Updated on 3 November 2023
பொதுவாக பெண்கள் 11 முதல் 16 வயதுக்கு இடைபட்ட காலத்தில் பருவம் அடைகின்றனர். இந்தத் தருணத்தில் இருந்து மாதவிலக்கு தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு இதுதான் மாதவிலக்கு தொடங்கும் காலம் ஆகும். பெண்கள் மெனோபாஸ் அடையும் காலம் வரையிலும் மாதவிலக்கு தொடருகிறது. கர்ப்பம் அடையும் காலத்தில் மட்டுமே இடைவெளி வருகிறது. ஒரு பெண் கர்ப்பம் அடைந்து விட்டால், அவருக்கு மாதவிலக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படாது என்று அர்த்தம் அல்ல. கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு வெவ்வேறு ரூபங்களில் உதிரப்போக்கு ஏற்படும். முதலில் இது மாதவிலக்கு கால உதிரப்போக்கு போலவே தோன்றும்.
சில பெண்களுக்கு கருமுட்டை கர்ப்பப்பையில் சேரும்போது லேசாக உதிரப்போக்கு ஏற்படலாம். இது கருத்தறித்தல் கால உதிரப்போக்கு என்று குறிப்பிடப்படும். கர்ப்ப காலத்தில் வேறு சில காரணங்களுக்காகவும் லேசான உதிரப்போக்கு ஏற்படலாம். இதனை வெள்ளைப்படுதல் என்று குறிப்பிடுவர். எனினும், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு ஏற்படாது. ஒற்றை நேப்கின் அல்லது டேம்பான் நிரம்பும் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது என்றால், நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு கர்ப்பம் ஏற்படவில்லை என்று அர்த்தம். பல பெண்களுக்கு சிறுநீருடன் உதிரப்போக்கு நிகழும். எனினும், இதற்கும் மாதவிலக்கு காலத்திற்கும் தொடர்பு இல்லை.
மாதவிலக்கு மற்றும் கர்ப்ப காலத்தை ஒட்டிய மாபெரும் கவலைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
மாதவிலக்கு சுழற்சி அல்லது மாதவிலக்கு காலத்தில், கர்ப்பப்பை லைனிங் உதிருவதன் காரணமாக பெண்களின் உடலில் உதிரப்போக்கு ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் கருமுட்டை வெளியேற்றம் நடைபெறாது. ஆகவே, பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏற்கனவே குறிப்பிட்டபடி கொஞ்சம் உதிரப்போக்கு இருக்கலாம். ஆனால், அது மாதவிலக்கு சுழற்சி காரணமாக நடைபெறுவது அல்ல.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு ஏற்படுவது அரிதான விஷயம் என்பது மட்டுமல்லாமல், அது நடக்கவே நடக்காத காரியமாகும்.
ஒரு பெண்ணாக, மாதவிலக்கு காலத்தில் தென்படும் அதே அறிகுறிகள் கர்ப்ப காலத்திலும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இதனால், நாம் கர்ப்பமாக இருக்கிறோமோ என்ற சந்தேகம் சிலருக்கு வந்திருக்கும். மாதவிலக்கு ஏற்பட வேண்டிய காலத்தில் கர்ப்பம் நிகழும்போது மார்பகங்கள் இலகுவாக மாறுவது அல்லது வீங்குவது, சோர்வு, மாதவிலக்கு தவறுவது, குமட்டல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகள் தென்படும்.
கர்ப்ப கால அறிகுறிகள் என்பது மாதவிலக்கு காலத்தைப் போலவே இருப்பதால், ஒருவர் கர்ப்பமாக இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வது கடினமாக இருக்கும் பட்சத்தில், உதிரப்போக்கு தொடங்கிய பிறகு இதை நீங்கள் உணர முடியும். மாதவிலக்கு கால உதிரப்போக்கு மற்றும் கர்ப்ப கால உதிரப்போக்கு ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.
கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. ஒரு பெண் மாதவிலக்கு அடைந்திருக்கும் பட்சத்தில், அவர் கர்ப்பம் அடைந்தவர் என்று கருத முடியாது. எனினும், கர்ப்பிணி பெண்களுக்கு வேறு வகையில் உதிரப்போக்கு ஏற்படலாம். அவை மாதவிலக்கு கால உதிரப்போக்கு போலவே தென்படும். ஆனால், இதற்கு வேறுசில காரணங்கள் உள்ளன. பொதுவாக கருத்தறித்தல் காலத்தில் உதிரப்போக்கு நிகழும். ஆனால், மாதவிலக்கு காலத்துடன் இதனை ஒப்பிட்டு குழப்பம் அடைய வேண்டியதில்லை.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பிணி பெண்கள் அதிகமாக வாயுவை வெளியேற்றுகிறார்களா?(Do Pregnant Women Fart A Lot? In Tamil)
மருத்துவ ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இது உண்மை கிடையாது. ஒரு பெண்ணுக்கு முழுமையான மாதவிலக்கு ஏற்படும் நிலையில், அவர் கர்ப்பமாக இருக்க முடியாது. மாதவிலக்கு காலத்திற்குப் பிறகு வேண்டுமானால் கருத்தறிக்கலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு என்பது நடக்காத காரியம். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பை லைனிங் உதிராது. ஒருவேளை இது நடக்கிறது என்றால், அது கருச்சிதைவாக இருக்கும். இது மட்டுமல்லாமல் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல் ஏற்படும். இது அடர்த்தியான பிரவுண் அல்லது லேசான பிங்க் நிறம் கொண்ட ரத்த திட்டுக்களாக தென்படும்.
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில், உதிரப்போக்கு ஏற்படுவதற்கு மாதவிலக்கு காரணமல்ல. கருத்தறித்தல், கர்ப்பப்பை கசிவு அல்லது வெள்ளைப்படுதல் போன்ற இதர காரணங்களால் உதிரப்போக்கு ஏற்படலாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் இது நிகழும் பட்சத்தில், அது இயல்பான விஷயமல்ல. மருத்துவரை அணுக வேண்டும். எனினும், கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு என்பது மாதவிலக்கு காரணமாக நடைபெறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெண்ணின் உடலில் கர்ப்ப கால ஹார்மோன் - hCG (human chorionic gonadotrophin) சுரக்க தொடங்கிய உடனேயே மாதவிலக்கு நின்றுவிடும். எனினும், கர்ப்பம் அடைந்த பிறகும் கூட, லேசான வெள்ளைப்படுதல் என்ற அளவில் உதிரப்போக்கு நிகழக் கூடும். குறிப்பாக, பெண்களுக்கான மாதவிலக்கு நேரம் நெருங்கி வரக் கூடிய சூழலில் இது நடக்கக் கூடும். இறுதியாக இந்தக் கேள்விக்கு பதில் என்னவென்றால், கருத்தறித்த உடன் மாதவிலக்கு நின்று விடும்.
Periods during pregnancy in tamil, periods affect baby during pregnancy in tamil, symptoms of pregnancy in tamil, HCG hormones in tamil, Is pregnancy possible during menstruation in tamil?
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
গর্ভাবস্থায় আলুবোখরা: উপকারিতা ও ঝুঁকি | Prunes During Pregnancy: Benefits & Risks in Bengali
গর্ভাবস্থায় হিং | ঝুঁকি, সুবিধা এবং অন্যান্য চিকিৎসা | Hing During Pregnancy | Risks, Benefits & Other Treatments in Bengali
স্তনের উপর সাদা দাগ: লক্ষণ, কারণ এবং চিকিৎসা | White Spots on Nipple: Causes, Symptoms, and Treatments in Bengali
গর্ভাবস্থায় পোহা: উপকারিতা, ধরণ এবং রেসিপি | Poha During Pregnancy: Benefits, Types & Recipes in Bengali
গর্ভাবস্থায় মাছ: উপকারিতা এবং ঝুঁকি | Fish In Pregnancy: Benefits and Risks in Bengali
গর্ভাবস্থায় রেড ওয়াইন: পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্দেশিকা | Red Wine During Pregnancy: Side Effects & Guidelines in Bengali
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |