


Maternity Fashion
22 December 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் செல்லக் குழந்தை இப்போது பிறந்துவிட்டது! சில சமயம் அழகானதாகவும், சில சமயம் எரிச்சல் தரக் கூடியதாகவும் அமையக் கூடிய பாலூட்டும் பயணத்தை உங்கள் பேரழகு குழந்தையுடன் தொடங்குவதற்கான நேரம் இதுவாகும். சவால் மிகுந்த இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக, நர்சிங் டேங்க் டாப் போன்ற பாலூட்டுவதற்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நர்சிங் டேங்க் டாப் வாங்கும் போது, அனைத்து தாய்மார்களும் இந்த விஷயங்களை மனதில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நர்சிங் கமிசோல் அல்லது நர்சிங் டேங்க் டாப் வாங்கும் போது, அது பருத்தி, மூங்கில் அல்லது பயோ காட்டன் (மோடல்) போன்ற இயற்கையான நூல்களில் தயாரானவை என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இயற்கையான மூலப் பொருள்களில் இருந்து தயாராகும் நர்சிங் டேங்க் டாப் உங்களை குளுமையாக வைத்துக் கொள்கிறது மற்றும் இதுதான் பயன்பாட்டால் உங்கள் சருமத்திற்கு போதுமான காற்றோட்டம் கிடைக்கிறது. இயற்கையான பொருட்களில் இருந்து தயாராகும் கமிசோல் அல்லது நர்சிங் டாப் உங்கள் சருமத்திற்கு ஒரு போதும் எரிச்சல் ஏற்படுத்தாது. உஷ்ணமான காலகட்டத்தில், இந்த வகையான டேங்க் டாப் உங்கள் சருமத்தோடு ஒட்டிக் கொள்ளாது. இதனால் உங்கள் சருமத்தில் உராய்வு ஏற்படாது.
பிரசவத்திற்குப் பிறகு, பெண்ணின் உடல் மற்றும் சருமம் மிகவும் உணர்ச்சி மிகுந்ததாக மாறிவிடும். ஆகவே, புதிய தாய்மார்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற மற்றும் சௌகரியமாக இருக்கும் நர்சிங் டேங்க் டாப் மற்றும் நர்சிங்க் கமிசோலை வாங்குவது மிக முக்கியமானதாகும். நீங்கள் தற்போது அணிந்திருக்கும் சைஸிலேயே நர்சிங் கமிசோல்களை வாங்குங்கள். இதை விடக் கூடுதலான அளவில் நர்சிங் டேங்க் டாப் அல்லது கமிசோல் போன்றவற்றை நீங்கள் வாங்கும் பட்சத்தில் அவை தொள, தொளவென்று இருக்கும். இதனால் நீங்கள் சௌகரியமாக அமர முடியாது. அதே சமயம், அளவில் சிறிய நர்சிங் டேங்க் டாப் அல்லது கமிசோல் போன்றவற்றை வாங்கி அணியும் பட்சத்தில் உங்களுக்கு மிகுந்த அசௌகரியம் ஏற்படும்.
நீங்கள் வாங்கும் நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் போன்றவை விரிவடையக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப அவை விரிவடையும். இவ்வாறு இருந்தால் நர்சிங் கமிசோல் நீங்கள் அணிவதற்கு மிகவும் சௌகரியமானதாக இருக்கும்.
பொதுவாக தாய்மார்கள் நர்சிங் கேமிசோல்கள் மற்றும் நர்சிங் டேங்க் டாப்களை வாங்குவதன் முக்கிய நோக்கம் குழந்தைக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது பயணத்தின் போதோ எளிதாக தாய்ப்பால் கொடுப்பதே ஆகும். எனவே, அதில் டிராப் டவுண் கப் மற்றும் தோள்பட்டை பட்டைகளில் ஒரு நர்சிங் கிளாப் இருப்பது முற்றிலும் அவசியம். இதனால் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது வசதியாக இருப்பதோடு நீங்கள் சங்கோஜப் பட வேண்டிய அவசியமும் இல்லை.
பிரசவத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், நீளமான நர்சிங் கமிசோல் வாங்கி பயன்படுத்தினால் உடுத்துவதற்கு மிகவும் சௌகரியமானதாக இருக்கும். ஏனென்றால், பிரசவத்திற்கு பிந்தைய உங்களின் முழு உடலையும் கவர் செய்யக் கூடியதாக அது அமையும்.
இதையும் படிக்கலாமே! - 10-வார கர்ப்ப வயிறு எப்படி இருக்கும்?
உங்கள் நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் போன்றவற்றை வெரைட்டியான கலர்களில் வாங்கிக் கொள்ளவும். பெய்ஜ் மற்றும் க்ரே போன்ற நியூட்ரல் கலர்களில் வாங்கினால் வெவ்வேறு பாட்டம்களுக்கு அது மேட்ச் ஆகக் கூடியதாக இருக்கும். அதே போல நர்சிங் டேங்க் டாப் ஆடைகளை வைப்ரன்ட் ஆன நிறங்களில் வாங்கிக் கொள்ளவும். உதாரணத்திற்கு, ப்ளம் நிறத்தில் வாங்கினால், எந்த ஆடையுடனும் அதனை அணிந்து கொள்ளலாம் மற்றும் ஏற்கனவே இருக்கக் கூடிய உங்கள் அலங்கார பொருட்களுடன் அவை ஒத்துப் போகும். இது போன்ற கலர்களை தேர்வு செய்யும் போது உங்கள் உடல் மிகவும் அழகாக தோன்றுவதோடு மட்டுமல்லாமல், சாதாரணமான உங்கள் நர்சிங் டேங்க் டாப் மற்றும் நர்சிங் கமிசோல் ஆகியவையும் அற்புதமாக காட்சியளிக்கும். ஆடை உங்கள் உடலுக்கு ஏற்றதாகவும் இருக்கும்.
நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் போன்றவற்றை வாங்கும்போது எதை, எதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இதை எங்கு வாங்குவது என்று உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். கவலை வேண்டாம், மைலோ உங்களுக்கான நல்ல வாய்ப்புகளை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது!
மைலோ நிறுவனத்தின் நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் ஆகியவை பெய்ஜ், பிளம் மற்றும் க்ரே போன்ற வெரைட்டியான நிறங்களில் உள்ளன. 4-வே சூப்பர் விரிவடையும் துணியால் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. நர்சிங் கமிசோல் உங்கள் உடலுக்கு மிகுந்த சௌகரியத்தை கொடுக்கும் மற்றும் உங்கள் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும். பட்டை இல்லாத டிசைன், அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக் கூடிய தோள்பட்டை ஸ்டிராப்புகள், ஒன் இன் ஹேண்ட் நர்சிங் கிளாஸ்ப் மற்றும் எளிமையாக இழுத்து விடக் கூடிய கப்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதனால் தாய்ப்பால் ஊட்டுவது மற்றும் தாய்ப்பால் பம்ப் செய்வது போன்றவற்றை எளிதில் செய்யலாம். தாய்க்கும், குழந்தைக்கு சௌகரியமானதாக அது அமையும். மிக நீளமாக வடிவமைக்கப்பட்டுள்ள நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் போன்றவை இரவு, பகல் என நாள் முழுவதும் உங்களுக்கு முழுமையான கவரேஜ் வழங்கும். நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் ஆகியவை டிரையாங்கிள் அப் டிசைனில் இருப்பதால், உங்கள் மார்பகங்கள் தொங்கிவிடாமல் இருக்கும். பல வகைகளில் உபயோகமாக உள்ள இந்த நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் ஆகியவற்றை நீங்கள் வீட்டில் இருக்கும் போது அல்லது வெளியிடங்களுக்குச் செல்லும் போது அல்லது குழந்தையுடன் இருக்கும் போது என அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். சூப்பராக விரிவடையக் கூடிய இந்த நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப் ஆகியவற்றை அணிந்து கொண்டு நீங்கள் உடற்பயிற்சி கூட செய்யலாம்!
இன்னும் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த நர்சிங் கமிசோல் மற்றும் நர்சிங் டேங்க் டாப்பை இன்றே வாங்கி சௌகரியமாக இருங்கள்!
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips


கருத்தரிப்பதற்கான சிறந்த உடலுறுவு நிலைகள்

பிறந்ததிலிருந்து 12 மாதங்கள் வரை குழந்தையை மகிழ்வுடன் வைத்துக் கொள்வது எப்படி?

குழந்தைகள் எப்போது கண்ணோடு கண் பார்க்கிறார்கள்?(When do infants make eye contact in Tamil)

கர்ப்பமாக இருக்கும் போது முள்ளங்கி சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் கசகசா விதைகள்: அதன் பொருள், நன்மைகள் மற்றும் அபாயங்கள் | Poppy Seeds During Pregnancy: Meaning, Benefits & risks in Tamil

உங்கள் குழந்தையை எப்போது மசாஜ் செய்ய வேண்டும்- குளிக்க வைக்கும் முன்பா அல்லது பின்பா? (When should you massage your baby- before bath or after a bath in Tamil)

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |