காரணத்தினால் பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், பெண்கள் ஏன் இதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒரு பெண்ணுக்கு முந்தைய பிரசவத்தில் ஏதாவது சிக்கல்கள் இருந்தாலோ அல்லது இது பெண்ணின் முதல் குழந்தையாக இருந்தால், பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) செயல்முறைக்கு அவர் தகுதியுடைய நபராக இல்லாமல் இருக்கலாம். மேலும், பிரசவத்தின்போது தாய்க்கு சிக்கல்கள் ஏதாவது ஏற்பட்டாலோ அல்லது தாயின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, பிரசவத்திற்குப் பிறகான ஸ்டெரிலைசேஷன் (கருத்தடை) செய்வதைத் தவிர்ப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது.
Postpartum sterilization in tamil, complications of postpartum sterilization in tamil, postpartum sterilization meaning in tamil, Postpartum Sterilization: Procedure & Complications In English, Postpartum Sterilization: Procedure & Complications In Hindi, Postpartum Sterilization: Procedure & Complications In Telugu, Postpartum Sterilization: Procedure & Complications In Bengali
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டிய 30 பேபி பம்ப் போட்டோஷூட் ஐடியாக்கள்| Best 30+ Baby Bump Photoshoot Ideas You Should Try In Tamil
கர்ப்ப காலத்தில் டிராகன் பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?(Is It Safe To Eat Dragon Fruit During Pregnancy in Tamil)
பெண்களின் மன நலத்தை மேம்படுத்த எது உதவுகிறது | What Helps in Improving Women's Mental Health in Tamil)
குழந்தை பருவ கோளாறுகள்: பொருள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை | Childhood Disorders: Meaning, Symptoms & Treatment in Tamil
அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் தாய்வழி - கரு மருத்துவத்தின் முக்கியத்துவம் |Importance of Maternal - Fetal Medicine in High Risk Pregnancies in Tamil
கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ்: தொடர்புடைய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்| Sugarcane Juice in Pregnancy: Benefits and Precautions in Tamil)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |