Diet & Nutrition
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவை தேர்ந்தெடுத்து தான் சாப்பிட வேண்டும். ஏனெனில், அவர்கள் சாப்பிடும் உணவுகள் அவர்களின் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காமல், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வைட்டமின்கள் மற்றும் மினரல்களை அதிக அளவில் கொண்ட உணவுகளை கர்ப்ப காலத்தில் அதிகமாக சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் டயட்டில் கட்டாயமாக இருக்க வேண்டிய உணவுகளில் மக்கனா அல்லது தாமரை விதைகள் அடங்கும். தாமரை விதைகளில் அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளதால் அது கருவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
மக்கனா என்பது தாமரை விதைகள் அல்லது ஃபாக்ஸ் நட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்ரிக்க மற்றும் ஆசிய உணவுகளில் தாமரை விதைகள் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இதனை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். இது குணப்படுத்தும் நோக்கத்திற்காகவும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. “கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள் சாப்பிடலாமா கூடாதா” என்பதில் ஒருவருக்கு சந்தேகம் இருந்தால், இதற்கான பதில் நிச்சயமாக ஆம் என்பது தான். கர்ப்பிணிப் பெண்கள் இதனை மாலை நேர ஸ்நாக்ஸாகவோ அல்லது குழம்புகள், தொட்டுக்கை அல்லது இனிப்பு வகைகளில் சேர்த்தோ சாப்பிடலாம்.
தாமரை விதைகளில் உள்ள அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, ஒரு கர்ப்பிணிப் பெண் தனது உணவில் சேர்க்கக்கூடிய மிக சத்தான உணவுகளில் இதுவும் ஒன்று. பின்வரும் அட்டவணையானது 100 கிராம் தாமரை விதைகளில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பின் அளவுகளைக் காட்டுகிறது.
ஊட்டச்சத்து தகவல் |
100 கிராமிற்கு |
புரதம் |
9.7 கிராம் |
கொழுப்புகள் |
0.1 கிராம் |
கலோரிகள் |
347 கேலரி |
லிப்பிட்டுகள் |
0.1 கிராம் |
கார்போஹைட்ரேட்டுகள் |
76.9 கிராம் |
நார்ச்சத்து |
14.5 கிராம் |
கால்சியம் |
60 மில்லிகிராம் |
இரும்புச்சத்து |
1.4 மில்லிகிராம் |
இந்த ஊட்டச்சத்துக்களைத் தவிர, இதில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், அமினோ அமிலங்கள், மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டச்சத்து அட்டவணையில் இருந்து, "கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள்" நல்லதா" என்ற பொதுவான கேள்விக்கான பதில் ஆம் என்பது தெரிய வருகிறது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தாமரை விதைகளை பச்சையாக சாப்பிட பிடிக்காமல் சமைத்து சாப்பிட விரும்பினால், அதனை வறுத்தோ அல்லது பாயாசம், லட்டுக்கள் செய்தோ சாப்பிடலாம்.
தாமரை விதைகளின் ஊட்டச்சத்து மதிப்பினை அதிகரிக்க, ரைஸ் புட்டிங் என்றழைக்கப்படும் பாயாசத்தில் கூட அவற்றை நீங்கள் சேர்த்து சாப்பிடலாம். பாயாசத்தில் தாமரை விதைதளை சேர்க்க முதலில் அவற்றை வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பாயாசம் செய்யும் பொழுது இந்த பொடியை தூவி விடலாம். இது பாயாசத்தின் நிலைத்தன்மை அதிகரித்து, அதற்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது.
குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் தாய்மார்கள் பாப்கார்ன் அல்லது பிற ஸ்நாக்ஸ் வகைகளுக்கு பதிலாக தாமரை விதைகளை சாப்பிடலாம். இதனை குறைந்த/மிதமான/அதிக தீயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து வறுத்து சாப்பிடுவது சிறந்தது. வறுத்த பின் அதனோடு உப்பு மற்றும் தேவைப்பட்டால் மிளகாய் தூள் அல்லது ஆரிகனோ சேர்த்து சாப்பிடலாம்.
தாமரை விதைகளில் இருந்து லட்டு செய்வது மிகவும் எளிமையான செய்முறை ஆகும். இதனை செய்வதற்கு, முதலில் ஒருவர் தாமரை விதைகளை வறுத்து, நைசாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை பால் மற்றும் உலர்ந்த பழங்கள் போன்ற பிற பொருட்களுடன் சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து கைகளால் உருட்டி உருண்டை பிடிக்கவும். கைகளில் நெய் தடவிக் கொண்டு உருட்டினால் ஈசியாக லட்டுக்கள் நல்ல வடிவத்தில் கிடைத்து விடும்.
கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஒரு சில முக்கியமான நன்மைகள் பின்வருமாறு -
அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சினைகளில் தூக்கமின்மை அடங்கும். இது ஹார்மோன் மாற்றங்கள் உடனான மன அழுத்தம் மற்றும் மாறிவிட்ட உணவு பழக்கங்களால் ஏற்படுகிறது. தாமரை விதைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகளுடன் காணப்படும் குயினோலின் ஆல்கலாய்டுகள் உடலை ரிலாக்ஸ் செய்து, நல்ல தூக்கத்தைத் தரும். எனவே, கர்ப்ப காலத்தில் தமாரை விதைகளை சாப்பிடுவது தூக்கமின்மையை சமாளிக்க பெரும் உதவியாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் தொடர்ந்து தாமரை விதைகள் சாப்பிடுவது, கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு இரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க உதவுகிறது. தாமரை விதைகளில் காணப்படும் அதிக அளவு மெக்னீசியம் மற்றும் சோடியம் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிக்க சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கிற்கு தாமரை விதைகள் ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது. இது வலிமையான செரிமான அமைப்பை உருவாக்குகிறது. கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம் சார்ந்த பிற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க கர்ப்பிணிப் பெண்கள் தினமும் தாமரை விதைகளை சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பெரும்பாலான பெண்கள் ஈறு வீக்கத்தை அனுபவிப்பார்கள். தாமரை விதைகளில் காணப்படும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஈறு வலியை தணிக்க உதவுகிறது. மேலும், தாமரை விதைகளில் உள்ள துத்தநாகம் (ஜின்க்) ஆனது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானதா?
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களின் எடை அதிகரிப்பது வழக்கம். இந்த நேரத்தில் பசி அதிகரிப்பு காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்பை சமாளிப்பது கடினமான காரியம் ஆகும். கர்ப்ப காலத்தில் சாப்பிட தாமரை விதைகள் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகையாகும். இது குறைந்த கிளைசீமிக் குறையீட்டைக் கொண்டுள்ளது. ஒரு சிறிய கப் அளவிலான தாமரை விதைகளை சாப்பிட்ட பிறகு ஒரு பெண் வயிறு நிரம்பியதாக உணர்வார்கள் என்பதே இதற்கான அர்த்தம்.
கர்ப்ப காலத்தில் தாமரை விதைகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்துமே மேலே சொல்லப்பட்டுள்ளது. எனவே, அடுத்த முறை கர்ப்பிணிப் பெண்கள் ஸ்நாக்ஸ் வாங்க ஷாப்பிங் செல்லும் போது, அந்த பட்டியலில் கண்டிப்பாக தாமரை விதைகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |