hamburgerIcon

Orders

login

Profile

Profile
Skin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Boost Breast Milk Supply
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • Diet & Nutrition arrow

  • கர்ப்ப காலத்தில் கேரட்: நன்மைகள் மற்றும் தீமைகள் | Carrot During Pregnancy: Benefits & Disadvantages in Tamil arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் கேரட்: நன்மைகள் மற்றும் தீமைகள் | Carrot During Pregnancy: Benefits & Disadvantages in Tamil

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் கேரட்: நன்மைகள் மற்றும் தீமைகள் | Carrot During Pregnancy: Benefits & Disadvantages in Tamil

    13 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கேரட் நம் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக விளங்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இவை எளிதில் கிடைப்பதோடு, விலைக் குரைவாகவும் உள்ளன. ஆரோக்கியமான உணவு விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பொதுவாக கேரட் "சூப்பர் உணவு" என்று சொல்லப்படுகிறது, ஆனால் கர்ப்ப காலத்தில் கேரட் சாப்பிடலாமா?

    கேரட் பாதுகாப்பானது தானா, இல்லை இந்த நேரத்தில் கேரட் எடுத்துக் கொள்வது ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா? இந்தப் பதிவு உங்களுடைய இத்தகைய சந்தேகங்களுக்கு விடையளிக்கும். ஆம், இது கர்ப்ப காலத்தில் கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறது. அதோடு, உங்கள் டயட்டில் இதனை பாதுகாப்பாக எப்படி சேர்த்துக் கொள்வது என்பது குறித்த உதவிக் குறிப்புகளையும் நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

    கர்ப்ப காலத்தில் கேரட் வழங்கும் ஊட்டச்சத்து மதிப்பு (Nutritional value of carrots during pregnancy in Tamil)

    கேரட்டில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான வைட்டமின் ஏ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. கர்ப்ப காலத்தில் கேரட் பல நன்மைகள் வழங்குவதன் காரணமாக இது கண்டிப்பாக நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    கேரட்டின் ஊட்டச்சத்து மதிப்பு

    1. வைட்டமின் ஏ(Vitamin A)

    கர்ப்பிணிப் பெண்களுக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது, ஏனெனில் இது வயிற்றில் உள்ள குழந்தையின் கண் பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது.

    2. வைட்டமின் சி (Vitamin C)

    இந்த வைட்டமின் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்றாகும், ஏனெனில் இது குழந்தையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

    3. ஃபோலிக் அமிலம் (Folic acid)

    இதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்றாகும், ஏனெனில் இது பிறவி குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

    4. பொட்டாசியம் (Potassium)

    இது கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஒரு மினரல் ஆகும். இது இரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிக்க உதவுகிறது.

    5. மெக்னீசியம் (Magnesium)

    இதுவும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஒரு மினரல் ஆகும். இது தசைகள் நரம்புகளைத் தளர்த்த உதவுகிறது.

    நீங்கள் கர்ப்பமாக இருந்தால், கேரட் உட்பட உங்கள் உணவில் ஏதேனும் புதிய உணவுகளைச் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.

    கர்ப்ப காலத்தில் கேரட் உண்பதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of eating carrots during pregnancy in Tamil)

    • கர்ப்ப காலத்தில் கேரட் உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சற்று விளக்கமாகப் பார்ப்போம். கேரட்டில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. வயிற்றில் உள்ள குழந்தையின் கண்கள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ அவசியமாகும். அதோடு இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான சிக்கலான மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

    • கர்ப்ப காலத்தில் கேரட் சாப்பிடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படக் கூடிய நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் அதிக கேரட் சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

    • கேரட்டில் லுடீன் நிறைந்துள்ளது, இது குழந்தையின் கண்களின் வளர்ச்சிக்கு அவசியம். கீரைகள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளில் லுடீன் காணப்படுகிறது.

    • கேரட்டில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளதால் இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் அல்லது சைட் டிஷ் ஆகும். இருந்தாலும், இதனை மிதமான அளவில் தான் உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இது உப்புசம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஆனால், இதற்காக கர்ப்ப காலத்தில் கேரட் உண்பதால் ஏற்படும் நன்மைகளை குறைத்து எடைப் போட்டு விடாதாீர்கள். ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், கேரட்டை வேக வைத்து அல்லது அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    கர்ப்ப காலத்தில் கேரட் உண்பதை எவ்வாறு அதிகரிக்கலாம்(How to increase the consumption of carrots during pregnancy in Tamil)

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. கருவின் வளர்ச்சிக்கும் தாயின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் ஏ அவசியமாகும்.

    கர்ப்ப காலத்தில் கேரட் எடுத்துக் கொள்வதை அதிகரிக்க பல வழிகள் உள்ளன:

    1. ஸ்மூத்தி அல்லது ஜுஸ் ஆக கேரட்டை நீங்கள் உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

    2. கேரட்டை பச்சையாக ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடலாம். ஹம்முஸ் போன்றவற்றைத் தொட்டு உண்ணலாம்.

    3. கேரட்டை உங்கள் மதிய அல்லது இரவு உணவில் பொரியல் அல்லது சாலட் போன்று செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

    4. சற்று வித்தியாசமாக யோசித்து உங்கள் பான் கேக், பர்கர் அல்லது பாஸ்தா உணவுகளில் கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

    5. உங்கள் பேக்கிங் ரெசிப்பியிலும் கேரட்டை இயற்கையான ஸ்வீட்னர் ஆக பயன்படுத்தலாம்.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் கொய்யா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், பக்க விளைவுகள் மற்றும் ஆலோசனைகள்

    கர்ப்ப காலத்தில் கேரட் உண்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்(Disadvantages of eating carrots during pregnancy in Tamil)

    • கர்ப்ப காலத்தில் கேரட் சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளன. இது அதிக சர்க்கரை உள்ள ஒரு காய்கறி என்பதால் இதில் உள்ள அதிக சர்க்கரை கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கக் கூடும். வாயு தொல்லை மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படலாம். இதனால் ஏற்படக் கூடிய மற்றொரு ஆபத்து சிறுநீரக கற்கள் ஆகும்.

    • கர்ப்ப காலத்தில் கேரட் ஜுஸ் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இது கேரட்டை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் சில தீமைகளை நீக்க உதவுகிறது. கேரட்டில் ஆக்சலேட்டுகள் உள்ளன, அவை உடலில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்களுடன் பிணைக்கப்பட்டு அவற்றின் உறிஞ்சுதலைத் தடுக்கின்றன. இது இந்த ஊட்டச்சத்துக்களில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

    கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடிய கேரட் சூப்பின் செய்முறை விளக்கம்(Recipe of carrot soup during pregnancy in Tamil)

    கர்ப்ப காலத்தில், பல பெண்கள் சூப் சாப்பிட விரும்புவார்கள். கேரட் சூப் செய்வதற்கான பல செய்முறைகள் ஆன்லைனில் இருந்தாலும், இந்த எளிய செய்முறையை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    • 1 கப் பொடியாக அரிந்த கேரட்

    • ஒரு கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் (ஒன்று)

    • 3 கப் சிக்கன் அல்லது வெஜிடபிள் ஸ்டாக்

    • ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

    • சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு

    செய்முறை விளக்கம்:

    • மிதமான தீயில் ஒரு பெரிய சட்டியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

    • பின்னர் கேரட் சேர்த்து 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

    • அடுத்து போதுமான தண்ணீர், சிக்கன் அல்லது வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும்.

    • தீயைக் குறைத்து, சிம்மில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேக விடவும்.

    • தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான், சூடாக பிரெட் உடன் சேர்த்து பரிமாறுங்கள்.

    இந்தப் பதிவில் உள்ளவாறு, கேரட் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதோடு, நீங்கள் கர்ப்ப காலத்தில் கேரட் சாப்பிடலாமா வேண்டாமா என்று சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், அதிகமாக கேரட் சாப்பிடக் கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், அதனால் ஒரு சில தீமைகள் ஏற்படக் கூடும். இது போன்ற பயனுள்ள பதிவுகளைக் காண மைலோ ஸ்டோரை பார்வையிடவும்.

    References

    1. Bastos Maia S, Rolland Souza AS, Costa Caminha MF; et al. (2019). Vitamin A and Pregnancy: A Narrative Review. Nutrients.

    2. Que F, Hou XL, Wang GL, Xu ZS, Tan GF, Li T, Wang YH, Khadr A, Xiong AS. (2019). Advances in research on the carrot, an important root vegetable in the Apiaceae family. Hortic Res.

    Tags

    Carrot During Pregnancy in Tamil, Benefits of Eating Carrot During Pregnancy in Tamil, Side effects of Eating Carrot During Pregnancy in Tamil, Carrot During Pregnancy in English, Carrot During Pregnancy in Hindi, Carrot During Pregnancy in Telugu, Carrot During Pregnancy in Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Dhanalakshmi Pillai

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Conception

    Conception

    உடலுறவுக்குப் பிறகு எத்தனை நாட்களில் கருவுற்றத்தை சோதனை செய்யவேண்டும்? (After how many days of sex can you check for pregnancy In Tamil)

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்பகால ஹார்மோன் - கோனாடோட்ரோபின் (எச்சிஜி), அதன் காரணங்கள் மற்றும் இயற்கையாக அதை எவ்வாறு அதிகரிப்பது?

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.