Baby Care
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உண்மையில், உங்கள் குழந்தைக்கு என்ன உணவு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது சற்று கடினமான காரியம் தான் என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், உங்கள் குழந்தைக்கு எது ஒற்றுக்கொள்ளும் எது ஒற்றுக்கொள்ளாது என்பதை கண்டுபிடிப்பது உங்கள் வேலையை இன்னும் கடினமாக்கிவிடும். உங்கள் குழந்தை 9 மாதம் ஆகும்போது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்கைத் தவிர திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்து இருக்கலாம்.
இந்த பதிவைப் படிப்பதன் மூலம், உங்கள் 9 மாத குழந்தையின் டயட் பிளானில் சில சிறந்த திட உணவுகளைச் சேர்க்கும் ஐடியா உங்களுக்கு கிடைக்கும். அது மட்டுமில்லாமல், இந்த உணவுகளில் இருந்து உங்கள் குழந்தை போதுமான அளவு ஊட்டச்சத்துக்களையும் பெறுவது உறுதி! தொண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவானது மென்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தையின் பசியானது நாளுக்கு நாள் மாறுகிறது என்பதை நீங்கள் உணரலாம். மேலும், உங்கள் குழந்தை தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலிலிருந்து போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உணவைத் தவிர, உங்கள் குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீர் வழங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் செரிமான செயல்முறை மேம்பட, முடிந்தவரை அவர்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!
உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஊட்டும் உணவுகள் சரியான அளவில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம். உங்கள் குழந்தையானது எப்படி உணவை மெல்ல வேண்டும் மற்றும் எப்படி விழுங்க வேண்டும் என்பதை இன்னும் கற்றுக் கொண்டிருப்பதால், உணவானது தொண்டையில் சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அதிகம். நீங்கள் உணவை முடிந்தவரை மென்மையாக்க முயற்சி செய்யலாம் அல்லது கூழாக அரைத்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல், உங்கள் குழந்தை அவ்வுணவை சாப்பிடுவதை எளிதாக்குவதற்கு, நீங்கள் உணவை சிறு சிறு அளவுகளில் கொடுக்கலாம். கூடுதலாக, CPR சம்பந்தப்பட்ட குழந்தைப் பாதுகாப்பு நடைமுறையைக் கற்றுக்கொள்வது இந்தக் கட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் உங்கள் குழந்தை சுமார் 7 அவுன்ஸ் தண்ணீர் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், பிற பானங்கள் என்று வரும்போது, நீங்கள் தாய்ப்பால், தண்ணீர் அல்லது ஃபார்முலா பால் கொடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. ஒன்பது மாத குழந்தைக்கு முடிந்தவரை இனிப்பு பானங்கள் கொடுப்பதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு ஏறக்குறைய ஒரு வயது ஆகும் போது நீங்கள் பசும்பாலை அறிமுகப்படுத்தலாம்!
உங்கள் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் மற்றும் என்ன தின்பண்டங்கள் கொடுக்கலாம் என்பதற்கான விரிவான அட்டவணை இங்கே உள்ளது.
கீழே உள்ள உணவு முறையைப் பின்பற்றி உங்கள் குழந்தையின் முதல் நாளை சிறந்த முறையில் தொடங்குங்கள். இதன் மூலமாக, உங்கள் குழந்தையின் பசியை நீங்கள் நல்ல முறையில் கண்காணிக்க முடியும்.
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி - கோதுமைக் கஞ்சி
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேளை - கேழ்வரகு (குரக்கன்)- முழு பாசிப்பருப்பு (பச்சை பயிறு) சூப்
மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - பருப்பு வகைகள் - சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப்
உங்கள் குழந்தையின் இரண்டாவது நாளில், நாள் 1 உடன் ஒப்பிடும்போது வித்தியாசமான ஒன்றைச் சேர்க்கலாம். எனவே, இது உங்கள் ஒன்பது மாத குழந்தையின் டயட் சார்டில் பல வகையான உணவுகளை சேர்த்து, நல்ல ஊட்டச்சத்தை உறுதி செய்யும்.
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி- நெய் அல்லது வெண்ணெயுடன் வெள்ளை நிற தோக்ளா
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேலை- கேழ்வரகு (குரக்கன்)- முழு பாசிப்பருப்பு (பச்சை பயிறு) சூப்
மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - திணைகள் பாசிப்பருப்பு (உடைத்த பச்சை பயிறு) சூப்
உங்கள் குழந்தையின் 3 ஆம் நாளில் சூப் வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பல்வேறு உணவு மாற்றங்கள் உங்கள் குழந்தையின் மெல்லும் திறனை மேம்படுத்த உதவும்.
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி- சத்து மாவு (பார்லி) கஞ்சி
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேளை - பீட்ரூட்- ப்ரோக்கோலி- காளான் சூப்
மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - பருப்பு வகைகள் - சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப்
உங்கள் குழந்தையின் நான்காவது நாளில், வழக்கமான உணவுத் திட்டத்தைத் தவிர, பழங்கள் அல்லது காய்கறி கூழ்கள் அடங்கும்.
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி- சர்க்கரை வள்ளிக்கிழங்கு + பொடித்த அவல்
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேளை - கீரை - பூசணிக்காய் கூழ்
மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - கேரட்டுடன் சப்பாத்தி - முழு பாசிப்பருப்பு (உடைத்த பச்சை பயிறு) சூப்
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி- மசித்த வாழைப்பழம்
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேளை - நெய் அல்லது வெண்ணெயுடன் இட்லி
மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - பருப்பு - கீரை சூப்
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி- வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு அல்லது வீட்டில் செய்யப்பட்ட பன்னீர் (காட்டேஜ் சீஸ்)
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேளை - கீரை கிச்சடி
மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - கேழ்வரகு (குரக்கன்)- முழு பாசிப்பருப்பு (பச்சை பயிறு) சூப்
அதிகாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
சிற்றுண்டி- மசித்த வாழைப்பழம்
காலை & மதியத்திற்கு இடைப்பட்ட நேரம் - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
மதிய வேளை - பருப்புடன் சப்பாத்தி · மாலை - தாய்ப்பால் /ஃபார்முலா பால்
இரவு - சாதத்துடன் முட்டையின் மஞ்சள் கரு அல்லது பருப்பு
உங்கள் குழந்தை தற்போது திட உணவுகளை சாப்பிட்டாலும், பெரும்பாலான ஊட்டச்சத்து தாய்ப்பாலில் இருந்து வர வேண்டும். உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை, மற்ற உணவுகளை நிரப்பு உணவுகளாக மட்டுமே கருதுங்கள். பெற்றோர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளுக்கு காய்கறி கூழ் அல்லது பிற பாலூட்டும் அணுகுமுறைகளை மூலம் திட உணவுகள் கொடுப்பதைத் தொடங்குவார்கள். உங்கள் குழந்தை சாப்பிடக்கூடிய சில சிறந்த உணவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!
பீச், ஸ்ட்ராபெர்ரி மற்றும் தர்பூசணி போன்ற பழங்கள்.
ப்ரோக்கோலி, பீன்ஸ் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற ஃபிரஷான காய்கறிகள்.
முட்டை, மீன் மற்றும் அரைத்த இறைச்சி ஆகியவை புரதத்தின் சிறந்த ஆதாரங்களாக செயல்படுகின்றன.
ஆலிவ் எண்ணெய் மற்றும் அவகேடோ போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள்.
இரும்புச் சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் பாஸ்தா.
உங்கள் குழந்தைக்கு பல வகையான உணவுகளை ஊட்டுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களை வழங்கலாம். இந்த ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், உங்கள் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. எலும்பு ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி என்று வரும்போது, வைட்டமின் டி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பெரும்பாலான ஃபார்முலா பால் பிராண்டுகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக கூறப்பட்டாலும், உங்கள் குழந்தைக்கு தினமும், குறிப்பாக முதல் வருடத்தில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், முதல் வருடத்தில் உங்கள் குழந்தையின் விரைவான வளர்ச்சியை நீங்கள் காணலாம். மேலும் சில வைட்டமின்களின் குறைபாடு மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
வைட்டமின் டி தவிர, இரும்புச்சத்தும் உங்கள் குழந்தைக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உங்கள் குழந்தை உட்கொள்ளக்கூடிய இரும்புச் சத்து நிறைந்த தானியங்கள் ஏராளமாக உள்ளன. உங்கள் பிள்ளைக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும் கொடுக்க மறக்காதீர்கள். இந்த கொழுப்பு அமிலங்கள் கண், மூளை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகின்றன!
உங்கள் குழந்தை தனது முதல் வருடத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. ஏனெனில், சில உணவுகள் ஆபத்தானதாகவும் அல்லது உணவு விஷத்தை ஏற்படுத்தலாம். தவிர்க்க வேண்டிய சில உணவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தேன்
சரியாக சமைக்கப்படாத முட்டை அல்லது இறைச்சி.
அதிக அளவு பாதரசம் கொண்ட மீன்.
சர்க்கரை நிறைந்த உணவு வகைகள்
உப்பு நிறைந்த உணவுகள்
பதப்படுத்தப்படாத உணவுப் பொருட்கள்.
எளிதாக தொண்டையில் சிக்கிக்கொள்ளக்கூடிய உணவுகள்.
ஒரு வயது ஆகாத குழந்தைகளுக்கு பசும்பாலையும் தவிர்க்க வேண்டும். அக்குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளில் பெரும்பாலானவற்றை தாய்ப்பாலின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். இதைத்தவிர, குழந்தைகளுக்கு ஓட்ஸ் மற்றும் ஃபார்முலா பாலுடன் கலந்த ஸ்மூத்திகளை கொடுக்கலாம்.
முடிந்தவரை சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கூடுதலாக, உணவில் அதிக சோடியம் கொண்ட உணவுகள் குழந்தையின் வளர்ந்து வரும் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த கட்டத்தில் குறைவான உப்பு கொடுப்பது சிறந்தது. ஒன்பது மாத குழந்தைக்கு தினமும் தோராயமாக 800 கலோரிகள் வரை தேவைப்படும். இதில் தாய்ப்பாலில் இருந்து மட்டும் சுமார் 450 கலோரிகள் கிடைக்க வேண்டும். உங்கள் குழந்தை தனக்கு தேவையான அளவுக்கு சாப்பிட அனுமதியுங்கள்.
உங்கள் குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆகும் போது, நீங்கள் முட்டை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற சில உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம். இந்த ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது மேலும் பகுப்பாய்வு செய்து, பொதுவான அறிகுறிகளைத் தடுக்க உதவிகரமாக இருக்கும். உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மூச்சுத்திணறல்
வாயில் வீக்கம்
தடிப்புகள்
வயிற்றுப்போக்கு
வாந்தி
வயிற்று வலி
உங்கள் குழந்தை லேசான எதிர்வினைகளை அனுபவித்தாலோ அல்லது தீவிர நிகழ்வுகளில், கடும் ஒவ்வாமை (அனாபிலாக்ஸிஸ்) இருந்தால், உடனடியாக உங்கள் குழந்தைநல மருத்துவரை அணுகவும்!
இதையும் படிக்கலாமே! - வெவ்வேறு வயதுகளில் உங்கள் குழந்தைக்கு எவ்வளவு தூக்கம் தேவை?
உண்மையில், குழந்தை வளர்ப்பு என்பது பல சவால்கள் மற்றும் அற்புதமான கட்டங்கள் நிறைந்தது. உண்மையில், ஒன்பது மாத குழந்தைக்கு ஆரோக்கியமான உணவைத் திட்டமிடுவதற்கு நிறைய நேரம் தேவைப்படலாம். உங்கள் குழந்தைக்குத் ஏதுவாக்கப்பட்ட டயட் சார்டினைத் தயாரிப்பதன் மூலம், நீங்கள் உணவை முன்கூட்டியே திட்டமிடலாம். மேலும், உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத சில உணவுப் பொருட்களைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.
அதுமட்டுமல்லாமல், உங்கள் பிள்ளைக்கு நீங்கள் ஊட்டும் உணவு மென்மையாகவும், சரியாக சமைத்ததாகவும், தொண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க சிறு சிறு அளவுகளில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்படாத உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் உப்பு ஆகியவை உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத சில உணவுகள். மேலே குறிப்பிட்டுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தை ஆரோக்கியமாக தவழ்வதை நீங்கள் காணலாம்!
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |