Updated on 3 November 2023
புதிய பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வது சார்ந்த நிறைய முடிவுகளை எடுக்க வேண்டும். எவ்வாறாயினும், முன்கூட்டியே எடுக்கக்கூடிய ஒரு முடிவு உள்ளது. அது டிஸ்போசபிள் டயப்பர் பற்றியது. இப்போதெல்லாம், பெற்றோருக்கு பல்வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளன. மேலும், குழந்தைக்கு எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். துணி டயப்பர்களா(cloth diapers) டிஸ்போசபிள் டயப்பர்களா(diaposable diapers)என்பது குறித்து புதிய பெற்றோர்களிடையே எப்போதும் ஒரு பொதுவான விவாதம் இருக்கும். பல பெற்றோர்கள் டிஸ்போசபிள் நாப்கின்களை(disposble diapers) பயன்படுத்துகின்றனர். ஏனெனில், அவை பயன்படுத்த எளிதானவை. இருப்பினும், குழந்தைகளுக்கு டிஸ்போசபிள் டயப்பர்களைப் பயன்படுத்துவதில் சில அபாயங்கள் உள்ளன. டிஸ்போசபிள் டயப்பர்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் மற்றும் அவை எவ்வளவு காலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான விவரங்களைக் இங்கே காணலாம்.
சராசரியாக, பிறந்த குழந்தைகள் 2-3 வாரங்களுக்கு டயப்பர்களை அணிவார்கள். அதன் பின் அளவு 1 டயப்பர்கள் அல்லது "பிரீமி" டயப்பர்களுக்கு மாறுவர். ஒரு குழந்தை அடுத்த அளவு டயப்பரை நோக்கி நகரும் போது, எடை மற்றும் நீளம் போன்ற பல காரணிகள் அவற்றை நிர்ணயிக்கலாம். பொதுவாக, பெரிய குழந்தைகளை விட சிறிய குழந்தைகள் தங்கள் டயப்பர் அளவைக் கடந்து விரைவில் வளரும். ஏனெனில் அவர்களுக்கு டயப்பரில் நகர அதிக இடம் தேவைப்படுகிறது.
8 முதல் 14 பவுண்டுகள் வரை எடையுள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு டிஸ்போசபிள் நாப்கின்கள்(disposable diapers) வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான குழந்தைகள் சில வாரங்களில் அந்த எடையை எட்டுவர். இருப்பினும், சில குழந்தைகள் ப்ரீ-டர்ம் அல்லது சிறியதாக பிறக்கின்றன. எனவே அவர்களுக்கு மூன்று வாரங்களை கடந்தும் டிஸ்போசபிள் டயப்பர்கள் தேவைப்படலாம்.
பிறந்த முதல் சில மாதங்களுக்கு, குழந்தையின் டயபர் எடையானது, அவர்கள் எப்படி வளர்கிறார் மற்றும் ஒட்டுமொத்த நலனை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே குழந்தை வளர்ச்சி அட்டவணையின் கீழிருந்து தொடங்கினால், அது அடுத்த அளவு டயப்பருக்கு செல்ல சிறிது நேரம் ஆகலாம். சில குழந்தைகளை மற்றவர்களை விட அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கலாம் மற்றும் அவுட்புட் மற்றும் பவல் அசைவுகளுக்கு குழந்தைகளின் டிஸ்போசபிள் டயப்பர்களைக் கண்காணிப்பது முக்கியம்.
ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஒரு வயதைக்கடந்ததும் டயப்பர் அணிவதை நிறுத்துவார்கள். இருப்பினும், பெரும்பாலான பெற்றோர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் துணி டயப்பர்களை நம்பியிருந்ததால் இது ஏற்பட்டது. உண்மையில் அதற்கான காரணம், அவற்றைக் துவைப்பது ஒரு பிரச்சனையாக இருந்தது.
இப்போது, டிஸ்போசபிள் டயப்பர்களுக்கு நன்றி, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 24 மாதங்கள் வரையும் டயப்பரை பயன்படுத்துகிறார்கள். மேலும் சிலர் மூன்று வயது வரை கூட பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒரு நிலையான நடைமுறையாக, மூன்று ஆண்டுகள் மிகவும் அதிகமாக இருக்கலாம் என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் 18வது மாதத்தைத் தாண்டிய பிறகு அகற்ற பயிற்றுவிக்கலாம். எனவே அவர்கள் டிஸ்போஸபிள் டயப்பரை விட்டு நகர்வதற்கு மனதளவில் தயாராக இல்லாவிட்டாலும், நேரம் வரும்போது அவர்கள் கழிப்பறையைப் பயன்படுத்த முடியும்.
டயப்பர்கள் மாற்றுவதை யாரும் விரும்புவதில்லை. அது துர்நாற்றமாகவும் அசுத்தமாகவும் இருக்கும். டிஸ்போசபிள் நாப்கின்கள் பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை செயல்முறையை விரைவாக செய்ய உதவுகின்றன. குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், அசையாமல் இருக்க மறுக்கும் போது இது மிகவும் சுலபமானது. கூடுதலாக, டிஸ்போசபிள் டயப்பர்கள் தடிப்புகள் மற்றும் பிற தோல் எரிச்சல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு.
ஒரு டிஸ்போசபிள் டயப்பர் பின்வரும் நன்மைகளுடன் வருகிறது:
டிஸ்போசிபிள் டயப்பர்கள்(disposable diapers) தூக்கி எறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் அவை பெற்றோரிடம் மிகவும் பிரபலமாக உள்ளன. மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பரைக் கழுவுவதற்குப் பதிலாக அல்லது டயப்பர் சேவையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பயன்பாட்டிற்குப் பிறகு அவற்றை வெறுமனே தூக்கி எறியலாம்.
டிஸ்போசபிள் டயப்பர்கள் அவற்றின் நன்மைகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக பெற்றோர்கள் நேரத்துடன் போராடினால் இது மிகவும் உதவியாக இருக்கும். அவை மாற்றப்பட்டு தூக்கி எறியப்படுவதல், கழுவும் நேரத்தை எளிதாக சேமிக்கலாம்.
துணி டயப்பர்கள்(cloth diapers) அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய டயப்பர்களுடன் ஒப்பிடும்போது, டிஸ்போசபிள் டயப்பர், சுத்தம் மற்றும் சுகாதாரத்தில் அதிகமாக விளங்குகிறது.
டிஸ்போசபிள் நாப்கின்களில் உள்ள பொருட்கள் உங்கள் குழந்தையின் தோலில் இருந்து ஈரப்பதத்தை அகற்றுவதில் சிறந்தவை. பிந்தையது குழந்தையின் தோலில் தடிப்புகளை ஏற்படுத்தும்.
இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கான கருத்தடை உறைகளை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
குழந்தைகளுக்கான டிஸ்போசபிள் டயப்பர்களும்(disposable diapers) குறைபாடுகள் இல்லாமல் இல்லை. அவற்றில் மிகப்பெரியவை,
அதிக விலை.
சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இல்லாதது.
அதிக நேரம் அணிந்திருந்தால் ஏற்படும் தோல் எரிச்சல்.
குறைபாடுகள் இருந்தபோதிலும், டிஸ்போசபிள் டயப்பர்கள் வசதியாக இருப்பதால் பெற்றோர்களிடையே பிரபலமாக உள்ளன. தெளிவாக, அவற்றின் நன்மைகள் குறைபாடுகளை விட அதிகமாக உள்ளன. மேலும் டயப்பரை எப்போது மாற்றுவது என்பது குறித்த சிறிய விழிப்புணர்வு, குழந்தை மகிழ்ச்சியாக இருக்க உதவும். குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு, மைலோ ஃபேமிலி வலைப்பதிவைப் பார்க்கவும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |