hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • பிரசவத்திற்குப் பிறகு விரைவான இயல்பு நிலை மற்றும் எடை குறைவதற்கான 5 முக்கிய உணவுகள் arrow

In this Article

    பிரசவத்திற்குப் பிறகு விரைவான இயல்பு நிலை மற்றும் எடை குறைவதற்கான 5 முக்கிய உணவுகள்

    Diet & Nutrition

    பிரசவத்திற்குப் பிறகு விரைவான இயல்பு நிலை மற்றும் எடை குறைவதற்கான 5 முக்கிய உணவுகள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    குழந்தையைப் பெற்றுடுத்த ஒரு புதிய தாய் தனது உடலை விரைவாக மீட்டெடுக்க உதவும் டாப் 5 உணவுகள்

    • பிரக்னன்ஸி என்பது ஒரு அற்புதமான மற்றும் வாழ்க்கையை மாற்றும் நிகழ்வு. குழந்தையைப் பெற்றுடுத்த பின் அதில் இருந்து மீண்டு வருவதற்கு கூடுதல் கவனிப்பு மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் நேரம் இது. குழந்தையைப் பெற்றுடுத்த ஒரு புதிய தாய் பிரசவத்திற்குப் பிறகு குணமடைய சிறந்த ஊட்ட்டசத்து மிகுந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஏனெனில், அப்பொழுது தான் அவரால் தனது வலிமையை மீண்டும் பெற முடியும் மற்றும் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் குணமடையும். மேலும், குழந்தைக்கு பாலூட்டவும் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும், பிரசவத்திற்குப் பின்னான எடை இழப்புக்கு போஸ்ட்பார்ட்டம் டயட் அவசியமாகும். போஸ்ட்பார்ட்டம் டயட், எடை இழப்புக்கு மட்டுமல்ல தாயின் உடலைக் குணப்படுத்தவும், ஆற்றலைக் கொடுக்கவும், ஆரோக்கியமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும்.

    • பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களின் உடல் விரைவாக குணமடைய உதவும் புதிய தாய்மார்கள் சாப்பிட வேண்டிய டாப் 5 உணவுகளை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

    • மகப்பேற்றுக்குப் பிறகு தாய்மார்களின் உடலை குணப்படுத்த உதவும் புதிய தாய்மார்கள் சாப்பிட வேண்டிய டாப் 5 உணவுகள்

    • புதிய தாய்மார்கள், பிரசவத்திற்குப் பின் எடை இழக்க உணவில் சேர்க்க வேண்டிய டாப் 5 உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, இவை பிரசவத்திற்குப் பின் விரைவில் எடையை இழக்க உதவும் உணவு முறைகளாகும்.

    1. சால்மன் மீன் மற்றும் எலும்பு சூப்

    சால்மன் மீன் ஆனது புரதம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலை குணப்படுத்துதல் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு முக்கியம். எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான வைட்டமின் டி-யும் சால்மன் மீனில் உள்ளது. இதே போல், எலும்பு சூப் உங்கள் உடலை பிரசவத்திலிருந்து மீட்க உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது புரதம், கொலாஜன் மற்றும் பிற தாதுக்களால் நிறைந்துள்ளது, எலும்பு சூப் உங்கள் உடலை குணப்படுத்தவும் சரிசெய்யவும் உதவும்.

    2. கீரைகள்

    பெரும்பாலான கீரைகள் நமக்கு வலிமை சேர்ப்பதாகவே உள்ளது. அத்துடன் குழந்தையைப் பெற்றுடுத்த தாய்மார்கள் தங்கள் உணவில் கீரையை அதிகம் எடுத்துக்கொள்வது பல நன்மைகளை அவர்களுக்கு கொடுக்கும். வைட்டமின்கள் ஏ, சி, இ மற்றும் கே போன்ற உடலை குணப்படுத்துவதற்கு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன. மேலும், கீரையில் ஃபோலிக் அமிலம் உள்ளது. எனவே, இது பிரசவத்திற்குப் பின் எடை இழப்புக்கு உதவுகிறது.

    3. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

    சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இவை இரண்டும் உடலை குணப்படுத்துவதற்கு முக்கியமானவை. மேலும், இதில் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்க உதவும் பொட்டாசியம் உள்ளது. இதே போல், நட்ஸ் மற்றும் விதைகளும் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த ஆதாரங்களாகும். இது எனர்ஜி லெவல்களை அதிகரித்து, சோர்வு போன்றவற்றிலிருந்து விரைவில் மீண்டு உங்கள் முழு ஆரோக்கியத்தை மேற்படுத்த உதவுகிறது.

    4. தயிர் போன்ற புளித்த உணவுகள்

    புளித்த உணவுகள் புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரங்களாகும், அவை குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அத்துடன் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். ததயிர் போன்ற புளிச்ச உணவுகளில் புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளது. இது போன்ற உணவுகளிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள், எளிதில் ஜீரணமடைய உதவுகின்றன. அவை வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்க உதவுகின்றன. இவற்றில் ஆற்றல் உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின் பி12 உள்ளது.

    5. பீன்ஸ்

    பீன்ஸ் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இது பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க முக்கியமானது. பீன்ஸில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால், குழந்தையைப் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வாக அமைகிறது.

    எடை இழப்புக்கு வெயிட் போஸ்ட்பார்ட்டம் டயட்டை பிளான் செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

    பிரக்னன்சி என்பது உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நிறைய மாற்றங்களை கொண்டிருக்கும் ஒரு அற்புதமான சாதனை. இதில் இருந்து மீண்டு வருவதற்கு போஸ்ட்பார்ட்டம் டயட்டை பிளான் செய்வது அவசியமாகும்.

    குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் ஒரு பெண்ணின் உடல் மீண்டு வர சிறிது காலம் ஆகும். இதைச் சரியாக செய்ய, தாய்க்கு அதிக ஓய்வு மற்றும் டயட் கட்டாயம் தேவை, அது அவர்களுக்கு உடலை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள உதவி செய்யும்.

    பிரக்னன்சிக்குப் பிந்தைய டயட் பிளானை திட்டமிடும் போது எடை இழப்பு மற்றும் மீட்புக்கு சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

    • முதலாவதாக, பிரக்னன்சியின் போது இழந்த திரவங்களை சரிக்கட்ட தாய் அதிக திரவங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளையும் அவர் சாப்பிட வேண்டும்.

    • கூடுதலாக, சர்க்கரை அல்லது கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தாய் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் ஆல்கஹால் மற்றும் காஃபின் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவை குணப்படுத்தும் செயல்பாட்டில் நெகட்டிவ் முடிவுகளை தரலாம்.

    • மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ஒரு புதிய தாய் மல்டிவைட்டமினுடன் கூடுதல் இரும்புச் சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், இது வைட்டமின் குறைபாடுகளை சரிசெய்து விரைவாக குணமடைய உதவுகிறது.

    இவ்வாறு திட்டமிடுவதன் மூலம், பிரக்னன்சிக்குப் பின் எடை இழப்புக்கு உதவும் டயட்டை உருவாக்க முடியும், இது பிரக்னன்சிக்குப் பிறகு தாயின் உடலை குணப்படுத்தவும் விரிவில் மீண்டு வரவும் உதவும். இந்த எளிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், தாய்க்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அவர் பெறுகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

    இதையும் படிக்கலாமே! - புதிதாக தாய்மையடைந்திருக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக வாழும் முறை: தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

    முடிவுரை

    பிரக்னன்சிக்குப் பிறகு ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு உதவ, சத்தான உணவை உட்கொள்வது அவசியம். அதில் ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் இருக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நீரேற்றமாக இருப்பதும் முக்கியம். சுருக்கமாக சொல்வதெனில், இவை தான் பிரசவத்திற்குப் பின் தாயின் வலிமையை மீண்டும் பெற நிச்சயமாக உதவும் எடை இழப்பு மற்றும் மீட்புக்கான டிப்ஸ் ஆகும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |