Best Sleeping Positions
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் கபடி, கால்பந்து போன்ற தொடர்பு (பிறரை தொடுதல்) விளையாட்டுகளைத் தவிர்ப்பது முதல் குறிப்பிட்ட உணவைத் தவிர்ப்பது வரை செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என நீண்ட பட்டியல் உள்ளது.
கூடுதலாக, உங்கள் வயிறு வாராவாரம் பெரிதாகுவதால், நீங்கள் கர்ப்பத்தின்போது எந்த பொசிஷனில் படுத்து தூங்குவது என்பது குறித்து கவலைப்பட ஆரம்பிக்கலாம்.
கர்ப்பிணிகள் தூங்கும் பொசிஷன் அவர்களின் ஹெல்த் மற்றும் கருவில் உள்ள குழந்தையின் ஹெல்த் ஆகிய இரண்டையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பது மிகவும் விவாதத்திற்கு உட்பட்டதாகும்.
கர்ப்பமாக இருக்கும்போது ஒரு பக்கமாக தூங்க வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, கருவில் உள்ள குழந்தை வளரத் தொடங்கும்போது ஒரு பக்கமாக மட்டுமே படுத்து தூங்க வேண்டும்.
ஏன் அப்படி சொல்றாங்க? அது ஒரே ஒரு முக்கியமான விஷயம் தான்: அது தான் இரத்த ஓட்டம். கரு வளர்ச்சியடையும்போது, கருப்பைக்கு கிடைக்கும் இரத்த ஓட்டம் கூடுதல் அழுத்தத்தினால குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பெரும்பாலும் சி-செக்ஷன் என்று அழைக்கப்படும் சிசேரியன் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்கள் படுத்திருக்கும்போது அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்புடன் பிரசவத்தில் இருந்தால், மருத்துவர்கள் அவர்களைத் தொடர்ந்து சாய்க்கிறார்கள்.
கர்ப்பமாக இருக்கும்போது இடது பக்கம் தூங்குவதால் பல நன்மைகள் உள்ளன.
நீங்கள் இடது பக்கமாக படுத்திருக்கும்போது, ஐவிசியில் எனப்படும் இன்ஃபிரியர் வீனாக்காவாவில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது.
உங்கள் முதுகின் வலது பக்கமாக அமைந்துள்ள இந்த பெரிய இரத்தநாளம் உங்கள் இதயம் மற்றும் உங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை கொண்டு செல்கிறது.
இடது பக்கமாக தூங்குவது கல்லீரலுக்கும் சிறுநீரகத்துக்கும் நல்லது. அதிக இடவசதி இருப்பதால் கை, கணுக்கால், கால்களில் வீக்கம் குறையும்.
நிச்சயமாக, நீங்கள் வலது பக்கத்தைத் தவிர்க்க விரும்பினால், நீங்கள் இடதுபக்கமாகதான் படுக்க வேண்டுமா? என்றால் இல்லை என்பதே அதற்கு பதில்.
2019 இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, இடதுபக்கமாகவோ அல்லது வலது பக்கமாகவோ படுப்பது பாதுகாப்பானது தான் என்று தெரியவந்துள்ளது. நீங்கள் வலதுபுறம் தூங்கும்போது, ஐவிசி சுருக்கும் அபாயம் உள்ளது. ஆனால் நீங்கள் உங்களுக்கு எது வசதியாக இருக்கும் என்று உணர்கிறீர்கள்ளோ அந்தப் பக்கத்திலேயே படுக்கலாம்.
ஒரு பக்கமாக தூங்குவது மிகவும் இயற்கையானதாகவும், மிகவும் செளகரியமாகவும் உணர வைக்கக் கூடியது. அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.
சில பெண்கள் தாங்கள் தூங்கும்போது, தங்கள் கணவரை அவர்கள் எந்தப் பக்கமாக தூங்குகிறார்கள் என்பதை சரிபார்க்க சொல்லி அறிவுறுத்துவார்கள்.
தொடக்கத்தில் எந்த பக்கம் தூங்கினாலும் பொதுவாக பாதுகாப்பானது தான். உங்களுக்கு ஒரு பக்கமாக தூங்கும் பழக்கத்தைப் பெற, உங்கள் கால்களுக்கு இடையில் தலையணையை வைக்கலாம். இதன் விளைவாக உங்கள் இடுப்பு மற்றும் அதற்கு கீழுள்ள உடல் நன்றாக இருப்பதாக உணரலாம்.
மேலும், நீங்கள் மிகவும் கஷ்டமாக உணர்ந்தால், மெமரி ஃபோம் ஆர்த்தோபெடிக் முழங்கால் தலையணையை வாங்கிக் கொள்ளலாம்.
உங்கள் வயிறு பெரிதாகும்போது உங்கள் முதுகெலும்பு சரியாமல் இருக்க உறுதியான மெத்தை வைத்திருப்பது முக்கியம். உங்கள் மெத்தை மிகவும் மென்மையாக இருந்தால், உங்கள் முதுகை பாதுகாக்க ஒரு போர்டை உங்கள் மெத்தை மற்றும் பாக்ஸ் ஸ்பிரிங்க்கு இடையில் வைத்துவிடுங்கள்.
கர்ப்பகால தலையணைகள் உங்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கலாம். நீங்கள் ஒரு பக்கமாக தூங்குவதற்கு உதவ, அவை ‘யூ’ அல்லது ‘சி’ வடிவத்தில் கிடைக்கின்றன.
இந்த வகை தலையணை உங்கள் முதுகுக்குப் பின்னால் தொட்டுக் கொண்டு முன்புறத்தில் இரு கால்களுக்கு இடையே வைத்துக் கொள்வது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கூடுதல் வசதிக்காக, உங்களுக்கு முட்டுக்கொடுக்க ஒரு குஷனைப் பயன்படுத்துங்கள். உங்கள் வயிறு பெரிதாக விரிவடைந்து எடை அதிகமாக இருந்தால், வெட்ஜ் தலையணைகள் சிறந்த தேர்வாக இருக்கும். அவை உருளுவதைத் தடுக்க, அவற்றை உங்கள் வயிற்றின் கீழ் மற்றும் உங்கள் முதுகுக்குப் பின்னால் வைக்கவும்.
45 டிகிரி கோணத்தில் உங்கள் உடலின் மேல் பாகத்தை உயர்த்த தலையணைகளைப் பயன்படுத்துவது நீங்கள் ஒரு பக்கமாக உறங்குவதற்கு ஏற்றதாக இருக்க உதவும் . நீங்கள் உங்கள் முதுகு பக்கத்தை ஃபிளாட்டாக வைத்திருக்க வேண்டியதில்லை. மேலும், உங்கள் ஐவிசிக்கு அழுத்தம் தரவும் வேண்டியதில்லை.
மாறாக, உங்கள் படுக்கையில் தலையின் உயரத்தை சில அங்குலங்கள் உயர்த்த புத்தகங்கள் அல்லது பிளாக்குகளை அடுக்கி வைக்க வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் போது தலைகுப்புற படுத்துத் தூங்குவது சரியா? குறைந்தபட்சம் ஒரு குறுகிய காலத்திற்கு தூங்கலாம்.
16 முதல் 18 வாரங்கள் வரை நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது தலைக்குப்புற படுத்துத் தூங்குவது பிரச்சனை இல்லை. உங்கள் வயிறு பெரிதாகும்போது, இந்த பொசிஷனை நீங்கள் பெரிதும் விரும்பமாட்டீர்கள். வேறு விதமாகச் சொல்வதானால், நீங்கள் ஒரு பெரிய தர்பூசணியின் மேல் தூங்குவது போல் தோன்றும்.
உங்கள் செளகரியத்துக்காக நீங்கள் குப்புறப்படுத்துத் தூங்குவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்கள், கருப்பை சுவர்கள் மற்றும் அம்னோடிக் திரவத்தால் குழந்தை பாதுகாக்கப்படுகிறது.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், பொதுவாக நேராக தூங்குவது நல்லது.
ஆனால், எஞ்சிய மாதங்களில் நேராகப் படுத்து இரவு முழுவதும் தூங்கினால் குழந்தை இறந்துவிடும் அபாயம் உள்ளது. தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுபோன்று வெகு சிலருக்கே ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதவிர, நீங்கள் நேராக நிமர்ந்து படுப்பதால் வேறு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். முதுகு அசௌகரியம், மூல நோய், செரிமான பிரச்சனைகள் மற்றும் இதுபோன்று படுப்பதால் மோசமான சுழற்சி ஆகியவை ஏற்படும். இதன் விளைவாக உங்களுக்கு மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படக்கூடும்.

இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மலச்சிக்கல்: சிகிச்சையளிப்பது எப்படி.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், பொதுவாக நேராக தூங்குவது நல்லது.
ஆனால், எஞ்சிய மாதங்களில் நேராகப் படுத்து இரவு முழுவதும் தூங்கினால் குழந்தை இறந்துவிடும் அபாயம் உள்ளது. தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுபோன்று வெகு சிலருக்கே ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இதுதவிர, நீங்கள் நேராக நிமர்ந்து படுப்பதால் வேறு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். முதுகு அசௌகரியம், மூல நோய், செரிமான பிரச்சனைகள் மற்றும் இதுபோன்று படுப்பதால் மோசமான சுழற்சி ஆகியவை ஏற்படும். இதன் விளைவாக உங்களுக்கு மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படக்கூடும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |