Caring for your Newborn
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் குழந்தை பிறந்த புதிதில், அவர்களின் தோல் மிக மென்மையானதாக இருக்கும். அதோடு, அதற்கு சிறப்பு கவனமும் தேவைப்படும். தோல் உரிந்து வருதல் என்பது பிறந்த முதல் சில வாரங்களில் பல குழந்தைகள் அனுபவிக்கும் ஒரு பொதுவான கண்டிஷன் ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளில் தோல் உரிந்து வருவற்கான சில பொதுவான காரணங்களையும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சங்கடமான நிலையில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதையும் இங்கே அறியலாம்.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தோல் உரிந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இது சூரியன், காற்று அல்லது குளிர்ந்த வானிலை; சில இரசாயனங்கள் அல்லது எரிச்சலூட்டும் பொருட்கள் குழந்தைகள் மீது படுவதால்; அல்லது சில மருந்துகளினால் ஏற்படும் எதிர்வினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் ஏற்படலாம். இது படை நோய் அல்லது சோரியாசிஸ் போன்ற மிகவும் தீவிரமான நோய்களுக்கான ஆரம்ப கண்டிஷனின் அறிகுறியாகவும் இருக்கலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தோல் உரிந்து வருவதை நீங்கள் கவனித்தால், காரணத்தை அறிந்துகொள்ளவும் பொருத்தமான சிகிச்சையைப் பெறவும் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தோல் உரிந்து வருதல் பெரும்பாலும் வெர்னிக்ஸ் கேசோசா, படை நோய் அல்லது இக்தியோசிஸ் போன்ற நோய்களால் ஏற்படுகிறது. இந்த கண்டிஷனில் குழந்தைகளின் தோல் வறண்டு எரிச்சலடையக்கூடும். இதுவே தோல் உரிந்து வருவதற்கும் வழிவகுக்கும். இந்த கண்டிஷன்கள் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என்றாலும், அவை குழந்தைக்கு அசௌகரியத்தை அளிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் தோல் உரிந்து வருவதைக் கவனித்தால், உங்கள் குழந்தை மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தோல் உரிந்து வருவதற்கான சில பொதுவான காரணங்கள் இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளன:
வெர்னிக்ஸ் கேசோசா என்பது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமத்தை கவர் செய்திருக்கும் ஒரு மெழுகு போன்ற உட்பொருளை உள்ளடக்கியுள்ளது. இது அம்னோடிக் திரவத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் மற்றும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் என்று கருதப்படுகிறது. வெர்னிக்ஸ் கேசோசா புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் உரிந்து வருவதற்கு காரணமாக இருக்கும், ஏனெனில் இது ஒரு மெழுகு பொருள், இது சருமத்தில் உள்ள துளைகளை அடைத்துக்கொண்டிருக்கும்.
பெரும்பாலும் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளில் தோல் உரிப்பை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அனைத்து பாதுகாப்பு வெர்னிக்ஸ் கேசோசாவும் குழந்தையின் தோலால் முழுமையாக உறிஞ்சப்படுகிறது. பாதுகாப்பு தடை முழுமையாக உறிஞ்சப்படுவதால் இது வறண்ட சருமத்தை ஏற்படுத்துகிறது. இது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் தோல் உரிக்க வழிவகுக்கிறது.
படை நோய் என்பது தோல் வறண்டு, அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் ஒரு கண்டிஷன் ஆகும். ஒவ்வாமை, எரிச்சல் மற்றும் மரபியல் உள்ளிட்ட பல விஷயங்களால் இது ஏற்படலாம். படை நோயானது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் உரிந்து வரக் காரணமாக இருக்கக்கூடும். ஏனெனில், இது தோல் வறண்டு எரிச்சலடையச் செய்கிறது.
இக்தியோசிஸ் என்பது தோல் வறண்டு செதில் செதிலாக உதிர்ந்து வரக்கூடிய ஒரு கண்டிஷன் ஆகும். மரபியல், சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் நீரிழப்பு உள்ளிட்ட பல விஷயங்களால் இது ஏற்படலாம். இக்தியோசிஸால் ஏற்படும் தோல் வறட்சி மற்றும் செதில் திட்டுகள் ஆனது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானதாக இருப்பதால் தோல் உரிந்து வர வழிவகுக்கிறது.
இந்த கண்டிஷன்கள் அனைத்தும் தோல் உரிந்து வருவதற்கு காரணமாக அமையக்கூடும். குறிப்பாக பிறந்த குழந்தைகள் அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பமான சூழ்நிலைகளில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது இவ்வாறு ஏற்படுகிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தோல் உரிந்து வருதல் என்பது ஒரு பொதுவான ஆனால் குழந்தைக்கு அதிக பாதிப்பில்லாத ஒரு கண்டிஷன் ஆகும் இது உங்கள் குழந்தை பிறந்த முதல் சில வாரங்களில் ஏற்படலாம். இருப்பினும், உங்கள் குழந்தையின் தோல் உரிந்து வருவது வேறு ஏதேனும் ஆபத்துக்கு அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே, அதைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய சில எளிய விஷயங்கள் இங்கே உள்ளன.
புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிக நேரம் குளிக்க வைப்பதைத் தவிர்க்கவும். அதிகப்படியான தண்ணீர் உங்கள் குழந்தையின் மெல்லிய சருமத்தை வறண்டதாக்கக்கூடும். எனவே, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உங்கள் குழந்தையை குளிப்பாட்டுங்கள்.
குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானதாக இருப்பதால், அதிக வெப்பநிலை காரணமாக எளிதில் தோல் உரிந்து வரலாம் என்பதால் வெந்நீரில் குளிப்பாட்டுவதனால் தோல் உரிந்து வருவதை அதிகரிக்க உதவும். உங்கள் குழந்தைக்கு வெந்நீரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிக்கலாமே! - புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பராமரிப்பு குறிப்புகள்
உங்கள் குழந்தையைக் குளிக்க வைத்த பிறகு எப்போதும் காமிடோஜெனிக் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். வறண்டு போதல் மற்றும் உரிந்து வருவதைத் தடுக்க உதவும் ஹைபோஅலர்ஜெனிக் பேபி லோஷன் அல்லது கிரீம் பயன்படுத்தவும்.
உடலில் ஏற்படும் நீரிழப்பானது வறண்ட மற்றும் செதில் சருமத்திற்கும் வழிவகுக்கும். இது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் தோல் உரிந்து வருவதில் அதிக பங்களிக்கும். குழந்தைக்கு தோல் உரிந்து வருவதைத் தடுக்க உங்கள் குழந்தையை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
அதிக வெப்பநிலையைத் தவிர்க்கவும். சூடான மற்றும் குளிர்ந்த வானிலை இரண்டும் உங்கள் குழந்தையின் சருமத்தை வறண்டதாக்கக்கூடும். எனவே, உங்கள் வீட்டை குழந்தைக்கு ஏற்ற வெப்பநிலையில் வைத்திருக்க முயற்சிக்கவும். குளிர்ந்த காற்று ஒரு குழந்தையின் தோலை வறண்டு போகச் செய்யும். இதனால், தோல் அடிக்கடி உரிந்து வரும்.
உங்கள் குழந்தையின் முகம் மற்றும் உடலை வெதுவெதுப்பான நீர் மற்றும் இரசாயனம் கலக்காத குழந்தை சோப் பயன்படுத்தி குளிக்க வைக்கவும். ஸ்க்ரப்பிங் அல்லது கடுமையான க்ளென்சர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது உங்கள் குழந்தையின் சருமத்தை எரிச்சலூட்டும் மற்றும் தோல் உரிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் குழந்தைக்கு காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள். பருத்தி போன்ற இயற்கை துணிகளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆடைகளைத் தேர்வுசெய்யுங்கள். இது உங்கள் குழந்தையின் தோல் வறண்டு போகாமல் இருக்கவும், தோல் உரிந்து வருவதை தடுக்கவும் உதவும். மேலும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு டயப்பர் தடிப்புகள் மற்றும் தோல் உரிந்து வருவதைத் தடுக்க துணி டயப்பர்கள் மற்றும் பேபி வைப்களைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் ஈரப்பதத்தை சேர்க்க ஈரப்பத மூட்டியைப் பயன்படுத்தவும். காற்றில் ஈரப்பதத்தைச் சேர்ப்பது உங்கள் குழந்தையின் தோல் வறண்டு உரிந்து வருவதைத் தடுக்க உதவும்.
புதிதாகப் பிறந்த குழந்தையின் மென்மையான சருமத்திற்கு நேரடி சூரிய ஒளி மிகவும் தீங்கு விளைவிக்கும். தோல் உரிவதைத் தடுக்க உங்கள் குழந்தையை எப்போதும் நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைக்கவும்.
உங்கள் குழந்தையின் சருமத்தத்தில் இது போன்று தோல் உரிந்து வருவது உங்களுக்குக் கவலையை ஏறப்டுத்தினால், உங்கள் மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவரிடம் இது பற்றி பேசுங்கள். தோல் உரிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு அடிப்படை கண்டிஷன்களையும் அடையாளம் தெரிந்து கொள்ளவும், அதற்கான சிறந்த சிகிச்சை விருப்பங்களை பரிந்துரைக்கவும், அவை உங்களுக்கு உதவக்கூடும்.
Skin peeling in tamil, skin peeling for new borns in tamil, treatments for new born skin peeling in tamil, reasons for new born skin peeling in tamil, how to cure new born skin peeling in tamil
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |