hamburgerIcon

Orders

login

Profile

STORE
Profile
Skin Care
Skin Brightening
Anti Ageing
Skin Hydration
Acne and Blemishes
Dry and Dull Skin
Dark Circles
Skin Care Super Saver Combos
Hair Care
Hairfall
Dry and Damaged Hair
Hair Growth
Super Saver Combos
Preg & Moms
Boost Breast Milk Supply
Breast Pump
Fertility
Stretch Marks Care
Maternity Wear
Maternity Gear
Baby Care
Diapers & WipesBaby DiapersCloth DiapersBest Baby Wet Wipes in IndiaSuper Saver Combos
Baby WellnessDiaper Rash Mosquito Repellent Anti-ColicSuper Saver Combo
Baby CareSkinHairBath & BodySuper Saver Combos
Feeding & LactationFeeding BottleBoost Breast Milk SupplySipperBreast PumpTeethers & NibblersGrooved NippleNursing PadsSuper Saver Combos
Baby ClothingBaby Detergent & Cleanser in IndiaBaby TowelCap, Mittens & BootiesSocksWrappersWinter Clothing
Baby GearCarriersStrollersDiaper BagBathtubs and Potty Seat Carry NestDry SheetBaby Pillow
Diapers
Baby Diapers
Cloth Diapers
Best Baby Wet Wipes in India
Super Saver Combos
More
Bath & BodyBody MoistureBrighteningTan Removal
FertilityFertility For Her
HygieneUTI and Infection
WeightWeight ManagementDigestive HealthSuper Saver Combos
Daily WellnessDigestive Health
This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow

  • Health & Wellness arrow

  • பெண்களின் மன நலத்தை மேம்படுத்த எது உதவுகிறது | What Helps in Improving Women's Mental Health in Tamil) arrow

In this Article

     பெண்களின் மன நலத்தை மேம்படுத்த எது உதவுகிறது | What Helps in Improving Women's Mental Health in Tamil)

    Health & Wellness

    பெண்களின் மன நலத்தை மேம்படுத்த எது உதவுகிறது | What Helps in Improving Women's Mental Health in Tamil)

    22 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பொதுவாக மன நலம் என்பது ஆண் பெண் என இரு பாலருக்கும் வேறுபட்ட விளைவுகளைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, கவலை மற்றும் மன அழுத்தம் தான் பெண்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. குறிப்பிட்ட சில மன நல பிரச்சனைகள் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும். எடுத்துக்காட்டாக, சில பெண்கள் ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கும் போது பெற்றோர் ஆவதற்கு முன்னான விரக்தி, சீர்குலைக்கும் மனநிலை மற்றும் மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளின் அறிகுறிகளை அனுபவிக்கலாம்.. ஸ்கிசோஃப்ரினியா மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற பிற மனநலக் கோளாறுகள் ஆண் மற்றும் பெண்களில் காணப்படும் நிகழ்வு விகிதங்களுக்கு இடையில் வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால், சில அறிகுறிகள் ஆண்களை விட பெண்களில் அதிகமாகக் காணப்படுவதாலும், பாலினமானது நோய் எவ்வாறு உருவாகிறது என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதாலும், பெண்களின் மன நலனின் அறிகுறிகள் வித்தியாசமாக வெளிப்படும்.

    மன நலம் பணியின் செயல்திறனில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது? (What Effect Does Mental Health Have on Performance at Work in Tamil)

    மன அழுத்தம் மற்றும் மோசமான மன நலம் பெண்களை பின்வரும் விதங்களில் பாதிக்கக் கூடும் -

    • பணி செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன்.

    • ஒருவரின் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு

    • சக பணியாளர்கள் உடனான உரையாடல்

    • உடற் தகுதி மற்றும் வழக்கமான செயல்பாடுகள்.

    கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதனை கண்டறிவது இன்னும் கடினமாகும். இதனால், மனநலப் பிரச்சனைகளை அனுபவிக்கும் பெண்களை ஆதரிப்பது அல்லது அவர்களை ஊக்குவிப்பது கூட தனிப்பட்ட மற்றும் பணியிடச் சூழல் இரண்டிலும் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அசாதாரண சோர்வு, அடிக்கடி ஏற்படும் (மற்றும் நீண்ட) தவறுகள், தனிமைப்படுத்துதல், தள்ளிப்போடுதல் மற்றும் ஒழுங்கற்ற நடத்தை போன்ற சாத்தியமான அறிகுறிகளை ஒருவர் கவனித்துக் கொள்வது பணியிடத்தில் ஏற்படும் மனநல பிரச்சனைகளை நிர்வகிக்க உதவியாக இருக்கும்.

    ஆபத்தான அறிகுறிகள் (Warning Signs in Tamil)

    பெண்கள் மற்றும் மன நலம் என்பது அதிகம் விவாதிக்கப்பட்ட ஒரு தலைப்பே ஆகும். ஆனால், இது வெகு குறைந்த இடங்களிலே அடையாளம் காணப்பட்டுள்ளது. பெரும்பாலான மன நோய்கள் மற்றும் நிலைமைகள் ஆண் பெண் என இருவரையுமே பாதிக்கும். ஆனால், பெண்களின் மன நல பாதிப்புக்கான அறிகுறிகள் வேறுபடும். பின்வரும் அறிகுறிகள் பெண்களின் மோசமான மன நலனை சுட்டிக் காட்டுகின்றன,

    • தொடர்ச்சியான மனச்சோர்வு அல்லது உதவியற்ற உணர்வு.

    • மது மற்றும்/அல்லது போதைப் பொருட்களின் தவறான பயன்பாடு.

    • உணவு அல்லது தூக்க அட்டவணையில் ஏற்படும் கடுமையான மாற்றங்கள்.

    • பசி மற்றும் அல்லது எடையில் ஏற்படும் மாற்றங்கள்.

    • குறைந்த ஆற்றல் அல்லது சோர்வு.

    • அதிகப்படியான கவலை அல்லது பேரச்சம்.

    • இல்லாத ஒன்றை அறிந்திருப்பது அல்லது கேட்பது.

    • உணர்ச்சிகளில் உச்சக்கட்ட உயர்வு மற்றும் தாழ்வு..

    • அடையாளம் காணப்படாத தலைவலி அல்லது வயிறு சம்மந்தமான பிரச்சனைகள்.

    • எரிச்சல்.

    • சமூகத்தில் இருந்து விலகி இருத்தல்.

    • தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள்.

    மன நலத்திற்கு சிகிச்சை அளிக்க முடியுமா?(Can Mental Health be Treated in Tamil)

    சரியாக கண்டறிந்து உறுதி செய்யப்பட்டால், பெண்களின் மன நலனிற்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியும். தனிப்பட்ட அல்லது குழு சிகிச்சையில் ஈடுபடுவது மன நோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பல பெண்களுக்கு மன வலிமைப் பெறவும் விரைவில் குணமடையவும் உதவுகிறது. இதற்கு பல சாத்தியமான சிகிச்சை ஆப்ஷன்கள் உள்ளன. தனிநபர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான சிகிச்சை அல்லது சிகிச்சையின் கலவையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; அனைவருக்கும் பயனுள்ள சிகிச்சை என்று பொதுவாக எதுவும் இல்லை.

    இதையும் படிக்கலாமே! - ஆஸ்டியோபோரோசிஸ் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    • உளவியல் சிகிச்சை (Psychotherapy)

    ஒரு தகுதி வாய்ந்த மனநல நிபுணர் பெண்களின் மன நலனிற்கு தகுந்த சிகிச்சை அளித்து நிர்வகிப்பதே உளவியல் சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. உளவியல் சிகிச்சையானது ஒரு நபரின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்களின் கருத்துக்கள், உணர்ச்சிகள் மற்றும் செயல்களை கூர்ந்து கவனித்து ஆராய்வதை உள்ளடக்குகிறது. மன நல பிரச்சனைகளில் இருந்து குணமடைய மிகவும் பயனுள்ள வழி உளவியல் சிகிச்சை மற்றும் அதனுடன் மருத்துவர் பரிந்துரை செய்யும் மருந்துகளை எடுத்துக் கொள்வதே ஆகும். நடத்தை சிகிச்சை, முறையான உணர்வு குறைப்பு சிகிச்சை, இயங்கியல் நடத்தை சிகிச்சை போன்றவை இதற்கான சில எடுத்துக்காட்டுகள்.

    • மருந்துகள் (Medication)

    மனநோய்களை மருந்துகளால் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், இது அறிகுறிகளை நிர்வகிப்பதற்கு இது பயனுள்ளதாக இருக்கும். மன நோய்களில் இருந்து குணமடைவதற்கான எளிதான வழி, சில நேரங்களில், மருந்து மற்றும் மன நல ஆலோசனையே ஆகும்.

    • கேஸ் மேனேஜ்மென்ட் (Case Management)

    ஒரு பெண்ணின் மன நோயைக் குணப்படுத்த கேஸ் மேனேஜரின் உதவியுடன், கேஸ் மேனேஜ்மென்ட் திட்டங்கள் மூலம் மனநல சேவைகளை உபயோகிக்கலாம். புனர்வாழ்வை ஊக்குவிப்பதற்கான பல வழிகளை கேஸ் மேனேஜரின் உதவியுடன் மதிப்பீடு செய்யலாம், திட்டமிடலாம் மற்றும் செயல்படுத்தலாம்.

    • மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் (Hospitalization)

    சில நேரங்களில், பாதிக்கபட்ட நபரை கவனமாக கவனித்துக் கொள்ளவும், நோயை கண்காணிக்கவும் மற்றும்/அல்லது தேவைக்கேற்ப மருந்துகளை சரியாக கொடுக்கவும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

    • உதவிக் குழு (Support Group)

    உதவிக் குழு என்பது மன நோய்களை குணப்படுத்தும் பொதுவான நோக்கத்தை நோக்கி ஒருவரையொருவர் ஊக்குவித்துக் கொள்ளும் நபர்கள் அடங்கிய ஒரு குழுவாகும். இத்தகைய உதவிக் குழுக்கள் பெரும்பாலும் நிபுணர்களைக் காட்டிலும் மன நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களைக் கொண்டிருக்கும்.

    • மாற்று மருந்து (Alternative Medicine)

    சிஏஎம் (CAM) அல்லது காம்பிளிமெண்டரி மற்றும் மாற்று மருத்துவம் என்பது முக்கிய மருத்துவப் பராமரிப்பில் அடிக்கடி பயன்படுத்தப்படாத செயல்முறைகளைக் குறிக்கிறது. இது பெண்களின் மன நலனை மேம்படுத்துவதற்கு வழக்கமான மருத்துவ நடைமுறைகளுக்கு மாற்றாக அல்லது கூடுதல் படியாக பயன்படுத்தப்படுகிறது.

    • சுய-உதவி (Self-Help)

    சுய உதவித் திட்டம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நோயைச் சமாளிக்க உதவுகிறது. இதில் மீட்பு, தூண்டுதல்களை நிர்வகித்தல் அல்லது அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது ஆகியவை அடங்கும். மனநலப் பிரச்சனை ஏற்படும் என்று ஒருவர் கவலைப்பட்டால், குடும்ப மருத்துவரிடம் இது குறித்து பேசுவது நல்லது. இது அச்சுறுத்தவதாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் தங்கள் மருத்துவரிடம் பேசுவதும் தகுந்த ஆதரவைப் பெறுவதும் பெண்களின் மன நலனையும் வாழ்க்கையையும் கணிசமாக மேம்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

    References

    1. Malhotra S, Shah R. (2015). Women and mental health in India: An overview. Indian J Psychiatry.

    2. Herrman H. (2016) Improving the mental health of women and girls: psychiatrists as partners for change. World Psychiatry.

    Tags

    What is Mental Health in Tamil, Mental Health effect on professional life in Tamil, What are warning signs in Tamil, Treatment of Mental Health in Tamil, What Helps in Improving Women's Mental Health in English, What Helps in Improving Women's Mental Health in Hindi, What Helps in Improving Women's Mental Health in Telugu

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Therapies

    Therapies

    குழந்தை பருவ கோளாறுகள்: பொருள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை | Childhood Disorders: Meaning, Symptoms & Treatment in Tamil

    Image related to Pregnancy Complications

    Pregnancy Complications

    அதிக ஆபத்துள்ள கர்ப்பங்களில் தாய்வழி - கரு மருத்துவத்தின் முக்கியத்துவம் |Importance of Maternal - Fetal Medicine in High Risk Pregnancies in Tamil

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் கரும்பு ஜூஸ்: தொடர்புடைய நன்மைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்| Sugarcane Juice in Pregnancy: Benefits and Precautions in Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் சீதாப்பழம்: நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Custard apple during pregnancy: Benefits & risks In Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நன்மைகள், அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் | Sweet Potato During Pregnancy in Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் கேரட்: நன்மைகள் மற்றும் தீமைகள் | Carrot During Pregnancy: Benefits & Disadvantages in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on Business World
    Mylo featured on CNBC
    Mylo featured on Financial express
    Mylo featured on The Economics Times
    Mylo featured on Business Today
    Mylo featured on TOI
    Mylo featured on inc42
    Mylo featured on Business Standard
    Mylo featured on YourStory
    Mylo featured on ANI
    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo
    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.