hamburgerIcon

Orders

login

Profile

SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Pregnancy arrow
  • இரட்டைக் குழந்தைகள் உருவாகக் காரணங்கள் arrow

In this Article

     இரட்டைக்  குழந்தைகள்  உருவாகக்  காரணங்கள்

    Pregnancy

    இரட்டைக் குழந்தைகள் உருவாகக் காரணங்கள்

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    இரட்டையரை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு

    இரட்டைக் கர்ப்பம் குறித்து அறிவது பெற்றோருக்கு கலவையான உணர்வு எண்ணங்களைத் தூண்டுகிறது. ஒருபுறம் இது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதோடு பொறுப்புணர்வை அதிகமாக்குகிறது என்றாலும் மறுபுறம் அச்சத்தையும் இரட்டிப்பாக்குவதோடு தாய் மற்றும் இரட்டைக் கருவுக்கு ஏற்படும் அபாயங்களையும் அதிகமாக்குகிறது.

    கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு என்ன? இந்தியாவில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் விகிதம் கணிசமாகக் குறைவே. இங்கு 1000 பிறப்புகளுக்கு ஒன்பது பிரசவங்களில் மட்டுமே இரட்டைக் குழந்தை பிறக்கிறது.

    இரட்டைக் குழந்தை பிறப்பு விகிதம் – இயற்கை மற்றும் IVF மூலம் இயற்கையாகவே இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமே. இயற்கையான பிறப்புகளில் கிட்டத்தட்ட 1.2% இரட்டைக் கருத்தரிப்புகளாக இருப்பதைக் காணமுடிகிறது. இருப்பினும், கடந்த நாற்பது ஆண்டுகளில் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவது அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

    இந்த அதிகரிப்பின் காரணம் என்ன?

    ஐவிஎஃப் உள்ளிட்ட கருவுறுதல் சிகிச்சைகள் மற்றும் வயது அதிகமான தாய்மார்களின் அதிகரிப்பு ஆகியவை இந்த அதிகரிப்புக்குக் காரணம் என வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    இயற்கையாகவே இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு 1.2% என முன்பே கூறியிருந்தோம். இருப்பினும், ஒரு தாய் இரட்டை குழந்தைகளைக் கர்ப்பம் கொள்ள பல காரணிகள் பங்களிக்கின்றன. இது குறித்து அறியும் முன், இரட்டையர்கள் மற்றும் அவர்கள் வகை குறித்து மேலும் அறிவது பரிந்துரைக்கப்படுகிறது.

    இரட்டையர் கருத்தரிப்பு - பொருள் மற்றும் வகைகள்

    இரட்டையர் கருத்தரிப்பு என்றால் இரண்டு கருவை வயிற்றில் கருத்தரித்தல் என்று பொருள். இரட்டையர்களின் வகைகளில் ஒன்று போன்றவர் (மோனோசைகோடிக்) மற்றும் ஒன்று போல அல்லாதவர் (டிசைகோடிக் அல்லது சகோதர இரட்டையர்கள்) என இரு வகைகள் அடங்கும்.

    ஒன்று போன்ற இரட்டையர்களில், ஒரு முட்டை அல்லது கருமுட்டையை மட்டுமே விந்து கருவுறச் செய்கிறது. இந்த முட்டை இரண்டாகப் பிரிந்து ஒரே டிஎன்ஏ உடன் கூடிய ஒரே மாதிரியான கருவாக மாறுகிறது. ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒரே பாலினமாக இருப்பர் - இரண்டு பெண்கள் அல்லது இரண்டு ஆண் குழந்தைகள்.

    ஒன்று போல அல்லாத இரட்டையர்களின் விஷயத்தில், பெண் ஒரே நேரத்தில் இரண்டு முட்டைகளை வெளிவிடும்போது அவை இரண்டும் கருவுற்று கருப்பையில் பொருத்தப்படுகின்றன. ஒன்று போல அல்லாத இரட்டையர்கள் ஒரே மாதிரியான அம்சங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் ஒன்றுபோலவே இருக்க வேண்டியது அவசியமில்லை. மிக முக்கியமாக, அவர்கள் ஒரே அல்லது வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கக் கூடும். ஓர் ஆண்-ஒரு பெண், இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு பெண்கள்.

    குறிப்பு :

    ஒன்று போல அல்லாத இரட்டையர்கள் பிறப்பது மிகவும் பொதுவானது. இரட்டைக் கர்ப்பங்களில், ஒன்று போன்ற இரட்டையர்கள் மூன்றில் ஒரு பங்கு மற்றும் ஒன்று போலவே அல்லாத இரட்டையர்களின் நிகழ்வு மூன்றில் இரண்டு பங்கு ஆக இருக்கும்.

    இரட்டை கர்ப்பம் – வாய்ப்புகளை அதிகரிக்கும் காரணிகள்

    இயற்கையான முறையில் இரட்டைக் குழந்தை பெறுவது எப்படி?, எதிர்காலத்தில் இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்பை எப்படி அறிவது?, அல்லது எனக்கு இரட்டையர்கள் பிறப்பதற்கான வாய்ப்புகளை எவ்வாறு கணக்கிடுவது? என பல கர்ப்பிணிப் பெண்கள் கேள்வி எழுப்புவதுண்டு.

    எதிர்பார்ப்பு மிக்க தாய்க்கு, இக்கேள்விகள் மற்றும் இது குறித்த கவலைகள் இருப்பது பொதுவானதே. இரட்டை கர்ப்பம் தரிப்பது எப்படி? இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகள் ஏதேனும் உள்ளதா? ஆம்! பல காரணிகள் இதற்குப் பங்களிக்கின்றன. இவற்றில் பின்வருவன அடங்கும்:

    IVF மூலம் கருத்தரித்தல் :

    IVF அல்லது பிற கருவுறுதல் சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். IVF முறையைப் பின்பற்றுவோரில் இரட்டைக் குழந்தைகளின் வாய்ப்பு சுமார் 30% ஆக உள்ளது. ஏன் அதிகமாக உள்ளது? இயற்கையான கர்ப்பங்களில் ஒரு கருமுட்டை மட்டுமே வெளியிடப்பட்டு கருவுறும் நிலையில், IVF- தூண்டப்பட்ட கருத்தரித்தலில் பல முட்டைகளை வெளியிடப்படுகிறது. பல பெற்றோர்கள் முதல் முயற்சியிலேயே கருத்தரிக்க விரும்புகின்றனர். மேலும், அவர்களில் பலர் இரட்டைக் குழந்தைகளைப் பெற விருப்பம் கொள்கின்றனர். கூடுதலாக, IVF வெற்றி விகிதத்தை அதிகரிக்க இரண்டு கருக்களை மாற்றுவதையும் பல IVF நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

    மரபியல் :

    ஒரு பெண்ணின் குடும்பத்தில் ஒன்று போல் அல்லாத இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால் அவருக்கும் இத்தகைய கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஹைபர்ஓவலேஷன் ஏற்படும்போது சில மரபணுக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இயற்கையாகவே இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். ஒரு பெண்ணின் சகோதரிக்கு ஒன்று போல் அல்லாத இரட்டையர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில், இப்பெண் ஒன்று போல் அல்லாத இரட்டையர்களை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு 2.5 மடங்கு அதிகரிக்கும்.

    வயது :

    இயற்கையாகவே வயது அதிகரிக்கையில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே, 43 வயதில் இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பது பெருமளவில் சாத்தியம். ஒரு 35 வயதுடைய பெண் ஒன்று போல் அல்லாத இரட்டையர்களை சுமக்கும் வாய்ப்பு நான்கு மடங்கு அதிகரிக்கிறது. மாதவிடாய் ஓய்வு காலம் (மெனோபாஸ்) நெருங்குகையில் ஹைப்பர்ஓவுலேஷன் ஏற்பட்டு உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இதன் காரணமாகும்.

    தாய்ப்பால் :

    தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டத்தில் கர்ப்பமாகும் பெண்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது. தாய்ப்பால் இரட்டை குழந்தைகளின் வாய்ப்பை அதிகரிக்கும் காரணம் என்ன? தாய்ப்பால் கொடுக்கும் போது, ப்ரோலாக்டின் (லாக்டோட்ரோபின்) மற்றும் லுடினைசிங் ஹார்மோன் (LH) அளவுகள் அதிகரிக்கும். இந்த ஹார்மோன்களின் அதிகரிப்பு தாய்ப்பாலூட்டும் போது இரட்டை குழந்தைகளைச் சுமக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    மேலே குறிப்பிட்டுள்ள காரணிகளைத் தவிர, உயரம், எடை மற்றும் உணவுமுறை ஆகியவை இரட்டை கர்ப்ப வாய்ப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    முடிவுரை :

    எப்பெண்ணும் இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பமாகலாம். சில பெண்களில், மற்றவர்களை விட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மிக முக்கியமாக, இரட்டை குழந்தை கர்ப்பம் என்பது கணிக்க முடியாதது மற்றும் இது மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்தது.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |