hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் போது சைவ உணவு முறையை பின்பற்றலாமா? arrow

In this Article

     பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் போது சைவ உணவு முறையை பின்பற்றலாமா?

    Diet & Nutrition

    பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் போது சைவ உணவு முறையை பின்பற்றலாமா?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    உங்கள் மூன்றாவது டிரைமெஸ்டரில் உங்கள் குழந்தையின் வளர்ச்சியானது விரைவாக இருக்கும், ஏனெனில் அவர்களின் எடை அதிகரித்து, கருப்பைக்கு வெளியே இருக்கும் நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக, நீங்களும் விரைவாக எடை அதிகரிப்பதை நீங்கள் காணலாம்.

    நீங்கள் நன்கு சமச்சீரான உணவைப் பின்பற்றினால் அல்லது 3 வது டிரைமெஸ்டர் டயட் சார்ட்டினைப் பின்பற்றினால், எடை அதிகரித்தல் பற்றி அதிகம் கவலைப்பட தேவை இருக்காது. இருப்பினும், உங்கள் குழந்தையின் கொழுப்பு அடுக்குகள் வளர்வதால் உங்கள் கலோரி தேவைகளும் அதோடு சேர்ந்து அதிகரிக்கும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் போது நீங்கள் உட்கொள்ள வேண்டிய வைட்டமின்கள்

    இரத்த உறைதலை வைட்டமின் கே ஊக்குவிக்கிறது. இது உண்மையில் பிரசவத்தின் போது அவசியம். இதன் விளைவாகவே, உங்கள் மூன்றாவது டிரைமெஸ்டரில், பிரசவத்தின் போது, இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, வைட்டமின் கே நிறைந்த உணவுகளை நிறைய உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இன்று மூன்றாவது டிரைமெஸ்டர் பிரக்னன்சி உணவு அட்டவணையைப் பின்பற்றுவதை கருத்தில் கொள்ளுங்கள்!

    கர்ப்பத்தின் ஆரம்ப கட்டம் மற்றும் இரண்டாவது டிரைமெஸ்டரில் இருந்ததைப் போலவே, மூன்றாவது டிரைமெஸ்டரிலும் இரும்புச்சத்து எடுப்பது, இரத்த சோகையைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாகும். உங்களுக்கு இரும்புச்சத்து குறைவாக இருந்தால், அதை நிவர்த்தி செய்யாவிட்டால், உங்களுக்கு குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது இறுதியில் உங்கள் குழந்தையை தொற்றுநோய்களுக்கு எளிதாக பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது.

    சில நேரங்களில், நீங்கள் ஒரு சமச்சீர் உணவைக் கொண்ட டயட் சார்ட்டினைப் பின்பற்றத் தொடங்கியிருந்தால், சில சப்ளிமெண்ட்களை நீங்கள் குறைக்க வேண்டியிருக்கும். மீண்டும், உங்கள் மூன்றாவது டிரைமெஸ்டரில் எந்த சப்ளிமெண்ட் சிறந்தது என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பரிந்துரைக்கப்படுகிறது.

    மூன்றாவது டிரைமெஸ்டர் பிரக்னன்சி டயட் சார்டின் அடிப்படை திட்டம்

    நீங்கள் அசாதாரண உணவுகளுக்காக ஏங்குகிறீர்கள் என்றால், மூன்றாவது டிரைமெஸ்டர் பிரக்னன்சி டயட் சார்ட் உண்மையில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் உங்கள் குழந்தை உடல் ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் வளர உதவும். மேலும், டயட் சார்டின் அடிப்படை திட்டம் என்பது எளிமைக்காக வெவ்வேறு வாரநாட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இப்போது சமச்சீர் உணவை மிக எளிதாக உட்கொள்ளலாம்.

    உங்களுக்கான டயட் சார்ட்டினை திட்டமிடுவதற்கு முன், ஒரு சிறப்பு உணவியல் நிபுணரிடம் பேசவும். ஏனெனில், உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில உணவுப் பொருட்களை உங்கள் உணவியல் நிபுணர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

    பின்வரும் அடிப்படை 3வது டிரைமெஸ்டர் பிரக்னன்சி டயட் சார்ட்னை நீங்கள் பின்பற்றலாம், குறிப்பாக நீங்கள் கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் இருந்தால் இந்த டயட் சார்ட்டினை பின்பற்றத் தொடங்கலாம். இந்த சார்ட்டினைப் பின்பற்றுவது உங்கள் உணவை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றும். ஏனெனில், பல பெண்களுக்கு பொதுவாக இந்த காலகட்டத்தில் அவர்கள் உட்கொள்ள வேண்டிய அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சேர்த்து கொள்வது என்பது கடினமான ஒன்றாக உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை

    அனைவருக்கும் பிடித்த ஞாயிற்றுக்கிழமை காலையில், நீங்கள் வறுத்த காளான்களுடன் முழு கோதுமை பிரட் டோஸ்ட்டை சாப்பிடலாம். மேலும், உங்கள் காலைப் பொழுதை புத்துணர்ச்சியாக்க வாழைப்பழ மில்க் ஷேக்கும் குடிக்கலாம். காலை மற்றும் மதிய உணவிற்கு இடையே மாதுளை சாப்பிடலாம். மதிய உணவில் பாகற்காய் மற்றும் வெள்ளரி பச்சடியுடன் ஏதேனும் காய்கறி சேர்த்த கிரேவி சேர்த்துக் கொள்ளலாம்.

    நீங்கள் சப்பாத்தி அல்லது சாதம் சேர்த்துக் கொள்ளலாம். பிற்பகல் நீங்கள் எலுமிச்சை ஜுஸ், நட்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சையை சாப்பிடலாம். இரவு உணவிற்கு, தக்காளி சாஸ் சேர்க்கப்பட்ட பாஸ்தா ஒரு சிறந்த தேர்வாகும்.

    திங்கட்கிழமை

    காலை உணவாக, லஸ்ஸியுடன் வெந்தயப் பராத்தா சாப்பிடலாம். பப்பாளி அல்லது நீங்கள் விரும்பும் வேறு ஏதேனும் பழங்களை சிற்றுண்டி வேளையில் சாப்பிடலாம். மதிய உணவிற்கு, கேரட் பொரியலுடன் வெண்டைக்காய் சேர்த்து சாப்பிடலாம். மேலும், மதிய சிற்றுண்டி வேளையில் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்லது சீரக தண்ணீர் போன்ற ஆரோக்கியமான ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். இறுதியாக, இரவு உணவிற்கு காரமணியுடன் முள்ளங்கி பொரியல் சாப்பிடலாம்.

    செவ்வாய்கிழமை

    செவ்வாய் அன்று காலை உணவில் சில சுவையான வேர்க்கடலை சேர்த்து செய்யப்பட்ட ஜவ்வரிசி உப்புமா சாப்பிடலாம். காபி அல்லது தேநீர் அருந்தலாம். காலை சிற்றுண்டி வேளையில் உலர்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவிற்கு, காய்கறி கிச்சடியுடன் அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.

    உங்களின் பிற்பகல் சிற்றுண்டி வேளையில் இளநீருடன் வறுத்த சோளம் சேர்த்துக் கொள்ளலாம். இரவு உணவிற்கு கம்புடன் சுரைக்காய் கிரேவி சாப்பிடலாம்.

    புதன்கிழமை

    புதன்கிழமை அன்று, காலை உணவாக கோதுமை கஞ்சி அல்லது ஓட்ஸ் சாப்பிடலாம். திராட்சையை சிற்றுண்டி வேளையில் சாப்பிடலாம். உங்கள் மதிய உணவில் பட்டாணியுடன் உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளலாம். பிற்பகல் சிற்றுண்டி வேளையில் நீங்கள் டோக்லா மற்றும் மோர் சாப்பிடலாம். இரவு உணவிற்கு, நீங்கள் பராத்தா மற்றும் பீட்ரூட் பச்சடியை முயற்சிக்கலாம்!

    வியாழக்கிழமை

    வியாழன் அன்று காலை உணவில் டீயுடன் பன்னீர் சாண்ட்விச் சேர்க்கலாம். சிற்றுண்டி வேளையில் நீங்கள் கொய்யா அல்லது சப்போட்டா சாப்பிடலாம். பீன்ஸ் மற்றும் காலிஃபிளவர் பொரியல் மதிய உணவிற்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பிற்பகல் சிற்றுண்டி வேளையில் நீங்கள் பாதாம் பால் சாப்பிடலாம். இரவு உணவில் சிவப்பு பருப்பு மற்றும் பீன்ஸ் சேர்க்கவும்.

    வெள்ளிக்கிழமை

    ஒரு அற்புதமான வெள்ளிக்கிழமையின் காலை, நீங்கள் காலை உணவாக ஆப்பிள் ஜுஸுடன் ஓட்ஸ் சாப்பிடலாம். சிற்றுண்டி வேளையில் சப்போட்டா சாப்பிடலாம். மதிய உணவில், உருளைக்கிழங்கு மற்றும் புதினா சட்னியுடன் வெங்காய பராத்தா சேர்க்கவும்

    மதிய சிற்றுண்டி வேளையில் நீங்கள் இனிப்பு வகைகளை சாப்பிடலாம், குறிப்பாக உங்களுக்கு சாக்லேட்ஸ் பிடிக்கும் என்றால் அதை இந்த சமயத்தில் சாப்பிடலாம்! இரவு உணவிற்கு, வெண்டைக்காய் பொரியலுடன் வெள்ளரிக்காய் சாலட்டை முயற்சிக்கவும். உங்கள் ஸ்பெஷல் டின்னராக நீங்கள் சாதம் அல்லது சப்பாத்தி சாப்பிடலாம்.

    சனிக்கிழமை

    சனிக்கிழமையன்று, நீங்கள் மோருடன் ரவை தோசை சாப்பிடலாம். காலை சிற்றுண்டி வேளையில் சாட் சாலட் சாப்பிடலாம். மதிய உணவில் உளுந்து, கொண்டைக்கடலை மாவு ரொட்டி சாப்பிடலாம். மதிய ஸ்நாக்ஸாக, அன்னாசி லஸ்ஸி அல்லது பொரி முயற்சி செய்து பாருங்கள். இரவு உணவிற்கு, வெங்காய பச்சடியுடன் கொள்ளு சாப்பிடலாம்!

    அது மட்டுமல்லாமல், உங்கள் உணவில் நீங்கள் விரும்பும் அனைத்து உணவையும் சேர்த்து கொள்ள இந்த நாளை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறாக, பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரில் உங்கள் ஃபுட் சார்ட்டில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஏமாற்று நாளை சேர்த்துக்கொள்வது உங்கள் உணவு ஏக்கத்தையும் திருப்திப்படுத்த உதவும்!

    இதையும் படிக்கலாமே! - 10 வார கர்ப்பத்திற்கான டயட் சார்ட் பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய குறிப்புகள்

    முடிவுரை

    உங்கள் பிரக்னன்சியின் மூன்றாவது டிரைமெஸ்டரின் ஆரம்பம் என்பது உண்மையில் மிகவும் உற்சாகமாக இருக்கும். சொல்லப்போனால், உங்கள் ஃபுட் சார்ட்டினை பின்வற்றுவது தற்போது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இருப்பினும், உங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களை சரியான அளவுகளில் உட்கொள்வதன் மூலம் நீங்கள் ஃபுட் சார்ட்டினை ஓரளவுக்கு மீறுவது தவறல்ல.

    இந்த கட்டத்தில், நீங்கள் எடுத்துவரும் பல்வேறு சப்ளிமெண்ட்ஸ் நுகர்வினை குறைத்தல் வேண்டும். எவ்வாறாயினும், எந்தவொரு விஷயத்தை மேற்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது. அது மட்டுமல்லாமல், தாயும் சேயும் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த மாதாந்திர மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |