Scans & Tests
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு குழந்தைக்காக தவம் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று உங்களுக்கு ஒரு சந்தேகம். ஆனால், அதனைத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்யும் வரை உங்களால் காத்திருக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு மாயை நடந்து அந்த நற்செய்தி உங்கள் செவிகளை உடனே எட்டும் என்றால், எப்படி இருக்கும்? ஆம், அப்படி ஒரு பரிசோதனை உள்ளது. கர்ப்பம் தரித்து 10 முதல் 12 நாட்களுக்குள் எளிதாக இந்த பரிசோதனையை செய்து தெரிந்து கொள்ளலாம். அது என்ன பரிசோதனை என்று உங்களுக்குத் தெரியுமா? அது தான் இரத்த பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை!
உங்கள் உடலிலுள்ள புரதங்கள், ஹார்மோன்கள் மற்றும் பிற பொருட்கள் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உதவுகின்றன. இரத்தத்தில் ஏற்படும் அசாதாரணங்கள், அதாவது ஒரு சிறிய ஹார்மோனின் அளவு அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவைக் கூட தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும். ஹெச்சிஜி பரிசோதனை மூலம் கட்டிகள் உட்பட உடலில் உள்ள பல்வேறு அசாதாரணங்கள் மற்றும் அசாதாரண வளர்ச்சிகளைக் கண்டறிய முடியும்.
மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (ஹெச்சிஜி) என்பது ஒரு ஹார்மோன் ஆகும். இது ஒரு பெண்ணின் கர்ப்பத்தை அல்லது உள்ளே இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பிறவி குறைபாடுகள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. கட்டிக்கான காரணம் ஹெச்சிஜி என்ற ஹார்மோனுடன் தொடர்புடையதா என்பதையும் இது குறிக்கிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு பெண்ணின் கருமுட்டை அல்லது ஆணின் விந்தணுவில் உள்ள அசாதாரணங்களின் விளைவாக ஏதேனும் அசாதாரண வளர்ச்சி கருவில் காணப்படுகிறதா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிக்க ஹெச்சிஜி அளவுகள் உதவுகின்றன.
இரத்த பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை என்பது மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (ஹெச்சிஜி) செறிவை மதிப்பிடும் ஒரு இரத்த பரிசோதனை ஆகும். கருத்தரித்த 10 நாட்களுக்குள் இந்த ஹார்மோனின் அளவு உயர்ந்து காணப்படும், எனவே இது கர்ப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும்.
கருவுறுதல் சிகிச்சைகள் (செயற்கை ஹெச்சிஜி ஹார்மோன் எப்போதாவது முதிர்ந்த நுண்ணறை தூண்டுதலுக்கு உதவுவதற்கும் அண்டவிடுப்பை (ஓவுலேஷன்) மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது) மற்றும் கர்ப்ப காலத்தில் ஏதேனும் வித்தியாசமாக உள்ளது என்ற கவலை இருக்கும் போதும் இரத்த பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை பயன்படுத்தப்படலாம்.
கர்ப்பத்திற்கான பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது - சிறுநீர் பரிசோதனை மற்றும் இரத்த பரிசோதனை. ஹெச்சிஜி இரத்த பரிசோதனைகள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:
ஹெச்சிஜி அளவு பரிசோதனை
ஹெச்சிஜி தர பரிசோதனை
அளவு ஹெச்சிஜி பரிசோதனை என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள ஹெச்சிஜி ஹார்மோனின் சரியான அளவை அறிய உதவுகிறது. இந்த சோதனையை ரிப்பீட் அளவு ஹெச்சிஜி பரிசோதனை அல்லது அளவு கர்ப்ப இரத்த பரிசோதனை என்றும் குறிப்பிடலாம். இந்த பரிசோதனை சில வகையான அரிதான புற்றுநோய்களை கண்டறியவும் உதவுகிறது. எக்ஸ்-கதிர்கள், எம்ஆர்ஐ-கள் மற்றும் முதுகுத்தண்டு பரிசோதனைகள் போன்ற கருவுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த சிகிச்சையும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளாக்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய இந்த இரத்தப் பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் இரத்தத்தில் உள்ள ஹெச்சிஜி அளவைப் பகுப்பாய்வு செய்வதனால் வரவிருக்கும் கருச்சிதைவு அல்லது எக்டோபிக் கர்ப்பம் போன்ற ஏதேனும் சிக்கல்களைக் கண்டறியலாம். உண்மையில், அளவு ஹெச்சிஜி இரத்த பரிசோதனைகள் குழந்தையின் வயதை மதிப்பிட மற்றும் டவுன் சிண்ட்ரோம் அல்லது எட்வர்ட்ஸ் நோய்க்குறி போன்ற கோளாறுகளை அடையாளம் காண உதவும்.
ஹெச்சிஜி அளவு பரிசோதனைக்கு மாறாக, இந்த பரிசோதனையானது உங்கள் இரத்தத்தில் ஹெச்சிஜி ஹார்மோன் எதேனும் உள்ளதா என்பதைத் கண்டறியும். இந்த ஹெச்சிஜி தர இரத்தப் பரிசோதனையானது உங்கள் இரத்தத்தில் எவ்வளவு ஹெச்சிஜி உள்ளது என்பது பற்றிய சரியான அளவைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்காது. இது பொதுவாக ஹெச்சிஜி அளவு சோதனைக்கு முன்னர் செய்யப்படுகிறது மற்றும் கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்கான முதல் படியாகும். ஹெச்சிஜி தர இரத்த பரிசோதனை பின்வரும் பெயர்களாலும் அறியப்படுகிறது:
ஹெச்சிஜி இரத்த பீட்டா சீரம்- குவாலிடெட்டிவ்
குவாலிடெட்டிவ் இரத்த சீரம் பரிசோதனை ஹெச்சிஜி
ஹெச்சிஜி சீரம், குவாலிடெட்டிவ்
மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் சிறுநீர் சோதனையானது முதன்மையாக கர்ப்பத்தை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. கருத்தரித்த 10 நாட்களுக்குப் பின்னர் கருவுற்ற முட்டை கருப்பைச் சுவருடன் இணைகிறது, இது ஹார்மோன் அளவுகளில் மாற்றத்தைத் தூண்டுகிறது. மாதவிடாய் ஆகாமல் நீங்கள் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அதனைத் தீர்மானிக்க ஆரம்பத்தில் சிறுநீர் மாதிரி எடுக்கப்படுகிறது. ஹெச்சிஜி அடிப்படையிலான கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவிகள் வீட்டில் இருப்பது பொதுவானது. சிறுநீர் அல்லது மல பரிசோதனையை விட இரத்த பரிசோதனை மிகவும் துல்லியமானது. இந்த பரிசோதனைகள் தவறான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் கொண்டுள்ளன.
இத்தகைய சிறுநீர் பரிசோதனையானது முட்டை கருவுற்ற ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் தான் சரியான முடிவுகளைத் தரும். நீங்கள் ஹெச்சிஜி சிறுநீர் பரிசோதனையை தர இரத்த ஹெச்சிஜி பரிசோதனைக்கு ஒத்ததாகக் கருதலாம், ஏனெனில், இது ஹெச்சிஜி ஹார்மோனின் இருப்பை மட்டுமே காட்டுகிறது, ஆனால் அதன் சரியான அளவைத் தெளிவுபடுத்தவில்லை.
நீங்கள் ஏற்கனவே கர்ப்ப பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி கர்ப்பத்தை உறுதிப்படுத்தியிருந்தால் அல்லது கருத்தரித்த 10-12 நாட்களுக்குள் கர்ப்பத்தை உறுதிப்படுத்த விரும்பினால், உங்கள் மருத்துவரிடம் செல்லும் போது பீட்டா ஹெச்சிஜி பரிசோதனையை செய்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம். இருப்பினும், வழக்கமான கர்ப்பத்திற்கு பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை முடிவுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பல மருத்துவர்கள் வழக்கமான கர்ப்ப உறுதிப்படுத்துதலுக்குப் பதிலாக கர்ப்பத்தை (கருமுட்டை உள்ள பை) உறுதிசெய்ய டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் பயன்படுத்துகின்றனர்.
கர்ப்பத்திற்கான பீட்டா ஹெச்சிஜி பரிசோதனையிலுள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், கருச்சிதைவுகள் போன்ற கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களை பற்றி முன்னதாகவே கண்டறிய முடியும். அவ்வாறு இருந்தால், ஹெச்சிஜி அளவுகள் உயரும் வேகத்தை சரிபார்க்க உங்கள் மருத்துவர் இரண்டு-நான்கு நாட்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனைகளை மீண்டும் செய்வார்.
இரத்தத்திலுள்ள ஹெச்சிஜி ஹார்மோனின் உண்மையான அளவைக் காட்டிலும் அதிகரிப்பின் வேகம் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் முக்கியமானது. கருச்சிதைவு ஏற்படுவதற்கான அதிக நிகழ்வு மெதுவாக அதிகரிக்கும் ஹெச்சிஜி அளவுகளால் குறிக்கப்படலாம்.
உங்கள் கருவுறுதல் சிகிச்சையானது வெற்றியடைந்ததா என்பதை அறிய உங்கள் மருத்துவர் உங்கள் அடுத்த மாதவிடாய் சுழற்சிக்கு முன் அல்லது அதன் போது இரத்த பீட்டா-ஹெச்சிஜி பரிசோதனைக்கு பரிந்துரைக்கலாம். கருத்தரிப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்க அல்லது கருப்பையக கருவூட்டலின் ஒரு பகுதியாக (ஐயூஐ அல்லது ஐவிஎஃப்) பயன்படுத்தப்படும் ஹெச்சிஜி ஊசி மருந்துகளானது, உடலை சுத்தப்படுத்தி, ஐவிஎஃப் அல்லது ஐயூஐ-க்கு உட்பட்ட பெண்களின் பரிசோதனை முடிவுகளில் தலையீட்டு இல்லாமல் இருப்பதைய உறுதி செய்ய கவனமாக சரியான நேரத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.
பீட்டா ஹெச்சிஜி பரிசோதனை மூலம் கண்டறியக்கூடிய பிற அசாதாரணங்கள் பின்வருமாறு:
கருப்பையிலுள்ள கட்டிகள்.
பிறவிக் குறைபாடுகள், ஏதேனும் உங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு இருந்தால்.
எக்டோபிக் கர்ப்பம்.
சிறுநீர் பாதை கட்டிகள்.
கருப்பை சுவரில் உள்ள கட்டிகள்.
பல கர்ப்பம்.
கர்ப்ப காலம் முழுவதும் ஹெச்சிஜி அளவுகளின் வாராந்திர அளவீடுகள் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, கர்ப்ப காலத்தின் இரண்டாம் பாதியில் ஹெச்சிஜி அளவுகள் அதிகப்படியாக அதிகரிக்கலாம் மற்றும் குறையலாம். கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய பொதுவான வாராந்திர ஹெச்சிஜி அளவின் சார்ட் பின்வருமாறு:
3 வாரங்கள் |
5-50 mIU/cc |
4 வாரங்கள் |
4-426 mIU/cc |
5 வாரங்கள் |
19-7,340 mIU/cc |
6 வாரங்கள் |
1,080-56,500 mIU/cc |
7 – 8 வாரங்கள் |
7,650-229,000 mIU/cc |
9 – 12 வாரங்கள் |
25,700-288,000 mIU/cc |
13 – 16 வாரங்கள் |
13,300-254,000 mIU/cc |
17 – 24 வாரங்கள் |
4,060-165,400 mIU/cc |
25 – 40 வாரங்கள் |
3,640-117,000 mIU/cc |
இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் அடைந்ததை அறியாமல் இருப்பது - ரகசிய கர்ப்பம்
பின்வரும் விஷயங்கள் மேலுள்ள இரத்த ஹெச்சிஜி அளவு சார்டை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள உதவும்:
ஒவ்வொரு 48-72 மணிநேரத்திற்கும் ஹெச்சிஜி அளவானது இரட்டிப்பாகும் வாய்ப்புண்டு.
கர்ப்பத்தின் 8வது வாரம் முதல் 11வது வாரம் வரை ஹெச்சிஜி அளவுகள் மிக அதிகமாக இருக்கும்.
கர்ப்பத்தின் 11வது வாரத்திற்குப் பின்னர் ஹெச்சிஜி அளவு மெதுவாக குறையத் தொடங்கும்.
ஹெச்சிஜி அளவுகள் 12வது வாரத்திலிருந்து ஒவ்வொரு 96 மணிநேரமும் அதிகமாகும்.
ஹெச்சிஜி அளவுகள் குறைவாக இருப்பது கருவின் பிறப்பு சம்மந்தமான அசாதாரணங்கள் மற்றும் சிறிய நோய்களைக் குறித்தாலும் கூட, உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கக் கூடும்.
ஒரு பெண்ணுக்கு முன்பே அதிக ஹெச்சிஜி அளவுகள் இருந்தால், 6-வார அல்ட்ராசவுண்ட் ஆனது தேடலைக் குறைக்கவும், மேலும் நோய் கண்டறியும் செயல்முறையின் துல்லியத்தை மேம்படுத்தவும் உதவும்
ஹெச்சிஜி அளவுகள் 5 mIU/mL-ஐ விடக் குறைவாக இருந்தால், நீங்கள் கர்ப்பமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஹெச்சிஜி அளவானது 25mIU/mL-க்கு மேல் இருந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும்.
ஹெச்சிஜி அளவு 6 முதல் 24 mIU/mL என்ற வரம்பில் இருந்தால், கர்ப்பத்தைத் தீர்மானிக்க மறுபரிசோதனை செய்வது அவசியம், இதற்கு 24 முதல் 72 மணிநேரம் வரை ஆகலாம்.
ஹெச்சிஜி அளவுகள் 1000 மற்றும் 2000 mIU/mL-க்கு இடையில் இருக்கும்போது, டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் ஆனது கருமுட்டை பைகளைத் தெளிவாகக் காட்டும்.
ஹெச்சிஜி அளவுகள் 1000 mIU/ML-க்கும் குறைவான அளவில் இருந்து, அல்ட்ராசவுண்ட் செய்யப்பட்டால் கருத்தரித்த தேதி தவறாக இருக்கலாம்.
முடிவுகள் பரவலாக மாறுபடும் என்பதால் ஒரு பெண் எப்போது கர்ப்பமாக இருக்கிறாள் என்பதைத் தீர்மானிக்க ஒரு தனிப்பட்ட ஹெச்சிஜி பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுவதில்லை.
இரத்தத்தில் உள்ள ஹெச்சிஜி அளவானது கருவுற்று எத்தனை வாரங்கள் ஆகிறது என்பதைக் குறிக்கும். ஹெச்சிஜி அளவு குறைவாக இருப்பது ஆபத்தான ஒரு அறிகுறியாகும். இது தொடர்ந்தால், மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஒரு மிகவும் தீவிரமான பிரச்சனையைக் குறிக்கலாம். அது கருச்சிதைவு, கரு வளர்ச்சி குறைபாடு அல்லது எக்டோபிக் கர்ப்பம் போன்ற கோளாறுகளாக இருக்கலாம். 48 முதல் 72 மணி நேரம் கழித்து, உங்கள் மருத்துவர் மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ள உங்களை வலியுறுத்தலாம்.
குறைந்த ஹெச்சிஜி அளவிற்கான சில காரணங்கள் பின்வருமாறு:
எக்டோபிக் கர்ப்பம்
கருச்சிதைவு.
கரு வளர்ச்சி குறைபாடு
ஹெச்சிஜி அளவுகள் அதிகமாக இருப்பதாக தோன்றுவதற்கு, குழந்தை பிறக்கப் போவதாக கணிக்கப்பட்ட தேதியில் ஏற்பட்டத் தவறு காரணமாக இருக்கலாம். கர்ப்ப ஹார்மோனின் இயல்பான அளவை விட அதிகமாக இருப்பது, பல கர்ப்பம் அல்லது "மோலார் கர்ப்பம்" போன்ற கருத்தரிப்பின் போது ஏற்படும் மரபியல் தவறுகளைக் குறிக்கலாம்.
HCG Tests in tamil, Beta HCG test in tamil, types of HCG test in tamil, Blood Beta Hcg Test: What Is It? Levels? How To Read It In English, Blood Beta Hcg Test: What Is It? Levels? How To Read It In Hindi, Blood Beta Hcg Test: What Is It? Levels? How To Read It In Telugu, Blood Beta Hcg Test: What Is It? Levels? How To Read It In Bengali
Yes
No
Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |