Pregnancy Complications
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
இரசாயன கர்ப்பம் அதாவது கெமிக்கல் பிரக்னன்ஸி என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? மருத்துவர் அல்ட்ராசவுண்ட் மூலம் உங்கள் குழந்தையின் வளர்ச்சியை அறிவது பற்றிய கிளினிக்கல் பிரக்னன்ஸி போல் அல்லாமல் இரசாயனங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் பாசிட்டிவ் பிரக்னன்ஸி ரிசல்ட்டை பெறுவது ஆகும்.
கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை பெண்கள் கெமிக்கல் பிரக்னன்ஸி தங்களுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. நவீன பிரக்னன்ஸி பரிசோதனைகள் மிகவும் சென்சிடிவானவை, அவை பீரியட்ஸ் தவறிய மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் பிரக்னன்ஸியை கண்டறிகின்றன.
பாதிக்கும் மேற்பட்ட கர்ப்பத்தில் இப்போதெல்லாம் கருச்சிதைவு ஏற்படுகிறது. பெரும்பாலானவை கெமிக்கல் பிரக்னன்ஸி ஆகும். இருப்பினும், பெண்களுக்கு இருக்கும் கெமிக்கல் பிரக்னன்ஸிகளின் உண்மையான எண்ணிக்கையை தீர்மானிப்பது கடினம். இது போன்ற சூழலில் பெண் அறிகுறிகளைக் கொண்டிருப்பதற்கு முன்பு அல்லது பீரியட்ஸ் மிஸ் ஆவதற்கு முன்பே கர்ப்பம் கலைந்துவிடுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு தங்களுக்கு இருப்பது கெமிக்கல் பிரக்னன்ஸி என்பதே கூட தெரியாது.
கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் கருச்சிதைவு கூட மன உளைச்சலை ஏற்படுத்தும். அது உங்களுக்கு ஏற்பட்டால், உங்களை அதிலிருந்து மீட்க நேரம் ஒதுக்குங்கள் மற்றும் அந்த இழப்பைச் சமாளிக்க தேவையான உதவியைப் பெறுங்கள்.
கெமிக்கல் பிரக்னன்ஸியில், கருவானது எச்.சி.ஜி (ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின்)-ஐ உற்பத்தி செய்கிறது, இது கரு வளர்வதற்கான ஹார்மோனை உருவாக்குகிறது. பிரக்னன்ஸியைக் கண்டறிய மருத்துவர்கள் இந்த ஹார்மோன் பிரக்னன்ஸி பரிசோதனைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு கரு வளருவதை நிறுத்தும்போது எச்.சி.ஜி-யை உருவாக்குவதையும் நிறுத்துகிறது.
கெமிக்கல் பிரக்னன்ஸியில், ஒரு கரு வளர்வதை ஏன் நிறுத்துகிறது என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. மரபணு உருவாக்கம் அல்லது டி.என்.ஏ சார்ந்த பிரச்சனை காரணமாக கரு பெரும்பாலும் வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. ஒரு கரு கருப்பை புறணியில் பொருத்திக் கொள்ளவோ அல்லது உருவாகவோ முடியவில்லை. இதன் விளைவாக, உங்கள் எச்.சி.ஜி அளவுகள் குறைகின்றன, மேலும் பிரக்னன்ஸி பரிசோதனைகள் நெகட்டிவ் முடிவுகளை அளிக்கின்றன.
பாசிட்டிவ் ரிசல்ட் வந்த பிறகு உங்களுக்கு பீரியட்ஸ் வரும்.
உங்கள் பிரக்னன்ஸி பரிசோதனையில் சில வாரங்கள் பாசிட்டிவ் ரிசல்ட்டாக இருந்து பின்னர் நெகட்டிவ் ரிசல்ட்டை அளிக்கும்.
உங்களுக்கு பீரியட்ஸ் நீண்ட நாட்களுக்கு இருக்கும் மற்றும் அந்த சமயத்தில் ஏற்படும் வயிற்று தசை பிடிப்பு வழக்கத்தை விட கடுமையாக இருக்கும்.
உங்களுக்கு பிரக்னன்ஸி பரிசோதனையில் பாஸிட்டிவான ரிசல்ட் வந்திருக்கும், ஆனால் ஆரம்ப கால பிரக்னன்ஸி அறிகுறிகள் ஏதும் இருக்காது.
பொதுவாக உங்களுக்கு கெமிக்கல் பிரக்னன்ஸி ஏற்பட்டு அதனால் உங்களுக்கு கருச்சிதைவு நிகழ்ந்த 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு உங்களுக்கு மீண்டும் பீரியட்ஸ் தொடங்கும்.
ஒருவருக்கு கெமிக்கல் பிரக்னன்ஸி இருக்கிறது என்றால் அவர் எப்போதுமே கருத்தரிக்கவோ அல்லது ஆரோக்கியமான குழந்தையைப் பெறவோ முடியாது என்று அர்த்தமல்ல. கருச்சிதைவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், கருத்தரிப்பதில் உங்களுக்கு உதவ வழிகள் உள்ளன.
உங்களுக்கு பலமுறை கெமிக்கல் பிரக்னன்ஸி ஏற்பட்டிருந்தால், உங்கள் மருத்துவர் அடிப்படை சிக்கலைத் தீர்மானிக்க சோதனைகளைச் செய்யலாம். உங்கள் மருத்துவர் அடிப்படை காரணத்தை கண்டறிந்து குணப்படுத்த முடிந்தால், நீங்கள் மீண்டும் கெமிக்கல் பிரக்னன்ஸி அடைவதை தவிர்க்க முடியும்.
சிகிச்சையளிக்கப்படாத நோய்த்தொற்று ஆரம்பத்திலேயே இழப்பை ஏற்படுத்தும் உதாரணமாக நோய்தொற்றை அகற்ற ஆன்டிபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் மற்றும் ஆரோக்கியமான பிரசவத்தை பெறலாம். கருப்பை பிரச்சினைகள் காரணமாக இழப்பு ஏற்பட்டால் ஆரோக்கியமான பிரக்னன்ஸியை அடைய உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
கெமிக்கல் பிரக்னன்ஸி என்பது உடலில் பிரக்னன்ஸி ஹார்மோனை உற்பத்தியைத் தூண்டும் ஒரே நிலை அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் கருப்பைக்கு வெளியே முட்டை வளரும் போது ஒரு எக்டோபிக் பிரக்னன்ஸியும் எச்.சி.ஜி அளவை அதிகரிக்கும். எக்டோபிக் பிரக்னன்ஸியும் கெமிக்கல் பிரக்னன்ஸி போல தோற்றமளிக்கக்கூடும் என்பதால், அதை நிராகரிக்க உங்கள் மருத்துவர் சோதனைகளுக்கு உத்தரவிடலாம்.
கருத்தரித்த பத்து முதல் பதினான்கு நாட்களுக்குப் பிறகு, அடுத்து வரக்கூடிய பீரியடில், லேசாக வஜைனாவில் இரத்தப்போக்கு ஏற்படலாம். கருமுட்டையானது கருப்பை சுவரில் வளரமுற்பட்டதால் இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்
ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
தினசரி இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
மது அருந்தவோ அல்லது புகைபிடிக்கவோ கூடாது
தைராய்டு பிரச்சினைகள், இரத்த நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தற்போதுள்ள மருத்துவ நிலைமைகளை சரிசெய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்
கருச்சிதைவு ஏற்படும்போது அதை ஏற்றுக்கொள்வது உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் கடினமாக இருக்கலாம். அதோடு மிக ஆரம்ப கால பிரக்னன்ஸி இழப்பு, குறிப்பாக நீங்கள் அதற்காக நீண்ட காலம் முயற்சித்து அல்லது ஐ.வி.எஃப் உட்பட்டிருந்தால் அது ஒரு பேரிழப்பாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் உணர்வுபூர்வமான ஆதரவு முக்கியமானது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து பல நாட்களுக்கு உங்களுக்கு தசைப் பிடிப்புகள் மற்றும் இரத்தப்போக்கு இருக்கலாம். நீங்கள் உணர்வுபூர்வமாக அதிலிருந்து மீள்வதற்கு அதிக நேரம் தேவைப்படலாம். நண்பர்களும் குடும்பத்தாரும், உங்கள் ஆன்மீக ஆலோசகரும் இந்த துக்க நிகழ்விலிருந்து மீண்டு வர உங்களுக்கு உதவலாம்.
இழப்பிலிருந்து உங்களால் மீள முடியவில்லை எனில் மருத்துவரை அணுகவும். இந்த இழப்பில் இருந்து மீள்வதற்கு உங்களுக்கு மனநல நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.
பொதுவாக ஐ.வி.எஃப் மற்றும் பிற கருவுறுதல் சிகிச்சைகள் பிறகு, கெமிக்கல் பிரக்னன்ஸி ஏற்படுவது இயல்பாகும். விந்து ஐ.வி.எஃப் மூலம் கருமுட்டையை கருவுறச் செய்கிறது. ஃபெர்டிலிட்டி கிளினிக் உங்கள் கருவை பொருத்துகிறது. உள்வைத்தபின் கருவானது போஸ்ட் இம்பிளான்ட் எச்.சி.ஜி.யை உருவாக்குகிறது. பரிசோதனையில் பிரக்னன்ஸி பாசிட்டிவ் ரிசல்ட்டைப் பெறும்; எனினும், கரு எப்போதும் வளராது.
4 இல் 1 ஐவிஎஃப் பிரக்னன்ஸிகளானது கெமிக்கல் பிரக்னன்ஸியாக உள்ளது. மருத்துவர்கள் ஐ.வி.எஃப் செயல்முறைக்குப் பிறகு 2 வாரங்கள் கழித்து பிரக்னன்ஸி பரிசோதனைகள் செய்வதன் காரணமாக இந்த அதிக எண்ணிக்கை இருக்கலாம்.
ஆரம்ப கால பிரக்னன்ஸி இழப்புக்குப் பிறகு பலர் உடனடியாக மற்றொரு பிரக்னன்ஸிக்கு முயற்சிக்கிறார்கள். கெமிக்கல் பிரக்னன்ஸி ஏற்பட்டதிலிருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நீங்கள் ஓவுலேஷன் மற்றும் சாத்தியமான கர்ப்பமடையக் கூடும்.
கெமிக்கல் பிரக்னன்ஸிகள் 50-75% இழப்புகளை ஏற்படுத்துகின்றன, இருப்பினும் அவை மலட்டுத்தன்மையைக் குறிப்பதில்லை. பல மருத்துவர்கள் கெமிக்கல் பிரக்னன்ஸிகளை பாசிட்டிவ் இண்டிகேட்டர்களாகப் பார்க்கிறார்கள், அதாவது எதிர்காலத்தில் நீங்கள் கர்ப்பமடைவதற்கான சாத்தியக்கூறுகளாக அவை பார்க்கப்படுகின்றன.
சோதனையில் தவறாக ஏற்படும் பாசிட்டிவ் பிரக்னன்ஸி எப்போதும் ஒரு கெமிக்கல் பிரக்னன்ஸியை மட்டும் குறிக்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். தவறாக ஏற்படும் பாசிட்டிவ் பல காரணங்களுக்காக ஏற்படுகின்றன. கெமிக்கல் பிரக்னன்ஸிகள் குரோமோசோம் அசாதாரணங்கள் அல்லது ஐ.வி.எஃப் இல் ஏற்படும் ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன. வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது, உடலுறவு கொள்வது அல்லது பர்த் கண்ட்ரோலை பயன்படுத்துவது ஆகியன பிரக்னன்ஸி இழப்பைத் தூண்டாது. உங்கள் வயது மூப்பின் காரணமாக, தைராய்டு நோய் இருந்தால், அல்லது ஒரு உறைதல் கோளாறு இருந்தால், உங்களுக்கு ஆரம்ப கால கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இதையும் படிக்கலாமே! - அதிக ஆபத்தை கையாளும் மகப்பேறு மருத்துவர் - ஆபத்து & காரணிகள்
இந்த போஸ்ட் ஆனது இரசாயன கர்ப்பம் அதாவது கெமிக்கல் பிரக்னன்ஸி என்றால் என்ன, அது எதனால் ஏற்படுகிறது, மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை உள்ளடக்கியது. கெமிக்கல் பிரக்னன்ஸி என்றால் உங்கள் உடல் ஆரோக்கியமான பிரக்னன்ஸியை பெற முடியாது என்று அர்த்தமல்ல. ஆரம்பகால கருச்சிதைவுக்கான காரணங்களை நீங்கள் அறிந்துகொண்டால் நீங்கள் சரியான சிகிச்சையைப் பெறலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, உங்கள் விருப்பங்களை சரி பார்க்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு தேவையான ஆதரவுக் குழுக்கள் அல்லது ஆலோசனைகளைப் பரிந்துரைக்கலாம். கருச்சிதைவைத் தொடர்ந்து உங்களுக்கு உணர்ச்சி ரீதியான உதவி தேவைப்பட்டால் இவை உதவியாக இருக்கும்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |