Breast Lump
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
பெரும்பாலான தாய்மார்களுக்கு, வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏற்படும் வலிமிகுந்த மற்றும் அசௌகரியமான நிலையே மார்பக நோய்த்தாக்கம் எனப்படுகிறது. இந்த கட்டுரை இந்நிலைக்கான காரணம் என்ன, இதன் பொதுவான அறிகுறிகள் யாவை, அதற்கான சிகிச்சை, மற்றும் அதை எப்படி திறம்பட கட்டுப்படுத்துவது போன்ற பல விஷயங்களை விளக்குகிறது.
மார்பக நோய்த்தாக்கம் என்பது மாஸ்டிடிஸ்(முலையழற்சி) எனவும் அறியப்படுகிறது. இது தாய்ப்பால் புகட்டும் மகளிருக்கு ஏற்படும் ஒரு நிலை. இந்நிலை மார்பகத்தில் சுரக்கும் பால் பாதிக்கப்படுவதினால் ஏற்படுகிறது. மாஸ்டிடிஸ் என்பது தாய்ப்பாலூட்டும் மகளிர்களுக்கு ஏற்படும் மிக பொதுவான மார்பக தொற்றுநோய். ஆனால், இது தாய்ப்பாலூட்டாத தாய்மார்களுக்கும் ஏற்படலாம். மார்பக வலி, சிவந்திருத்தல் மற்றும் வீக்கம் போன்றவை மாஸ்டிடிஸ் நோயின் அறிகுறியாகும். இந்த நிலை பெரும்பாலும் குழந்தையின் வாய் மூலம் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் முலைக்காம்பு வழியாக தாயின் உடலிக்குள் செல்லும் பாக்டீரியாவினாலேயே ஏற்படுகிறது. பால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும் மாஸ்டிடிஸ் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகலாம். பொதுவாக மாஸ்டிடிஸ் நோயின் சிகிச்சைக்கு ஆண்டிபையோட்டிக்ஸ் மற்றும் வலி நிவாரணி வழங்கப்படும்.
பெண்கள் ஏராளமான மார்பக நோய்த்தாக்கத்திற்கான அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். மார்பகத்தில் ஏற்படும் வலி, அடிக்கடி எரிச்சல் தன்மை ஏற்படுதல் போன்றவையும் மிக பொதுவாக ஏற்படும் அறிகுறிகளாகும்.மாஸ்டிடிஸ் அடங்கும் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
மார்பகத்தில் ஏற்படும் தடிப்பு
மார்பக வீக்கம்
மார்பகத்தில் ஏற்படும் அரிப்பு
முலைக்காம்பு தொற்றுநோய் / முலைக்காம்பு நீர்வடிதல்
மார்பகத்தில் ஏற்படும் மென்மை அல்லது நொய்வு
காய்ச்சல் மற்றும் குளிர்
அக்குளில் உள்ள வீங்கிய நிணநீர் கணுக்கள்
மார்பக நோய்த்தாக்கம் அல்லது மாஸ்டிடிஸ் நோயிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மாஸ்டிடிஸ் நோயின் மிக பொதுவானக் காரணம் ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் எனும் பாக்டீரியா மார்பகத்தின் வெடித்த முலைகாம்பிற்குள் நுழைவதே. இது முலைகாம்பு வெடிப்பு அல்லது பாதிப்பினால் ஏற்படுகிறது, அல்லது குழந்தை சரியாக முலைக்காம்பை பிடித்து பாலருந்தவில்லை.
மார்பக நோய்த்தாக்கத்தின் மற்ற காரணங்களில் அடைக்கப்பட்ட பால் குழாய் அல்லது மார்பகத்தில் ஏற்படும் புண் போன்றவையும் அடங்கும். சில நேரங்களில், வெளிப்பொருள், அதாவது சிறிய துணியும் நோய்தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஒருவேளை ஒரு தாய் தனக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தால், மருத்துவர் அல்லது பாலூட்டும் ஆலோசகரை விரைவில் சந்திப்பது சாலச்சிறந்தது. அவர்கள் பரிந்துரை செய்யும் மாஸ்டிடிஸ் நோயிற்கான மருந்தை உட்கொள்வதன் மூலம் தொற்றுநோயை குணப்படுத்திவிடலாம்.
பெரும்பாண்மையான வழக்குகளில், மருத்துவரால் மார்பக நோய்த்தாக்கம் மிக எளிதாக கண்டறியப்படுகிறது. மருத்துவர்கள் நோயாளிகளின் அறிகுறிகளை கேட்டவுடன், உடல் ஆய்வு செய்வார்கள். மேலும் மாமோகிராம், பையாப்சி, அல்லது அல்ட்ராசவுண்ட் போன்றவற்றின் மூலம் மார்பக புற்றநோய் அல்லது சீழ் கட்டுதல் போன்ற வேறேதேனும் காரணங்கள் இருக்கிறதா என்றும் ஆய்வுசெய்வார்கள். மார்பக திசுக்களை பரிசோதிக்க மாமோகிராம் x-ரேக்களை உபயோகிக்கிறது. அதேபோல், ஏதேனும் புற்றுநோய் செல் வளர்ச்சி இருக்கிறதா என்று பார்க்க ஆய்வகத்தில் பரிசோதிக்க பையாப்சிக்கு சிறிய மார்பக திசுக்கள் தேவைப்படும்.
ஒருவேளை ஒரு நோயாளிக்கு மார்பக நோயத்தாக்கம் இருக்கிறதென்று தெரிய வந்தால், அவர்களுக்கு ஆண்டிபையோட்டிக் வழங்கப்படும். ஆண்டிபையோட்டிக் மாத்திரைகளை 7 லிருந்து 14 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இது நோய்த்தொற்று மற்றும் அறிகுறிகளை நீக்க உதவுகிறது. நோயாளிகள் அவர்களுக்கு குணமாகியிருந்தாலும், அவர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கப்பட்ட ஆண்டிபையோட்டிக் கோர்ஸை முற்றிலும் முடிக்க வேண்டும்.
ஒருவேளை தீவிரமான மார்பக நோய்த்தாக்கத்தினால் சீழ் கட்டினால், மார்பகம் விரைவாக குணமடைய மருத்துவர் அதை வெட்டி, சீழை வடித்து நீக்கிவிடுவார்கள். மார்பகத்தில் கூடுதல் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படுவதால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தீவிர தொற்றுநோயின் போது பாலை பம்ப் செய்து புகட்ட நேரிடும்.
ஒருவேளை ஒருவர் மார்பக தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டிலேயே சில நிவாரணங்களை செய்து, அறிகுறிகளை எளிதாக்கி, விரைவாக குணமடையலாம். வீட்டிலேயே மார்பக நோய்த்தாக்கத்தை குணப்படுத்துவதற்கான சில குறிப்புகள் பின்வருமாறு:-
நன்றாக ஓய்வெடுங்கள், பொறுமையாக வேலை செய்யுங்கள். உடல் குணமடைவதில் கவனத்தை செலுத்த இது மிக, மிக அவசியம்.
பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இது வலியையும் அழற்சியையும் குறைக்கிறது.
பெரிய, வசதியான உடைகளை அணிந்திடுங்கள். இது சருமத்தில் அரிப்பு மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும்.
பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகவும், ஈர்ப்பதமின்றியும் வைத்திருக்க வேண்டும். இது மேலும் ஏற்படவிருக்கும் தொற்றுநோய் மற்றும் அரிப்பை குறைக்க உதவும்.
ஏராளமான நீராகாரங்களை அருந்தவும். இது உங்கள் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றி உங்களை ஹைட்ரடேட் ஆக வைத்திருக்க உதவும்.
ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இது உங்கள் உடல் குணமடைந்து தொற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.
வலி அதிகமாக இருந்தால் மருத்துக்கடையில் மாத்திரை வாங்கி சாப்பிடலாம். இது எந்த வலி மற்றும் அசௌகரியமாக இருந்தாலும் அதை குறைக்க உதவும்.
உங்கள் அறிகுறிகள் மோசமாகினால் அல்லது நீடித்தால் மருத்துவரை அணுகலாம். தேவைப்பட்டால் அவர்கள் ஆண்டிபையாட்டிக்குகளை பரிந்துரைசெய்யலாம்.
இந்த குறிப்புகளை பின்பற்றினால், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த தாய்மார்கள், எந்தவிதமான மார்பக தொற்றுநோயிக்கும் விரைவாக சிகிச்சை பெற்று, அவர்களது நிவாரண செயல்முறையை விரைவுப்படுத்தலாம்.
இதையும் படிக்கலாமே! - மார்பக வீக்கம் (பால் கட்டுதல்) பற்றி மேலும் அறிக- காரணங்கள், சிகிச்சை & அறிகுறிகள்
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |