Maternity Fashion
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
தற்போது உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தொப்பை போன்ற காரணங்களால் உங்களின் பழைய ஜட்டிகள் மற்றும் ப்ரா ஆகியவற்றை இப்போது பயன்படுத்துவது சற்று இயலாத காரியம் தான். கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் வழக்கமான ஜட்டிகளை அணிவது உங்களுக்கு சௌகரியமாக இருக்கலாம். ஆனால், கர்ப்ப காலம் அதிகரிக்கும்போது அவற்றை பயன்படுத்துவது சிக்கலுக்கு உரியதாகவும், அசௌகரியமானதாகவும் இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு சரியான மகப்பேறு ஜட்டியை தேர்வு செய்வது உங்கள் உடலை ஒருநிலையில் வைத்துக் கொள்ளவும், பின்னாளில் விரும்பியபடி வலுவடையச் செய்யவும் உதவியாக இருக்கும்.
இன்றைய பெண்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கை என இரண்டையும் சமமாக மிர்வாகித்துக் கொண்டு வருகின்றனர். ஆக, நமது அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவை காரணமாக நாம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. கர்ப்பம் நமது வாழ்க்கை முறையை மாற்றியமைக்கிறது. நமது உடல் அமைப்பு மற்றும் எடை போன்றவையும் கூட மாறும். ஆக இந்த சமயத்தில் உங்களுக்கு புதிய ஆடைகள் தேவைப்படுவதைப் போல உள்ளாடைகளும் புதியதாக தேவைப்படும்.
கச்சிதமாக பொருந்தாத மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். நீங்கள் பிரசவிக்க இருப்பதால் உங்கள் மார்பகங்கள் இலகுவாக மாறியிருக்கும் மற்றும் உங்கள் தொப்பை குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்திருக்கும்.
வளருகின்ற வயிற்று பகுதி சார்ந்து பொருந்துகிறார் போல மகப்பேறு கால உள்ளாடைகள் வடிவமைக்கப்படுகின்றன. அவை உங்களின் வழக்கமான உள்ளாடைகளைக் காட்டிலும் சரியான இடத்தில் கச்சிதமாக பொருந்தும் மற்றும் அதிக சௌகரியத்தை தரும். கர்ப்ப காலம் அதிகரிக்கும் போது உங்களின் வழக்கமான ஜட்டிகளை பயன்படுத்தினால், இடுப்புப் பட்டை உங்களுக்கு இறுக்கத்தை ஏற்படுத்துவதையும், தெரிகின்றார்போல அச்சு விழுவதையும் நீங்கள் உணர முடியும். ஆனால், பிரசவத்திற்குப் பிறகு பயன்படுத்தக் கூடிய மகப்பேறு கால ஜட்டிகள் என்பது உங்கள் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல பொருந்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளன.
உங்கள் வயிறு வளர்ச்சி அடைந்த பிறகு, உங்களின் வழக்கமான உள்ளாடை மிக கூடுதலாக விரிவடைந்திருக்கும். இதை பின்னாளில் பயன்படுத்த இயலாது. ஆனால், மகப்பேறு கால உள்ளாடை என்பது நீங்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாமல் கர்ப்பத்திற்கு முந்தைய காலம் அல்லது பிரசவத்திற்கு பிறகான காலம் என எப்போதும் பயன்படுத்தக் கூடியதாக அமையும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது பெண்ணுறுப்பில் அளவுக்கு அதிகமான கசிவு உண்டாகுவதை நீங்கள் உணர முடியும். ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. ஆகவே, கர்ப்ப காலத்தில் இலகுவாக இருக்கக் கூடிய காட்டன் மகப்பேறு ஜட்டிகளை அணிவது சிறப்பான விஷயமாக அமையும்.
உங்கள் தேர்வுக்காக, மகப்பேறு உள்ளாடைகளில் சில வகைகள் இருக்கின்றன:
வளரும் வயிற்றுக்கு மேலே அல்லது பெரிய இடுப்பு பட்டை கொண்ட மகப்பேறு கால ஜட்டிகள்: உங்கள் குழந்தை வளர்ச்சி அடையும் வயிற்றுப் பகுதியையும் கவர் செய்வதாக இந்த ஜட்டிகள் அமையும். லோயர்-கட் ஸ்டைல்களை விட இது மிகவும் பக்கபலமாக மற்றும் பொருத்தமானதாக இருக்கும்.
வயிற்றுக்கு கீழே அல்லது சின்ன இடுப்பு பட்டை கொண்ட மகப்பேறு கால ஜட்டிகள்: இந்த ஜட்டிகள் உங்கள் வயிற்றுக்கு கீழே பொருந்திக் கொள்ளும். மேலும் கோடை காலத்தில் உங்களுக்கு அசௌகரியமானதாக தோன்றினால், பெரிய இடுப்பு பட்டை கொண்ட ஜட்டிகளைக் காட்டிலும் இந்த ஜட்டிகள் உங்களுக்கு சிறப்பான அனுபவமாக அமையும்.
நடுவயிற்றுக்குப் பொருத்தமான மகப்பேறுகால ஜட்டிகள்: இந்த ஜட்டிகள் உங்கள் வயிற்றின் மையப் பகுதியில் பொருந்தும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வகை ஜட்டிகளுக்கு இடைப்பட்ட ஸ்டைலில் இருக்கும். இந்த ஜட்டிகளின் இடுப்புப் பட்டை நன்கு விரிவடையக் கூடியதாக மற்றும் சௌகரியமானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்டைல் உடைய மகப்பேறு ஜட்டிகளில் நிறைய கலெக்ஷன் உங்களுக்கு கிடைக்காது.
கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான அளவுக்கு சௌகரியம் கொடுக்கும் வகையில் மகப்பேறு கால ஜட்டிகள் டிசைன் செய்யப்படுகின்றன. கர்ப்ப கால உடலை மனதில் கொண்டு நல்லதொரு நகர்வு மற்றும் விரிவடைதலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இவை தயார் செய்யப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் வயிற்றுக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக, இந்தியாவில் மகப்பேறு கால ஜட்டிகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏனென்றால், இதுதான் தாய்மார்களுக்கு சௌகரியமாக இருக்கிறது.
பொதுவாக மகப்பேறு கால ஜட்டிகள் என்பது இடுப்பு தசைகளுக்கு ஏற்படுகின்ற அழுத்தத்தை குறைக்கின்ற வகையில் மிருதுவான காட்டன் மற்றும் மென்மையான ப்ரீமியம் துணி வகையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பல தாய்மார்கள் பெரிய இடுப்பு பட்டை கொண்ட காட்டன் ஜட்டிகளை விரும்பி தேர்வு செய்கின்றனர். இந்த ஜட்டிகள் உங்கள் வளருகின்ற வயிற்றின் மீது கனக்கச்சிதமாக பொருந்துகின்றன மற்றும் தேவையான சௌகரியத்தை தருகின்றன.
உங்களின் வழக்கமான ஜட்டிகளால் அசௌகரியம் ஏற்படத் தொடங்கும் போதே நீங்கள் மகப்பேறு கால ஜட்டிகளை தேர்வு செய்திட வேண்டும். தொடக்க கால கர்ப்பத்தின் அறிகுறிகள் முன்கூட்டியே தெரிய தொடங்கும். முதல் சில வாரங்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை நீங்கள் உணர முடியும்.
கச்சிதமான மகப்பேறு கால உள்ளாடையை தேர்வு செய்யும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லது தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள்(Steps to choosing or things to remember while selecting the perfect maternity underwear In Tamil)
நீங்கள் குழப்பம் அடைந்திருக்கும் பட்சத்தில், கச்சிதமான மகப்பேறு கால உள்ளாடையை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து எளிமையான ஆலோசனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
மகப்பேறு கால ஜட்டிகளை வாங்கும்போது நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுவாகும். உங்களின் சரியான அளவை நீங்களே தீர்மானம் செய்வதற்கு, சில அளவீடு யோசனைகளை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது சவாலுக்குரிய பணியாக இருக்கும். உங்கள் பிரசவத்திற்கு இன்னும் எத்தனை வாரங்கள் இருக்கின்றன மற்றும் நீங்கள் எவ்வளவு எடை கூடுவதற்கு வாய்ப்பு உண்டு என்ற விஷயங்களை பரிசீலனை செய்யவும். பெரிய அளவை தேர்வு செய்வது நல்ல சௌகரியத்தை தருவதாக அமையும்.
நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் உங்கள் இடுப்பு வடிவம் அல்லது வகை ஆகும். கர்ப்பகால ஜட்டிகளில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது சின்ன இடுப்பு ஜட்டிகள் மற்றும் இரண்டாவது பெரிய இடுப்பு ஜட்டிகள். பெரிய இடுப்பு மகப்பேறு கால ஜட்டிகள் என்பது குழந்தையுடன் கூடிய உங்கள் வயிற்றுப் பகுதியை கவர் செய்வதாக அமையும். அதே சமயம், சின்ன இடுப்பு ஜட்டிகள் என்பது வயிற்றுக்கு கீழே பொருந்தும் விதமாக இருக்கும்.
ஆகவே, உங்கள் வடிவம் மற்றும் சௌகரியத்தைப் பொருத்து, நீங்கள் எந்தவொரு மகப்பேறு ஜட்டியையும் தேர்வு செய்யலாம். சிறப்பான மகப்பேறு கால ஜட்டிகளை ஆன்லைனில் தேர்வு செய்ய உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில் புதிய, காற்றோட்டமான, விரிவடையக் கூடிய துணிகளை தேர்வு செய்வது சிறப்பானதாகும். இது சௌகரியத்தை தருவதுடன், எரிச்சல் உணர்வை தவிர்க்கும். மற்ற அனைத்து துணிகளைக் காட்டிலும், காட்டன் மற்றும் மைக்ரோஃபைபர் அடிப்படையிலான துணிகள் நல்ல தேர்வாக அமையும்.
காட்டன், எளாஸ்டின் மற்றும் பேம்பூ கொண்ட மகப்பேறு கால ஜட்டிகள் நல்ல சௌகரியத்தை தரும். மகப்பேறு கால ஜட்டிகளை தேர்வு செய்யும்போது பெரிய இடுப்பு காட்டன் மகப்பேறு ஜட்டிகளை பரிசீலனை செய்யலாம். இவை கெட்ட வாடை கொண்டதாக இருக்காது மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரானது என்பதால், பெண்ணுறுப்பு கசிவின்போது ஏற்படும் எரிச்சல் உணர்வை இது குறைக்கிறது.
இதுவும் பரிசீலனைக்கு உரிய முக்கிய விஷயமாகும். மகப்பேறு ஜட்டிகளை தேர்வு செய்யும்போது நீடித்து உழைக்கக் கூடிய ஜட்டிகளை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும். துணி மற்றும் அதன் விரிவடையும் தன்மை ஆகியவற்றையும் நீங்கள் சரிபார்க்க வேண்டும். விரிவடையக் கூடிய மகப்பேறு ஜட்டிகளை தேர்வு செய்வதால், அது அவ்வளவு எளிதில் வீணாகிவிடாமல் நீண்ட காலம் உழைக்கும் என்பது உறுதி செய்யப்படும்.
மகப்பேறு கால ஜட்டியை தேர்வு செய்யும்போது, பின் இடுப்பு பகுதிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது பரிசீலனைக்குரிய விஷயமாகும். கர்ப்ப காலத்தில் உங்கள் பின் இடுப்பு பகுதியில் அதிகமான அளவில் அழுத்தம் ஏற்படக் கூடும். ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் நல்லதொரு மகப்பேறு கால ஜட்டிகளை வாங்குவது மிக முக்கியமானதாகும். ஏனெனில், இது குறுகிய காலத்திற்கு தான் பயன்பட போகிறது. உங்கள் ஜட்டிகளின் அளவு மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மகப்பேறு ஜட்டி/உள்ளாடை என்பது காற்றோட்டம் மிகுந்ததாக இருக்கும் மற்றும் பேண்ட் மடித்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதை நீங்கள் வயிற்றுக்கு கீழே அல்லது மேலே என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அளவு வாரியாக இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். காட்டன் மற்றும் ஸ்பேண்டெக்ஸ் போன்றவற்றால் தயாரான இந்த உள்ளாடை விரிவடையக் கூடியதாக மற்றும் சௌகரியமானதாக அமையும். இதன் எடை குறைவானது மற்றும் மென்மையானது என்பதால் இது ஒருபோதும் அரிப்பை ஏற்படுத்தாது. இதில் மடித்துக் கொள்ளக் கூடிய பட்டையை வயிறு வளர்ச்சிக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். உங்களுக்கு சௌகரியம் தரும் வகையில் வயிற்றுக்கு கீழே அல்லது மேலே இழுத்துக் கொள்ளலாம்.
குறைவான உயரம் உடைய மகப்பேறு உள்ளாடைகள்: முன்பக்கம் இதன் உயரம் குறைவாக இருக்கும். ஆகவே, இது உங்கள் வயிற்றுக்கு கீழே பொருந்துவதுடன், அதற்குப் பிறகு முழு கவரேஜ் தருவதாக அமையும். இதன் இன்னர் லைனிங் காட்டன் கொண்டு அமைந்திருக்கும் மற்றும் வெளிப்புறத்தில் ஸ்பேண்டெக்ஸ் மற்றும் காட்டன் இணைந்த துணிகள் இடம்பெற்றிருக்கும். ஜட்டி எந்த கலரில் இருந்தாலும், அதில் மெல்லிய வண்ணம் கொண்ட லைனிங் இருக்கும். இதனால் தான் இதை பலரும் வாங்குகின்றனர். இது லேசான நிறம் கொண்டது என்பதால் உங்கள் பெண்ணுறுப்பில் இருந்து ஏற்படும் எந்தவொரு கசிவு அல்லது திட்டுக்களும் உங்களுக்கு தெரியாமல் போகாது. குறிப்பாக சிசேரியன் செய்த பெண்கள் குணமடைய உதவிகரமாக இருக்கும். ஏனென்றால் இவை வயிற்றுக்கு கீழ் பகுதியில் பொருந்துவதால் மேலே அழுத்தங்களை கொடுக்காது.
கீழே சுழற்ற இயலாத மகப்பேறு உள்ளாடை: இந்த ஜட்டிகள் வயிற்றுக்கு பகுதியளவுக்கு உறுதுணையாக இருக்கும். நழுவாமல் அல்லது மடிந்து வராமல் இவை வயிற்றுடன் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும். இதில் வயிற்றுக்கு கீழ் பகுதியில் கொஞ்சம் பக்கபலமாக இருக்கக் கூடிய ஒருங்கிணைந்த பேண்ட் ஒன்று இருக்கும். அது வயிற்றின் எடை காரணமாக பின் இடுப்பு பகுதியில் அழுத்தம் ஏற்படுத்துவதை குறைக்கும். இதன் நிலையான வடிவம் ஒவ்வொரு நாளும் பொருந்தக் கூடியதாக மாற்றும்.
நடு வயிற்றுக்கு ஏற்ற உள்ளாடை: இந்த வகை ஜட்டிகள் நைலான் மற்றும் ஸ்பேண்டெக்ஸ் போன்றவற்றால் தயாரானது ஆகும். இது எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரிவடையும் மற்றும் வயிற்றின் நடுப்பகுதியில் பொருந்திக் கொள்ளும். சில ஜட்டிகளில் அழகான நாடா இடம்பெற்றிருக்கும். ஆகவே, உங்களுக்கு இறுக்கமாக தோன்றாது.
மகப்பேறு கால பாய்சார்ட்ஸ்: உங்கள் உள்ளாடை மென்மையானதாக, சௌகரியமானதாக மற்றும் வயிற்றை முழுமையாக கவர் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும், உங்கள் ஆடைகளுக்கு உள்ளே மறையக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால் இது உங்களுக்கு சரியான தேர்வாக அமையும். இது மார்பகங்கள் வரையிலும் கவரேஜ் தரும். இது 11 சதவீதம் அளவுக்கு ஸ்பேண்டெக்ஸ் மூலம் தயாரானது. ஆகவே, நீங்கள் நடக்கும்போது அதற்கேற்ப இதுவும் அசைந்து கொள்ளும்.
கச்சிதமான உள்ளாடை: இந்த உள்ளாடையின் பக்க வாட்டில் ஃபாஸ்டனர்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஆகவே, இதை நீங்களாகவே அணிந்து கொள்ளலாம் அல்லது உங்கள் பராமரிப்பாளர் உதவியுடனும் அணியலாம். இவற்றில் டேக் இருக்காது. மேலும் உள்பக்கம் காட்டன் லைனிங் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான உத்திகள் இடம்பெற்றிருக்கும். இதனால் நீங்கள் நாள் முழுவதும் ஃப்ரெஷ் மற்றும் ஈரமின்றி உணரலாம்.
மேட்டர்னிட்டி தாங்: இவை மகப்பேறு கால உள்ளாடை இல்லை என்றாலும், பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் இதை அணிவதற்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். ஏனெனில் இதில் உள்ள வி வடிவ முன்பக்கம் மற்றும் வி வடிவ பின்பக்க இடுப்புப் பட்டையானது உங்கள் வயிற்றின் மீது சரியாக பொருந்தும். உங்கள் கர்ப்ப காலம் முழுமைக்கும் வயிறு வளருவதற்கு ஏற்ப சூப்பராக விரிவடையக் கூடிய ஃபேப்ரிக் இதில் உள்ளது.
தடையற்ற மகப்பேறு உள்ளாடை: ஜட்டி லைன்கள் வெளிப்படையாக தெரிவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் இந்த வகை ஜட்டிகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இது இலகுவான ஃபேப்ரிக் மூலம் தயாரானது மற்றும் உயரம் கொண்டது. இது வயிற்றின் மேல் பகுதி வரை பொருந்தும் ஸ்டைல் உடையது.
காற்றோட்டமான மகப்பேறு உள்ளாடை: இது வயிற்றுக்கு கீழ் பகுதியில் பொருந்தக் கூடிய மகப்பேறு உள்ளாடையாகும். சிசேரியன் பிரசவம் நிகழ்ந்து, அதில் இருந்து குணமடைந்து வருபவர்களுக்கு இது உதவிகரமாக அமையும். இந்த ஜட்டியும் பேம்பூவால் தயாரானது. ஆகவே எடை குறைவானதாக, சௌகரியமானதாக இருக்கும். இது முன்பக்கத்தில் வி வடிவம் கொண்டிருக்கும் மற்றும் பின்பக்கத்தில் முழு கவரேஜ் தருகின்ற வகையில் நேர் கோட்டில் இடம்பெற்றிருக்கும்.
பல டிரைமெஸ்டர்களுக்கான உள்ளாடை: காட்டன் மற்றும் ஸ்பேண்டெக்ஸ் ஆகியவற்றால் ஆன இந்த உள்ளாடை உங்கள் வயிற்றின் மேல் பகுதி வரை பொருந்தக் கூடியதாகும். இது அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய பேண்ட் இடம்பெற்றிருக்கும். இதனுடன், ஈரத்தை உறிஞ்சக் கூடிய காற்றோட்டமான ஃபேப்ரிக் இருக்கும். இது இடுப்பை சுற்றிலும் 360 டிகிரி அளவில் சுற்றிக் கொள்ளக் கூடியது என்பதால் வயிற்றுக்கு நல்ல பக்கபலமாக அமையும். உங்கள் வயிற்றுப் பகுதியை இது கவர் செய்திருந்தாலும் கூட அதிக உயரம் உடையதாக இருக்காது.
பாதுகாப்பான மகப்பேறு உள்ளாடை: கர்ப்ப காலம் அல்லது பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் கசிவுகளில் இருந்து பாதுகாப்பு தருவதாக இந்த வகை உள்ளாடைகள் அமைகின்றன. இதில் உள்ள எலாஸ்டின் ஃபேப்ரிக் ஈரத்தை உறிஞ்சி, உலர்வாக வைத்துக் கொள்ள உதவும். இதில் இரட்டை லேயர் கொண்ட இடுப்பு பேண்ட்கள் உள்ளன. இதை கர்ப்ப காலத்தின் முதலாம் அத்தியாய காலத்தில் இருந்து நான்காம் அத்தியாய காலம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கவர்ச்சியான கர்ப்பகால உள்ளாடை: கர்ப்ப கால ஜட்டிகள் என்றாலே அடர்த்தியான துணி கொண்டதாக இருக்க வேண்டும் என்றில்லாமல் மெல்லிய துணிகளை கொண்டதாக இது இருக்கிறது. முன்பக்கத்தில் வி வடிவத்தில் இடம்பெற்றுள்ள இந்த உள்ளாடை உங்கள் வயிற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் பின்புறத்தில் கவர்ச்சிகரமாக அமைந்திருக்கும். மெல்லிய எளாஸ்டிக் இடுப்புப் பட்டை மற்றும் ஃபேப்ரிக் ஆகியவை இதில் உண்டு. இது 100 சதவீதம் காட்டன் மூலம் தயாரானதாகும்.
அட்ஜெஸ்ட் செய்யத் தகுந்த உள்ளாடை: கர்ப்ப காலத்தின்போது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஆக, அதற்கு ஏற்றாற்போல உங்கள் உடையும் அட்ஜெஸ்ட் ஆகக் கூடியதாக இருக்க வேண்டும். வயிற்றின் மேல்பகுதி வரையில் பொருந்தக் கூடிய வகையில் அமைகின்ற இந்த ஜட்டியில் அட்ஜெஸ்ட் செய்யத் தகுந்த இடுப்புப்பட்டை டிசைன் உள்ளது. ஆக, உங்கள் தேவைக்கு ஏற்ப இடுப்பு அளவை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.
சரும பாதுகாப்பு மகப்பேறு உள்ளாடை: இந்த ஜட்டிகளின் உயரம் மிக குறைவானதாகும். இது காட்டன் மற்றும் ஸ்பேண்டெக்ஸ் ஆகியவற்றால் தயாரானது. இது வயிற்றுக்கு கீழே பொருந்துகிறது மற்றும் பின் இடுப்பு பகுதிக்கு கவரேஜ் தருகிறது. இதில் உள்ள மென்மையான மற்றும் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட துணியானது சரும எரிச்சல்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது. நடுப்பகுதியில் உள்ள உட்புற லைனிங் மூலமாக, வெள்ளைப்படுதலை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மகப்பேறு உள்ளாடை: இவை உயர் தரமான காட்டன் மற்றும் ஸ்பேண்டெக்ஸ் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நீடித்த சௌகரிய உணர்வு கிடைக்கிறது. இதில் க்ராஸ் ஓவர் டிசைன் மற்றும் காட்டன் பட்டைகள் இருப்பதால் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் தடுக்கப்படுகிறது.
ஈரத்தை வெளியேற்றுகின்ற மகப்பேறு உள்ளாடை: இந்த வகை ஜட்டிகள் எளாஸ்டிக் தன்மையால் மூடப்பட்டிருக்கும் மற்றும் நடுவே உட்புற லைனிங் உண்டு. இதனால் சுகாதாரத்தை கடைப்பிடிக்க உதவியாக இருக்கிறது மற்றும் கால்களில் உள்ள அகலமான பட்டை காரணமாக தொடைகளில் வெட்டு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
உங்களுக்கு சிசேரியன் பிரசவம் நடைபெற்றுள்ளது என்றால், குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு புண் ஏற்படக் கூடும். ஆகவே, தளர்வான உள்ளாடைகள் அணிவது நல்லது. பெரிய இடுப்பு பட்டை கொண்ட உள்ளாடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். ஏனென்றால் இது உங்கள் தையல் மீது உரசாது. அதில் சிசேரியன் செய்து கொண்டவர்கள் காட்டன் உள்ளாடை அணிவதே சிறப்பானது.
மகப்பேறு உள்ளாடையை என்ன நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை மாறியிருக்கிறது. ஆக, நீங்கள் இதை அணிவதை மகிழ்ச்சியாக உணரலாம். உடல் எடை அதிகரிப்பு மற்றும் விரிவடைந்த அடையாளங்கள் என உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சரியான உள்ளாடையை தேர்வு செய்வது உங்களுக்கு சௌகரியமான உணர்வைத் தரும் மற்றும் நமக்கே நம்மை கவர்ச்சியாக உணர வைக்கும். மாறும் வடிவத்திற்கு ஏற்ப பொருந்திக் கொள்ளும். மகப்பேறு உள்ளாடையை பொருத்தவரையில் எண்ணற்ற டிசைன்கள், ஏராளமான கலர்கள் மற்றும் உட்புறக் கோடுகள் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.
பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்திற்கு பின் என எப்போது நீங்கள் மகப்பேறு உள்ளாடை வாங்கினாலும் அது காட்டன் மற்றும் இயற்கையான ஃபேப்ரிக் தயாரிப்புகளாக இருப்பது நல்லது. ஏனென்றால், இவை காற்றோட்டமாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் சௌகரியம் என்பதே முக்கியமானது.
Maternity clothes in tamil, maternity panties in tamil, comfort panties during pregnancy in tamil, breastfeeding clothes in tamil, best maternity clothes in tamil, uses of maternity pants in tamil
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |