hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Care for Baby arrow
  • உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பு: பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை (Safety for your child: Birth to 6 months In Tamil) arrow

In this Article

    உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பு: பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை   (Safety for your child: Birth to 6 months In Tamil)

    Care for Baby

    உங்கள் குழந்தைக்கான பாதுகாப்பு: பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை (Safety for your child: Birth to 6 months In Tamil)

    16 August 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    பொதுவாக பிறப்பு முதல் 6 மாதங்கள் வரை குழந்தையால் ஆபத்தை புரிந்து கொள்ளவோ அல்லது அடையாளம் காணவோ முடியாது. அவர்களது நோயெதிர்ப்பு அமைப்பும் அதுவரை முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது.

    இந்த கால கட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது விழிப்புடன் இருந்து உங்கள் குழந்தையை அன்றாடம் ஏற்படக் கூடிய எல்லா விதமான ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாக்க உங்களால் இயன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் கவனம் செலுத்தாதபோது அல்லது அவர்கள் 24/7 குழந்தை பராமரிப்பை செய்து சோர்வடையும் போது தான் குழந்தைக்கு காயங்கள் நிகழும் வாய்ப்பு அதிகம் இருக்கும். பொதுவாக குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்வார்கள். நீங்கள் கணிக்கும் முன் அவர்கள் வேகமாக படுக்கையில் இருந்து உருள முயற்சிப்பார்கள் அல்லது நீங்கள் கீழே வைத்திருக்கும் சூடான தேநீர் கப்பை எட்டிப் பிடிக்க முயற்சிப்பார்கள்.

    குழந்தைக்கு ஏற்படக் கூடிய சில பொதுவான காயங்கள் பின்வருமாறு (Here are common types of injuries that babies suffer from):

    கீழே விழுதல் (Falling) :

    குழந்தைகள் வழக்கமாக 6 மாதங்களுக்குப் பிறகு தவழத் தொடங்கிவிடுவார்கள் என்றாலும், அவ்வாறு தவழ்ந்து செல்லாமல் இருப்பதனால் உங்கள் குழந்தை மேற்பரப்பில் இருந்து கீழே விழாமல் இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. பொதுவாக பிறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகள் குப்புறப் படுக்கத் தொடங்குவார்கள். குழந்தைகள் இவ்வாறு சூட்டித் தனமாக இருப்பது அவர்கள் பிறக்கும் போதில் இருந்தே அவர்களிடத்தில் இருக்கும். இதனால் அவர்கள் விழுந்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

    உங்கள் குழந்தையை படுக்கைகள், மேஜைகள், சோஃபாக்கள் அல்லது உயரமான எந்த மேற்பரப்பின் மேலும் தனியாக விட்டுவிடாதீர்கள். குழந்தையை கையில் வைத்திருக்க அல்லது அருகில் இருந்து கவனிக்க முடியாத ஒரு சில தருணங்களில், நீங்கள் அவர்களை பாதுகாப்பாக விளையாடக்கூடிய வாக்கரில் நிற்க வைக்கலாம் அல்லது தொட்டிலில் படுக்க வைக்கலாம்.

    இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தையின் எடையை அதிகரிப்பது எப்படி?

    தீக்காயங்கள் (Burn Injuries) :

    வழக்கமாக குழந்தைக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆனவுடன், அவர்கள் பொருட்களை எட்டிப் பிடிக்க அல்லது அவற்றைத் தொட முயற்சி செய்வார்கள். ஆதலால், எந்தவொரு சூடான பாத்திரம் அல்லது சூடான திரவமும் உங்கள் குழந்தைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் குழந்தையை கையில் வைத்திருக்கும் போதும் கையில் அல்லது மிக அருகாமையில் சூடான பொருள்/திரவம் இல்லாதவாரு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    குழந்தையை 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையிலிருக்கும் வெது வெதுப்பான நீரில் தான் குளிக்க வைக்க வேண்டும். அதாவது நீரின் வெப்பநிலை உடல் வெப்பநிலைக்கு சமமாக இருக்க வேண்டும். நீரின் வெப்பநிலையை துல்லியமாக சரிபார்க்க தெர்மோமீட்டரை பயன்படுத்தலாம். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், வெந்நீரால் காயம் ஏற்படுவதற்கு ஒரு வினாடி மட்டுமே ஆகும். அதையும் மீறி துருதிருஷ்டவசமாக உங்கள் குழந்தை நீரினால் சுடப்பட்டு காயமடைய நேர்ந்தால் உடனடியாக சூடுபட்ட பகுதியை குளிர்ந்த நீரினால் சில நிமிடங்களுக்கு நனைக்கவும். அதற்கு பின் மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும்.

    காரில் ஏற்படக் கூடிய காயங்கள் (Car Injuries) :

    காரில் ஏற்படக் கூடிய அனைத்து விதமான காயங்களையும் தடுக்க குழந்தைக்கான கார் இருக்கைகளைப் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் குழந்தையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை அமைதியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனால் குழநதையைப் பற்றிய கவலையின்றி நீங்கள் வாகனம் ஓட்டுவதில் முழு கவனத்தை செலுத்தலாம். அதோடு குளந்தைக்கான கார் இருக்கை சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். விலை உயர்ந்த கார் இருக்கைகள் கூட சரியாக பொருத்தப்படாவிட்டால் அது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்.

    தொண்டையில் அடைத்தல் மற்றும் மூச்சுத்திணறல் (Choking and Suffocation) :

    • பொதுவாக குழந்தைகள் கீழே இருக்கும் பொருட்களை திடீரென எடுத்து வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் மூச்சுத்திணறல் ஏற்படலாம். சில சமயங்களில் தினசரி உண்ணும் உணவுப் பொருட்கள் கூட தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஏனெனில், பெரியவர்களுக்கு கூட தொண்டையில் உணவு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, அவ்வாறு உங்கள் குழந்தைக்கு உணவு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

    • தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறடிக்கும் சிறியப் பொருட்களைக் கூட உங்கள் குழந்தையின் கைக்கு எட்டாத இடத்தில் உள்ளவாறு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்கள், கொட்டைகள், முழு தின்பண்டங்கள் போன்ற கடினமான உணவுகளை உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம். அவர்களுக்கு சிறிய உணவு பண்டங்களை ஊட்டுங்கள் மற்றும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

    • தொண்டையில் ஏதேனும் சிக்கிக் கொள்வதால் ஏற்படும் மூச்சுத்திணறலைத் தடுக்க, குழந்தை தனது முதுகு கீழ் நோக்கி இருக்கும்படி தூங்குகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், குழந்தையின் தொட்டிலில் பொம்மைகள், தலையணைகள் அல்லது தளர்வான படுக்கைகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். அதே சமயம், அருகில் பிளாஸ்டிக் பைகள் அல்லது ரேப்பர்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    TAGS :

    Safety for your child: Birth to 6 months In English, Safety for your child: Birth to 6 months In Hindi, Safety for your child: Birth to 6 months In Telugu, Safety for your child: Birth to 6 months In Bengali

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Care for Baby

    Care for Baby

    உங்கள் குழந்தையின் சுவாசத்தை அவ்வப்போது பரிசோதிப்பது சரியா? ( Is it ok to check your baby's breathing every now & then In Tamil)

    Image related to Pimples and Acne

    Pimples and Acne

    முகப்பரு பாதிப்புள்ள சருமத்தை குணப்படுத்த வைட்டமின்-சி ஏற்றதா? (Is Vitamin-C a healing agent for acne-prone skin In Tamil)

    Image related to Toys & Gifts

    Toys & Gifts

    குழந்தைக்கு 6 மாதங்களிலிருந்து கொடுக்கப்படவேண்டிய பொம்மைகள் (Baby Toys from 6 months onwards In Tamil)

    Image related to Diet & Nutrition

    Diet & Nutrition

    குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய முக்கிய உணவுகள் (Foods which can be harmful for your baby: Please Avoid these In Tamil)

    Image related to Travel & Holidays

    Travel & Holidays

    8 மாத குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்கள் தேவையான குறிப்புகள் ( Travelling suggestions that you can keep in mind: Newborn to 8-Month-old In Tamil)

    Image related to Travel & Holidays

    Travel & Holidays

    பிறந்த குழந்தையை முதன் முதலில் வெளி இடங்களுக்கு எப்போது அழைத்துச் செல்லலாம் ? ( Trying to figure out what it is the best time to take your newborn for an outing: Read this In Tamil) In Tamil)

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |