Low Amniotic Fluid
3 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது
கருத்தரித்த 12 வது நாளிலிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பனிக்குட நீரை (அமினோடிக் திரவம்) உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. கர்ப்ப காலத்தில் முதல் சில மாதங்களில், இந்த திரவம் முதன்மையாக தண்ணீரைக் கொண்டிருக்கும். கர்ப்ப காலத்தில் பிற்பகுதியில், திரவம் பெரும்பாலும் குழந்தையின் சிறுநீரால் நிரம்பியிருக்கும். உங்கள் குழந்தை சுவாசிக்கவும், உணவை ஜீரணிக்கவும், சிறுநீர் கழிக்கவும் இந்த அமினோடிக் திரவம் அவசியம் ஆகும். இருப்பினும், குழந்தையின் வளர்ச்சிக்கு அதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, பனிக்குட நீர் குறைவது கவலைக்குரிய ஒரு முக்கிய காரணமாகும்.
பனிக்குட நீர், பிரக்னன்ஸி காலத்தில் இயற்கையாகவே பனிக்குட நீரை எவ்வாறு அதிகரிப்பது போன்றவற்றைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
கர்ப்ப காலத்தில் குழந்தை அமினோடிக் சாக் அல்லது பைக்குள் வளரும். இந்த பையானது அமினோடிக் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும், குழந்தை கருப்பைக்குள் வளரும்போது இதில் மிதக்கிறது. இந்த அமினோடிக் திரவம் அல்லது பனிக்குட நீர் குழந்தையை தாங்கி ஊட்டமளிக்கிறது, மேலும், இந்த திரவம் தான் பனிக்குடம் உடையும் போது வெளியேறுகிறது.
பிரக்னன்ஸியின் போது பனிக்குட நீரின் வேதியியல் கலவை மாறுகிறது. ஆரம்ப மாதங்களில், இது 98% நீர் மற்றும் தாதுக்களைக் கொண்டிருக்கும். மீதமுள்ள 2% ஆன்டிபாடிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும். இருப்பினும், 20 வாரங்களுக்குப் பிறகு, பனிக்குட நீர் முக்கியமாக குழந்தையின் சிறுநீரால் நிரம்பியிருக்கும்.
பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தைத் தவிர, பனிக்குட நீர் உள் வெப்பநிலையை பராமரிக்கிறது மற்றும் குழந்தையின் தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
பனிக்குட நீரின் அளவை சரிபார்க்க, ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் 24வது வாரத்திற்கு முன்பு, அளவை அளவிட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்துகின்றனர். இந்த முறையானது "மாக்சிமம் வெர்டிகிள் பாக்கெட்" என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும், 24 வாரங்களுக்குப் பிறகு, வழக்கமான முறையான பனிக்குட நீரின் குறியீட்டெண் (ஏ.எஃப்.ஐ) மூலம் பரிசோதிக்கப்படுகிறது. ஒரு சாதாரண ஏ.எஃப்.ஐ 5 முதல் 25 செ.மீ வரை இருக்கும். 5 செ.மீ க்கும் குறைவான ஏ.எஃப்.ஐ குறைந்த அளவு பனிக்குட நீரைக் குறிக்கிறது. ஏ.எஃப்.ஐ குறைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம், அவற்றில் சில பின்வருமாறு:
மெம்பரைன் வளர்வதற்கு முன்பே சிதைவடைகிறது, இதனால் பிரசவத்திற்கு முன் அம்னியோடிக் பையில் கசிவை ஏற்படுத்துகிறது.
குழந்தைக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், குறிப்பாக சிறுநீரகங்களில் ஏற்பட்டால், அது போதுமான சிறுநீரை உருவாக்குவதைத் தடுக்கிறது.
நஞ்சுக்கொடியானது சாதாரணமாக செயல்படாத போது அல்லது கருப்பை சுவரிலிருந்து பிரிந்து செல்லும் போது, ஏ.எஃப்.ஐ அளவு குறைகிறது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழப்பு, உடல் பருமன் போன்ற மகப்பேறு சிக்கல்கள்.
சில மருந்துகள் கூட பனிக்குட நீரின் அளவை பாதிக்கலாம்.
நிறைய தண்ணீர் குடிப்பதால் இயற்கையாகவே பனிக்குட நீர் அதிகரிக்கிறது. இது எந்த மோசமான பின் விளைவுகளும் ஏற்படாமல் பனிக்குட நீரை அதிகரிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகும்.
2. போதுமான ஓய்வு எடுங்கள் (Take Ample Rest)
ஓய்வெடுப்பதால் நஞ்சுக்கொடிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது பனிக்குட நீரை அதிகரிக்க உதவும்.
பிரக்னன்ஸி முழுவதும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ணுங்கள். கீரை, முள்ளங்கி, ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளையும், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, கேண்டலூப் மற்றும் திராட்சைப்பழம் போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மோசமானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மது குடிக்கும் பழக்கம் நீரிழப்புக்கும் வழிவகுக்கிறது. இதனால், இது பனிக்குட நீரின் அளவைக் குறைக்கிறது. மேலும், சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதலை அதிகரிக்கும் சப்ளிமெண்ட் மருந்துகளையும் தவிர்க்கவும்.
ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். மருத்துவர் முழுமையான பெட்ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்காத பட்சத்தில், நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யலாம். இது நஞ்சுக்கொடி மற்றும் கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து பனிக்குட நீரின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
கர்ப்ப காலம் என்பது அதிக கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலக்கட்டம், குறிப்பாக முதல் முறையாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு இது ஒரு புது வித அனுபவமும் கூட. சீரான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, போதுமான தண்ணீரைக் குடிப்பது, சரியான நேரத்தில் கூடுதல் மருந்துகளை உட்கொள்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
இருப்பினும், கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் நிகழக்கூடிய பனிக்குட நீரின் அளவு குறைவதிலிருந்து ஒருவர் பாதுகாக்கபட வேண்டும். எனவே, ஏதாவது வித்தியாசமாக உணர்ந்தால், தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் அது குறித்து உடனடியாக தெரிவிக்கவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பனிக்குட நீரின் அளவு குறைவதிலிருந்து காத்துக் கொள்ள நிறைய சிகிச்சைகள் உள்ளன. இருப்பினும், பிரக்னன்ஸி காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இயற்கையாகவே பனிக்குட நீரின் அளவை அதிகரிப்பது நல்லது.
Hofmeyr GJ, Gülmezoglu AM, Novikova N. (2002). Maternal hydration for increasing amniotic fluid volume in oligohydramnios and normal amniotic fluid volume. NCBI
Bakhsh, H., Alenizy, H., Alenazi, S. et al. (2021). Amniotic fluid disorders and the effects on prenatal outcome: a retrospective cohort study. BMC Pregnancy
Tags
How to increase amniotic fluid naturally during pregnancy in Tamil, What is Amniotic Fluid in Tamil, What contributes to a low Amniotic Fluid level in Tamil, Increasing Amniotic Fluid in Pregnancy in Tamil, How to increase amniotic fluid in English, How to Increase Amniotic Fluid in Bengali
Yes
No
Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips
கர்ப்பத்தில் வாழைப்பழம்: எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தவிர்க்க வேண்டும் I Banana in Pregnancy: When to Eat and When to Avoid in Tamil
எக்டோபிக் பிரக்னன்ஸி அறிகுறிகள் எப்போது தொடங்குகின்றன I When do Ectopic Pregnancy Symptoms start in Tamil?
கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் I What to Eat During Pregnancy in Tamil
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்துவது எப்படிI How to Stop Bleeding During Pregnancy in Tamil?
பெண் சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா: கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை நீக்குதல் I Does Female Masturabation Cause Infertility: Dispelling the Myths and Misconceptions in Tamil
கர்ப்பத்திற்குப் பிறகான உடலுறவு I Sex After Pregnancy in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |