Baby Care
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வதனால் எண்ணற்ற நன்மைகள் விளையும். உங்களுடைய குழந்தையை நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு மென்மையாக தொடுகிறீர்களோ, அந்தளவிற்கு அந்த தொடுதல் மூலமாக அவர்களுக்கு நெருக்கமாவீர்கள். நீங்கள் அவர்கள் மீது அக்கறையுடன் இருப்பதை உணர்வார்கள். மேலும், நீங்கள் குழந்தையுடன் மிகவும் நெருக்கமாவதற்கு நீங்கள் தொடர்ச்சியாக குழந்தைக்கு மசாஜ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
மேலும், இதனை உறுதியாகச் சொல்ல இன்னும் கூட ஆராய்ச்சி தேவை என்றாலும், குழந்தைக்கு மசாஜ் செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
‘சரி இதனை எப்படி தொடங்குவது?’ என்ற கேள்வி உங்களுக்கு வரலாம், இல்லையா? பல நன்மைகள் மற்றும் நுட்பங்கள் பற்றிய தகவலுடன் ஒரு சீட் சீட்டை உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு செய்யக்கூடிய பல வகையான மசாஜ்களைப் பற்றி இந்தக் கட்டுரை விரிவாக விவரிக்கிறது.
குழந்தையின் வலுவான எலும்புகளுக்காக செய்யப்படும் எண்ணெய் மசாஜ் ஆனது குழந்தையின் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
குழந்தை மசாஜிற்கான ஆராய்ச்சி மற்றும் நடைமுறைக்கு பெயர்போன சர்வதேச அமைப்பான, சர்வதேச குழந்தை மசாஜ் சங்கமானது (இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஃபார் இன்ஃபேன்ட் மசாஜ்) (ஐஏஐஎம்) குழந்தைக்கு மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் செரிமான அமைப்புகளை மேம்படுத்தலாம் என்று கூறுகிறது. நோய்களால் பாதிக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பின்வருபவை உதவியாக இருக்கும்:
தசை உள்ளழுத்தம், வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் வலிகள், மற்றும் பல் முளைத்தல் தொடர்பான அசௌகரியம் போன்றவற்றை இது எளிதாக்குகிறது. மேலும், குறைப்பிரசவ குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலமாக அவர்கள் செழிப்பாக வளர்வதோடு அவர்களின் வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
மறுபுறம், கோக்ரேன் நடத்திய ஒரு முறையான ஆய்வின்படி, மேற்கூறப்பட்ட நன்மைகளை ஆதரிப்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று முடிவு செய்துள்ளது. இந்த கூற்றுக்களை ஏற்றுக்கொள்ளவதற்கும், ஆதரவளிப்பதற்கும் கூடுதல் சான்றுகள் தேவை என்றும் அது கூறியுள்ளது.
நீங்கள் சரியாக மசாஜ் செய்து அதன் பலனை முழுமையாக அனுபவிக்க உங்கள் குழந்தைக்கு ஒரு சில முறை மசாஜ்கள் செய்ய வேண்டியிருக்கலாம். ஒவ்வொரு புதிய திறமையுடனும், உங்கள் குழந்தையுடனான உங்கள் தொடர்பு வலுவாக மாறும். அன்பும் அதிகரிக்கும். அவர்களுடன் இன்னும் நெருக்கமாவீர்கள். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது உங்களுக்கு புதிது என்றாலும் அதனை சரியாகச் செய்ய நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
உங்களுடைய குழந்தைக்கு மசாஜ் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்கு, நீங்கள் முதலில் அவர்களுடைய மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களுக்கு தொடுதலை அறிமுகப்படுத்தத் தொடங்குங்கள் என்று ஐஏஐஎம் (IAIM) பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு பாலூட்டுகிறார்கள். இது கங்காரு பராமரிப்பு அல்லது சருமத்துடன் சரும பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது. முதலில் உங்களுடைய குழந்தையின் கால்களையும் முதுகையும் மென்மையாக வருடுங்கள். பின்னர், கைகள், விரல்கள் என ஒவ்வொரு பாகத்தையும் வருடி அவர்களை அரவணைத்து சீராட்டுங்கள்.
குழந்தை பிறந்த சில வாரங்களுக்குப் பிறகு நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆரம்பிக்கலாம். இருந்தாலும், உங்களுடைய குழந்தையின் மனநிலையை கவனித்து, அதற்கேற்றவாறு நீங்கள் உங்கள் வேலையைச் சரி செய்து கொள்ளலாம். உங்களுடைய குழந்தைக்கு மசாஜ் செய்வதர்கு நீங்கள் சிறந்த பேபி மசாஜ் எண்ணெயுடன் தயாராக இருக்கும்போது, அவர்கள் உங்களுடைய கவனிக்கும்படியும், நிதானமாகவும் திருப்தியாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் மசாஜ் முறையை எப்போதும் பயன்படுத்தாதீர்கள்.
மைலோ கிளினிக்கின் கூற்றுப்படி, உங்களுடைய குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது அவர்கள் தங்களுடைய தலையை நகர்த்தினாலோ அல்லது கைகளை கடினமாக்கிக் கொண்டாலோ, அப்பொழுது மசாஜ் செய்வது சரியானதாக இருக்காது. இந்த மசாஜை குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் செய்ய வேண்டுமென்று மேயோ கிளினிக் பரிந்துரைக்கிறது. சாப்பிட்ட உடனேயே குழந்தைக்கு மசாஜ் செய்தால் குழந்தைக்கு வாந்தி ஏற்படலாம்.
இதையும் படிக்கலாமே! - குழந்தைகளுக்கு ஏற்படும் இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள் மற்றும் அதன் தீர்வுகள்
நீங்கள் எந்தளவிற்கு அடிக்கடி மசாஜ் செய்கிறீர்கள் என்பது உங்களையும் உங்கள் குழந்தையையும் பொறுத்தது. சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு தினமும் எண்ணெய் மசாஜ் செய்கிறார்கள், சில பெற்றோர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்வார்கள்.
உங்கள் பிள்ளையை அன்றைய நாளுக்கு தயார்படுத்துவதற்காக, குழந்தைகளுக்கான மசாஜ் எண்ணெய்களைக் கொண்டு காலையிலேயே மசாஜ் செய்யலாம் அல்லது அவர்கள் ஓய்வெடுக்கவும், நன்றாக தூங்குவதற்கும் உதவும் வகையில், படுப்பதற்கு முன்பு மாலையில் செய்யலாம். உங்கள் குழந்தை செய்கை மூலம் உங்களிடத்தில் எதையாவது தெரிவிக்கக் கூடும். அதனை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், இதனால் நீங்கள் உங்களுடைய குழந்தைக்கு மிகவும் பயனுள்ள வகையில் மசாஜ் செய்ய ஆரம்பிக்கலாம்.
சிறந்த குழந்தை மசாஜ் எண்ணெய் ஆனது அழகான மற்றும் அமைதியான சிகிச்சைக்கு உதவும். இது குழந்தையை அமைதிப்படுத்துவதோடு, உங்களை உங்கள் குழந்தையுடன் பிணைக்கும் நேரத்தையும் ஊக்குவிக்கிறது. இருந்தாலும், எல்லா பெற்றோருக்கும் இவ்வாறு குழந்தைக்கு மசாஜ் செய்யவதில் இயற்கையான ஈடுபாடு இருக்காது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது முதலில் கடினமாக இருந்தால், அது உங்கள் ஊக்கத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் சரியாக மசாஜ் செய்து அதன் பலனை முழுமையாக அனுபவிக்க உங்கள் குழந்தைக்கு ஒரு சில முறை மசாஜ்கள் செய்ய வேண்டியிருக்கலாம். ஒவ்வொரு புதிய திறமையுடனும், உங்கள் குழந்தையுடனான உங்கள் தொடர்பு வலுவாக மாறும். அன்பும் அதிகரிக்கும். அவர்களுடன் இன்னும் நெருக்கமாவீர்கள். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது உங்களுக்கு புதிது என்றாலும் அதனை சரியாகச் செய்ய நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |