Labour & Delivery
30 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலம் என்பது சிறப்புமிக்க பயணம் ஆகும். ஒரு புதிய உயிரை இந்த உலகுக்கு கொண்டு வருகிறோம். இறுதியாக, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவது குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். எல்லையற்ற மகிழ்ச்சி, விலைமதிப்பில்லா தருணங்களை இது கொண்டிருந்தாலும், சில கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணுக்கு எழுகின்ற முக்கிய சந்தேகம் என்னவென்றால், சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம், இந்த இரண்டில் எது சிறப்பானது? என்பதுதான். எனினும், இந்த இரண்டு முறைகளிலுமே சில சாதக, பாதகங்கள் இருக்கின்றன.
பெண்ணுறுப்பு வழியாக குழந்தையை பெற்றெடுப்பது அல்லது சுகப்பிரசவம் எனப்படுவதுதான் குழந்தையை பெற்றெடுப்பதற்கான இயற்கையான வழிமுறையாகும். சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவம் ஆகிய இரண்டுக்குமான சாதக, பாதகங்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் நீங்கள் ஆலோசனை செய்யலாம். ஒவ்வொரு பெண்ணின் உடல்வாகு வெவ்வேறு மாதிரியாக இருப்பதால் சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவத்தால் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் மாறுபடுகின்றன.
சுகப்பிரசவம் அல்லது பெண்ணுறுப்பு வழி பிரசவம் என்பது குழந்தை பிறப்பதற்கான இயற்கையான வழிமுறையாகும். இந்த நடவடிக்கையின்போது உங்கள் கர்ப்பப்பை வாய் பகுதி மெலிந்து, திறக்கும் மற்றும் உங்கள் கர்ப்பப்பை சுருங்கி குழந்தையை கீழ்நோக்கி பிறப்பு வழி நோக்கி தள்ளி, பெண்ணுறுப்பு வழியாக வெளியேற்ற உதவும். சிசேரியன் அல்லது சி-பிரிவு பிரசவம் என்பது தாய்மார்களின் பெண்ணுறுப்பு வழி பிரசவத்திற்குப் பதிலாக அவர்களது வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை பிரசவிப்பதாகும். இது வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் முக்கியமான அறுவை சிகிச்சை என்பதால் இதனை திட்டமிட்டு, நேரம் குறித்து மேற்கொள்ளலாம் அல்லது திட்டமிடாமல் அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.
இது பல்வேறு காரணங்களை சார்ந்துள்ளது என்பதால், இதற்கு சரியான பதில் என்பதே கிடையாது. சிசேரியன் என்பது இப்போது இயல்பான நடவடிக்கையாக மாறிவிட்டாலும், பல அபாயங்களை கொண்ட பெரும் சிகிச்சையாக அது இருக்கிறது. எனவே, மருத்துவ ரீதியான காரணங்கள் இல்லாமல், மருத்துவர்கள் இதை தேவையின்றி பரிந்துரை செய்வதில்லை.
பிரசவம் அல்லது குழந்தை பிறப்பு நடவடிக்கை சிக்கலானதாக இல்லை என்றால் சிசேரியனை காட்டிலும் பெண்ணுறுப்பு வழி பிரசவம் சிறப்பானதாகும். உங்களுடைய தற்போதைய கர்ப்பத்திற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீங்கள் கர்ப்பம் அடையும்போதும் இது சிறப்பான பலனை தரும் வழிமுறையாகும். சுகப்பிரசவம் நடந்தால் எதிர்காலத்தில் நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு பக்கபலமாக இருக்கும்.
சில சமயம் தாய்மார்கள் அல்லது குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக சிசேரியன் பிரசவம் அவசியமானதாக இருக்கும். இத்தகைய தருணங்களில் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் சிசேரியன் பிரசவம் மிக பாதுகாப்பான நடவடிக்கையாக அமையும். உங்கள் பிரசவம் இயல்பானதாக அமையவில்லை மற்றும் செயற்கையாக தூண்டப்பட்டது என்றால், உங்கள் மருத்துவர் சிசேரியன் செய்ய அறிவுறுத்துவார். உங்கள் உடல்நிலை மற்றும் குழந்தை எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை ஆய்வு செய்தபிறகு மருத்துவர் இதை பரிந்துரை செய்யலாம். பிரசவ நேரத்தின்போது குழந்தையின் இதயத்துடிப்பை கண்காணிப்பதன் மூலமாக, குழந்தை எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறது என்பதை மருத்துவர் தெரிந்து கொள்வார்.
சில சமயம், தூண்டப்படுகின்ற பிரசவம் வேண்டுமா அல்லது சிசேரியன் செய்து கொள்ளலாமா என்ற வாய்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு மருத்துவர் உங்களிடம் அறிவுறுத்துவார். தூண்டப்படும் பிரசவம் பல நடவடிக்கைகளை கொண்டதாக இருக்கும். உதாரணத்திற்கு வேக்குவம் அல்லது ஃபோர்செப்ஸ் மேற்கொள்வதன் மூலமாக குழந்தையை பிரசவிக்க முயற்சிக்கலாம். ஆனால், இவை மிகவும் சிக்கலான நடவடிக்கையாகும். ஆக, சிசேரியன் பிரசவத்தின்போது, இந்த அபாயங்களை எதிர்கொள்வது குறித்து நீங்களும், உங்கள் மருத்துவரும் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.
சில சமயங்களில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழப்பமான சூழல் நிலவக்கூடும். சிசேரியன் செய்து கொள்வதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து பரிசீலனை செய்து, நீங்களும், உங்கள் மருத்துவரும் முடிவு செய்ய வேண்டியிருக்கும். ஆக பிரசவம் நடக்கும்போது அல்லது குழந்தை பிறக்கும்போது உங்களுக்கு இந்த நிலை ஏற்படக் கூடும் என்பதால் இதுகுறித்து நீங்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் பொது உடல் நலன் மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றை பொருத்தும் முடிவு மாறுபடும். ஒருவேளை உங்களுக்கு கீழ்காணும் பிரச்சினைகள் இருப்பின் சிசேரியன் பிரசவம் என்பது சிக்கலுக்குரியதாக மாறலாம்:
உங்கள் உடல் எடை மிகுதியாக இருப்பது அல்லது உடல் பருமனுடன் இருப்பது.
வயிற்றுப் பகுதியில் இதற்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பது.
ஏற்கனவே இதய நோய் போன்ற பாதிப்புகளை கொண்டிருப்பது.
உங்களுக்கு பிரசவம் நடந்து முடிக்கும் வரையிலும் எது வலி மிகுந்தது என்று துல்லியமாக கணித்து கூறுவது கடினமாகும். குழந்தை பிறப்பு நடவடிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பிரசவ கால வலி குறித்து நீங்கள் பெரிய அளவுக்கு கற்பனை செய்திருக்கலாம். ஆனால், சிசேரியனை பொருத்தவரையில் அறுவை சிகிச்சையை செய்யும் தருணத்தில் எந்த வலியும் இருக்காது. ஆனால், அதற்குப் பிறகான காலங்களில் மிகுந்த வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு உங்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்படும். உங்களுக்கு தேவைப்படும் தருணங்களில் அதனுடன் சேர்த்து வலி நிவாரண மருந்துகள் கொடுக்கப்படும். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் முதலில் சில நாட்களுக்கு வலி ஏற்படும் மற்றும் அந்தப் புண் ஆறும் வரையில் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு உங்கள் வயிற்றுப் பகுதியில் அசௌகரியம் ஏற்படும். நேரடியாக பெண்ணுறுப்பு வழி சுகப்பிரசவம் நடைபெறாமல், சிசேரியன் பிரசவம் நடந்திருந்தால், அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைய நீண்டகாலம் தேவைப்படலாம். அதுவரையில் நீங்கள் வலி நிவாரண மாத்திரைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக சில பெண்களுக்கு தலைவலி மற்றும் பின் இடுப்பு பகுதியில் முதுகுதண்டு அல்லது தண்டுவடத்தின் இறுதி பகுதி மற்றும் கழுத்தை ஒட்டிய பகுதிகளில் வலி ஏற்படலாம். சில அசௌகரியங்களை தவிர்க்க, அதற்கு தகுந்தவாறு மருந்துகளை மாற்ற வேண்டியிருக்கும் என்பதால் இதுபோன்ற தொந்தரவுகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் நீங்கள் எடுத்துக் கூறுவது அவசியமாகும்.
பிரசவ வலியை தவிர்ப்பதற்காக பல பெண்கள் சிசேரியன் செய்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால், சிசேரியனை ஒப்பிடுகையில், சுகப்பிரசவத்தால் ஏற்படும் வலி என்பது குறுகிய காலத்திற்கு மட்டுமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிசேரியன் பிரசவத்தால் சில நாட்களுக்கு உங்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படலாம். சில பெண்களுக்கு, அறுவை சிகிச்சையை தொடர்ந்து சில மாதங்கள் வரையிலும் வயிற்றில் அசௌகரியங்கள் ஏற்படலாம்.
இது சூழ்நிலையை பொருத்து மாறுபடும். உங்கள் குழந்தையின் தொப்புள்கொடி கழுத்தை சுற்றி கிடக்கிறது என்றால், அதை நீங்கள் உணரும் முன்பாக உங்கள் மருத்துவர் கண்டறிந்து விடுவார். இது மிகவும் இயல்பான விஷயம் தான் என்பதால், இதன் மூலம் உங்கள் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் நடக்கும்போது, தொப்புள்கொடி குறித்து முழுமையாக மறந்துவிடுவார்கள். ஆனால், குழந்தையின் தலை வெளிவரும் சமயத்தில், அதன் கழுத்தில் தொப்புள்கொடி சுற்றியிருப்பதை மருத்துவர் உணரும் பட்சத்தில், உடனடியாக அதை சரி செய்வதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொள்வார். தொப்புள்கொடியை இலகுவாக்க மருத்துவர் சிகிச்சை மேற்கொள்வார். இதன் மூலம் குழந்தையின் தோள்பகுதி எளிமையாக வெளிவரும் அல்லது தொப்புள்கொடியை தலையை சுற்றி கொண்டு செல்ல மருத்துவர் நடவடிக்கை எடுப்பார்.
எனினும், குழந்தையின் கழுத்தை சுற்றி தொப்புள்கொடி சுற்றிக் கொண்டால் இரண்டு சந்தர்பங்களில் அதுகுறித்து கவலை கொள்ள வேண்டியிருக்கலாம்:
கழுத்தை சுற்றி தொப்புள்கொடி இறுக்கமாக சுற்றிக் கொண்டிருப்பது.
தொப்புள்கொடிக்கான இரத்த ஓட்டம் ஏதேனும் ஒரு காரணத்தால் தடைபடுவது.
குழந்தையின் கழுத்தை சுற்றி இறுக்கமாக தொப்புள்கொடி சுற்றியிருக்கும் பட்சத்தில், குழந்தையின் தோள்பகுதி வெளிவரும் முன்பாகவே, கொடியை நறுக்கிவிட மருத்துவர் முயற்சிக்கலாம்.
சிசேரியன் நடவடிக்கையின்போதும், அதற்குப் பிறகும் உங்கள் குழந்தைக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. எனினும், சிசேரியன் மூலமாக பிரசவிக்கும் சில குழந்தைகளை, இயற்கையான பிரசவம் நிகழக் கூடிய காலம் வரையிலும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு கவனப் பிரிவில் வைத்திருக்க வேண்டியிருக்கலாம். சில குழந்தைகளுக்கு பிறந்த பிறகு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். அதிலிருந்து மீண்டு வருவதற்கு சில குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை தேவைப்படும். சிசேரியன் மூலமாக பிறக்கும் குறைப்பிரசவ குழந்தைகள் மற்றும் 39 வாரங்களுக்கு முன்னதாக பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற மூச்சுத்திணறல் பிரச்சினை உண்டாகும்.
சில சமயம், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் சிறு கத்திகள் மூலம் தவறுதலாக குழந்தைக்கு காயம் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் இது தாமாகவே குணமாகிவிடும். அதேபோல, நீண்டகால அடிப்படையில், சிசேரியன் மூலமாக பிரசவித்த குழந்தைகள் சிலருக்கு குழந்தை பருவ காலத்தில் ஆஸ்துமா தொந்தரவு ஏற்படலாம்.
சிசேரியன் என்பது வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பெரும் அறுவை சிகிச்சை என்பதால், கீழ்காணும் விளைவுகள் ஏற்படலாம்:
சிசேரியன் சிகிச்சையின் முக்கியமான அபாயம் என்னவென்றால், எதிர்பார்த்ததைக் காட்டிலும் அறுவை சிகிச்சையின்போது கூடுதலாக ரத்தம் வெளியேறுவதாகும். உங்கள் மருத்துவர் இதை சமாளித்து விடுவார். ஒருவேளை, வழக்கத்திற்கு மாறாக மிக, மிக அதிகமாக ரத்தம் வெளியேறும் பட்சத்தில் உங்களுக்கு ரத்தம் ஏற்ற வேண்டியிருக்கும்.
உங்களுக்கு தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, ஒரு ஆண்டிபயாடிக்ஸ் ஊசி செலுத்தப்படலாம். இருப்பினும், சில பெண்களுக்கு இதை தாண்டியும் தொற்றுகள் ஏற்படலாம். அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்:
அறுவை சிகிச்சை செய்து கொண்ட புண் உள்ள பகுதியில் தொற்று ஏற்படலாம். அது சிவந்து காணப்படும், கசிவு ஏற்படலாம் மற்றும் வலி மிகுந்ததாக இருக்கும் அல்லது சில சமயம் தையல் பிரிந்து கொள்ளும்.
கர்ப்பப்பையின் உட்புறச் சுவர் பகுதியில் ஏற்படக் கூடிய தொற்றின் பெயர் எண்டோமெட்ரியோசிஸ் ஆகும். கடுமையான உதிரப்போக்கு, கெட்ட வாடையுடன் கூடிய கசிவு அல்லது பிரசவத்திற்குப் பிறகு காய்ச்சல் ஏற்படுவது இதன் அறிகுறிகள் ஆகும். பொதுவாக பிரசவத்திற்கு முன்பாகவே உங்கள் பனிக்குடம் உடைந்து விடுவது அல்லது உங்கள் பெண்ணுறுப்பில் பலமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படுவது போன்ற காரணங்களால் இந்த தொற்று ஏற்படக் கூடும்.
சிறுநீர் குழாய் தொற்று. அறுவை சிகிச்சையின்போது உங்கள் சிறுநீர் பையை காலி செய்யும் நோக்கத்தில் மெல்லிய குழாய் அல்லது ஊசி உங்கள் சிறுநீர் பையை நோக்கி செலுத்தப்படும். பொதுவாக 12 மணி நேரத்திற்கு அல்லது நீங்கள் நடக்கும் வரையில் இந்த ஊசி அங்கேயே பொருத்தப்பட்டிருக்கும். இதனால் ஏற்படும் தொற்று காரணமாக உங்கள் இடுப்பு அல்லது அடிவயிற்று பகுதியில் வலி ஏற்படும். திடீரென வெப்பம் அதிகரிப்பது, திடீரென்று குளிர்ச்சியாக மாறுவது என்று குழப்பத்தை ஏற்படுத்தும். அதேபோல சிறுநீர் கழிப்பது சிரமமானதாக இருக்கும்.
எந்தவொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்போதும் உங்களுக்கு ரத்தக்கட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் தான், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, முடிந்த வரையில் வெகுவிரைவாக எழுந்து நடக்குமாறு உங்களை ஊக்குவிப்பார்கள். இதன் மூலமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் ரத்தக்கட்டு தடுக்கப்படும். எங்கு உருவாகிறது என்பதைப் பொருத்து, கட்டி என்பது கடுமையானதாக இருக்கலாம். ஒருவேளையில் நுரையீரலில் ரத்தக்கட்டு ஏற்பட்டால், அது உயிருக்கே ஆபத்தானதாக மாறலாம். இருமல் அல்லது மூச்சுத்திணறல் என்பது இதற்குரிய சில அறிகுறிகள் ஆகும் அல்லது உங்கள் தசைப்பகுதியில் வீக்கம் ஏற்படும்.
வயிற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சிகிச்சையையும் போலவே, சிசேரியன் சிகிச்சையிலும் புண் குணமாகும்போது தசைகள் ஒட்டிக் கொள்ளும் அபாயம் அதிகம். அதாவது, வடு நிறைந்த தசைகள் ஒட்டிக் கொள்வதன் காரணமாக வயிற்றுப் பகுதியில் அல்லது வயிற்றின் உள்ளே இருக்கும் உறுப்புகள் ஒன்றோடு, ஒன்று ஒட்டிக் கொள்ளும். உடல் உள் உறுப்புகளின் நகர்வை இந்த ஒட்டுதல் நடவடிக்கை தடுக்கும் என்பதால் சில சமயம் கடுமையான வலி ஏற்படும். அருகாமையில் இருக்கும் வேறுசில உறுப்புகளிலும் இதன் பாதிப்புகள் எதிரொலிக்கும் பட்சத்தில் மலம் உருவாக்கம் மற்றும் கருத்தரிப்பு போன்ற நடவடிக்கைகளில் சிக்கல் உண்டாகக் கூடும்.
பெரும்பாலான சிசேரியன் சிகிச்சைகள், தூக்கத்தை தூண்டக் கூடிய மயக்கமருந்து உதவியின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குப் பதிலாக உங்கள் வயிற்றுப்பகுதியை உணர்விழக்கச் செய்யும் வகையில் முதுகுத்தண்டு அல்லது முதுகு பகுதியில் ஊசி செலுத்தப்படுகிறது. பொதுவான மயக்கமருந்தை காட்டிலும் இத்தகைய ஊசி உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானதாக அமையும். அதே சமயம், கடுமையான தலைவலி மற்றும் நரம்பு பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.
பெண்ணுறுப்பு வழி சுகப்பிரசவம் அடைந்த பெண்கள் வெகு விரைவாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால், திட்டமிட்ட சிசேரியன் அல்லது எதிர்பாராத சிசேரியன் என எப்படி அமைந்தாலும், சுகப்பிரசவ பெண்களை காட்டிலும் இவர்கள் வீடு திரும்புவதற்கு தாமதமாகும். சிசேரியன் செய்து கொள்ளும்பட்சத்தில் மருத்துவமனையில் இரண்டு முதல் 5 நாட்களுக்கு தங்க வேண்டியிருக்கலாம்.
பொதுவாக, வடு என்பது மெலிந்து, சமமாகி அந்த இடம் வெள்ளையாக மாறிவிடும் அல்லது சருமத்தின் இயற்கையான நிறத்திற்கு மாறிவிடும். எனினும், சில சமயம் புண் குணமடைவதற்காக நம் உடல் அதிகப்படியாக வினையாற்றும். இதனால் உருவாகும் வடு என்பது இலகுவாக மறையக் கூடியதாக இருக்காது. இவற்றை கெலாய்டு வடு மற்றும் ஹைப்பர்ட்ரோபிக் வடு என்று குறிப்பிடலாம். இந்த வடுக்கள் தடித்து, அரிப்பு ஏற்படுத்துவதாக, வலி மிகுந்ததாக இருக்கும்.
சிசேரியன் சிகிச்சையின்போது உங்களுக்கு பின்வரும் விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் உங்களுக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருக்கலாம்.
மலக்குடல் அல்லது சிறுநீர் பைக்கு பாதிப்பு ஏற்படுதல்.
சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் பைக்கு செல்லும் குழாய்களில் காயம் ஏற்படுதல். ஆனால், இது மிகவும் அரிதான பாதிப்பாகும்.
சிசேரியன் சிகிச்சைக்குப் பிறகு தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றப்படுதல்.
கர்ப்பப்பையை நீக்குவதற்காக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல்.
வேறொரு தேதியில் கூடுதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல்.
உடல் ஆரோக்கிய நலன் கருதி, திட்டமிட்ட வகையில் அல்லது அவசரமாக உங்களுக்கு சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படும் பட்சத்தில், உங்களுக்கு பிரசவம் நடப்பதற்கும், உங்கள் குழந்தை பிறப்பதற்கும் இப்போதைக்கு அதுவே பாதுகாப்பான வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தை திரும்பாமல் இருந்தால் அல்லது குழந்தை வெளியேற முடியாத அளவுக்கு தொப்புள்கொடி சுற்றியிருந்தால் உங்களுக்கு சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட வேண்டியிருக்கும். அதேவேளையில் உங்களுக்கான பிரசவம் தாமதமாகிறது அல்லது உங்கள் குழந்தை சிக்கலாக மாட்டிக் கொண்டது என்றால் உங்களுக்கு அவசரமாக சிசேரியனுக்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம்.
திட்டமிட்ட வகையில் சிசேரியன் சிகிச்சை மேற்கொள்வதால் கிடைக்கின்ற மற்றொரு பலன் என்னவென்றால், உங்கள் குழந்தை எப்போது பிறக்கப் போகிறது என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்து விடும். குழந்தை எப்போது பிறக்கும் என்பது முன்கூட்டியே தெரியும்பட்சத்தில் உங்களுக்கான மகப்பேறு விடுப்பு, குடும்பத்தினரின் உதவி மற்றும் பிரசவத்திற்குப் பிறகான இதர தேவைகள் போன்றவற்றுக்கு நீங்கள் திட்டமிட்டுக் கொள்ள முடியும். உங்களுக்கான திட்டமிட்ட சிசேரியன் சிகிச்சைக்கு முன்னதாகவே உங்களுக்கு பிரசவ வலி ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மேலும், சிசேரியன் சிகிச்சை செய்து கொண்டால், நீங்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் குணமாகுவதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம்.
உங்களுக்கு கர்ப்பப்பை சுருக்கத்தினால் ஏற்படும் வலி இருக்காது. சிசேரியன் மூலமாக கிடைக்கும் மற்றொரு பலன் இதுவாகும். அதேபோல, சுகப்பிரசவத்தின்போது பெண்ணுறுப்பு மற்றும் ஆசனவாய்க்கு இடைப்பட்ட பகுதியை கிழித்து விடுவது குறித்த கவலை சிசேரியன் சிகிச்சையின்போது இருக்காது.
பிரசவத்தின்போது உங்கள் தசையில் வெட்டு மேற்கொள்ளப்படாது அல்லது சிராய்ப்புகளால் ஏற்படும் வலி அனுபவம் இருக்காது மற்றும் பெண்ணுறுப்பு, ஆசனவாய்க்கு இடைப்பட்ட பகுதியில் தையல் போட வேண்டியிருக்காது.
உங்களின் உடல்நலன் மற்றும் சிகிச்சையின்போது ஏற்படும் இதர விளைவுகள் ஆகியவற்றைப் பொருத்து சிசேரியின் சிகிச்சையில் இருந்து மீள்வதற்கான காலம் வேறுபடும். உங்கள் உடல்வாகு கச்சிதமாக, ஆரோக்கியமானதாக மற்றும் அதிக எடையின்றி இருந்தால், சிசேரியன் சிகிச்சைப் பிறகு நீங்கள் விரைவாக குணமடைய முடியும். சிசேரியன் சிகிச்சையில் இருந்து குணமடையும் காலத்தில், இயற்கையாகவே ஏற்படுகின்ற வலியை தாங்கிக் கொள்வது கவலைக்குரிய விஷயமாகும். அதேசமயம், நீங்கள் பாலூட்டும் சமயத்திலும் கூட, பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான வலி நிவாரண மருந்துகளை மருத்துவர் பரிந்துரை செய்யக் கூடும்.
சில சமயம், கசிவு மற்றும் தொற்று போன்றவை காரணமாக குணமடைதல் சற்று சிக்கலுக்குரிய விஷயமாக மாறும். இதனால், மருத்துவமனையில் நீண்ட நாட்கள் தங்க வேண்டியிருக்கலாம். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் அல்லது சிசேரியன் செய்து கொண்டால் தாய்ப்பால் ஊட்டுகையில் ஏற்படுகின்ற சிரமம் போன்ற விஷயங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க கூடும். ஆனால், இதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம். எனினும், பெண்ணுறுப்பு வழி சுகப்பிரசவம் அடைந்த பெண்களைக் காட்டிலும், சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தம் உடனடியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெண்ணுறுப்பு வழி பிரசவித்த தாய்மார்களைக் காட்டிலும் தாய்ப்பால் ஊட்டுவது உங்களுக்கு சிரமம் மிகுந்த விஷயமாக இருக்கலாம். ஏனெனில், தாய்ப்பால் ஊட்டுவதற்கு சௌகரியமான வகையில் அமருவது மற்றும் குழந்தையை வைத்துக் கொள்வது சிரமம் மிகுந்ததாக இருக்கும். இத்தகைய தருணத்தில் தாய்ப்பால் புகட்டுவது தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்கு மருத்துவமனையில் உள்ள செவிலியர்களை அணுகவும். அதேபோல, தாய்ப்பால் ஊட்டுவதற்கான சௌகரியமான பொசிஷன்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.
சிசேரியன் செய்து கொண்டால் கீழ்காணும் சிக்கல்கள் எதிர்காலத்தில் உண்டாகலாம்.
எதிர்கால கர்ப்பத்தின்போது மீண்டும் சிசேரியன் சிகிச்சை ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், இந்த கவலை தேவையற்றது. ஏனெனில் சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகான அடுத்த பிரசவம் இயற்கையான முறையில் நடக்கவும் வாய்ப்பு உண்டு.
நஞ்சுக்கொடி மிக தாழ்வாக இருக்கும் பட்சத்தில், நஞ்சுக்கொடி மிக ஆழமான இடத்தில் பொருந்துவதற்கான அபாயம் உண்டாகும். குறிப்பாக, இதற்கு முன்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிசேரியன்களை செய்து கொண்டவர் என்றால் இதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சிக்கல் காரணமாக பிரசவத்தின்போது மிக அதிகமான ரத்த இழப்பு ஏற்படலாம். ஆகவே, ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை அதிகரிக்கும் மற்றும் ஹிஸ்டெரக்டோமி ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
எதிர்கால கர்ப்பங்களின்போது உங்கள் கர்ப்பப்பை மீண்டும் திறக்கையில் அங்கு வடு ஏற்படுவதற்கான சிறிய அபாயம் உண்டு. இதை கர்ப்பப்பை காயம் என்று குறிப்பிடுவர். அதே சமயம், இது நிகழ்ந்து விட்டால், அது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் உயிரிழப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.
சிசேரியன் செய்து கொண்டால் எதிர்காலத்தில் குறைப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இது இயல்பான விஷயம் தான்.
உங்களுக்கு எந்த பிரசவ முறை சிறப்பானது என்பது பல்வேறு காரணங்களை பொருத்து மாறுபடும். அவை பின்வருமாறு:
உங்கள் மருத்துவ பின்னணி
உங்கள் குழந்தையின் உடல்நலன்
கர்ப்பப்பையில் உங்கள் குழந்தையின் இருப்புநிலை
எத்தனை குழந்தைகளை நீங்கள் சுமக்கிறீர்கள் என்ற விஷயம்
ஏதேனும் கர்ப்பகால விளைவுகள்
சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கவும், சுகப்பிரசவத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் நீங்கள் சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.
பிரசவத்திற்கு முந்தைய அனைத்து மருத்துவ பரிசோதனைகளை தவற விடக் கூடாது.
கர்ப்பம் ஆரோக்கியமானதாக இருக்க நன்றாக சாப்பிட வேண்டும் மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
உங்கள் உடல்நலன் மற்றும் மனநலன் குறித்து அக்கறை கொள்வது அவசியம்.
பிரசவம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு உங்களை தயார் செய்கின்ற கர்ப்பகால வகுப்புகளுக்கு தவறாமல் செல்லவும் மற்றும் அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளவும்.
பிரசவம் எப்படி அமைய வேண்டும் என்ற முடிவு உங்கள் கையில். உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் எது சிறப்பானது என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். தகுந்த முடிவை எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது முக்கியமாகும். எனினும், எந்த பிறப்பு முறையை தேர்வு செய்வது என்ற பரிசீலனையின் போது சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பிரசவத்திற்கு இடையிலான வேறுபாடுகளை புரிந்து கொள்வது அவசியமாகும். அதேபோல உங்கள் மருத்துவ பின்னணி, உங்கள் குழந்தையின் உடல்நலன் மற்றும் ஏதேனும் மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை பொருத்து உங்களுக்கான பாதுகாப்பான பிரசவ முறை எது என்பது மாறுபடும்.
References
1. Saraf TS, Bagga RV. (2022). Cesarean section or normal vaginal delivery: A cross-sectional study of attitude of medical students. J Educ Health Promot.
2. Zakerihamidi M, Latifnejad Roudsari R, Merghati Khoei E. (2015). Vaginal Delivery vs. Cesarean Section: A Focused Ethnographic Study of Women's Perceptions in The North of Iran. Int J Community Based Nurs Midwifery.
Tags
Difference between Cesarean And Normal Delivery in Tamil, Which is better Cesarean And Normal Delivery in Tamil, Which is more painful Cesarean And Normal Delivery in Tamil, What are the risk of Cesarean Delivery in Tamil, What are the benefits of Cesarean Delivery in Tamil, Which Is Better Normal Or Cesarean Delivery in English, Which Is Better Normal Or Cesarean Delivery in Hindi, Which Is Better Normal Or Cesarean Delivery in Telugu, Which Is Better Normal Or Cesarean Delivery in Bengali
Yes
No
Written by
Dhanlaxmi Rao
Get baby's diet chart, and growth tips
ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil
பேடிங் கொண்ட மகப்பேறுகால பிரா, தாய்ப்பால் கசிவைத் தடுக்குமா? | Can A Padded Maternity Bra Prevent Breastmilk Leakage in Tamil
கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil
கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)
தொப்புள் கோடி இரத்த சேமிப்பு என்றால் என்ன, அதை ஏன் செய்ய வேண்டும்?|What is Cord Blood Banking and Why Should You Get It Done in Tamil
உங்கள் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்ப்ரின் 75 ஐ எப்போது எடுக்கத் தொடங்க வேண்டும்? | When Should You Take Ecosprin 75 During Your Pregnancy in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |