Updated on 3 November 2023
கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் பேற்றியலில் (ஆப்ஸ்டெட்ரிக்ஸ்/obstetrics) மதிப்பு மிக்கதாக கருதப்பட்டு, பிரபலமடைந்து வரும் காரணத்தால், கர்ப்பிணிப் பெண்களிடையே அதன் பாதுகாப்பு குறித்து விவாதப் பொருளாகி வருகிறது. குழந்தை பிறப்பிற்கு முந்திய இத்தகைய ஸ்கேன்களால் வளர்ந்து வரும் முதிர்கருவிற்கு பாதிப்பு ஏற்படுவது குறித்தும் அல்லது நீண்ட கால பக்க விளைவுகளை இவை உருவாக்கி விடுவது குறித்தும் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆயினும், சுகாதார பராமரிப்பு வல்லுநர்கள் முதிர்கருவின் பாதுகாப்பு குறித்தும், முன்கூட்டியே ஸ்கேன் செய்து பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் உறுதிப்படுத்தினாலும் கூட, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுப்பது முற்றிலும் ஒரு பெண்ணுடைய விருப்பம் என்று ஒப்புக் கொள்கின்றனர்.
கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் பல வருடங்களாக சுகாதார பராமரிப்பு வல்லுநர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் கர்ப்பிணிப் பெண்களையோ அல்லது அவர்களின் குழந்தைகளையோ பாதிப்பதில்லை என்று நிறுவுவதற்கு போதிய அளவு ஆதாரங்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) நடத்தப்பட்ட, பல மைய ஆய்வின் படி (ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை), கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆகவே, கர்ப்ப காலத்தில் தங்களின் முதல் அல்ட்ராசவுண்ட் பரிசோதனைக்கு காத்திருக்கும் தாய்மார்களின் குழப்பத்தை தீர்த்து வைக்க முயற்சி செய்யலாம்.
அல்ட்ராசவுண்ட்டின் பாதுகாப்பு குறித்து உறுதியாக தெரிந்து கொள்வதற்கும், கர்ப்ப காலத்தின் முதல் அல்ட்ராசவுண்ட் எடுக்கும் முன்னரே அதனை பற்றி நன்கு அறிந்து கொள்வதற்கும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என தெரிந்து வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும். கருவிலுள்ள குழந்தையின் படத்தினை உருவாக்குவதற்கு மிகு அதிர்வெண் ஒலி அலைகளை அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பயன்படுத்துகிறது. இந்த அலைகள் எதிரொலிகளை உருவாக்குகின்றன. பின்னர் அவை திரையில் படமாக மாறுகிறது. இந்த பரிசோதனையை மேற்கொள்ளும் நபர் (சோனோகிராஃபர்), இந்த படங்களை கொண்டு, குழந்தையின் நிலை, அசைவுகள் மற்றும் உறுப்புகள் குறித்து விளக்குவார்.
15-30 நிமிடங்கள் வரை நடக்கும் இந்த சோதனையின் போது, சோனோகிராஃபர் உங்கள் வயிற்றில் ஜெல்லை தடவுவார். இது இயந்திரத்திற்கும், உங்கள் சருமத்திற்கும் இடையே நல்ல நெருக்கம் இருப்பதை உறுதிப்படுத்தும். அவர்கள் உங்கள் குழந்தையின் படத்தை திரையில் படம் பிடிப்பதற்கு வேண்டி, ஒலி அலைகளை வெளிப்படுத்தும் ட்ரான்ஸ்ட்யூசர் எனப்படும் ஆற்றல் மாற்றியை பயன்படுத்துவார்கள். சோனோகிராஃபர்கள் என்பவர்கள் பயிற்சி பெற்ற சுகாதார பராமரிப்பு வல்லுநர்களாவர், உங்கள் பாதுகாப்பையும், உங்கள் குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு அவர்கள் சரியான எல்லா வழிகாட்டுதல்களையும் முறையாக பின்பற்றுவார்கள்.
கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள், வெப்ப பாதிப்பை குறைப்பதன் பொருட்டு, குறைந்த அளவிலும், குறைவான நேரத்திற்குமே ஒலி அலைகளை பயன்படுத்துகின்றன. கூடுதலாக, குழந்தை பிறப்பிற்கு முந்திய இந்த ஸ்கேன்கள் எக்ஸ்-ரே அல்லது கதிர் வீச்சினை பயன்படுத்துவதில்லை. கர்ப்ப காலத்தின் போது எடுக்கப்படும் முதல் அல்ட்ராசவுண்ட் என்பது வழக்கமாக எடுக்கப்படும் ஸ்கேன் போன்றது தான். இது உடலுக்கு வெளியே இருந்து செய்யப்படுவது மற்றும் வலியில்லாதது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேனுக்கும், பிறவிக் குறைபாடுகள், குழந்தைப்பருவ புற்றுநோய் அல்லது பிற்காலத்தில் ஏற்படும் வளர்ச்சிசார் பிரச்சினைகள் போன்றவைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கவில்லை.
கர்ப்ப கால அல்ட்ராசவுண்டின் போது, ட்ரான்ஸ்ட்யூசர், வயிற்றினால் கிரகித்துக் கொள்ளப்பட்ட குறைந்த அளவு வெப்பத்தையே உருவாக்குகிறது. தவிர, வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு நேராமல் இருப்பதற்கு வேண்டி, குழந்தை பிறப்பிற்கு முந்திய ஸ்கேன்கள் 1 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான அளவு வெப்பத்தையே பெரிய பகுதியில் பரவச் செய்கிறது. மேலும், உங்கள் குழந்தையை சுற்றியுள்ள பனிக்குட நீர் மற்றும் அவற்றின் அசைவுகளை பொறுத்து இந்த வெப்பம் மேலும் பரவுவதற்கு உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில், தாயாகப் போகும் பெண்ணுக்கு ஏற்படும் மாற்றங்கள் வெளியே தெரியாது. ஆயினும், உள்ளுக்குள் பெரிய அளவிலான மாற்றங்கள் உண்டாகிக் கொண்டிருக்கும். கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்கள் ஆரோக்கியமாக இருப்பது, முதிர்கருவின் இயல்பான வளர்ச்சிக்கு இன்றியமையாதது ஆகும். அதன் விளைவாக, பல கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளை கேடு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதன் பொருட்டு, முதல் அல்ட்ராசவுண்ட் எடுப்பதை தவிர்த்து விடுவார்கள். அதற்கு மாறாக, கர்ப்ப காலத்தின் போது எடுக்கப்படும் முதல் அல்ட்ராசவுண்ட், ஏதேனும் அபாயங்கள் அல்லது சிக்கல்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பிரசவ தேதியை கணிப்பதில் உதவுவதாகவும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையை கூறுவதாகவும், கர்ப்பப்பையை ஆய்வு செய்ய உதவுவதாகவும் இருக்கும். கூடுதலாக, மருத்துவர்கள் இடம் மாறிய கர்ப்பம் (எக்டோபிக் பிரெக்னன்சி) -ஐ கண்டறிய முடியும், முதிர்கருவின் இயல்பற்ற தன்மைகளை கண்டறியலாம், மேலும் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறித்தும் தெரிவிக்கலாம். கர்ப்ப காலத்தின் முதல் அல்ட்ராசவுண்ட் எடுப்பது, மருத்துவர்கள் கருப்பையிலுள்ள இத்தகைய பிரச்சினைகளை கண்டறிந்து சொல்வதற்கும், அதன் மூலம் சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். எனவே, உங்கள் முதல் மும்மாதங்களில் அவசியமாக செய்ய வேண்டியவற்றில், அல்ட்ராசவுண்டையும் குறித்து வைத்துக் கொள்ளவும்.
கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் எந்த அபாயமும் ஏற்படாது. குறிப்பாக, கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் ஏற்படாது. சில கர்ப்பிணிப் பெண்களுக்கு, வயிற்றில் ட்ரான்ஸ்ட்யூசரின் அழுத்தத்தின் காரணமாக லேசான அசௌகரியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆயினும், இதை தவிர கவலை கொள்வதற்கு வேறெதுவும் இல்லை. மேலும், பயிற்சி பெறப்பட்ட சுகாதார பராமரிப்பு வல்லநர்களால் பாதுகாப்பான சூழ்நிலையில், தகுந்த ஏற்பாடுகளுடன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுவதால், எந்த அபாயங்களும் நேருவதற்கு வாய்ப்பில்லை.
கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் என்பது அவசியமான தகவல்களை மருத்துவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் தெரிந்து கொள்வதற்கு வேண்டி எடுப்பது முக்கியமானது. உதாரணத்திற்கு, முதல் மும்மாதங்களின் போது எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட், உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தால் அதை தெரிவித்து விடும். நீங்கள் அதற்குத் தகுந்தாற் போல தயாராகிக் கொள்ளலாம். மேலும், கர்ப்ப கால அல்ட்ராசவுண்ட் ஒரு பெண் எந்த மாதிரியான சூழ்நிலையில், பிரசவிக்க வேண்டும் என்பதை குறித்தும் தீர்மானிக்க உதவும். எனவே, குழந்தைப்பேற்றுக்கு பிந்திய சரியான பராமரிப்பிற்கும் மருத்துவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கு உதவியாய் இருக்கிறது. கூடுதலாக, கர்ப்ப காலத்தின் போது முதல் அல்ட்ராசவுண்ட் எடுப்பதன் மூலம், பெற்றோராக போகும் தம்பதியினர் தங்களின் குழந்தையை பிறப்பதற்கு முன்பு பார்ப்பதற்கான அபூர்வமான வாய்ப்பாகவும் அமையும்.
சமீப காலங்களில், உயர் தர சிகிச்சை மையங்கள் 3டி மற்றும் 4டி ஸ்கேன் சேவைகளை வழங்கி வருகின்றன. வழக்கமாக எடுக்கப்படும் 2டி ஸ்கேன்களிலிருந்து இவ்வாறு மாறி வருவது, பல கர்ப்பிணிப் பெண்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. 3டி மற்றும் 4டி ஸ்கேன்கள், குழந்தையின் தெளிவான படங்களையும், மோஷன் வீடியோக்களையும் உருவாக்குவதற்கு, உயர் ஆற்றல் செறிவினை பயன்படுத்துகின்றன. 2டி ஸ்கேன்களை விடவும் இந்த ஸ்கேன்களில் அதிக ஆற்றல் வெளியீடு இருக்கும் காரணத்தால், வெப்ப பாதிப்பு குழந்தைக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தான், மருத்துவர்கள் கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் 3டி மற்றும் 4டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் எடுப்பதை பரிந்துரைப்பதில்லை.
கர்ப்ப காலத்தில் எவ்வித சிக்கல்களுமின்றி ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு இரண்டு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் மட்டுமே போதுமானது. கர்ப்ப காலத்தின் முதல் அல்ட்ராசவுண்ட் டேட்டிங் ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தின் முதல் மும்மாதங்களில் எடுக்கப்படுகிறது. இரண்டாவது அல்ட்ராசவுண்ட் என்பது அனோமாலி அல்லது மிட்-பிரெக்னன்சி ஸ்கேன் என்று அழைக்கப்படுகிறது. இது கர்ப்ப காலத்தின் 18-20 வாரங்களில் எடுக்கப்படுகிறது. அனோமாலி ஸ்கேன் உங்கள் குழந்தையின் பல்வேறு உடல் நிலைமைகளை பரிசோதனை செய்கிறது. சில சமயங்களில், உங்கள் ஆரோக்கியத்தையும், உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பொறுத்து, இரண்டிற்கு மேற்பட்ட கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களை மருத்துவர் பரிந்துரை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பத்தின் அல்ட்ராசவுண்ட் அறிக்கையை எவ்வாறு படிப்பது
கர்ப்பகால அல்ட்ராசவுண்ட் கடந்த 40 வருடங்களாக இருந்து வருகிறது. எந்தவொரு குற்றம் குறையுமின்றி இயங்கி வருகிறது. எந்தவொரு அறிவியல்பூர்வ தரவுகளும் தாயாக போகிறவரையோ அல்லது வளர்ந்து வரும் முதிர்கருவையோ இந்த ஸ்கேன்கள் பாதிப்பதாக குறிப்படவில்லை. ஆயினும் கூட, கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ரீதியாக தேவைப்படும் போது மட்டுமே, பயிற்சி பெறப்பட்ட சுகாதார பராமரிப்பு வல்லுநர்களின் வழிகாட்டல்களின் பேரிலேயே, அல்ட்ராசவுண்ட் ஸ்கே னை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |