Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு பெண்ணின் உடலில் கர்ப்ப காலத்தில் அநேக மாற்றங்களும், சிற்சில அசௌகரியங்களும் உண்டாகின்றன. வீட்டு வைத்தியமும், இயற்கையான வழிமுறைகளும், இது போன்ற சூழ்நிலையில் உதவியாக இருக்கும். பெண்கள் பொதுவாகவே தங்களுக்கு ஏற்படும் சிறு சிறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு அடுப்பங்கரையில் உள்ள பொருட்களை தான் முதலில் தேடுவார்கள், பெருஞ்சீரக விதையும் (சோம்பு) அவ்வாறு அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தின் போது சோம்பு சாப்பிடுவதற்கு தயக்கம் காட்டினால், கீழ்க்கண்ட இந்தக் கட்டுரையில் பெருஞ்சீரக விதைகளின் நன்மைகள், அபாயங்கள் மற்றும் விளைவுகளை தெரிந்து கொள்ளலாம். மேற்கொண்டு தெரிந்து கொள்வதற்கு தொடர்ந்து வாசிக்கவும்.
முதன் முதலாக ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பெருஞ்சீரக மூலிகையில் உள்ள விதைகள், பெருஞ்சீரக விதைகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் தனித்துவமான சுவையும், மணமும் உள்ளது. அவை ஆரம்ப கட்டத்தில் பச்சை அல்லது பழுப்பாக இருக்கும், இறுதியில் மந்தமான சாம்பல் நிறமாக மாறி விடும். இந்தச் செடியில் மென்மையான இலைகள் இருக்கும், இது பார்லி குடும்பத்தின் ஒரு அங்கமாகும். அடுப்பங்கரையில் பொதுவாக காணப்படும், பெருஞ்சீரகம், அதன் நோய் தீர்க்கிற இயல்புகளுக்கு பெயர் பெற்றது. இந்தியாவில், "சோம்பு" என்று பொதுவாக அழைக்கப்படுகிறது, இது சமையலில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் பெரும்பாலான மக்கள் வாய் புத்துணர்ச்சிக்காகவும் இதனை பயன்படுத்துகின்றனர். இது பல் வலியையும், ஈறு பிரச்சனைகளையும் தீர்ப்பதாக நம்பப்படுகிறது, செரிமானத்தை மேம்படுத்துவது போன்ற பிற நற்பயன்களும் கூட உள்ளன.
நறுக்கப்பட்ட 1 கப் (87 கி) பெருஞ்சீரகத்திற்கு கீழ்க்கண்ட ஊட்டச்சத்து மதிப்பு உள்ளதாக யுஎஸ்டிஏ (USDA) வழங்குகிறது.
கலோரிகள்: 27
கொழுப்பு: 0.2 கி
சோடியம்: 45 மி.கி
கார்போஹைட்ரேட்ஸ்: 6.3 கி
நார்ச்சத்து: 2.7 கி
சர்க்கரை: 3.4 கி
புரோட்டீன்: 1.1 கி
பெருஞ்சீரக விதைகள் இயற்கையாகவே மாதவிடாயினை தூண்டும் அல்லது அதிகரிக்கும் ஆற்றலுடையவை; எனவே, கர்ப்ப காலத்தின் போது மிகக் குறைந்த அளவிலேயே இதனை பெண்கள் சாப்பிட வேண்டும். அதாவது, இந்த விதைகள் மாதவிடாய் இரத்தப் போக்கை தூண்டுவதாகவோ அல்லது அதிகப்படுத்துவதாகவோ இருக்கும். கர்ப்ப காலத்தின் போது, சில பெருஞ்சீரக விதைகளை தங்கள் உணவில் தூவி விடலாம், உதாரணத்திற்கு ஒரு தேக்கரண்டி அளவிற்கு தான் போட வேண்டும். குறிப்பிட்ட உடல்நல தேவைகளின் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண் மருத்துவரை சந்தித்து கர்ப்ப காலத்தில் எவ்வளவு சோம்பினை சாப்பிடலாம் என்பது குறித்து கலந்தாலோசிக்கலாம். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் குறைவான அளவுகளிலேயே பெருஞ்சீரக விதைகளை சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தின் போது பெருஞ்சீரக விதைகள் சாப்பிடுவதால் கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில், குறிப்பாக முதல் மும்மாதங்களில், இது பசியை தூண்டுவதற்கு உதவுகிறது. இது வாயுவையும், அசௌகரியத்தையும் குறைப்பதன் மூலம் மசக்கையையும் கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது.
பெருஞ்சீரகத்தின் வாய்வு எதிர் விளைவுகளின் காரணமாக செரிமான பாதை தசைகள் தளர்ச்சியடையும், இது பித்த நீரோட்டத்தை ஊக்குவித்து, செரிமானமின்மையோடு அதிகம் தொடர்புடைய தசைப்பிடிப்புகளை குறைக்கிறது. இதன் விளைவாக, கர்ப்ப காலத்தின் போது உப்பிசத்தை ஆற்றுவதன் பொருட்டு இது நன்கு செயல்படுகிறது. கர்ப்ப காலத்தின் போது பெருஞ்சீரகத்தை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும்.
செரிமானமின்மை மற்றும் வாயுத் தொந்திரவின் காரணமாக, பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் தங்களின் பசி குறைவதாக தெரிவிக்கிறார்கள். பெருஞ்சீரக விதைகள் இயற்கையாகவே வாய்வை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றமையால், குடல் வாயுவை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
இதன் விளைவாக, கர்ப்ப காலத்தின் போது பெருஞ்சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளித்து, பசியை மீட்டெடுக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தின் போது பெருஞ்சீரக விதைகளை உண்பதால் ஏற்படும் பிரச்சினைகளை கீழ்க்காணும் பிரிவு விளக்குகிறது.
பெருஞ்சீரக விதைகளால் இரத்தம் உறையும் திறன் பாதிக்கப்படுவதால், இது இரத்த உறைவு செயல்முறையை தாமதப்படுத்துகிறது. எனவே, ஒருவர் இரத்தக் கசிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, குறிப்பாக காயங்கள் மற்றும் இரத்தக் கசிவிற்கு ஆட்படும் போது கர்ப்ப காலத்தில் சோம்பைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தின் போது பெருஞ்சீரக விதைகளை சாப்பிடும் போது சருமத்தில் வறட்சியும், அதிகபட்ச கூர் உணர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு கூர் உணர்வுடைய சருமம் இருந்தால், பெருஞ்சீரக விதைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பெருஞ்சீரகம் கர்ப்பப்பையை தூண்டி விடக் கூடிய நடுக்கமகற்றுகிற, அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது ஆரம்ப கால சுருக்கங்களை உருவாக்குகிறது. கர்ப்பமாக இருக்கும் போது, பெருஞ்சீரகத்தை மிதமான அளவில் உண்பது முதிர்கருவிற்கு தீங்கு விளைவிக்காது, மேலும் பிரசவ தேதிக்கு முன்கூட்டிய சுருக்கங்களை தூண்டாது.
கர்ப்ப காலத்தின் போது பல கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை சிவப்பாக பிறப்பதற்கு பெருஞ்சீரக விதைகளை சாப்பிடுகிறார்கள், ஆயினும், இதை நிரூபிக்கக் கூடிய எந்தவொரு அறிவியல் ரீதியான ஆதாரமும் இல்லை.
கர்ப்பமாக இருக்கும் போது பெருஞ்சீரக விதைகள் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை தெரிவிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடையாது. எனினும், அதிக அளவுகளில் எடுத்துக் கொள்ளும் போது இந்த விதைகள் தாயையோ அல்லது பிறக்கப் போகும் குழந்தையையோ பாதிப்பதாக அறியப்படவில்லை. கர்ப்பிணிப் பெண்கள் குறைந்த அளவு உப்பிசத்தையும், வாயுவையும் உணர்வதற்கு இந்த விதைகள் உதவுகின்றன.
மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பெருஞ்சீரக விதைகளை சாப்பிடுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. பெருஞ்சீரக விதைகளில் நல்ல மணமும், லேசான இனிப்புச் சுவையும் உள்ளது. இதனை உணவுகளோடு சேர்க்கும் போது, அது சுவையூட்டும் பொருளாக செயல்படுகிறது. உணவிற்கு நுட்பமான சுவையையும் கூட்டுகிறது. கூடுதலாக, கர்ப்பிணிப் பெண் இதனை டீயில் பயன்படுத்தலாம் அல்லது சாப்பாட்டிற்கு பிறகு பச்சையாக சாப்பிடலாம். கர்ப்ப கால உணவுமுறையில் சோம்பை சேர்ப்பதற்கு முன்னர், பொதுவாக மருத்துவரையோ அல்லது ஊட்டச்சத்து நிபுணரையோ கலந்தாலோசிப்பது முக்கியமானது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தில் பாதாம் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
இந்தியாவில், செரிமானத்திற்கு உதவும் காரணத்தால், பொதுவாகவே பெருஞ்சீரக விதைகள் சாப்பாட்டிற்கு பின்னர் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனினும், கர்ப்பிணிப் பெண்கள் பெருஞ்சீரக விதைகளை சாப்பிடும் போது, அவை மாதவிடாயினை தூண்டி, பெண்ணுறுப்பில் இரத்தப் போக்கை ஏற்படுத்தி, இறுதியாக கருச்சிதைவை உண்டாக்கி விடக் கூடிய திறன் மிக்கவை என்பதை நினைவில் கொள்வது மிகவும் அவசியமாகும். இதனை அளவாக சாப்பிடுவது மிக முக்கியமாகும்; ஒரு வேளை மருத்துவர் இதனை சாப்பிடக் கூடாதென பரிந்துரைக்கும் பட்சத்தில், நீங்கள் இதனை முழுமையாக தவிர்த்து விட வேண்டும்.
கர்ப்ப காலத்தின் போது பெருஞ்சீரக விதைகளை சாப்பிடுவது பாதுகாப்பானது தானா என்பதை தீர்மானிப்பதற்கு மருத்துவரை கலந்தாலோசிக்கவும். மேற்கொண்டு மருத்துவ ஆலோசனையை மட்டுமே பின்பற்றவும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |