Maternity Fashion
28 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
தாய்ப்பாலூட்டும் போது நீங்கள் அவசியமாகக் கொண்டிருக்கவேண்டிய இரண்டு விஷயங்கள், பொறுமை மற்றும் லேசாக பேடிங் கொண்ட நர்சிங் பிரா. கர்ப்பத்தின் போதும், தாய்ப்பால் ஊட்டும் போதும் மார்பகங்கள் தொடர்ச்சியான மாற்றங்களைச் சந்திக்கும் என்பதால், ஆதரவாகவும் வசதியாகவும் இருக்கும் பிராவை நீங்கள் அணிவது அவசியம். அதுமட்டுமின்றி, பால் கசிவு ஏற்பட்டால் அதற்கான தீர்வைத் தரும் பிராவைத் தேர்ந்தெடுப்பதும் மிகவும் அவசியம்.
இன்று, ஆன்லைனில் பல மகப்பேறுகால பிரா தேர்வுகள் உள்ளன. இவற்றிலிருந்து நீங்கள் வழக்கமான அல்லது அதிக அளவுள்ளவற்றைத் தேர்வுசெய்யலாம். இந்த பிராக்கள் பல ஸ்டைலான வடிவங்களிலும் வருகின்றன. இருப்பினும், நீக்கக்கூடிய நர்சிங் கிளிப்களுடன் வரும் மகப்பேறுகால பிராக்களை வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.
லேசான பேடிங் கொண்ட வயர்ஃப்ரீ நர்சிங் ப்ராவை வாங்குவதற்கு முன், பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். பேட் செய்யப்பட்ட மகப்பேறு பிரா வாங்கும்போது நீங்கள் வழக்கமாகக் கவனிக்கும் விஷயங்களை மறுபரிசீலனை செய்யுங்கள். கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் தருணத்தில் இந்த பிராக்கள் உதவிகரமாக இருக்கும் என்றாலும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேர்வு செய்கையில், பேட் செய்யப்பட்ட மகப்பேறுகால பிராக்கள் அவர்கள் தாய்மை தருணத்தை மிக எளிதாக்கும்!
பேடிங் செய்யப்பட்ட மகப்பேறு பிராவை வாங்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மகப்பேறுகால பிராவை மிக நீண்ட நேரம் அணிய வேண்டியிருக்கும் என்பதால், சரியான அளவிலான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எத்தகைய பிராவுடன் நீங்கள் வசதியாகத் தூங்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு பிராதேர்ந்தெடுப்பது நிச்சயமாக ஒரு சிறந்த தேர்வாகும்.
ஃபோம் கப் கொண்ட மகப்பேறுகால பிராக்கள் பொதுவாகச் சிறந்த தேர்வாகும். முன்பக்கத்தில் மோல்ட் செய்யப்பட்ட கப்களைக் கொண்ட ஸ்ட்ராப்லெஸ் மகப்பேறு பிராக்களும் வாங்கலாம். பேடிங் செய்யப்பட்ட மகப்பேறு பிராக்கள் கசிவு ஏற்படும் போது தாய்ப்பாலை உறிஞ்சும். அதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுக்கும் போது தேவையான ஆதரவையும் இவை வழங்குகின்றன.
ஒரு சில அங்குல எக்ஸ்டெண்டர்களுடன் வரும் மகப்பேறுகால பிராக்கள் பொதுவாக அட்ஜஸ்ட்செய்யத்தக்கவை மற்றும் அவை உங்கள் மார்பகங்கள் காற்றோட்டமாக இருக்க நிறைய இடத்தை வழங்குகின்றன. உங்கள் மார்பகங்களைப் பொறுத்தவரை, மகப்பேறு பிராவின் கொக்கிகளை அதற்கேற்ப சரிசெய்யலாம். உண்மையில், பேட் செய்யப்பட்ட மகப்பேறு பிராவின் வசதியைக் கணக்கில் கொள்கையில் அந்த பிராவின் கொக்கிகளும் கணக்கிள் கொள்ளப்படுகிறது.
கர்ப்பிணித் தாய்மார்கள் பொதுவாக ஹாட் ஃப்ளாஷ் பிரச்சனையை அனுபவிப்பார்கள். எனவே, உணர்திறன் வாய்ந்த முலைக்காம்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பொதுவாக காற்றோட்டமான மற்றும் மென்மையான துணிகளாலான பிராவை வாங்குவது நல்லது. பருத்தி போன்ற துணிகள் உங்கள் மார்புப் பகுதியை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற துணிகள் உங்கள் முலைக்காம்புகளுக்குல் மிகவும் மென்மையாக இருக்கும்.
வயர்லெஸ் பிரா சருமத்தை இறுக்காது. இருப்பினும், அண்டர்வயர் பிராக்கள் பால்மடி வீக்கம் அல்லது பால் சுரப்பி அடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க மென்மையான மற்றும் வசதியான வயர்லெஸ் பிராக்களைத் தேர்வு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
வெவ்வேறு பாணிகள் அல்லது வடிவங்களைக் கொண்ட மகப்பேறு பிராக்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம். உதாரணமாக, மகப்பேறுகால ஸ்போர்ட்ஸ் பிராக்கள் இரவில் கசியும் தாய்ப்பாலை எளிதாக உறிஞ்சும். அதுமட்டுமல்லாமல், நீட்சித்தன்மை கொண்ட துணியால் ஆன பிரா, பிரா கப்களைக் கீழே இழுப்பதை எளிதாக்குகிறது. இது தாய்ப்பால் கொடுக்கும் மகளிருக்கு மிக வசதியானது. மிகவும் நெகிழ்வான மற்றும் சருமத்தை இறுக்காத ஸ்டைல்களை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காட்டன் நர்சிங் பிராக்கள் பொதுவாகச் சிறந்த தேர்வு எனலாம்.
பேட் செய்யப்பட்ட மகப்பேறுகால பிரா நீங்கள் நினைப்பதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய பிராக்கள் தாய்பால் கசிவைத் தடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், நீங்கள் தேர்வு செய்யும் பிரா உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். சரியான பிரா, தாய்மைக்கு மேலும் மகிழ்ச்சி தருவது உறுதி!
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நர்சிங் பேட்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது|Is is Safe to Use Reusable Nursing Pads during Pregnancy in Tamil
கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot in Tamil)
தொப்புள் கோடி இரத்த சேமிப்பு என்றால் என்ன, அதை ஏன் செய்ய வேண்டும்?|What is Cord Blood Banking and Why Should You Get It Done in Tamil
உங்கள் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்ப்ரின் 75 ஐ எப்போது எடுக்கத் தொடங்க வேண்டும்? | When Should You Take Ecosprin 75 During Your Pregnancy in Tamil
இந்தியாவில் சிறந்த கார்ட் செல் (தொப்புள் கொடி பேங்க்) வங்கிகளை எவ்வாறு தேர்வு செய்வது |How To Choose The Right Cord Cell Banks In India in Tamil
பிரசவத்திற்குப் பிறகான கருத்தடை: செயல்முறை மற்றும் சிக்கல்கள் (Postpartum Sterilization: Procedure & Complications In Tamil)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |