Women Specific Issues
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்புகள் உடையக்கூடியதாகவும், எலும்பு முறிவுகளுக்கு ஆளாகக்கூடிய ஒரு நிலையாகும். இந்த நிலை ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது. ஆண்களுக்கு சிறிய மற்றும் மெல்லிய எலும்புகள் இருப்பதால் பெண்களில் ஆஸ்டியோபோரோசிஸ் மிகவும் பொதுவானது.
ஆஸ்டியோபோரோசிஸ் இரண்டு வகையானது
இது இயற்கையான வயதாகும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
இது மற்ற நோய்சார்ந்த இணை நோயாகும்.
ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள பெண்கள், வலுவான எலும்புகளை பராமரிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், அவர்கள் இயல்பான, நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். சிக்கலைத் தடுக்கும் நுட்பங்களைப் பற்றி அறிந்திருப்பது, உங்கள் மருந்துகளை இடைவிடாமல் எடுத்துக்கொள்வது மற்றும் உங்கள் ஹெல்த்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
பெண்களில் ஆஸ்டியோபோரோசிஸ் முதுமையில் வருவதில்லை. ஆனால், இந்த நிலைக்கு பல அடிப்படை காரணிகள் இருக்கலாம். இந்த நிலையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் உள்ள காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் இங்கு கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவை நேரடியாக ஒன்றையொன்று சார்ந்துள்ளது. ஈஸ்ட்ரோஜன், எலும்பின் அடர்த்தியைப் பராமரிக்கும் ஹார்மோன், மாதவிடாய் நின்ற பிறகு குறைகிறது. ஒரு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது.
இது பெண்களில் 40 வயதிற்கு முன்பே நிகழ்கிறது. கருப்பையில் போதுமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி செய்யப்படாமல், முட்டைகள் அவ்வப்போது வெளியிடப்படாமல் இருக்கும் ஒரு நிலைதான் இது. குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு பெண்களில் ஆஸ்டியோபோரோசிஸ் வளர்ச்சியில் விளைகிறது.
குறைக்கப்பட்ட கலோரி உட்கொள்ளல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உணவுப் பழக்கங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு காரணமான ஏராளமான ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்கிறது. அனோரெக்ஸியா நெர்வோசா மற்றும் புலிமியா நெர்வோசா போன்ற உணவுக் கோளாறுகள் மோசமான எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.
முடக்கு வாதம், சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் ஆகியவை சில தன்னுடல் தாக்க நிலைகளாகும். இவை ஒருவரின் எலும்புகளை மோசமாகப் பாதித்து ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
போதிய உடற்பயிற்சியின்மை, ஒரு தனிநபரின் எலும்பு அடர்த்தியைக் கட்டியெழுப்புவதையும் பராமரிப்பதையும் கடுமையாகப் பாதிக்கிறது. உட்கார்ந்து செய்யும் வேலை வாழ்க்கை முறை இந்த நிலைக்கு ஒரு குறிப்பிடத்தக்க காரணம்.
கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்குகிறது. கால்சியம் பற்றாக்குறை உணவுகள் உடையக்கூடிய எலும்புகளுக்கு வழிவகுக்கும் மற்றும் எலும்பு முறிவுகளுக்கு எதிர்ப்புத் திறன் குறைகிறது.
நீண்ட கால, அதிக குடிப்பழக்கம் மற்றும் தொடர் புகைத்தல் ஆகியவை ஆஸ்டியோபோரோசிஸின் தொடக்கத்தைத் தூண்டுகின்றன.
கீழ்வாதம், ஆஸ்துமா, தோல் முடிச்சு நோய், தைராய்டு நோய், பக்கவாதம், மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் ஹார்மோன் அளவை பாதிக்கின்றன. அவை ஹார்மோன்களின் வெளியீடு மற்றும் விநியோகத்தில் பங்கெடுப்பதுடன் சில சமயங்களில் ஆஸ்டியோபோரோசிஸை ஏற்படுத்துகின்றன.
எலும்பு முறிவு ஏற்படும் வரை ஆஸ்டியோபோரோசிஸ் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும். ஏனெனில், அது அடையாளம் காணக்கூடிய மற்றும் வெளிப்படையான சிம்டம்களைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், ஒருவர் பின்வரும் சிம்டம்களைக் கவனிக்க வேண்டும். அத்துடன் தேவைப்பட்டால் ஒரு ஸ்பெஷலிஸ்ட்டை அணுக வேண்டும்.
1. சாய்ந்த தோள்பட்டைகள்
2. பின்புறத்தில் ஒரு வளைவு
3. உயரம் குறைதல் (அங்குலங்கள்)
4. முதுகுவலி
5. குனிந்த உடல்நிலை
6. மூச்சுத் திணறல், சுருக்கப்பட்ட முள்ளந்தண்டு வட்டுகள்
லேபாரட்டரி அனாலிசிஸ், எக்ஸ்ரே, டெக்ஸா போன் டென்சிட்டி ஸ்கேன், கான்வென்ஷ்னல் ரேடியோகிராபி, சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, போன் ஸ்கேன் (சிண்டிகிராபி) மற்றும் பயாப்ஸி ஆகியவை பொதுவாக ஆஸ்டியோபோரோசிஸின் முன்னேற்றத்தைக் கண்டறிந்து வரைபடமாக்குவதற்கான நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
பெண்களில் ஆஸ்டியோபோரோசிஸ் மேனேஜ்மென்ட் பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. கூட்டு நோய்சார்ந்தவை, மெடிக்கல் ஹிஸ்டரிகள், தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் போன்றவை இதில் அடங்கும். நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான சில விருப்பங்கள் பின்வருமாறு:-
புகைபிடித்தல் மற்றும் மதுபானத்தை நீக்குவது இதில் அடங்கும். மேலும், தினமும் 30 நிமிடங்கள், வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை வழக்கமான உடற்பயிற்சி, போன் மினரல் டென்சிட்டியை (பி.எம்.டி) மேம்படுத்துகிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் D போதுமான அளவு உட்கொள்வது மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
அலென்ட்ரோனேட் (பினோஸ்டோ, ஃபோசாமாக்ஸ்), இபாண்ட்ரோனேட் (போனிவா), ரலோக்சிஃபீன் (எவிஸ்டா), ரைஸ்ட்ரோனேட் (ஆக்டோனல், ஸ்டீவியா), மற்றும் ஜோலெட்ரோனிக் அமிலம் (ரீக்ளாஸ்ட், ஜோமீடா) ஆகியவை ஆஸ்டியோபோரோசிஸ் சிகிச்சைக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில மருந்தியல் தலையீடுகள் ஆகும்.
அறுவைசிகிச்சைகள் சில அபாயங்களைக் கொண்டிருக்கின்றன. அத்துடன் போன் சிமென்ட் லீக், நிலையான அசௌகரியம், போன் சிமென்டிற்கான அலர்ஜி, தொற்று, பக்கவாதம் அல்லது நுரையீரல் இரத்த நாளத்தில் குமிழ் போன்றவற்றை விளைவிக்கலாம். கைபோபிளாஸ்டி மற்றும் வெர்டெப்ரோபிளாஸ்டி ஆகியவை பொதுவாக செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகள்.
இதையும் படிக்கலாம்! - மார்பக ஃபைப்ரோடெனோமா( Breast Fibroadenoma)- காரணங்கள் மற்றும் சிகிச்சை
ஊட்டச்சத்து குறைபாடுகள், ஈஸ்ட்ரோஜன் அளவுகள், மாதவிடாய், வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் பொது ஆரோக்கியம் போன்ற பல காரணங்களால், ஆஸ்டியோபோரோசிஸ் குறிப்பாக பெண்களிடையே அதிகமாக உள்ளது. எனவே, மாதவிடாய் மற்றும் முதுமை நெருங்கும்போது ஆஸ்டியோபோரோசிஸ் உருவாகும் அபாயத்தைக் குறைக்க, இளம் பெண்கள் ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்பு நடவடிக்கைகளை விரைவில் தொடங்க வேண்டும்.
சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த, நோய்க்கான தயாரிப்பு, செயல்முறை மற்றும் விளைவுகளுக்கான இடைநிலைக் குழு தேவைப்படுகிறது. டிரீட்மென்ட் பிளான்கள் பர்சனல் ஹிஸ்டரிகள் மற்றும் பிரபெரென்ஸ்களின்படி பட்டியலிடப்பட்டுள்ளன, செலவுகள், நன்மைகள் மற்றும் அபாயங்களை மனதில் வைத்து.
நெட்வொர்க்கிங், கட்டுரைகள் மற்றும் புத்தகங்களைப் படிப்பதன் மூலம் பெண்களில் ஆஸ்டியோபோரோசிஸ் பற்றி ஆராய்வது, மைலோ ஸ்டோரிலிருந்து பொருத்தமான தயாரிப்புகளைப் பயன்படுத்துதல் மற்றும் சுகாதார வசதிகளைப் பார்வையிடுதல் ஆகியவை தகவலறிந்த முடிவை எடுக்க உதவும்.
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |