Pregnancy Journey
3 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது
சில சமயங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படலாம். இது பொதுவாகவே 25% கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படுகிறது. மேலும், கர்ப்ப காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கினரிலிருந்து பாதி பேர்கள் வரைக்கும் கருச்சிதைவிற்கு உள்ளாகிறார்கள். கர்ப்ப காலத்தின் பிந்தைய படிநிலைகளின் போது இரத்தப்போக்கு ஏற்படுவது தீவிரமான பிரச்சினையை குறிப்பதுவாகக் கூட இருக்கலாம். கர்ப்ப காலத்தின் போதும், அதன் குறிப்பிட்ட படிநிலைகளிலும் ஏற்படும் இரத்தப்போக்கிற்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்ப காலத்தின் போது எந்தளவிற்கு இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது என்பதும், எப்போது உடனடியான மருத்துவ உதவி தேவைப்படுமென்பதும் தெரிந்திருப்பது அவசியமானதாகும். மேலும், அவர்களுக்கு சிகிச்சை முறைகளும், கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் இரத்தப்போக்கை நிறுத்தும் வழிகள் குறித்தும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். இந்த கட்டுரையில் கர்ப்ப காலத்தில் பொதுவாக இரத்தப்போக்கு ஏற்படும் சூழல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு அநேக காரணங்கள் உள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களுக்கு முன்னர் இரத்தப்போக்கு ஏற்படுவது இயல்பானது தான். எனினும், கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படுவது மருத்துவ சிக்கல்களையோ அல்லது ஏதேனும் பிரச்சினை இருப்பதையோ சுட்டிக் காட்டுகிறது. ஒரு பெண் கர்ப்பமாக இருந்து, இரத்தப்போக்கு ஏற்படும் பட்சத்தில், உடனடியாக மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். இதனால் கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதன் உண்மையான காரணத்தை கண்டறியலாம். தீவிரமான பிரச்சினைகள் ஏதும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இரத்தப்போக்கிற்கு உள்ளாகும் பல கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.
கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதன் காரணங்களை ஆய்வு செய்வதற்கு, மருத்துவர் அல்லது நிபுணர் அல்ட்ராசவுண்ட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை பரிந்துரை செய்வர்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பாகவே சில சமயங்களில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தின் முந்தைய படிநிலைகளின் போது ஏற்படும் இரத்தப்போக்கிற்கான சில காரணங்கள் பின்வருமாறு:
கருவாக உருவான முட்டையானது கருப்பை சுவரில் ஊன்றி வளரும் போது, இரத்தக் கசிவு ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தின் ஆரம்ப நிலையில் இது வழக்கமாக நிகழக் கூடியது தான்.
கருவாக உருவான முட்டை கருப்பையில் ஊன்றி வளரும் போது, முதிர்கருவிற்கு பதிலாக கட்டி உருவாகி விடும் பட்சத்திலும், இரத்தக் கசிவு ஏற்படலாம். இது போன்ற நிகழ்வுகள் கர்ப்ப காலத்தில் அரிதாகவே ஏற்படுகிறது.
இது கர்ப்பப்பைக்கு வெளியே உருவாகிறது (கருக்குழாய்களில்), இது தீவிரமான பிரச்சினையாக இருக்கக் கூடும்.
கர்ப்பப்பைக்கு உள்ளே முதிர்கருவை சுற்றியுள்ள சவ்வு இரத்தப் போக்கை ஏற்படுத்தலாம். சப்கோரியோனிக் ஹெமடோமா காலப்போக்கில் சரியாகி விடும்.
ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பின் விளைவாக கருப்பை வாயில் (செர்விக்ஸ்) ஏற்படும் புற்று அல்லாத வளர்ச்சியின் காரணமாக, கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படக் கூடும்.
சில சமயங்களில், 20 வாரங்களுக்கு முன்பே கர்ப்பம் கலைந்து விடும். பொதுவாக, லேசான இரத்தப்போக்கில் தொடங்கி, படிப்படியாக தீவிரமான தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளுடன் கடுமையான இரத்தப்போக்கிற்கு இட்டுச் சென்று விடும். இறுதியாக கருச்சிதைவு ஏற்பட்டு, தாய்க்கும், குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.
இரண்டாவது அல்லது மூன்றாவது மும்மாதங்களில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
பிளாசென்ட்டா பிரிவீயா என்பது அரிதான மருத்துவ சிக்கலை குறிக்கிறது. இது பனிக்குடமானது கர்ப்பப்பை வாயின் மொத்தத்தையும் அல்லது சில பகுதிகளை மட்டும் மூடியிருக்கும் போது ஏற்படுகிறது. இந்த பிரச்சினை கர்ப்ப காலத்தின் 20 வாரங்களுக்கு பிறகு ஏற்பட நேரிடலாம்.
கருப்பை சுவரிலிருந்து பனிக்குடம் துண்டிக்கப்படும் போது, பிளாசென்ட்டல் அப்ருப்ஷன் (பனிக்குடம் தகர்வு) எனப்படும் சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் மிக அரிதானவை, இது முதிர்கருவிற்கும், தாய்க்கும் கடுமையான உடல்நலத் தாக்கங்களை ஏற்படுத்தி விடக் கூடும்.
கர்ப்ப காலத்தின் 37 வாரங்களுக்கு முன்னரே பிரசவிப்பதே, குறைப் பிரசவம் எனப்படுகிறது.
தகுதியற்ற கருப்பை வாய் (செர்விக்ஸ்): சரியான நேரத்திற்கு முன்பே கருப்பை வாய் விரிவடைவதால், குறைப் பிரசவம் ஏற்படுகிறது.
கருச்சிதைவு: 20-ஆவது வாரத்திற்கு பின் கருக்கலைவது.
கர்ப்ப காலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான பிற காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
உடலுறவு: உடலுறவிற்கு பின்னர் இரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், கர்ப்ப காலத்தின் போது கருப்பை வாய் கூடுதல் கூர் உணர்வுடையதாக இருக்கும்.
பெல்விக் பரிசோதனை அல்லது அல்ட்ராசவுண்ட்: பெல்விக் பரிசோதனைக்கு பிறகு அல்லது செர்விக்ஸ் டிரான்ஸ்வெஜைனல் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போது இரத்தக் கசிவு ஏற்படலாம்.
நோய்த்தொற்று: கிளாமிடியா, கொனோரியா, எஸ்டிடி-க்கள், அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்று போன்ற நோய்த்தொற்றுக்களும் கர்ப்ப காலத்தில் இரத்தக் கசிவு ஏற்படுவதற்கான முதன்மையான காரணங்களாக இருக்கக் கூடும்.
கர்ப்ப காலத்தில் எந்தளவிற்கு இரத்தப் போக்கு ஏற்படுவது இயல்பானது (How much bleeding is normal in pregnancy in Tamil)?
இரத்தக் கசிவு, இரத்தக் கறை ஏற்படுதல் என்றும் அழைக்கப்படும் பிரச்சினை கர்ப்ப காலத்தில் ஏற்படும் இயல்புக்கு மாறான பிரச்சினை அல்ல. எனினும், நாம் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். குறிப்பாக, இரத்தக் கசிவு அல்லது இரத்தக் கறை ஏற்படும் காரணம் தெரியாத பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.
இரத்தப் போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்வுகள் ஒன்றும் இல்லை. சில மணி நேரங்களில் அது இயற்கையாகவே நின்று விடும். அல்லது, சில சமயங்களில், நேரம் செல்லச் செல்ல கர்ப்பிணிப் பெண்ணிற்கு கடுமையான இரத்தப் போக்கு ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதை எளிதாக தடுப்பதற்கான வழிகளில் ஒன்று, சரியான முறையில் ஓய்வு எடுப்பது தான். அப்போதும் கூட இரத்தப் போக்கு நிற்கவில்லையெனில், உடனடியாக குடும்பத்தினர் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், ஆய்வு செய்தவுடன், மருத்துவர் அல்லது நிபுணர் அறிவுறுத்தக் கூடிய விஷயங்கள் பின்வருமாறு:
முழுமையான ஓய்வு எடுப்பது
உடலுறவில் ஈடுபடாமலிருப்பது
நீர்த்தாரையை செலுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்யாமலிருப்பது
டாம்ப்பன்-களை பயன்படுத்தாமலிருப்பது
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழ்வது
நிறைய தண்ணீர் குடிப்பது
நன்றாக தூங்குவது
கடுமையான இரத்தப் போக்கு ஏற்படும் பட்சத்தில், கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வேண்டி வரும் அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
கர்ப்ப காலத்தின் இரண்டாம் மும்மாதங்களில் ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்துவதற்கு சில பரிசோதிக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன:
மெத்தோட்ரெக்ஸேட் எனப்படும் மாத்திரையை பயன்படுத்தலாம்.
பெண்ணின் நிலை மெத்தோட்ரெக்ஸேட் சிகிச்சைக்கு ஏற்றதாக இல்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சை செய்யலாம்.
டைலேஷன் மற்றும் க்யூரெட்டாஜ் (டி அண்ட் சி) எனப்படும் குறிப்பிட்ட நடைமுறை, கர்ப்பப்பையில் முளைக்கரு திசுவை நீக்குகிறது. இது இரத்தப்போக்கு அல்லது நோய்த்தொற்று உள்ளிட்ட கூடுதல் சிக்கல்களையும் தடுக்கிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு ஆபத்தானதாக இருக்க வாய்ப்பிருக்கிறது, ஆயினும், சில சமயங்களில் இது உண்மையிலேயே குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ தீங்கு விளைவிப்பதில்லை. எனினும், கணவரோ அல்லது குடும்பத்தினரோ உடனடியாக மருத்துவரையோ அல்லது நிபுணரையோ இதற்கான காரணம் குறித்து கலந்தாலோசிக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் போது இரத்தப் போக்கு ஏற்படுவதன் காரணத்தை தெரிந்து கொள்வது, தாயும், வயிற்றிலுள்ள குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு அவசியமானதாகும்.
Tags:
Bleeding during pregnancy in Tamil, Bleeding in first trimester in Tamil, Does bleeding during pregnancy leads to abortion in Tamil, Causes of bleeding during pregnancy in Tamil, how to stop bleeding during pregnancy in Tamil.
Also Read In:
English: How To Stop Bleeding During Pregnancy?
Hindi: How To Stop Bleeding During Pregnancy in Hindi
Bengali: How To Stop Bleeding During Pregnancy in Bengali
Yes
No
Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips
பெண் சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா: கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை நீக்குதல் I Does Female Masturabation Cause Infertility: Dispelling the Myths and Misconceptions in Tamil
கர்ப்பத்திற்குப் பிறகான உடலுறவு I Sex After Pregnancy in Tamil
உங்கள் பிரக்னன்ஸியின் நான்காவது வாரத்தில் அல்ட்ராசவுண்ட் எவ்வளவு முக்கியமானது I How Important is an Ultrasound During Your Fourth Week of Pregnancy in Tamil
நான்காவது வார பிரக்னன்ஸி ஸ்கேன் நமக்கு எதைக் காண்பிக்கும் I What Does The Fourth Week Pregnancy Scan Show in Tamil
கர்ப்பிணி பெண்கள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? | Can pregnant women get the flu shot in Tamil
நீங்கள் ஒருபோதும் தவிர்க்கக் கூடாத குறைந்த விந்தணு எண்ணிக்கை அறிகுறிகள் I Low Sperm Count Signs You Should Never Ignore in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |