Vaccinations
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் முடிந்து விட்டதா? அதற்கு எங்கள் வாழ்த்துகள். குழந்தை இப்போது மழலை மொழி அல்லது கீச்சொலி போன்ற அனைத்து வகையான சத்தங்களையும் எழுப்ப வேண்டும்.
குழந்தையிடம் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் காணத் தயாராகுங்கள். குழந்தை இப்போது உட்கார அல்லது தவழ ஆரம்பிப்பதை விரைவில் காணலாம். அவர்களின் தற்போதைய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, நீங்கள் டாக்டரிடம் ஒரு செக்-அப்பை திட்டமிடலாம் மற்றும் அவரை சந்திக்கும் போது அவரிடமிருந்து என்னென்ன அறிந்துகொள்ளலாம் என்பது இங்கே உள்ளது
டாக்டர் குழந்தையின் எடை, உயரம் மற்றும் தலை சுற்றளவு ஆகியவற்றை அளவிடுவார்.
அவர் சீசனைப் பொறுத்து ஃப்ளுவுக்கான ஊசி போடலாம்.
உங்கள் முன்னிலையில் அவர் பிசிக்கல் பரிசோதனை செய்து குழந்தையின் அசைவுகளில் கவனம் செலுத்துவார்.
நீங்கள் கவனித்த ஏதேனும் அசாதாரண செயல்பாடு தொடர்பான கேள்விகள் உங்களிடம் இருக்கலாம்.
அவர்களின் உணவில் திட உணவுகள் அல்லது பாலை அறிமுகப்படுத்துவது தொடர்பான கேள்விகள்
உணவில் சேர்க்க வேண்டிய அல்லது நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்
அவர்களின் உணவில் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை எவ்வாறு அறிமுகப்படுத்துவது?
விளையாட்டு நேரத்தை பாதுகாப்பானதாக மற்றும் அவர்களுடன் தொடர்பு கொள்ளகூடியதாக எவ்வாறு மாற்றுவது?
இதையும் படிக்கலாமே! - குழந்தையின் மலத்தில் சளி வருவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்
பால் பற்கள் சுமார் 6 மாதங்களில் தோன்றுவதால், குழந்தையின் ஈறுகளை சுத்தமான விரல் அல்லது துணியால் தேய்ப்பதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் அசௌகரியத்தை எளிதாக்கலாம்.
உங்கள் குழந்தை வளர்ச்சி வேகத்தை அனுபவிக்கலாம் இதனால் இரவில் அடிக்கடி எழுந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை கையாளும் பொருட்டு, உங்கள் குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீங்களும் உங்கள் கணவர்/ துணைவரும் இருவரும் மாறி மாறி குழந்தையை கவனித்துக் கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைக்கு வார்த்தைகளைக் கட்டமைக்க உதவும் வகையில் பேசவோ, புத்தகத்தைப் படிக்கவோ அல்லது ரைம்ஸை பாடலாம்.
உங்கள் குழந்தை படுத்து விளையாடுவதற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான இடத்தை அமைத்துத் தரவும்.
கயிறுகளை குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்திருங்கள். இல்லையெனில், அது தவறுதலாக குழந்தையின் கழுத்தை இறுக்கி விடலாம்.
எளிதில் இழுக்கக்கூடிய பர்னிச்சர்கள் எதுவும் குழந்தைகளுக்கு அருகாமையில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
அனைத்து அணுகக்கூடிய பெட்டிகளையும் பூட்டி அவை குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைத்திருங்கள்.
மருந்துகள் அனைத்தும் உங்கள் குழந்தைக்கு முற்றிலும் எட்டாத இடத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்தவும்
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |