Care for Baby
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு தாயைப் பொறுத்தவரை, குழந்தையின் புன்னகை நிச்சயமாக மிகவும் விலைமதிப்பற்ற ஒன்று என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், நீங்கள் உங்கள் குழந்தையை இப்போது மிகவும் அன்புக்குரிய ஒன்றாகக் காண்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கு முதல் பல் வளர ஆரம்பித்தவுடன் எவ்வளவு அழகாக இருக்கும் என்று கற்பனை செஞ்சு பாருங்க.
உங்கள் குழந்தை வளரத் தொடங்கும் ஆரம்ப காலகட்டத்தில் வாயை சுத்தமாக வைப்பதை உறுதிப்படுத்துவது உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆரம்பத்தில் இது சவாலானதாக இருந்தாலும், உங்கள் குழந்தை நிச்சயம் அதை செய்யும்! இந்தக் கட்டுரையில், உங்கள் குழந்தையின் வளரும் ஈறுகளை ஃபிங்கர் டூத்பிரஷ் கொண்டு சுத்தம் செய்வது முக்கியமா என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
பல் துலக்குவதற்கான சில அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
எச்சில் வெளியேறுதல்
குழந்தைகள் தொடர்ந்து கைகளை வாய்க்கு அருகில் வைப்பது.
வெவ்வேறு விஷயங்களை கடிக்க முயற்சிக்கிறது.
குழந்தைகளின் பசி அல்லது உணவு முறையில் மாற்றம்
மென்மையான ஈறுகளின் வளர்ச்சி.
உங்கள் குழந்தைக்கு பல் தொடர்பான நடைமுறைகளை எவ்வளவு விரைவில் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து கொள்வது அவசியம். ஆரம்ப கட்டங்களில், ஈறு நோய் அல்லது பல் சிதைவைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பல் பாதுகாப்பில் சில நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
உங்கள் குழந்தை நல்ல பல் சுகாதாரத்தை கடைபிடிக்கத் தொடங்கும் போது, அவர்களின் புன்னகையானது அவர்களின் பற்களைப் போல பிரகாசமாக இருக்கும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அதுமட்டுமின்றி, வளர்ச்சி கால கட்டத்தில் மிகவும் பொதுவாக ஏற்படும் சொத்தை பல் வராமல் பல் துலக்குதல் தடுக்கும்.
புதிய பற்கள் வளர்வதை நீங்கள் கவனிக்கும் தருணத்தில், ஆரோக்கியமான சூழலில் குழந்தையின் பற்கள் வளர்வதை அனுமதிக்க நீங்கள் ஃபிங்கர் பிரஷைப் பயன்படுத்துங்கள். இதனால், ஈறுகளின் மீது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கலாம். உண்மையில், நீங்கள் உங்கள் விரலால் பல் துலக்கிவிட வேண்டும் அல்லது குழந்தைகளுக்கான ஃபிங்கர் டூத்பிரஷை பயன்படுத்தி குழந்தையின் பற்களை சுத்தப்படுத்துவதை தொடர்ச்சியாக செய்வது குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் ஈறுகளைப் பொறுத்தவரை, நீங்கள் ஃபிங்கர் டூத் பிரஷ் அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல், உங்கள் குழந்தையின் வாயிலிருந்து உணவுக் கறைகளை அகற்றும்போது நீங்கள் முடிந்தவரை மென்மையாக அணுகுவது மிகவும் முக்கியம். இதன்மூலம், உங்கள் குழந்தையின் வாயில் பாக்டீரியாக்கள் படிவதை நீங்கள் தடுக்க முடியும்.
உங்கள் விரலை வெதுவெதுப்பான நீரில் நனைத்து, மெதுவாக உங்கள் குழந்தையின் ஈறுகளில் வட்ட இயக்கத்தில் தேய்க்க ஆரம்பிக்கலாம். நீங்கள் பற்களை இலக்காகக் கொண்டிருந்தால், முட்கள் கொண்ட ஃபிங்கர் டூத்பிரஷை வைத்திருங்கள். அத்துடன் சுடு தண்ணீரும் உடன் இருப்பது அவசியம். சுடு தண்ணீரில் நீங்கள் பிரஷை நனைத்து எடுக்கும்போது முட்கள் மென்மையானதாகவும், மிருதுவானதாகவும் இருக்கும். நீங்கள் சிறிய அளவுக்கு டூத்பேஸ்டைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பல் துலக்கிய பின் துப்புமாறு உங்கள் குழந்தையை என்கரேஜ் பண்ணுங்க! டூத்பேஸ்ட்டை அதிகமாக உட்கொள்வது வயிறு வலி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தைக்கு விக்கல் வருவது இயல்பானதா?
குழந்தைகளுக்கான ஃபிங்கர் டூத்பிரஷ் தவிர, நீங்கள் ஒரு ஈரமான துணியைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு மென்மையான துணியை ஃப்ரீசரில் வைத்து, பின்னர் அதை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் ஈறுகளில் மென்மையாகத் தேய்த்து விடலாம். கூடுதலாக, உங்கள் குழந்தையின் ஈறுகளில் இருந்து அதிகப்படியான உணவுக் கறைகளை அகற்ற நீங்கள் ஒரு சாதாரண துணியையும் பயன்படுத்தலாம். சாதாரண துணியால் மசாஜ் செய்வது வாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள கறைகளைப் போக்க உதவும்.
உங்கள் குழந்தை பல் துலக்கும்போது வலியை அனுபவித்தால், குழந்தைக்கு பல் துலக்கும் பொம்மைகளை கொடுப்பது குறித்து யோசிங்க. உங்கள் குழந்தை கடிக்க அல்லது மெல்லக்கூடிய சில பொம்மைகளைக் கொடுப்பதன் மூலம் அவர்களின் பல் வலியைக் குறைக்க முடியும். இன்று, பல ஆன்லைன் ஸ்டோர்கள் குழந்தைகளுக்கான டூத் பிரஷ்களை விற்பனை செய்கிறது.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |