Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் செய்வது நல்ல (சவாலாக இருந்தாலும் கூட) உடற்பயிற்சி ஆகும், இது உடலின் கீழ்பகுதிக்கான வலிமையை அதிகரிக்க உதவுகிறது. உடலின் பல பகுதிகளை இலக்காகக் கொண்டு பல்வேறு விதமாக, உபகரணங்களுடனோ அல்லது உபகரணங்கள் இல்லாமல் செய்யப்படும் வொர்க்-அவுட் அல்லது உடற்பயிற்சியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இதைத் தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள், மருத்துவர் ஆலோசனை மற்றும் ஒரு பயிற்சியாளருடைய மேற்பார்வையின் கீழ் தங்களின் தினசரி அல்லது வாராந்திர உடற்பயிற்சி திட்டத்தில் இந்த பயிற்சியைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் குழந்தைப் பேற்றினை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு ஸ்குவாட் ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும், ஏனென்றால் இது அவர்களின் இடுப்பு, மையப்பகுதி, புட்டப்பகுதிகள் மற்றும் இடுப்புப் பகுதி தசைகளை வலுவாகவும், எளிதில் அசையக்கூடியதாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஸ்குவாட் ஐ சரியாகச் செய்வதால், பிரசவம் மற்றும் பிரசவத்திற்கான தசைகளை வலுப்படுத்துகின்றன மேலும் ஒருவரின் தோரணையை மேம்படுத்த உதவுகின்றன. கர்ப்ப காலத்தில் செய்யப்படும் ஸ்குவாட்டுகளின் பலன்களை பெறும் போது பெண்களின் எடையைப் பற்றி கவலைப்பட வேண்டுமென்ற அவசியமில்லை.
கர்ப்பமாக இருக்கும் போது எந்த ஒரு புதிய உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பும், மருத்துவரின் ஒப்புதலைப் பெறுவது மிகவும் முக்கியம்.
கர்ப்பமாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்வது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நல்லது. பல கர்ப்பிணிப் பெண்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், அது அவர்களை மகிழ்ச்சியாகவும், குறைந்த கவலையுடனும், அவர்களின் உடல் வளர்ச்சியுடன் ஒத்துப்போகவும் செய்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.கர்ப்பிணிப் பெண்கள் ஸ்குவாட் செய்யவதற்கான ஐந்து காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் செய்வதால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது மேலும் எடையானது ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் அது உடம்பிற்குத் தீங்கு விளைவிக்கும்.
கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் செய்வதால் தசையானது நன்கு வலிமையாக மாறுவதோடு, சரியான தோற்றத்தில் இருப்பதற்கு உதவும். இது கர்ப்பிணிப் பெண் அல்லது அவரது குழந்தைக்கு தீங்கு எதையும் ஏற்படுத்தாமல் இருப்பதோடு முழங்கால் தசைநார்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் செய்தால், கர்ப்பம் தரிக்கும்போது ஏற்படும் முதுகுவலியைப் எளிதில் போக்கலாம், இது தொடை மற்றும் குவாட் தசைகளில் வேலை செய்வதால் கர்ப்பிணிப் பெண்ணின் கால்களுக்கும் முதுகுக்கும் ஏற்றதாக இருக்கும்.
தூக்கமின்மை, மலச்சிக்கல், கால் பிடிப்புகள், நெஞ்செரிச்சல், தாள முடியாத வலி மற்றும் வீங்கியிருக்கும் வலிக்கிற நரம்புகள் போன்று கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் வலிகள் மற்றும் சிரமங்களைப் போக்க ஸ்குவாட் உதவும்..
கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்கள் தங்களுடைய ஒன்பதாவது மாதத்தில் ஸ்குவாட் செய்வதால் அவர்களுக்கு பிரசவம் முன்பாகவே ஏற்படுவதோடு பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகளும் குறைவாக இருக்கும்.
உடல் எடைக்கான ஸ்குவாட் ஆனது கீழ்பகுதி உடலை நன்றாக வலுப்படுத்தும் பயிற்சியாகும் இதற்கு சிறப்பு உபகரணங்களோ அல்லது அதிக இடமோ தேவையில்லை. இது கர்ப்ப காலத்தில் செய்யப்படும் திறமையான ஸ்குவாட் உடற்பயிற்சி ஆகும். இது ஒருவரின் கால்களில் இருக்கும் அனைத்து தசைகளையும் பலப்படுத்துகிறது.
உட்புற தொடை மற்றும் குளுட் தசைகளுக்கு இந்த குறிப்பிட்ட ஸ்குவாட் ஆனது மாறுபாட்டின் மையமாக உள்ளது. மேலும், இது வயிற்றுப் பகுதி தசைகளை நன்கு நெகிழச் செய்கிறது. கர்ப்ப காலத்தில், பிரசவத்தை எதிர்பார்க்கும் தாய்மார்களின் மூட்டுகள் மிகவும் நெகிழ்வானவையாக இருக்கும். தேவைக்கு அதிகமாக நீட்டினால் எளிதில் காயமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், கர்ப்பிணிப் பெண் கால்களைத் தேவையானதை விட அதிகமாக நீட்டக்கூடாது.
பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்களின் கால்கள் மற்றும் குளுட்டுகளில் வலிமையை உருவாக்குவதற்கு பால் வால் ஸ்குவாட்ஸ் மூலமாக பந்தைப் பயன்படுத்திச் செய்வது அருமையான வழியாகும். இது கர்ப்பிணிப் பெண்ணின் கால்களுக்கும் முதுகுக்கும் சிறந்தது, ஏனென்றால் இதை அவர் தன்னுடைய தொடை மற்றும் குவாட் தசைகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்கிறார்.
இடுப்புத் தளம் எனப்படும் சிறுநீர்ப்பை, கருப்பை மற்றும் பிற இனப்பெருக்க உறுப்புகளுக்கு பாதுகாப்புச் சுவராக செயல்படும் தசைகளின் தொகுப்பாகும். இந்தத் தசைகள் கர்ப்ப காலத்தில் பலவீனமடையக்கூடும், இதன் விளைவாக சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமை மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பிற பிரச்சினைகளும் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் இடுப்புத் தள தசைகளை வலுவாக வைத்திருத்தல் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இது குழந்தை பிறக்கும் போது பயனுள்ளதாக இருக்கும். இடுப்புப் பகுதி ததைச் சுருக்கத்துடன் செய்யப்படும் டீப் ஸ்குவாட்ஸ் ஆழமற்றதாகவும் மற்றும் குறுகலானதாகவும் இருக்கும் மேலும் இது கர்ப்ப காலத்தில் இடுப்புப் பகுதியை நன்கு வலுப்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்லது அவர்களின் சமநிலையை பராமரிப்பதில் சிக்கல் இருக்கும் வேறு எவருக்கும் இந்தப் பாரம்பரிய ஸ்குவாட்ஸ் ஒரு அருமையான மாற்றாகும். க்ளூட்ஸ், நெகிழ்வான இடுப்புப் பகுதிகள், ஏபிஎஸ், குவாட்ரிசெப்ஸ், காலின் பின்பகுதி மற்றும் தொடை எலும்புகள் அனைத்தும் நாற்காலி மூலமாகச் செய்யப்படும் ஸ்குவாட்ஸ் இல் ஈடுபடுகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் உடற்பயிற்சி செய்வதால் அவர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது. இருந்தாலும், கர்ப்பிணிப் பெண்கள் ஸ்குவாட்ஸ் செய்யும்போது எப்போதும் எடுத்துக் கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் உள்ளன.
கர்ப்பத்திற்கான ஸ்குவாட் பயிற்சிகளை செய்யும்போது மனதில் கொள்ள வேண்டிய அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொரு ஸ்குவாட் பயிற்சியையும் மெதுவாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும். ஏனென்றால், ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில், ரிலாக்சின் என்ற புரதம் அவளது தசைநார்கள் மற்றும் மூட்டுகளை தளர்த்துகிறது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக வெப்பம் அல்லது தாகம் ஏற்படாதவாறு அவசியம் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, கர்ப்ப காலத்தில் ஸ்குவாட் செய்யும் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு தன்னுடைய ஸ்குவாட்ஸ் இன் ஆழமானது நன்கு செளகரியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனால் அவர் தன்னுடைய சமநிலையை இழக்கமாட்டார், குறிப்பாக அவருடைய கர்ப்பத்தின் கடைசி கட்டங்களில்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய உடலின் சிறந்த நீதிபதி எது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு தங்களுடைய உடல்பகுதியில் ஏதாவது சரியாக இல்லை என்று தோன்றினால், அவர்கள் கட்டாயமாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஸ்குவாட்ஸ் ஒரு சிறந்த பயிற்சியாகும் ஏனென்றால் அவை மெலிந்த தசையின் பருமனைப் பராமரிக்கின்றன மேலும் மையப்பகுதியை பலப்படுத்துகின்றன. அதுமட்டுமில்லாமல், இது கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தையை சுமக்கும் திறனை அதிகரிக்கின்றன, மற்றும் இயற்கை முறையிலான பிரசவத்திற்கான வாய்ப்பினையும் உண்டாக்குகின்றன. இவை தோரணையை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இவை சிறந்த ஒட்டுமொத்த வொர்க்அவுட்டை அல்லது உடற்பயிற்சியை உருவாக்குகின்றன.
எந்தவொரு புதிய உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்பு கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் மருத்துவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |