hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Sex Life arrow
  • கர்ப்பத்திற்குப் பிறகான உடலுறவு I Sex After Pregnancy in Tamil arrow

In this Article

    கர்ப்பத்திற்குப் பிறகான உடலுறவு I Sex After Pregnancy in Tamil

    Sex Life

    கர்ப்பத்திற்குப் பிறகான உடலுறவு I Sex After Pregnancy in Tamil

    2 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது

    அறிமுகம் (Introduction)

    முதலில், உங்களுடைய தாய்மைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

    பிறப்புறுப்பில் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் உங்களுடைய பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்ளுதல் போன்ற தொடர்ச்சியான தினசரி சோர்வு போன்றவற்றை இப்போது நீங்கள் நிறைய கடந்து செல்கிறீர்கள். இந்த மாதிரியான சமயத்தில், நீங்கள் உங்களுடைய துணையுடன் நெருக்கமான மனநிலையில் இருப்பதற்கும் மனம் விட்டுப் பேசுவதற்கும் விரும்பலாம். மறுபுறம், உடலுறவிற்கான ஆர்வமின்றி அது உங்களுடைய மனதில் கடைசி விருப்பமாக இருக்கலாம்.

    இருந்தாலும், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் உடலுறவானது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே மீண்டும் ஒரு தீப்பொறியை தூண்டுவதற்கான ஒரு முக்கியமான படியாக இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு உடலுறுவு கொள்வதற்கு எந்தவொரு காலக்கெடுவும் இல்லை. உங்களுக்கான உங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டு, உங்கள் துணையுடன் நெருக்கமாக இருங்கள்.

    பிரசவத்திற்குப் பிறகு, நான் எப்போது உடலுறவு கொள்ளலாம் (After delivery, how soon can I have sex in Tamil)

    பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளக் கூடாது என்பதற்கு குறிப்பிட்ட காத்திருப்பு காலமோ அல்லது நிபந்தனையோ எதுவும் இல்லை. இருப்பினும், சில மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பிறகு, கருப்பை தொற்று அல்லது பிரசவத்தின் போது போடப்படும் தையல்களில் இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடலுறவினை மீண்டும் தொடங்குவதற்கு மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை காத்திருக்கச் சொல்லி பரிந்துரைக்கின்றனர்.

    பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களின் ஆபத்து இந்த காலகட்டத்தில் அதிகமாக இருப்பதால் இது பொதுவாக ஏற்படுகிறது. கூடுதலாக, பிரசவத்திற்குப் பிறகு, வலி, பிறப்புறுப்பின் விரிவாக்கம், பிரசவத்திற்குப் பின் வெளிப்படும் வெள்ளைப்படுதல், சோர்வு, உடலுறவின் மீது விருப்பம் குறைதல் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கலாம். சில வாரங்கள் காத்திருப்பது உங்களுடைய உடல் சரியாக குணமடைவதற்கான நேரத்தைக் கொடுக்கும், மேலும் உங்களுடைய உடலுறவிற்கான வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் உணர்வுபூர்வமாக தயாராக இருக்க வேண்டும்.

    கர்ப்பத்திற்குப் பிறகு உடலுறவு கொண்டால் வலிக்குமா? (Does having sex after pregnancy hurts in Tamil)

    சில நேரங்களில் கர்ப்பத்திற்குப் பிறகு, பிரசவத்தின்போது செய்யப்பட்ட பிறப்புறுப்பின் விரிவாக்கம் (எபிசியோடமி) மற்றும் பெரினியல் டியர் (பெண்ணுறுப்பினை விரிவுபடுத்துதல்) போன்ற காயங்களில் இருந்து குணமாகி இருந்தாலும் கூட உடலுறவு கொள்ளும்போது வலிக்கும். பிறப்புறுப்பின் விரிவாக்கம் (எபிசியோடமி) என்பது உங்கள் மருத்துவர் உங்களுடைய பெரினியத்தில் (பிறப்புறுப்பில்) அறுவை சிகிச்சைக்காக செய்யக்கூடிய ஒரு கீறலாகும். இது பிரசவத்தின் போது செய்யப்படும். மேலும் இது குணமடைய சிறிது காலம் ஆகும்.

    நீங்கள் தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக உங்களுடைய பிறப்புறுப்பில் மென்மை மற்றும் வறட்சியை நீங்கள் அனுபவிக்கலாம். இத்தகைய அசௌகரியங்களைச் சமாளிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றை முயற்சிக்கலாம்:

    வலியைப் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் (Take measures to relieve pain in Tamil)

    உங்களுடைய சில வலிகளைத் தவிர்க்க அல்லது எளிதாக்குவதற்கு, வலி மருந்துகளை உட்கொள்வது, உடலுறவுக்கு முன் உங்கள் சிறுநீர்ப்பையை காலியாக்குவது, உங்கள் தசைகளை தளர்த்துவதற்காக சூடான குளியல் எடுத்துக் கொள்வது போன்ற சில நடவடிக்கைகளை நீங்கள் முயற்சிக்கலாம். உடலுறவுக்குப் பிறகு, உங்களுடைய பிறப்புறுப்பில் எரியும் உணர்வையும் நீங்கள் அனுபவிக்கலாம். அசௌகரியத்தைத் தவிர்ப்பதற்கு ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றிக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

    1. மசகு எண்ணெயைப் பயன்படுத்தவும் (Use lubricant)

    பிறப்புறுப்பின் வறட்சியை சமாளிக்க மசகு எண்ணெய் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாகும்.

    2. பரிசோதனை (Experiment)

    உங்களுடைய வலி மற்றும் அசௌகரியம் பற்றி உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசி புரிய வைக்கவும். வாய்வழி உடலுறவு, பரஸ்பர சுயஇன்பம், நீண்டநேர முன்விளையாட்டு, மசாஜ் போன்ற மாற்று பாலின விருப்பங்கள் மூலமாக முயற்சிக்கலாம்.

    3. நேரம் ஒதுக்குங்கள் (Make time)

    நீங்கள் இருவரும் சோர்வாக இல்லாதபோது உடலுறவு கொள்வதற்கு முயற்சிக்கவும். உடலுறவுக்கான மனநிலையை அமைத்துக்கொண்டு, உங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் ஒருமுறை காரசாரமான மனநிலையை ஏற்படுத்துவதற்கு மீண்டும் பற்றவைக்க முயற்சி செய்யுங்கள்.

    இருப்பினும், இந்த சமயத்தில் நீங்கள் கடுமையான மற்றும் அசாதாரண வலியை அனுபவித்தால், உங்களால் தாங்கமுடிந்ததை விட அதிகமாக அனுபவித்தால், உடனடியாக நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும், வலி நிவாரண விருப்பங்களையும் கூட முயற்சிக்கவும்.

    பிரசவத்திற்குப் பிறகு உடலுறவில் எனக்கு ஏன் விருப்பம் குறைவாக உள்ளது ( Why do I have a low sex drive after delivery in Tamil)

    சாதாரண உடலுறவு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு நீங்கள் உடல்ரீதியாக நன்றாக குணமடைந்திருக்கலாம். இருந்தாலும், உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதற்கான முழுமையான விருப்பத்தை நீங்கள் இன்னும் உணரவில்லை. பிரசவத்திற்குப் பிறகான கால கட்டத்தில் உடலுறவு கொள்வதற்கு உங்கள் விருப்பத்தை பாதிக்கும் பல காரணங்கள் இருக்கலாம். உதாரணத்திற்கு,

    ஹார்மோன் மாற்றங்கள்

    சோர்வு/அசதி

    பிரசவ அதிர்ச்சி

    பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வு

    பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் வெளிப்புறம் மற்றும் பிறப்புறுப்பில் ஏற்படும் வலி

    துணையுடன் உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்பட்டதாக உணர்தல்

    பிரசவத்திற்குப் பிறகான உடல் வடிவம்

    சிசேரியன் செய்த பிறகு நான் எப்போது உடலுறவைத் தொடரலாம் (When can I resume sex after a cesarean section in Tamil)

    சிசேரியன் விஷயத்தில், மக்கள் வித்தியாசமான முறையில் குணமடைகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு, உங்களுடைய மருத்துவர் உங்களை மென்மையான செயல்களைச் செய்யச் சொல்வார். இத்தகைய நடவடிக்கைகள் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்க உதவும். இருந்தாலும், நீங்கள் குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருக்க வேண்டும் அல்லது உடலுறவை உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பவதற்கு, நீங்கள் செளகரியமாக உணர்வதற்கும் மற்றும் உடல் ரீதியாகவும் தயாராகும் வரைக்கும்.

    பிரசவத்திற்குப் பிறகு என்னுடைய பிறப்புறுப்பு வித்தியாசமாக இருக்குமா (Will my vagina be different after delivery in Tamil)

    உங்களுக்கு சுகப்பிரசவமாக வேண்டும் என்றால், உங்களுடைய குழந்தையை வெளியே எடுப்பதற்கு உங்கள் பிறப்புறுப்பின் பாதையானது விரிவாக்கம் செய்யப்படும். இதன் காரணமாக, உங்கள் பிறப்புறுப்பில் காயம் மற்றும் வீக்கம் ஏற்படலாம். இருப்பினும், இது காலப்போக்கில் குறைந்து விடும், மேலும் வலியும் மறைந்துவிடும்.

    சுகப்பிரசவத்திற்குப் பிறகு, உங்களுடைய பிறப்புறுப்பு அதன் முந்தைய வடிவத்திற்கு திரும்பாமல் போகலாம். இது உங்களுடைய எதிர்கால பாலியல் அனுபவத்தை பாதிக்காது.

    பிரசவத்திற்குப் பிறகு நான் எப்போது மீண்டும் கர்ப்பமாகலாம் (When can I get pregnant again after delivery in Tamil)

    பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு, உங்களுடைய மாதவிடாய் மீண்டும் தொடங்காவிட்டாலும் கூட, நீங்கள் 3 வாரங்களில் மீண்டும் கர்ப்பமாகலாம்.இருப்பினும், நீங்கள் கர்ப்பமாக விரும்பவில்லை என்றால், பிரசவத்திற்குப் பிறகு உடலுறவு கொள்ளும்போது கருத்தடைகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.

    எடுத்துச் செல்ல (Takeaway)

    உடல் ரீதியாக குணமடைந்த பிறகு, நீங்கள் உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க இன்னமும் கூட சிரமப்படுகிறீர்கள் என்றால், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைக் கண்டறியவும். கடுமையான சோர்வு, கடுமையான மனநிலை ஊசலாட்டம், பசியின்மை, அதிக உணர்ச்சிகள் போன்றவற்றை நீங்கள் உணரலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், உடனடியாக நீங்கள் உங்களுடைய மருத்துவரை அணுகவும். சரியான நேரத்தில் மற்றும் சரியான சிகிச்சையுடன், நீங்கள் விரைவாக குணமடையலாம். மேலும், மீண்டும் ஆரோக்கியமான உடலுறவிற்கான வாழ்க்கையை நீங்கள் மீண்டும் தொடங்குவீர்கள்.

    References:

    1. Jones C, Chan C, Farine D. (2011). Sex in pregnancy. NCBI

    2. Fuchs A, Czech I, Sikora J, Fuchs P, Lorek M, Skrzypulec-Plinta V, Drosdzol-Cop A. (2019). Sexual Functioning in Pregnant Women. NCBI

    3. Wiley Online Library. (2017). Sex During Pregnancy: Journal of MidWifery & Women's Health. onlinelibrary.wiley.com

    Tags:

    Sex can be done after delivery in Tamil, Does Sex after pregnancy hurts in Tamil, Vagina difference after delivery in Tamil, Pregnancy after delivery in Tamil, Feel low sex drive after delivery in Tamil, Sex After Pregnancy in English

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Priya Baskar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Scans & Tests

    Scans & Tests

    உங்கள் பிரக்னன்ஸியின் நான்காவது வாரத்தில் அல்ட்ராசவுண்ட் எவ்வளவு முக்கியமானது I How Important is an Ultrasound During Your Fourth Week of Pregnancy in Tamil

    Image related to Scans & Tests

    Scans & Tests

    நான்காவது வார பிரக்னன்ஸி ஸ்கேன் நமக்கு எதைக் காண்பிக்கும் I What Does The Fourth Week Pregnancy Scan Show in Tamil

    Image related to Pregnancy Journey

    Pregnancy Journey

    கர்ப்பிணி பெண்கள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? | Can pregnant women get the flu shot in Tamil

    Image related to Male Infertility

    Male Infertility

    நீங்கள் ஒருபோதும் தவிர்க்கக் கூடாத குறைந்த விந்தணு எண்ணிக்கை அறிகுறிகள் I Low Sperm Count Signs You Should Never Ignore in Tamil

    Image related to Women Specific Issues

    Women Specific Issues

    இறுக்கமான யோனி மற்றும் பெண்கள் உடல்நலம் பற்றிய ஒரு ஆழமான வழிகாட்டி I Tight Vagina and Women's Health: An In-Depth Guide in Tamil

    Image related to PCOS & PCOD

    PCOS & PCOD

    பாலிசிஸ்டிக் கருப்பை நோய் ( PCOD ): காரணங்கள், விளைவுகள் மற்றும் சமாளிக்கும் உத்திகளை இணைத்தல் I Polycystic Ovarian Disease (PCOD): Navigating Causes, Effects, and Coping Strategies in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |