Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் உடல் மற்றும் உணர்வுகளின் உணர்திறன்கள் உயர் மட்டத்தில் இருக்கும். இந்தக் கால கட்டத்தில் அடிக்கடி பசி எடுப்பது பொதுவானது தான் என்றாலும் கூட, நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியம் ஆகும். கர்ப்பிணிப் பெண் எடுத்துக் கொள்ளும் உணவானது தாய்க்கும் கருவுக்கும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆனால், நாம் உண்பது அத்தகையை பாதுகாப்பைக் கொண்டுள்ளதா என்பதை அறிவதும் கடினம். இப்படிப்பட்ட குழப்பத்துக்குரிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பானி பூரி, இது இந்தியாவில் உள்ள ஒரு பிரபலமான தெரு உணவாகும், இது உணவகங்களில் அல்லது வீட்டில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இதன் காரத்தன்மை கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்குமா? என்ற கேள்விக்கும், கர்ப்ப காலத்தில் பானி பூரி சாப்பிடலாமா? அதன் ஊட்டச்சத்து மதிப்பு, அதைச் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் ஆகியவற்றை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
இந்தக் கால கட்டத்தில் பானி பூரி சாப்பிதுவதில் தவறில்லை, ஆனால் அதில் உபயோகிக்கப்படும் பொருட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பானி பூரி என்பது காரமான தண்ணீர், புளி சாறு மற்றும் மசாலாப் பொருட்களால் நிரப்பப்பட்ட, நன்கு பொறிக்கப்பட்ட பிரபலமான இந்திய உணவு. இது பொதுவாக உருளைக்கிழங்கு அல்லது கொண்டைக்கடலை கறியால் நிரப்பப் படுகிறது.
கர்ப்ப காலத்தில் பானி பூரி சாப்பிட விரும்புவோர், ஒரு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
முதலில், பூரி புதிதாக பொறிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். பழைய பூரிகள் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் மற்றும் அதனால் அஜீரணம் அல்லது குமட்டல் ஏற்படலாம்.
இரண்டாவதாக, வெயிலில் அதிக நேரம் வைக்கப்பட்டிருக்கும் பானி பூரியைத் தவிர்க்கவும், ஏனெனில் வெப்பத்தின் காரணமாக் அதில் நிரப்பப்படும் சாஸ்கள் விரைவாகக் கெட்டுப் போக வாய்ப்புண்டு.
இறுதியாக, பானி பூரியில் நிரப்பப்பட்ட மசாலாப் பொருட்கள் குறித்தும் கவனமாக இருங்கள்; சில மசாலாக்கள் அதிக காரம் கொண்டதாக வயிற்றுக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். பானி பூரியில் குறைந்த அளவு மசாலாவைச் சேர்க்கச் சொல்லி முன்பே சொல்லி விடுங்கள்.
கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவில் கூடுதல் கவனம் தேவை. கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக் கூடாதவை என பெரும் பட்டியலே உள்ளது, அதில் பானி பூரியும் ஒன்று.
எனவே, கர்ப்ப காலத்தில் பானி பூரி பாதுகாப்பானதா என்றால் ஆம் என்பதே அதற்குப் பதிலாகும். இருப்பினும், நீங்கள் அதன் தரத்தில் கவனம் கொள்வது மிக அவசியம்.
முதலில், நீங்கள் உண்ணும் பானி பூரி புதியதாகவும் ஒழுங்காகத் தயாரிக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெருவோர வியாபாரிகளிடமிருந்தோ அல்லது சுகாதாரத் தரங்கள் கேள்விக்குரியதாக இருக்கும் இடங்களிலோ பானி பூரி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
இரண்டாவதாக, பானி (தண்ணீர்) மற்றும் பூரி (ரொட்டி) ஆகியவற்றில் உள்ள பொருட்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். பானியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் கொதிக்க வைத்து ஆற வைக்கப்படுவதையும், பூரிகள் வேக வைத்த மாவைக் கொண்டு தயாரிக்கப்படுவதையும் உறுதி செய்யவும்.
கடைசியாக, உடலின் நிலைக்கு ஏற்ப சாப்பிடுங்கள். சில பெண்களுக்கு அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம், எனவே எந்த ஒரு உணவுப் பொருளையும் மிகைப்படுத்தாமல் இருப்பது முக்கியம். கர்ப்ப காலத்தில் பானி பூரி சாப்பிட்ட பிறகு அசௌகரியமாக உணர்ந்தால், சிறிது காலம் நிறுத்திவிட்டு, பின்னர் சாப்பிடுங்கள்.
கர்ப்ப காலத்தில் உண்ண வேண்டியவை, வேண்டாதவை என பல கட்டுக்கதைகளை நீங்க கேட்க நேரிடலாம். இவற்றைக் கேட்ட பிறகு, கர்ப்ப காலத்தில் சாட் ஐட்டம்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று நீங்கள் நினைப்பது ஆச்சரியமில்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் சாட் ஐட்டம்ஸ் சுவையான மற்றும் பாதுகாப்பான சிற்றுண்டியாக இருக்கும்.
புதிய, பழுத்த பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்வு செய்யவும். பழங்கள் மற்றும் காய்கறிகள் சூரிய ஒளி அல்லது வெப்பத்தில் இருப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இவை உங்களை நோய்வாய்ப்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம்.
பயன்படுத்துவதற்கு முன்பு அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவவும். இது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும்.
சாட்டில் நீங்கள் பயன்படுத்தும் தயிர் பேஸ்சுரைஸ் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பேஸ்சுரைஸ் செய்யப்படாத தயிரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புண்டு.
அதிக உப்பு அல்லது மசாலாப் பொருட்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். அதிக உப்பு உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தானது. மேலும் காரமான உணவுகள் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலைத் தூண்டும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் சேப்பங்கிழங்கு: பாதுகாப்பானதா இல்லையா?
மொத்தத்தில், மூலப்பொருட்கள் சரியாகவும் சுகாதாரமாகவும் சமைக்கப்படுவதை உறுதி செய்யும் நிலையில் பானி பூரி கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுவையான மற்றும் பாதுகாப்பான சிற்றுண்டியாக இருக்கும். இந்தப் பிரபலமான தெரு உணவு கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்றாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது, ஏனெனில் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில மசாலாப் பொருட்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம் அல்லது தாயின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். இறுதியில், கர்ப்ப காலத்தில் புதிய உணவுகளை முயற்சிக்கும் போது உங்கள் உடல் அதை ஏற்கும் நிலையில் உள்ளதா என உணர்ந்து தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம். உங்களுக்கும் உங்கள் குழந்தையின் பாதுகாப்பிற்கும் எது சிறந்தது என்பதைப் பற்றி மேலும் அறிய மைலோ ஃபேமிலியை பார்வையிடவும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |