Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
மலச்சிக்கல் என்பது தெளிவான, வழக்கமான மற்றும் விரைவான குடல் இயக்கம் இல்லாத நிலையாகும். உடலுக்குத் தேவையற்ற உணவு மலமாக வெளியேறுவதற்குப் பதிலாகச் செரிமான மண்டலமான குடலின் கீழ்ப் பகுதியில் திடமாக நிலைகொள்வதை மலச்சிக்கல் என்கிறோம்.
நாம் விரும்பும் நிலை அல்ல என்றாலும், கர்ப்பத்திற்கு வழிவகுக்கும் ஹார்மோன்கள் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என்பதை அறியவேண்டும். சில நேரங்களில் கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே மலச்சிக்கலால் பாதிக்கப்படுவதுண்டு. இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். கர்ப்பிணிப் பெண் ஒரு வாரத்தில் மூன்றுக்கும் குறைவாக மலம் வெளியேற்றுதல் இருப்பின் அது சற்று தொந்தரவாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் பொதுவானதே. மலத்தை மென்மையாக்கும் டோகுஸேட் சோடியம் மற்றும் டோகுஸேட் கால்சியம் ஆகியவை மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகின்றன. இது ஒரு பாதுகாப்பான செயல்முறை மற்றும் வளரும் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்காது. சில நேரங்களில் சைலியம் மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு அல்லது மெக்னீசியம் சிட்ரேட் போன்ற உப்புநீர் மலமிளக்கிகள், பைசாகோடைல், சோலாக் போன்ற லாக்டுலோஸ் மற்றும் கான்ஸ்டிலாக் போன்ற ஊக்கிகள் போன்ற பாலிகார்போபில் போன்ற சில பல்க் ஃபார்மிங் மலமிளக்கிகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்த பாதுகாப்பானவையாகக் கருதப்படுகிறது.
உடலில் கர்ப்பத்திற்கு ஆதரவான ஹார்மோன் அளவு அதிகரிக்கும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது.கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்தில் இது அதிகமாகத் தெரியும்.
1. கர்பிணிப் பெண் நிறைய திரவங்களை பெரும்பாலும் தண்ணீர் மற்றும் பழச்சாறுகளைக் குடிக்க வேண்டும்.
2. வழக்கம் போல சில உடல் செயல்பாடுகளைச் செய்வது நல்லது. இது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.
3. கர்ப்பிணிப் பெண்ணின் உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பீன்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, மெட்டாமுசில் போன்ற ஃபைபர் சப்ளிமெண்ட்டையும் தேர்வு செய்யலாம். கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து அதிகமாக எடுப்பது மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகே இரும்புச் சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
39% பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மூன்றாவது மூன்று மாதங்களில் கரு மிகவும் கனமாக இருக்கும் போது குடலில் அதிகபட்ச அழுத்தம் ஏற்படுவதால் மலசிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில் மூன்று மாதங்களின் மூன்று பகுதியிலும் மலச்சிக்கல் ஏற்படலாம் மற்றும் குழந்தை பிறந்த பிறகும் தொடரலாம்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தினசரி பழக்கவழக்கங்கள் மலச்சிக்கலின் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவற்றில் சில:-
கர்ப்பம் தரிக்கும் போது உடலில் புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் உற்பத்தி ஆகிறது. இந்த ஹார்மோன் குடலைத் தளர்த்துகிறது, இதனால் உடலில் இருந்து மலத்தை வெளியேற்ற கஷ்டப்பட வேண்டியதில்லை. இந்த தளர்வு, உண்ணும் உணவில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீரை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உணவுப் பொருள் நீண்ட நேரம் குடலில் இருந்தால், பெருங்குடல் அல்லது முன்சிறுகுடல் அதை உறிஞ்சுவதற்கு அதிக நேரம் கிடைக்கும்.
வளரும் கரு கருப்பையை கனமாக்குகிறது. இந்த கூடுதல் எடை குடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இது உடலில் இருந்து கழிவுப்பொருட்கள் வெளியேறுவதை கடினமாக்குகிறது.
தாய் மற்றும் குழந்தை இருவரின் உடலிலும் ஆக்சிஜனின் ஓட்டத்திற்குத் தேவையான இரத்தத்தை உடல் உற்பத்தி செய்ய உதவும் இரும்புச்சத்து மகப்பேறுக்கு முன் வழங்கப்படும் வைட்டமின்களில் உள்ளது. அதிக அளவு இரும்புச்சத்து குடலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை உடைப்பதை கடினமாக்குகிறது. மேலும் குடலைத் தளர்த்த தேவையான தண்ணீர் குடிகாமல் இருப்பது நிலைமையை மோசமாக்குகிறது. இந்தக் கழிவுகள் தொடர்ந்து சேர்ந்து மலச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.
உணவுப் பழக்கம் அல்லது உணவுமுறை, தினசரி உட்கொள்ளும் திரவ அளவு மற்றும் தினசரி செய்யும் உடற்பயிற்சியின் அளவும் மலசிக்களில் பங்களிக்கிறது. இவற்றைச் சரியாக பின்பற்றவில்லை என்றால், மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
1. வாரத்திற்கு சில முறை மட்டுமே மலம் கழித்தல்.
2. வயிறு வாயுவால் வீங்கியிருக்கும் போது மலம் கழிக்க அழுத்தம் கொடுக்க வேண்டி இருத்தல்.
3. மலம் கழிக்கும்போது மலம் கட்டியாகவும் கடினமாகவும் இருக்கும், வெளியேறுவது வலியைக் கொடுத்தல்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சில சமயங்களில் மூல நோய் மற்றும் குத பிளவுகளுக்கு வழிவகுக்கும்.
கழிக்கும் மலத்தின் அளவு மற்றும் அதன் தோற்றத்தைத் தெரிந்துகொள்வதன் மூலம் மலச்சிக்கலைக் கண்டறியலாம். கர்ப்பிணியின் அன்றாட பழக்கவழக்கங்கள் இதற்குக் காரணமா அவர் கேட்டறியலாம். உண்ணும் உணவு, தினசரி எடுத்துக் கொள்ளும் திரவ அளவு, மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்ஸ் குறித்து கேள்வி எழுப்பக் கூடும்.
கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்தில் மலசிக்கல் ஏற்படாமல் இருக்க :-
ஒரு கர்ப்பிணிப் பெண் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்பது மலத்தை மென்மையாக்கி வெளியேற உதவும். பழங்கள், காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களில் நார்ச்சத்து உள்ளது.
ஒரு கர்ப்பிணிப் பெண் தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் அருந்தவேண்டும். ஜூஸ், டீ, ஸ்மூதி மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றையும் சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பம் இடுப்பு பகுதி மற்றும் மூட்டுகளில் சிரமத்தை ஏற்படுத்துவதால், ஒரு கர்ப்பிணிப் பெண் மிதமான அளவே உடற்பயிற்சி செய்ய வேண்டும், மலம் கழிக்க உதவும் பயிற்சிகளைப் பற்றி அவர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
செரிமான அமைப்பால் கையாள முடியாத அளவுக்கு இரும்புச்சத்து கொண்டுள்ள வைட்டமின்களை அறிந்து மாற்றவேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்கள் பலனளிக்கவில்லை என்றால், மருத்துவர் அவளுக்கு மலமிளக்கிகள் மற்றும் நார்ச்சத்து சப்ளிமெண்ட்ஸ் வழங்குவார். தாது அல்லது ஆமணக்கு எண்ணெய் போன்ற வீட்டு வைத்தியங்களைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண் மிகவும் ஆரோக்கியமான தினசரி வழக்கமுறையைப் பின்பற்றவில்லை என்றால், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. இந்நிலையைச் சமாளிக்க சரியான உணவு, தேவையான நீர், நிறைய திரவங்களை குடிக்க வேண்டும், மிதமான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் மற்றும் சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், மலச்சிக்கல் இன்றி அழகான குழந்தையைப் பெற்றெடுக்கும் மகிழ்ச்சியான தருணத்தை நோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துலாம்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |