Travel & Holidays
11 August 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
நிறைய தம்பதிகள், தங்கள் சிறு குழந்தைக்காக முதல் சில வருடங்களை முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டியுள்ளதாக தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இது உண்மையல்ல. பயணம் என்பது வெறும் ஓய்வுக்காகவும் அழகிய காட்சிகளை காண்பதற்காகவும் மட்டுமின்றி, உங்கள் குழந்தைகளுக்கு ஒளிர்கின்ற ஒரு புது உலகத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒன்றாகும். புதிய உணவுகள் முதல் புதுப்புது அனுபவங்கள் வரை அவர்களுடைய எல்லையை விரிவுபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும்.
இவை உண்மையில் சிறந்தது என்றாலும், சிறு குழந்தையுடன் பயணம் செய்வது என்பது ஒரு பெரும் சவாலாக இருக்கலாம். ஒரு பெரிய பேக்கிங் லிஸ்ட், சரியான தூக்கமின்மை ஆகியவை இந்தப் பயணத்தில் நீங்கள் சந்திக்கும் சவால்களில் சில. இந்த சந்தோஷமான பயணத்தைக் தொடரவும், உங்கள் விடுமுறையை நன்குப் பயன்படுத்திக் கொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்களும் உங்கள் குடும்பமும் எந்த நேரத்திலும் ஒரு ஒரு நல்ல விடுமுறையை அனுபவிக்க எல்லா உரிமையும் உள்ளது.
1. குழந்தைகளை அழைத்து செல்வதற்கு ஏற்ற சரியான இடங்களைத் தேர்ந்தெடுங்கள். தாஜ் எக்ஸோடிகா, கோவா, வொண்டர்லா ரிசார்ட், பெங்களூரு, மற்றும் தி வெஸ்டின் சோஹ்னா ரிசார்ட் மற்றும் ஸ்பா, சோஹ்னா போன்ற இடங்கள் உங்கள் குழந்தையுடன் செல்ல ஏற்ற இடங்களாக இருக்கும். இந்த இடங்களில் சிறு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பல ஆக்டிவிட்டீஸ் மற்றும் ஃபெசிலிட்டீஸ் உள்ளன. இந்த ஸ்பாக்கள் மற்றும் ரிசார்ட்கள் பலவற்றில் பிரத்யேகமாக ஒரு பேபி சிட்டர் மற்றும் பிளே ஏரியா, லைஃப் கார்டுடன் கூடிய குழந்தைகள் நீச்சல் குளம் மற்றும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பஃபே சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன!
2. உள்ளூர் காலநிலைக்கு ஏற்றவாறு உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள். நீங்கள் பயணம் செய்ய போகும் இடத்தின் காலநிலைக்குத் தகுந்தவாறு பேக் செய்யுங்கள். குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு கதகதப்பான ஆடைகளையும், வெப்பமான பிரதேசங்களுக்கு பயணம் செய்யும்போது சாதாரண உடைகளை தேர்ந்தெடுப்பது மட்டும் போதாது. சன்கிளாஸஸ், தொப்பிகள், பூச்சி மற்றும் கொசு விரட்டிகள், சில உணவுகள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கேற்ப வரும் நோய்களைத் தடுக்கும் மருந்துகள் போன்றவற்றையும் நீங்கள் பேக் செய்ய வேண்டும்.
3. குழந்தைகள் உணவு, மாற்று உடைகள், டயப்பர்கள், விளையாட்டு பொம்மைகள் அல்லது அவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்கள் போன்ற குழந்தை தொடர்பான விஷயங்களுக்கு வரும்போது, அண்டர்பேக்கிங்குடன் ஒப்பிடுகையில் ஓவர் பேக்கிங் சிறந்தது. எங்களை நம்புங்கள், விடுமுறை பயணத்தின் போது நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து பின்வாங்க வேண்டாம்.
இதையும் படிக்கலாமே! - 8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் தேவையான குறிப்புகள்
4. உங்கள் குழந்தையை கட்டியணைத்து தூக்கத்தை தழுவுங்கள். பரபரப்பான விடுமுறை அல்லது பயணத்தின் போது உங்கள் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய குழந்தையுடன் தூங்குவதுதான் சிறந்த வழியாகும். குழந்தைகளால் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார முடியாது, எனவே நீங்கள் ஒரு ஃபிளக்சிபிள் பயண அட்டவணையை வைத்திருந்தால் நன்றாக இருக்கும் அதற்கேற்றவாறு திட்டமிட்டு குழந்தையை தூங்கவைத்தவாறு பயணம் செய்யலாம்.
5. எப்போதும் கூலாக இருங்கள். பிறரிடம் உதவியை கோருங்கள். பயணத்தின் போது கவலையடையவோ அல்லது பயப்படவோ வேண்டாம், குழந்தைகள் தங்கள் பெற்றோரின் நடவடிக்கைகளை எளிதில் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள் நீங்கள் பதட்டத்துடன் நடந்து கொண்டால் அவர்களும் உங்களைப் போன்றே அதே மனநிலையுடன் பயணத்தைக் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே அமைதியாக இருக்க முயலுங்கள், நிலைமை கைமீறும் போது ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உங்கள் சக பயணிகள் அல்லது விமான பணிப்பெண்ணிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள்.
Trip with babies in tamil, tips for travelling with baby in tamil, Planning a Trip with Your Little One? Here are 5 Extremely Useful Tips for an Enjoyable Holiday with Your Baby In English, Planning a Trip with Your Little One? Here are 5 Extremely Useful Tips for an Enjoyable Holiday with Your Baby In Hindi, Planning a Trip with Your Little One? Here are 5 Extremely Useful Tips for an Enjoyable Holiday with Your Baby In Telugu, Planning a Trip with Your Little One? Here are 5 Extremely Useful Tips for an Enjoyable Holiday with Your Baby In Bengali
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
ஒரு குறுநடை போடும் குழந்தை தலையணையுடன் தூங்க சரியான நேரம் எது?(When is the right time for a toddler to sleep with a pillow In Tamil)
கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா? ( Is It Safe To Eat Sapota During Pregnancy? In Tamil)
குழந்தை மூளை வளர்ச்சி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (Baby Brain Development: What You Should Know In Tamil)
செகண்ட் பிரக்னன்ஸி போட்டோஷூட்க்கான 40+ ஐடியாக்கள்(40+ Ideas For Second Pregnancy Photoshoot In Tamil)
கண் நோய் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பருவகால தொற்றுநோய்(Eye Flu Alert: The Seasonal Epidemic You Need to Know About In Tamil)
கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இரத்தம் எப்போது வர ஆரம்பிக்கிறது? (How often do your gums begin to bleed during pregnancy? In Tamil)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |