Breast Lump
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
மார்பக நீர்க்கட்டி உடையவர்கள் பொதுவாக மார்பக நீர்க்கட்டி என்றால் என்ன மற்றும் அதன் சிகிச்சை முறைகள் என்ன என்பது குறித்து அறியாமல் இருக்கலாம். அவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும். ஆம், பல்வேறு வகையான மார்பக நீர்க்கட்டிகள், அவை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதனை சரிசெய்ய மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் முதலியவற்றைப் பற்றி தான் இந்தக் கட்டுரையில் விளக்கமாக பார்க்கப் போகிறோம்.
மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்!!
மார்பக நீர்க்கட்டி என்பது மார்பகத்தில் காணப்படும் திரவம் நிறைந்த கட்டி ஆகும். இது மார்பகத்தில் ஏற்படும் அசாதாரண திசு வளர்ச்சியையே குறிக்கிறது. பொதுவாக இது கர்ப்பம் அல்லது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், தொற்று, வீக்கம், மார்பக காயம் அல்லது அதிர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படுகின்றன. மார்பக நீர்க்கட்டியின் அளவானது பொதுவாக கட்டியில் எவ்வளவு திரவம் நிறைந்துள்ளது என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
பொதுவாக மார்பக நீர்க்கட்டிகள் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களிலும் காணப்படுகிறது. இருப்பினும், இது பெண்களில் தான் அதிகம் காணப்படுகிறது. ஏனெனில், இது வழக்கமாக பருவமடைதல் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. அதோடு, கர்ப்பமாக இருக்கும் அல்லது பாலூட்டும் பெண்களில் மிகவும் பொதுவாக காணப்படுகிறது. இருப்பினும், இது எந்த வயதிலும், இனத்திலும் காணப்படலாம்.
இவ்வாறு மார்பகங்களில் ஏற்படும் நீர்க்கட்டிகள் பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களிலும் வரலாம். சில கட்டிகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அவற்றை மார்பக திசுக்களின் மேற்பரப்பில் மட்டுமே உணர முடியும். பொதுவாக பெண்களின் கர்ப்ப காலத்தில் அல்லது மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையும். அப்போது தான் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. அதோடு, இது மார்பகத்திற்குள் உள்ள சுரப்பி திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சியுடன் (ஹைபர்டிராபி) தொடர்புடையதாக இருக்கலாம்.
மார்பக நீர்க்கட்டிகள் மார்பகங்களில் உருவாகும் திரவம் நிறைந்த பைகளாகும். அவை தீங்கற்றதாகவோ (புற்றுநோய் அல்லாதது) அல்லது வீரியம் மிக்கதாகவோ (புற்றுநோய்க் கட்டி) இருக்கலாம். இருப்பினும், மார்பக நீர்க்கட்டியானது புற்றுநோயாக இருப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் மிக மிகக் குறைவாகும். மார்பக நீர்க்கட்டிகளில் பல வகைகள் உள்ளன. இதில் மூன்று முக்கிய வகை மார்பக நீர்க்கட்டிகள் பற்றி பார்ப்போம்:
பெயர் குறிப்பிடுவது போல, இத்தகைய நீர்க்கட்டிகள் திரவத்தால் நிரப்பப்பட்டு இருக்கும், மேலும் இவை ஒருபோதும் தீங்கு விளைவிக்காது.
பொதுவாக இந்த வகையான நீர்க்கட்டியின் திரவத்தில் திடமான வெகுஜனம் மிதக்கும். எனவே, நீடில் பயாப்ஸி மூலம் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகிறதா என்பதை சோதிப்பது அவசியமாகும்.
பொதுவாக 3 மிமீ-ஐ விட பெரிதாக உள்ள ஃபைப்ரோஅடினோமாக்கள் தான் காம்ப்ளெக்ஸ் ஆன மார்பக நீர்க்கட்டிகள் ஆகும். அவை புற்றுநோய் கட்டிகளாகவும் இருக்கலாம். எனவே, நீடில் பயாப்ஸி மூலம் பரிசோதிப்பது அவசியமாகும்..
மார்பக நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கு பல சாத்தியமான காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலும் இதற்கான சரியான காரணம் புலப்படுவதில்லை. ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், ஏதேனும் அதிர்ச்சி அல்லது பிற உடல்நிலைக் கோளாறுகளின் காரணமாக மார்பக நீர்க்கட்டிகள் ஏற்படலாம்.
மார்பக நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் ஒன்று ஹார்மோன் மாற்றங்கள் ஆகும். இந்த கட்டிகள் இளமைப் பருவம், கர்ப்ப காலம், மாதவிடாய் நிறுத்தம் அல்லது பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் போன்ற ஹார்மோன் மருந்துகளை உட்கொள்ளும் போது உருவாகலாம்.
மார்பகத்திற்கு ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டால், அதுவும் நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான காரணமாக அமையலாம். ஓடுவது அல்லது அதிர்ச்சியான சம்பவம் காரணமாக மீண்டும் மீண்டும் ஏற்படும் காயம் போன்றவையும் இதில் அடங்கும்.
அதோடு, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக மாற்றங்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற சில உடல்நலக் கோளாறுகளும் மார்பகத்தில் நீர்க்கட்டிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையலாம்.
முன்பு கூறியது போல, மார்பக நீர்க்கட்டிகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. இருந்தாலும், மார்பகத்தில் கட்டி இருப்பதை உங்களால் உணர முடியும். அதே சமயம், மார்பக நீர்க்கட்டி உடைந்து தொற்று அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கடுமையானதாக மாறும். இத்தகைய சூழலில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
இதன் பிற அறிகுறிகளில் வலிமிகுந்த நீர்க்கட்டிகள் அல்லது மார்பகம் மென்மையாக இருத்தல் மற்றும் மார்பக திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். நீர்க்கட்டிகள் பொதுவாக தீங்கற்றவையாகத் (புற்றுநோய் அல்லாதவை) தான் இருக்கும். இருப்பினும், ஒரு சில சந்தர்ப்பங்களில், நீர்க்கட்டி புற்றுநோய்க்கு சாதமாக அமையலாம். இது போன்ற மார்பக நீர்க்கட்டி அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். அப்பொழுது தான் புற்றுநோய்க்கான சாத்தியம் உள்ளதா இல்லையா என்பதை நம்மால் அறிய முடியம்..
மார்பக நீர்க்கட்டிகளை குணப்படுத்த சில வேறுபட்ட சிகிச்சை ஆப்ஷன்கள் உள்ளன. இது நீர்க்கட்டியின் தீவிரத்தை பொறுத்து அமைகிறது. மார்பகத்தில் உள்ள நீர்க்கட்டி அளவில் சிறியதாக இருந்தால் மற்றும் இதனால் வலியில்லை என்றால், மருத்துவர் அதனை அப்படியே விட்டுவிட பரிந்துரைக்கலாம். ஏனெனில், இத்தகைய சந்தர்ப்பங்களில், நீர்க்கட்டி தானாகவே சரியாகிவிடும்.
நீர்க்கட்டி அளவில் பெரியதாக இருந்தால் அல்லது வலி மிகுந்ததாக இருந்தால், மருத்துவர் நீர்க்கட்டியில் உள்ள திரவத்தை வெளியேற்ற பரிந்துரைப்பார். அதாவது, நீர்க்கட்டியில் ஒரு ஊசியைச் செருகி திரவம் வெளியே எடுக்கப்படுகிறது. இது பொதுவாக மருத்துவமனையில் செய்யப்படும். நீர்க்கட்டி இன்னும் பெரியதாக இருந்து, மேல்கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைக்கு பதிலளிக்கவில்லை என்றால், அதனை அகற்ற அறுவை சிகிச்சை தேவைப்படலாம். இது பொதுவாக கடைசி ஆப்ஷனாகவே வைக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே! - குடல் எரிச்சல் சிண்ட்ரோம் - அர்த்தம், காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சைகள்
மார்பக நீர்க்கட்டிகள் என்பது மார்பகத்தில் உருவாகும் திரவம் நிறைந்த கட்டிகளாகும். சில சமயங்களில் வலி நிறைந்ததாக இருந்தாலும் கூட, பொதுவாக இவை புற்றுநோய் அல்லாத கட்டிகளே ஆகும். இது பொதுவாக சிறிதாக இருக்கும். மேலும், எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது. ஆனால், சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு பெரியதாக மாறக்கூடும். இருப்பினும், மார்பக நீர்க்கட்டிகள் புற்றுநோய்க்கு சாதமாக இருக்கும் சந்தர்ப்பங்களும் கண்டறியப்பட்டடுள்ளன. எனவே மக்கள் தங்களுக்கு நீர்க்கட்டிகள் உருவானால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அந்த நீர்க்கட்டி தீங்கற்றதா அல்லது வீரியம் மிக்கதா என்பதை தீர்மானிக்க மேமோகிராம் அல்லது நீடில் பயாப்ஸி செய்யப்படுகிறது. இறுதியாக, உங்களுக்கு இது குறித்து ஏதேனும் கவலை இருந்தால், காலம் தாழ்த்தாமல் கண்டிப்பாக உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |