Baby Care
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு 1 வயது ஆன பிறகு, புன்னகை செய்தல், தவழ்ந்து செல்தல், யாருடைய துணையுமின்றி உட்காருவது போன்ற முக்கியமான செயல்களை செய்கிறார்கள். இந்த அனைத்து திறன்களுக்கும் இடையில், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துவது ஒரு சிறந்த வழியாகும்.
இதன் அர்த்தம் குழந்தைகள் தாய்ப்பால் உடன் திட உணவுகளையும் சாப்பிட தொடங்குவதை குறிக்கிறது. பிஎல்டபிள்யூ என்பது குழந்தைகள் தாங்களாகவே சாப்பிட கற்றுக் கொள்கிறார்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். குழந்தைகள் திரவ உணவில் இருந்து பிசைந்த திட உணவுகளுக்கு மாறுகிறார்கள். வழக்கமான சூழ்நிலைகளில், குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூனால் உணவளிக்கப்படுகிறது.
குழந்தைக்குத் திட உணவு அளிக்கும்போது, குழந்தை தாங்களாகவே விரல்களால் எடுத்து சாப்பிட கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் அவர்களுக்கு ஊட்ட வேண்டியது கிடையாது.
குழந்தை இதற்கு தயாராகும் வரை காத்திருப்பது நல்லது. குழந்தைக்கு கழுத்து நன்கு வலிமையுடன் இருக்க வேண்டும். அத்துடன், யாருடைய உதவியுமின்றி ஒரு உயர் நாற்காலியில் குழந்தை நேராக உட்கார வேண்டும். அவர்கள் தங்கள் தாடைகளில் சிந்தவிட்டு சாப்பிடுவார்கள். ஆய்வுகள் படி, பெரும்பாலான குழந்தைகள் 6 மாதங்களுக்குப் பிறகு தாமாகவே சாப்பிடுவார்கள். அவர்களால் மெல்ல முடியாமல் போகலாம். ஆனால் மென்மையான, சமைத்த உணவை வசதியாக உண்ண முடியும். குழந்தைகள் உள்ளங்கையில் ஸ்பூனை பிடித்து உணவு எடுத்து சாப்பிடுவார்கள். சில நேரங்களில் வெறும் கையாலும் சாப்பிடுவார்கள். இந்தத் திறன் குழந்தைக்கு 9 மாதங்கள் ஆகும்போது வரும். குழந்தைக்கு அவர்களாகவே சாப்பிட பழக்கப்படுத்துவதற்கான சரியான காலம் 6-9 மாதங்கள் ஆகும்.
குழந்தைக்கான உணவு விலை உயர்ந்ததாக இருப்பதால் நேரத்தையும் பணத்தையும் இது மிச்சப்படுத்துகிறது. இது தனித்தனியாக உணவு தயாரிக்கும் வேலையையும் தாய்மார்களுக்கு மிச்சப்படுத்துகிறது.
குழந்தைகள் சமூகத்தில் தொடர்பு கொள்ள கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் குடும்பம் மற்றும் குடும்பத்துடன் பிணைப்பு பற்றிய கருத்தை புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.
பேக் செய்யப்பட்ட மற்றும் மசித்த உணவுகள் மென்மையாகவும் மற்றும் அதே சுவைகளிலும் மட்டும் கிடைப்பதால் அவை பலவகையான உணவு வகைகளில் கிடைக்கிறது. வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகள் வெவ்வேறு வடிவங்களையும் சுவைகளையும் கொண்டுள்ளன.
நல்ல நடத்தையை ஊக்குவிக்கிறது.
குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கிறது. குழந்தைகள் தங்கள் பசியின் மீது அதிக கன்ட்ரோலை கொண்டுள்ளனர் மற்றும் அவர்கள் வயறு நிரம்பியதாக உணரும்போது சாப்பிடுவதை நிறுத்தலாம்.
உணவை எடுப்பது, மெல்லுதல் மற்றும் விழுங்குதல் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவிலான திறன்கள் தேவைப்படுவதால் அவர்களின் பேசும் திறன் வளர்ச்சி அடையும்.
மேலும் உணவில் கவனம் செலுத்தும்போது செல்போன் அல்லது டிவி ஸ்கிரீனைப் பார்க்காமல் இருப்பதை குறைக்கிறது.
குழந்தை சொந்தமாக சாப்பிட அனுமதிப்பது பாதுகாப்பானது. ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு காலகட்டங்களில் தாமாகவே சாப்பிடுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். சிலருக்கு கூடுதலாக சில மாதங்கள் தேவைப்படலாம். குழந்தை முதுகை நேராக சாய்த்து சேரில் அமர்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் கீழே நழுவவோ அல்லது சரியவோ கூடாது.
இதையும் படிக்கலாமே! - 6 மாத குழந்தைக்கான தடுப்பூசிகள்,சோதனைகள் மற்றும் பல
குழந்தைகளுக்கு உணவு தொண்டையில் அடைத்துக் கொள்வது என்பது மிகவும் பொதுவான செயல் ஆகும். இது குழந்தைக்கு இருமல் மற்றும் கண்களில் நீர் வடிதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஆனால் இது ஒரு பாதுகாப்பு அனிச்சை தான்.
மறுபுறம், உணவு சிக்கிக்கொள்ளும்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் குழந்தை அழத் தொடங்குகிறது அல்லது கூச்சலிடுகிறது. பாப்கார்ன், உலர் திராட்சை, திராட்சை, ஹாட் டாக்ஸ் மற்றும் பச்சை காய்கறிகள் போன்ற மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் திட உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் மூச்சுத் திணறலைத் தடுக்கலாம்.
பெற்றோர்கள் முதலுதவியை நன்கு அறிந்திருந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். முன்னெச்சரிக்கையாக, இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
குழந்தை சாப்பிடும் போது எப்பொழுதும் கூடவே இருந்து அவர்களைக் கண்காணிக்கவும்.
சாப்பிடும் போது குழந்தை நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மிகவும் கடினமாக இல்லாத உணவை வழங்குங்கள். ஆப்பிள், உலர் திராட்சை, பாதாம், திராட்சை, கெட்ச்அப் போன்ற உணவுகளை கொடுக்காமல் தவிர்த்திடுங்கள்.
குழந்தைக்கான எளிய முதலுதவிகளை செய்வதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைக்கு தொண்டையில் உணவு சிக்கி இருமும்போது பயப்பட வேண்டாம். ஏனெனில், பெற்றோர் பயப்படுவதைப் பார்த்து குழந்தைகளும் பயப்படுவார்கள். இது சாப்பிடுவதில் எதிர்மறையான தொடர்புகளை உருவாக்கக் கூடும்.
குழந்தை தாங்களாகவே சாப்பிட தயாராகும் அறிகுறிகளை அடையாளம் காண்பதன் மூலமும், குழந்தை நல மருத்துவரிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகும் அவர்களை சுயமாக சாப்பிட அனுமதிக்கலாம்.
குழந்தை ஸ்பூனில் சாப்பிடுவதை வசதியாக உணர்ந்தால் அவர்கள் சாப்பிடுவதற்கு நேரம் கொடுங்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு 6 மாதங்களிலேயே விரல்களால் எடுத்து சாப்பிட தெரியாது. மேலும், முதல் 2 மாதங்களில் குழந்தைகள் சுயமாக சாப்பிடத் தொடங்கும்போது அவர்களுக்கு அவ்வளவாக சாப்பிட தெரியாது. அவர்கள் உணவை எடுத்து நாவால் சுவை உணர மட்டுமே செய்வார்கள்.
குழம்புவதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். குழந்தைகள் கற்கிறார்கள் மற்றும் ஆய்வு செய்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் மீதும் தங்களைச் சுற்றிலும் உணவை சிதற விடுகிறார்கள். குறைவான உணவுகளை வழங்குவதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.
மேஜையில் குடும்பத்துடன் குழந்தைகளை உணவு சாப்பிட அனுமதியுங்கள். கொஞ்சம் நன்கு வேகவைத்த உணவையே அவர்களுக்கு வழங்குங்கள். மேஜையில் அமர்ந்து சாப்பிடும்போது மற்றவர்களைப் பார்த்து அவர்கள் சாப்பிடக் கற்றுக்கொள்கிறார்கள்.
இந்த வயதில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுவதால், அவர்கள் ஊட்டச்சத்தை இழக்க மாட்டார்கள். எனவே, பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
உண்பது ஒரு இயற்கையான நிகழ்வாகவும், ஒரு நாளின் பகுதியாக கருத வேண்டும். திட்டுவதையோ, புகழ்வதையோ தவிர்த்துடுங்க.
பொருத்தமான அளவுகள் மற்றும் வடிவங்களில் உணவுகளை அளிக்கத் தொடங்குவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் அபாயங்களைத் தடுக்கும் அதேவேளையில் அவர்கள் மிகவும் விரும்பி அந்த உணவை சாப்பிடுவார்கள். குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பாலூட்டும் போது, குழந்தைக்கு தேவையான பெரும்பாலான கலோரிகள் தொடர்ந்து கிடைக்கிறது. திட உணவுகளை குழந்தைகள் உட்கொள்வது அதிகரிக்கும் போது தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் உட்கொள்ளல் படிப்படியாக குறைகிறது.
வேகவைத்த பூசணி
அவகேடோ
உள் தோல் இல்லாத ஆரஞ்சு
வாழைப்பழம்
பேக்டு செய்யப்பட்ட தோல் இல்லாத உருளைக்கிழங்கு
வேகவைத்த கேரட், ப்ரோக்கோலி மற்றும் பீன்ஸ்
மசிக்கப்பட்ட பெர்ரீஸ்
இயற்கையான தயிர்
சால்மன் மீன்
வேகவைத்த முட்டை
ஓட்மீல்
குழந்தைகள் தாங்களாகவே சாப்பிடுவது என்பது குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்துவதற்கான மாற்று முறையாகும். இது பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தை தாங்களாகவே உணவு உட்கொள்வது ஹெல்த்தியான சமூக நடத்தையை ஊக்குவிக்கிறது மற்றும் குழந்தைகளுக்கு அதிகப்படியான உணவை அளிப்பதையும் தடுக்கிறது.
குழந்தைகளை கற்கவும், ஆராயவும், ரசிக்கவும் அனுமதிக்கும். அதேவேளையில் சரியான வகை உணவு மற்றும் அதன் வடிவத்தையும் தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது ஆகும்.
LED- Weaning in tamil, LED weaning meaning in tamil, how to solid foods for baby in tamil, when will start solid food for babies In Tamil, safety tips for babies self feed in tamil
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |