hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • 30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாவதில் உள்ள அபாயங்கள் மற்றும் பலன்கள் arrow

In this Article

    30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாவதில் உள்ள அபாயங்கள் மற்றும் பலன்கள்

    Pregnancy

    30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாவதில் உள்ள அபாயங்கள் மற்றும் பலன்கள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    தற்போது வயதான பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கான விகிதங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு சிலர் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுப்பார்கள், மேலும் சிலர் இரண்டாவது குழந்தைக்காக காத்திருப்பார்கள். பெரும்பாலும் நாற்பது வயதிற்கு மேற்பட்ட தாய்மார்கள் நிதி குறித்த எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருப்பார்கள் அல்லது ஒரு நிரந்தர வேலையில் இருப்பார்கள். கூடுதலாக, வயது குறைவான தாய்மார்களைக் காட்டிலும், ஒரு குழந்தையைப் பராமரிப்பதில் இவர்கள் அதிக அனுபவம் மற்றும் தகுதி வாய்ந்தவர்களாக இருப்பர். எனினும், சற்று வயதான அம்மாக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் அனுபவிக்கக்கூடிய அபாயங்கள் ஏதேனும் உள்ளனவா?

    30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாகும் பெண்களில் ஏற்படும் அபாயங்கள் மற்றும் பலன்கள் குறித்து அரிதாகவே பேசப்படுகிறது என்றாலும் கூட, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாவதால் ஏற்படும் அபாயங்கள்

    பல பெண்கள் தற்போது தங்களது குடும்ப வாழ்க்கையை தாமதாகவே ஆரம்பிக்கின்றனர். 30-களில் பெண்களின் கருத்தரிக்கும் திறன் அதிகரிக்கும் என்றாலும், அது சற்று வயதான தாய்மார்களில் பின்வரும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்,

    • பிறப்பு குறைபாடுகள்.

    • இரட்டை கர்ப்பம்

    • அதிகப்படியான இரத்த அழுத்தம்.

    • கர்ப்ப கால நீரிழிவு நோய்.

    • சிக்கலான பிரசவம்.

    ஒரு சில ஆய்வுகளின் படி, வயது குறைந்த தாய்மார்களை விட சற்று வயதான பெண்களில் கர்ப்பம் குறித்த சிக்கல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், அவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் எந்த ஒரு பாதிப்பையும் அனுபவிப்பதில்லை. இந்த முடிவானது கர்ப்ப காலத்தின் போது செய்யப்படும் சிறந்த பராமரிப்பு மற்றும் அதிக சிக்கல் கொண்ட கர்ப்பம் மற்றும் குழந்தைகளை கையாளக்கூடிய கருவிகள் கொண்ட மருத்துவமனையில் பிரசவித்தல் போன்றவை பொறுத்து அமையும்.

    பின்வரும் பிரிவுகளானது வயது வாரியான அட்டவணையைக் கொண்டு கர்ப்பம் குறித்த அபாயங்களின் கண்ணோட்டத்தை அளிக்கிறது.

    குரோமோசாம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்

    • ஒரு பெண்ணுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, அவருக்கு குரோமோசாம் சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. நாட்கள் அதிகரிக்கும் போது, அக்குழந்தை டவுன் சிண்ட்ரோமுடன் பிறப்பதற்கான சாத்தியம் அதிகரிக்கும். 25 வயதில் கர்ப்பமாகும் 1250 பெண்களில் ஒரு பெண்ணுக்குத் தான் இந்த அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், 40 வயதில் கர்ப்பமாகும் பட்சத்தில், 100 பெண்களில் தோராயமாக ஒரு பெண் இத்தகைய அபாயத்தை அனுபவிக்க நேரிடும். இது மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், பல புள்ளிவிவரங்கள் உயிருடன் உள்ள குழந்தைப் பிறப்புகளை மட்டுமே உள்ளடக்குகிறது. கருச்சிதைவை ஏற்படுத்தும் குரோமோசோம்-சிக்கலை உள்ளடக்கிய கர்ப்பங்களை அவர்கள் பதிவு செய்வதில்லை.

    • ஏற்கனவே ஒரு குழந்தையைப் பெற்றுள்ளவர்கள் டவுன் சிண்ட்ரோம் உடனான இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 40 வயதிற்கு பின் ஒரு பெண்ணின் வயதே டவுன் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.

    • 35 வயதிற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் டவுன் சிண்ட்ரோமுடன் பிறக்கின்றனர். ஏனெனில், 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு 35 வயதிற்கு கீழ் உள்ள பெண்களை விட அதிக குழந்தைகள் இருப்பார்கள்.

    கருச்சிதைவு ஏற்படுவதற்கான அபாயம்

    ஒரு ஆய்வின்படி, சற்று வயதான பெண்களுக்கு கருச்சிதைவு (கர்ப்ப கால இழப்பு) ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. அனைத்து பெண்களிலும், முதல் டிரைமெஸ்டரில் ஏற்படும் பாதிக்கும் மேற்பட்ட கருச்சிதைவுகளுக்கு கருவில் உள்ள குழந்தைக்கு ஏற்பட்ட குரோமோசோம் சிக்கல்களே காரணம். தாயின் வயது குரோமோசோம் சிக்கல் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. இதனால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது.

    சுகாதார பராமரிப்பாளருடன் சேர்ந்து செயல்படுவது

    30 வயதிற்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் போது ஏற்படும் அபாயங்களைத் தடுக்க, குழந்தையை பெற்றெடுக்கப் போகும் தாய் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பது நல்லது, குறிப்பாக அவர் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் தவறாமல் இதைச் செய்ய வேண்டும். இது தாய் மற்றும் சேய் ஆகிய இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை பராமரிப்பதற்கு தேவையான உத்திகள் குறித்து ஆலோசிக்க உதவியாக இருக்கும். இது போன்ற நேர்வுகளில் மரபணு ஆலோசகர் அல்லது நிபுணர் ஒரு சிறந்த தேர்வாகும். அவர்கள் குரோமோசோம் சார்ந்த பரிசோதனைகளின் முழுமையான விளக்கத்தைத் தருவார்கள். இந்த விளக்கமானது அடுத்து வரும் கர்ப்பத்தில் ஏற்படக் கூடிய சாத்தியமான அபாயங்களை விளக்குவதோடு, குழந்தை பிறப்பதற்கு முன்பாக மரபணு சார்ந்த சிக்கல்களை கண்டறிய உதவும் பரிசோதனைகளின் வகைகள்.

    கர்ப்ப காலத்தின் போது செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் குரோமோசோம் சிக்கல்கள் மற்றும் பிற உயிரியல் சார்ந்த பிறப்பு கோளாறுகளை கண்டறியலாம் அல்லது அவற்றை தவிர்க்கலாம். பரிசோதனைகளில் சில பின்வருமாறு -

    • இரத்த பரிசோதனை.

    • அல்ட்ராசவுண்ட்: இந்த இமேஜிங் செயல்முறையில், ஒலி அலைகள் மூலம் குழந்தையின் உடலுறுப்புகள் மற்றும் பிற அமைப்புகள் பரிசோதிக்கப்படுகிறது.

    • கொரியோனிக் வில்ஸ் மாதிரி (Sample chorionic villus) சிவிஎஸ்:குழந்தையைச் சுற்றியுள்ள திசுக்கள் இந்த பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

    • பனிக்குடத் துளைப்பு (Amniocentesis): இந்த பரிசோதனையில் பனிக்குட நீர் பயன்படுத்தப்படுகிறது.

    • செல்களில் இருந்து எடுக்கப்பட்ட சிசுவின் டிஎன்ஏ: இந்த சோதனையானது தாயின் இரத்தத்தில் ஏதேனும் குரோமோசோம் சிக்கல்கள் இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும்.

    இதையும் படிக்கலாமே! - வயது முதிர்ந்த கர்ப்பத்தினால் ஏற்படும் அபாயங்கள் & நன்மைகள்

    சிறந்த கர்ப்ப கால பராமரிப்பிற்கு எவ்வாறு தயாராவது?

    30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாவதால் பல அபாயங்கள் மற்றும் பலன்களும் உள்ளன. ஆனால், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கூட கருத்தரித்து ஆரோக்கியமான முறையில் குழந்தையை பிரசவிக்கலாம். மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக தாய் மற்றும் சேய் அனுபவிக்க உள்ள பெரும்பாலான அபாயங்களைத் தவிர்க்கலாம் அல்லது அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

    ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முன்கூட்டிய மற்றும் தொடர்ச்சியான கர்ப்ப கால பராமரிப்பு அவசியம். அது பின்வரும் காரணங்களுக்காக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    • கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு முன்பாகவும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுதல் வேண்டும்.

    • ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    • மது பானங்கள் மற்றும் சிகரெட் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கருவில் உள்ள சிசுவை பாதிக்கும்.

    • கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு முன்பாகவும் 400 எம்சிஜி ஃபோலிக் அமிலம் தினமும் சாப்பிடவும். இது குழந்தைகளில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகளை குறைக்க உதவும்.

    • வகை 1 அல்லது வகை 2 நீரிழிவு நோய் உள்ள பெண்கள் ப்ரீஎக்லாம்சியா ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் குறைக்க முதல் டிரைமெஸ்டரின் முடிவில் குறைந்த டோசேஜ் கொண்ட ஆஸ்பிரின் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

    35 வயதிற்குப் பிறகு தாயாக திட்டமிடும் பெண்கள் இது குறித்து நிபுணர்களை ஆலோசிக்க வேண்டும். இதன் மூலம் வயதான பிறகு கர்ப்பமாவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சிக்கல்களை வயது அட்டவணையின் உதவியுடன் புரிந்து கொள்ளலாம். தாய்மை என்பது ஒரு அழகான அனுபவமாகும். ஆனால், 30 வயதிற்குப் பிறகு கர்ப்பமாகும் போது ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் கவனமாக இருப்பது நல்லது. இதன் மூலம் உங்கள் தாய்மை பயணமானது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகவும், மன அழுத்தம் இல்லாததாகவும் இருக்கும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |