hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Diet & Nutrition arrow
  • கர்ப்ப காலத்தில் முருங்கைக்காயினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(Drumstick During Pregnancy: Benefits & Side Effects In Tamil) arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காயினால் ஏற்படும்  நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(Drumstick During Pregnancy: Benefits & Side Effects In Tamil)

    Diet & Nutrition

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காயினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்(Drumstick During Pregnancy: Benefits & Side Effects In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    முருங்கைக்காய் என்றால் என்ன?(What is Drumstick? In Tamil)

    முருங்கைக்காய் என்பது மொரிங்கா ஒலிஃபெரா மரத்தின் ஒரு பாகம் ஆகும். இது வட இந்தியாவை பூர்விகமாக கொண்டுள்ளது. இது ஹார்ஸ்ரேடிஷ் ட்ரீ அல்லது பென் ஆயில் ட்ரீ என்றும் அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக முருங்கைக்காய் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகிறது.

    முருங்கை மரமானது 20-40 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதில் வெள்ளை நிற பூக்கள் மற்றும் நீளமான மற்றும் தொங்கும் விதைப்பைகள் காணப்படும். இந்த விதைப்பைகளில் மெல்லிய, அடர்ந்த தண்டுகள் கொண்ட முருங்கைக்காய் இருக்கும். முருங்கைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ, காணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளது.

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானதா?(Is it safe to eat drumsticks during pregnancy? In Tamil)

    கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டும் போல இருக்கும் உணவுகளில் முருங்கைக்காய் ஒன்று. ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது முருங்கைக்காய் சாப்பிடலாமா என நீங்கள் யோசிக்கலாம். உங்களுக்கான நல்ல செய்தி என்னவென்றால், முருங்கைக்காயை நன்றாக சமைத்து சாப்பிடும் வரை அது கர்ப்ப காலத்திலும் பாதுகாப்பானது தான்.

    சமைக்காத அல்லது அரைகுறையாக வேக வைக்கப்பட்ட முருங்கைக்காயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். எனவே, சாப்பிடும் முன் முருங்கைக்காய்களை நன்கு சமைத்து சாப்பிடுவது அவசியம். பாதுகாப்பு கருதி, முருங்கைக்காயின் நடுவே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறம் இருந்தால் அதனை சாப்பிட வேண்டாம்.

    முருங்கைக்காயின் ஊட்டச்சத்து மதிப்பு(Drumstick nutritional value)

    கர்ப்ப காலத்தில் 100 கிராம் அளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது கிடைக்கும் ஊட்டச்சத்து மதிப்பு பின்வருமாறு:


    கலோரிகள் – 41

    புரதம் – 2 g

    கொழுப்பு – 0 g

    கார்போஹைட்ரேட் – 9 g

    நார்ச்சத்து – 1 g

    சர்க்கரை – 4 g

    வைட்டமின் ஏ – 664 IU

    வைட்டமின் சி – 16 mg

    கால்சியம் - 40 mg

    இரும்புச்சத்து - 0.4 mg

    கருவின் உறுப்புகள் நன்கு வளரவும், மூளை மற்றும் கண்பார்வை வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் வைட்டமின் ஏ முருங்கைக்காயில் ஏராளமாக உள்ளதால் இது கர்ப்ப காலத்திற்கு ஏற்றது என்பதை மேலே உள்ள ஊட்டச்சத்து மதிப்புகள் காட்டுகிறது. இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும், தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கவும் உதவும் வைட்டமின் சி-யும் முருங்கைக்காயில் உள்ளது.

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காயின் நன்மைகள்(Benefits of drumstick during pregnancy In Tamil)

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முருங்கைக்காய் வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி-யின் சிறந்த ஆதாரமாக உள்ளது. இது இரத்த சோகை வருவதைத் தடுக்கிறது மற்றும் உடல் இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.

    கூடுதலாக, கருவின் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு முருங்கைக்காய் உதவுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கர்ப்ப காலத்தில் பெரும் தொல்லையாக இருக்கும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்(Side effects of drumsticks during pregnancy In Tamil)

    • தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் நன்மை பயப்பதால் முருங்கைக்காய் கர்ப்ப காலத்தில் ஒரு சிறந்த சப்ளிமெண்டாக செயல்படுகிறது. இருப்பினும், இதனால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    • முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை மலச்சிக்கல் ஆகும். இது கர்ப்ப காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அறிகுறியாகும். எனினும், மிக தீவிரமானது அல்ல. மற்றொரு முக்கிய அறிகுறி நெஞ்செரிச்சல் அல்லது உணவை விழுங்குவதில் சிக்கல் ஆகும். இது முருங்கைக்காயானது வயிற்றில் உள்ள தசைகளை தளர்த்தி, செரிமான அமிலத்தை உணவுக்குழாய்க்கு மேல் கொண்டு வருவதால் நிகழ்கிறது.

    • முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஒரு சில அரிதான அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தலைவலி, மயக்கம் மற்றும் சருமத்தில் தடிப்பு போன்றவை அடங்கும். இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால், முருங்கைக்காய் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்காய்களை எப்படி சாப்பிடுவது?(How to consume drumsticks during pregnancy? In Tamil)

    ஒரு சில பெண்களுக்கு முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டால் தான் பிடிக்கும். இதனால் அது செரிமானவது எளிதாக இருக்கும். முருங்கைக்காயை வேக வைத்தோ, நீராவியில் சமைத்தோ, வறுத்தோ அல்லது அவித்தோ சாப்பிடலாம். வெவ்வேறு விதமான முறைகளில் முருங்கைக்காயை எப்படி சமைப்பது என்ற பல ரெசிபிகள் ஆன்லைனில் கிடைக்கிறது.

    இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் தர்பூசணி: தொடர்புடைய நன்மைகள், அபாயங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

    பிரக்னன்சி டயட்டில் முருங்கைக்காயை சேர்ப்பதற்கான சில டிப்ஸ்(Tips for including drumstick in your pregnancy diet In Tamil)

    கர்ப்ப காலத்தின் இரண்டாவது டிரைமெஸ்டரில் முருங்கைக்காயை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெறலாம். உங்கள் டயட்டில் முருங்கைக்காயை சேர்க்க உதவும் ஒரு சில டிப்ஸ்:

    • சமைக்கப்பட்ட முருங்கைக்காயை சூப்புகள் அல்லது குழம்புகளில் சேர்த்து சாப்பிடலாம்.

    • சிக்கன் அல்லது டர்கி போன்றவற்றிற்கு பதிலாக நீங்கள் சமைக்கப்பட்ட மசித்த முருங்கைக்காயை பயன்படுத்தலாம்.

    • வேக வைத்த முருங்கைக்காயை பிற காய்கறிகள் மற்றும் தானியங்களுடன் சேர்த்து ஒரு சமச்சீரான உணவை உருவாக்குங்கள். 4. சாலட் அல்லது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக வேக வைக்கப்படாத, துண்டாக்கப்பட்ட முருங்கைக்காயை சேர்க்கலாம்.

    • உங்களின் வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவை அதிகரிக்க முருங்கைக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவும்.

    முடிவுரை

    முருங்கைக்காய் ஒரு பல்துறை உணவுப்பொருள். மேலும் இது கர்ப்ப காலத்தில் ரசித்து சாப்பிடக்கூடிய ஒரு சுவை மிகுந்த உணவாகும். இதில் ஒரு சில பக்க விளைவுகள் இருந்தாலும், இதிலுள்ள நன்மைகள் தீமைகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் அத்தியாவசியமாக தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் முருங்கைக்காயில் இருப்பதால், கர்ப்பிணி பெண்களின் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த உணவாக இது அமைகிறது. புதிதாக தாயான பெண்மணிகளுக்கு புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு எவ்வாறு நடந்துகொள்வது என்பதை மைலோ ஃபேமிலி பதிவுகள் ஒரு வழிகாட்டி போல செயல்படுகிறது.

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    1. முருங்கைக்கீரை சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படுமா?

    கர்ப்ப காலத்தில் முருங்கைக்கீரை சாப்பிடுவது பொதுவாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இருப்பினும், அதிக அளவில் முருங்கைக்கீரை சாப்பிடுவது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று ஒரு சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் கர்ப்பமாக இருந்தால், சாத்தியமான அபாயங்களை தவிர்க்க முருங்கைக்குரையை அளவாக சாப்பிடுவது நல்லது.

    2.கர்ப்பமாக இருக்கும் போது முருங்கைக்காய் சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படுமா?

    இந்த கூற்றை ஆதாரிக்க போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. கர்ப்ப காலத்தில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் உணவு உள்ளது என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வாயுத்தொல்லை கர்ப்ப காலத்தின் பொதுவான ஒரு பிரச்சினை ஆகும். கருப்பை வளர்ச்சி அடைந்து வயிறு மற்றும் குடலை அழுத்துவதால் இது ஏற்படுகிறது. இதனால் உணவு ஜீரணமாவது கடினமாகிறது. மேலும் இதனால் வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுகிறது.

    Tags :

    drumstick during pregnancy in tamil, health benefits of drumstick during pregnancy, sideeffects of drumstick during pregnancy, Does drumstick give gas problem during pregnancy in tamil, drumstick receipes during pregnancy in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |