Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
10-வார கர்ப்ப வயிறு அவ்வளவு வெளிப்படையாக தெரியாதென்றாலும், சிலர் இந்த சமயத்திலேயே கர்ப்பமாக இருப்பதை கவனிக்க ஆரம்பிப்பர். 10-வது வாரம் வரும் போது அடி வயிறு உருண்டையாக தெரிய ஆரம்பிக்கும். பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் முதல் மும்மாதங்களிலேயே கர்ப்ப வயிறு தெரிந்து விடும். மேலும், பலருக்கு சிறிது தாமதமாக கூட தெரியலாம்.
10-வார கர்ப்ப வயிறு வெளியே தெரிய ஆரம்பிப்பது ஏனென்றால், இந்த சமயத்தில் கருவிலுள்ள சிசு ஒரு பழுத்த ஆரஞ்சின் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கும். இதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் வயிறு வளர்ந்து கொண்டேயிருக்கும், இது கருவிலுள்ள சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சியை குறிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றின் அளவும், வடிவமும் பொதுவாகவே ஒருவருக்கொருவர் மாறுபடும். எனவே, கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு வெவ்வேறு விதமான வயிற்றின் அளவுகளும், வடிவங்களும் இருக்கலாம். 10-வார கர்ப்ப வயிற்றை தீர்மானிப்பதில் கீழ்க்கண்ட காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன:
கர்ப்பிணிப் பெண்ணின் உயரமும், உடல் எடையும்
எலும்பு அமைப்பு
உடல் அமைப்பு
தசை அமைப்பு மற்றும் பண்பு
பெண் இதற்கு முன்னர் கர்ப்பமாக இருந்தாரா அல்லது இல்லையா என்பது
எனவே, பெண்கள் மற்ற கர்ப்பிணிப் பெண்களோடு தங்கள் 10-வார கர்ப்ப வயிற்றை ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்ள வேண்டாம். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடக் கூடியது.
எல்லா கர்ப்பிணிப் பெண்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பின்வருமாறு:
பெரும்பாலும் சினிமா படங்களில், கர்ப்ப வயிறு சம அமைப்போடு, முன் பகுதி துருத்தியவாறு இருப்பதை நாம் பார்க்கிறோம். எனினும், உண்மையில், பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப வயிறு அவ்வாறு இருப்பதில்லை. அகன்ற இடுப்பையுடைய பெண்களுக்கு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வயிறு பெரிதாக ஆகாமல் போகலாம். பக்கங்களிலும், வயிற்றின் கீழேயும் உள்ள கொழுப்புத் திசுக்கள், வயிறு முதன்மையாக தெரிவதை தடுக்கின்றன. மாற்றாக, குறைவான அளவு உடல் கொழுப்பை உடைய பெண்களுக்கு பெரும்பாலும் மற்றவர்களை விடவும் சீக்கிரமாகவே கர்ப்ப வயிறு தெரிய ஆரம்பிக்கும். ஏனென்றால், அவர்களின் வயிற்றைச் சுற்றி குறைவான அளவு கொழுப்பே இருப்பதால், வயிறு எளிதாக வெளியே தெரியும்.
ஒரு பெண் இதற்கு முன் எத்தனை முறை கர்ப்பம் தரித்திருக்கிறாள் என்பதை பொறுத்தும் கூட, 10 வார கர்ப்ப வயிற்றின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. சில ஆய்வுகளின் படி, முன்னமே ஒரு பெண் கர்ப்பம் தரித்திருந்தால், கர்ப்ப வயிறு விரைவாகவும், உருண்டையாகவும் 10-வது வார வாக்கிலேயே தெரிய வாய்ப்புள்ளது. மேலும், கர்ப்ப காலத்தின் இரண்டாம் மும்மாதம் நெருங்கும் போது வயிறு இன்னும் பெரிதாகி விடலாம். ஏற்கனவே கர்ப்பம் தரித்த பெண்களின் அடிவயிற்றிலுள்ள தசைகள் மென்மையாக இருப்பதால், அவை வேகமாக விரிவடைந்து, வயிறு சீக்கிரமே பெரியதாக வளர்ச்சியடைந்து விடும்.
இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்களின் 10 வார கர்ப்ப வயிறு, ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்களை விடவும் இயல்பாகவே பெரிதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் 10-வது வாரத்தை தாண்டிய பெண்கள், அவர்கள் வயிற்றின் அளவையும், வடிவத்தையும் குறித்து அவ்வளவாக கவலைப்படத் தேவையில்லை. கர்ப்பமாக இருப்பதை உணர்வது தான் இங்கு சிறப்பாக கருதப்படுகிறது. அது கர்ப்ப வயிறு பெரிதாக இருப்பதனால் மட்டுமே வருவதில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்கள் சில உடற்பயிற்சிகளை செய்யுமாறு பரிந்துரை செய்வார்கள். இந்த உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் கர்ப்ப காலத்தில் அவர்களின் வயிறு வலிமையாகவும், நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஸ்ட்ரெச் மார்க் லோஷன்களையும், க்ரீம்களையும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். அவர்களின் வயிறு அந்தளவு விரிவடையவில்லையென்றாலும் கூட பயன்படுத்தலாம். ஆரம்பத்திலிருந்தே இந்த க்ரீம்களை தடவி வருவதால் ஸ்ட்ரெச் மார்க்ஸ் வருவதை குறைக்க உதவும். எனினும், இவ்வாறு எதையேனும் பயன்படுத்தும் முன்பு, மருத்துவர் அல்லது சரும மருத்துவரை கட்டாயம் அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
சில சமயங்களில், எதிர்பார்த்ததை விடவும் வயிறு வேகமாக வளர்ந்து விடக் கூடும். கவலைப்பட வேண்டாம்; குழந்தை வேகமாக வளர்வதாக இதற்கு பொருள் கொள்ளக் கூடாது. இது வயிற்று உப்பிசம் காரணமாகவும், 10-வார கர்ப்ப வயிற்றில் நிகழும் பிற மாற்றங்கள் காரணமாகவும் இருக்கலாம்.
10-வார கர்ப்ப வயிற்றினை சௌகரியமாக வைத்துக் கொள்வதற்கு வேண்டி, கர்ப்பிணிப் பெண்கள் தளர்வான, சௌகரியமான உடைகளையே அணிய வேண்டும். அவர்கள் வயிற்றின் வளர்ச்சியை தடுக்கக் கூடிய இறுக்கமான பேண்ட்-களையும், சட்டைகளையும் அணிவதை தவிர்க்க வேண்டும்.
முதல் மும்மாதம் முடிந்த உடனேயே குழந்தையின் அசைவுகள் தெரிய ஆரம்பித்து விடும். அது அடி வயிற்றில் வலியை உண்டாக்கக் கூடும். எனினும் அது இயல்பானது. நீங்கள் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
முதல் 10 வாரங்களுக்கு முன்னர், கர்ப்ப வயிறு சில சமயங்களில் பெரிதாகவோ அல்லது சிறியதாகவோ தெரியலாம். பொதுவாகவே குடல் விரிவடைதலின் காரணமாக வயிற்றில் வாயுக்கள் உருவாகும் காரணத்தால் இவ்வாறு தெரியும். இது இயல்பானது தான். எனினும், வயிற்றில் கடுமையான வலி தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
10-வார கர்ப்ப வயிறு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக, கர்ப்ப காலத்தின் முதல் 10 வாரங்களுக்கு பிறகு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது அடிக்கடி நடைபெறும் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில் மருத்துவரிடம் செல்வதால், உங்கள் உடல்நலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. எனவே நீங்கள் கவலைப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. எனினும், வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கு, கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான உணவினை எடுத்துக் கொண்டு, தங்கள் உடல்நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |