hamburgerIcon

Orders

login

Profile

STORE
SkinHairFertilityBabyDiapersMore
Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10Tackle the chill with hot discounts🔥 Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • Miscarriage arrow
  • கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு: காரணங்கள், அறிகுறிகள் & எப்படி தவிர்ப்பது? arrow

In this Article

    கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு: காரணங்கள், அறிகுறிகள் & எப்படி தவிர்ப்பது?

    Miscarriage

    கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படும் கருச்சிதைவு: காரணங்கள், அறிகுறிகள் & எப்படி தவிர்ப்பது?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    கருச்சிதைவு என்றால் என்ன?

    கருச்சிதைவு அல்லது திடீர் கருக்கலைப்பு என்பது கர்ப்பத்தை இழக்கும் ஒரு நிகழ்வாகும். இது பொதுவாக கர்ப்பத்தின் முதல் டிரைமெஸ்டரில் (முதல் மூன்று மாதங்கள்) ஏற்படுகிறது. ஒவ்வொரு ஐந்து கர்ப்பங்களில் ஒரு கருச்சிதைவு ஏற்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

    கருச்சிதைவின் அறிகுறிகள்

    கருச்சிதைவுக்கான அறிகுறிகள் உங்கள் கர்ப்பத்தின் நிலையைப் பொறுத்து மாறுபடும். ஒரு சில சந்தர்ப்பங்களில், கருச்சிதைவு மிக வேகமாக நிகழ்கிறது, நீங்கள் கர்ப்பமாக இருப்பதை கூட உணர முடியாது.

    கருச்சிதைவுக்கான சில அறிகுறிகளை இங்கே காணலாம்:

    உங்கள் கர்ப்ப காலத்தில் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கூட நீங்கள் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது அவசியமாகும்.

    கருச்சிதைவு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

    கருச்சிதைவு பல காரணங்களுக்காக ஏற்படலாம், எடுத்துக்காட்டாக,

    • நஞ்சுக் கொடி சார்ந்த பிரச்சனைகள்

    • குரோமோசோமல் குறைபாடு

    • கருப்பை அமைப்பில் உள்ள அசாதாரணங்கள்

    • பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

    • பலவீனமான கருப்பை வாய்

    • வாழ்க்கை முறை காரணிகள்

    ஆரம்பகால கருச்சிதைவு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

    ஆரம்பகால கருச்சிதைவு தற்செயலாக நிகழலாம். ஆனால், கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன.

    • வயது:

    இளம் பெண்களை விட 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகம்.

    • மரபணு காரணிகள்:

    கருவில் உள்ள குரோமோசோம் குறைபாடு போன்றவை.

    • உடலியல்:

    நஞ்சுக் கொடியின் வளர்ச்சியில் சிக்கல், கருவுற்ற முட்டையை கருப்பை லைனிங்கில் சரியாக பதியாமல் இருப்பது, கருப்பை வாய் பிரச்சனைகள், கருப்பை அசாதாரணங்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், ஹார்மோன் முறைகேடுகள் போன்றவை.

    • வாழ்க்கை முறை:

    புகை, போதைப்பொருள், மது, கதிர்வீச்சு பாதிப்பு, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை.

    2 வாரங்களில் கருச்சிதைவு இருப்பதற்கான அறிகுறிகள்

    • உங்கள் வயிற்றில் அல்லது கீழ் முதுகில் பிடிப்புகள் ஏற்படலாம்

    • குமட்டல்

    • வயிற்றுப்போக்கு

    • நீர், இரத்தம் முதலியவை பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறுதல்

    • பெரிய இரத்தக் கட்டிகள்

    • பெண்ணுறுப்பிலிருந்து திசு வெளியேறுதல்

    கருச்சிதைவு இரத்தப்போக்கு என்றால் என்ன?

    இரத்தப்போக்கு லேசானதாக தொடங்கி பின்னர் கடுமையான இரத்தப்போக்காக மாறும். கடுமையான இரத்த ஓட்டம் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை நீடிக்கும்.

    கருச்சிதைவின் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து பழுப்பு நிறத்தில் வெளியேறுவதை நீங்கள் காணலாம். இத்தகைய சமயத்தில் இருக்கும் இரத்தப்போக்கின் அளவானது அவர்கள் எத்தனை மாதம் கர்ப்பமாக உள்ளார்கள் மற்றும் கருச்சிதைவு இயற்கையாக முன்னேறுகிறதா என்பது உட்பட பல காரணிகளைப் பொறுத்து இருக்கும்.


    கருச்சிதைவு தொடர்பான புகைப்படங்கள்


    கருச்சிதைவிற்குப் பின் இரத்தம் கட்டிக்கொள்ளுதல்

    கருச்சிதைவுக்குப் பிறகு கருப்பையை இயற்கையாக வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?

    கர்ப்ப இழப்பு பெண்களை உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிக்கும். விரைவாக குணமடையவும், எதிர்காலத்தில் ஆரோக்கியமான கர்ப்பத்தின் வாய்ப்புகளை மேம்படுத்தவும் நிறைய ஓய்வு எடுப்பது சிறந்தது.

    கருச்சிதைவுக்குப் பிறகு இயற்கையான முறையில் கருப்பையை சுத்தம் செய்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள் இங்கே:

    • ஓய்வு எடுத்து சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்

    • கருச்சிதைவுக்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களுக்கு உடலுறவைத் தவிர்க்க வேண்டும்

    • குளிர்ந்த மட்டும் வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்க வேண்டும்

    • ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும்

    • உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்

    கருச்சிதைவுக்குப் பிறகு அடுத்த கர்ப்பம்

    கருச்சிதைவுகள் மனதை காயப்படுத்தும், மற்றும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தலாம். கவலை, சோகம் மற்றும் இழப்பின் உணர்வு உட்பட பலவிதமான உணர்ச்சிகள் இருக்கலாம். ஆனால், ஒரு குழந்தையை இழப்பது உங்கள் எதிர்கால கருவுறுதலை பாதிக்காது. இந்த நேரத்தில், எந்தவொரு தொற்றுநோயையும் தடுக்க குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சிறப்பாகவும் தயாராகவும் உணர்ந்தவுடன், நீங்கள் மீண்டும் கர்ப்பமாக திட்டமிடலாம்.

    வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்காக உங்கள் உடல்நலப் பாதுகாப்பு வழங்குநரின் நிபுணத்துவ வழிகாட்டுதலைப் பின்பற்றுவது எப்போதும் சிறந்தது.

    கருச்சிதைவுக்குப் பிறகு கருத்தரிப்பதற்கான டிப்ஸ்

    நீங்கள் மீண்டும் கருத்தரிக்க தயாராக இருக்கும் போது, கருத்தரிப்பதற்கும் ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பெறுவதற்கும் ஏராளமான டிப்ஸ் உள்ளன:

    • எந்தவொரு அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளையும் தீர்க்கவும்

    • ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்

    • மன அழுத்தத்தை நிர்வகிக்க முயற்சி செய்யவும்

    • உங்கள் காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளலைச் சரிபார்க்கவும்

    • புகைப்பழக்கத்தை நிறுத்தவும்

    கருச்சிதைவைத் தவிர்ப்பது எப்படி?

    கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை கருச்சிதைவைத் தவிர்க்க உதவும். கருச்சிதைவைத் தடுக்க உதவும் சில டிப்ஸ் இதோ:

    • ஒவ்வொரு நாளும் அல்லது உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ளவும்

    • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்

    • ஆரோக்கியமான, நன்கு சீரான உணவை உண்ணுங்கள்

    • மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

    • ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும்

    • புகைபிடிக்கவோ குடிக்கவோ வேண்டாம்

    • தடை செய்யப்பட்ட மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்

    • தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்

    • கதிர்வீச்சைத் தவிர்க்கவும்

    • அதிக காயம் ஏற்படக்கூடிய விளையாட்டுகளைத் தவிர்க்கவும்

    • எந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன், உங்கள் சுகாதார வழங்குநரிடம் ஆலோசிக்கவும்

    கருக்கலைப்புகள் என்றால் என்ன மற்றும் கருக்கலைப்பில் உள்ள வகைகள் என்னென்ன?

    கருக்கலைப்பு என்பது கர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மருத்துவ வழிமுறையாகும். கருக்கலைப்பில் பல்வேறு வகைகள் உள்ளன, அவை:

    • மருத்துவ கருக்கலைப்பு

    • வாக்யும் ஆஸ்பிரேஷன்

    • டைலேஷன் மற்றும் எக்ஸ்ட்ராக்‌ஷன்

    • லேபர் இன்டக்‌ஷன்

    கருக்கலைப்பு அறிகுறிகள்

    • உங்கள் வயிறு அல்லது கீழ் முதுகில் வலி அல்லது தசைப்பிடிப்பு

    • பெண்ணுறுப்பில் இரத்தக் கசிவு அல்லது இரத்தப் போக்கு

    • உங்கள் பெண்ணுறுப்பிலிருந்து திரவம் அல்லது திசு வெளியேறுவது

    கருக்கலைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது (செயல்முறை)?

    • நீங்கள் ரிலாக்ஸ்ட் ஆக இருக்க ஒரு மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது.

    • உங்கள் கால்களை ஆதரிக்க ஸ்டிரப்கள் (stirrups) பயன்படுத்தப்படுகின்றன. இவை உங்கள் கால்களை சரியான நிலையில் வைக்க உதவும். இதன் மூலம் உங்கள் மருத்துவரால் உங்கள் பெண்ணுறுப்பை பரிசோதிக்க வசதியாக இருக்கும்.

    • செயல்முறையின் போது வலியிலிருந்து நிவாரணம் பெற, உங்கள் மருத்துவர் உங்கள் கருப்பை வாயை மரத்துப் போகச் செய்வார்.

    • டைலேட்டர்கள் சிறிய ராடுகள் ஆகும், அவை உங்கள் கருப்பை வாயில் செருகப்பட்டு திறக்கப்படும். இந்த டைலேட்டர்கள் விரிவடைவதற்கு உதவுகின்றன, மேலும் இது செயல்முறைக்கு ஒரு நாள் முன்பு செய்யப்படுகிறது.

    • உங்கள் கருப்பையில் செருகப்பட்ட குழாயின் உதவியுடன் அனைத்து திசுக்கள் மற்றும் திரவத்தை அகற்ற ஒரு வாக்யும் பயன்படுத்தப்படுகிறது.

    • செயல்முறை முடிந்த பிறகு, உங்களுக்கு ஆண்டிபயாட்டிக்ஸ் வழங்கப்படும், அது நோய்த்தொற்றின் ஆபத்தைக் குறைக்கும்.

    கருக்கலைப்பின் பக்க விளைவுகள்

    • கருப்பையில் தொற்று

    • வயிற்றில் மீதமுள்ள சில கர்ப்ப திசு

    • அதிக இரத்தப்போக்கு

    • கருப்பை அல்லது கருப்பையின் நுழைவாயிலுக்கு சேதம்

    கருக்கலைப்பு மாத்திரை என்றால் என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை என்பது மருத்துவ ரீதியாக கருக்கலைப்பைத் தூண்டும் மருந்து. கர்ப்பத்தை நிறுத்தும் இரண்டு வகையான மாத்திரைகளை உட்கொள்வது இதில் அடங்கும். இந்த மருந்துகள் கருக்கலைப்பு சேவைகளை வழங்கும் கிளினிக்குகளில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

    கருக்கலைப்பு மாத்திரைகளின் பக்க விளைவுகள்

    • வாரக்கணக்கில் நீடிக்கும் இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்பு

    • குமட்டல் மற்றும் வாந்தி

    • வயிற்றுப்போக்கு

    • மயக்கம்

    • தலைவலி

    இதையும் படிக்கலாமே! - 5 வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்ட பிறகு எவ்வளவு விரைவில் நீங்கள் மீண்டும் கர்ப்பத்திற்காக முயற்சிக்க வேண்டும்?

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    1. வெந்நீர் குடிப்பதால் கருச்சிதைவு ஏற்படுமா?

    இல்லை, சூடான தண்ணீர் கருச்சிதைவை ஏற்படுத்தாது. மாறாக, கர்ப்ப காலத்தில் வெந்நீர் குடிப்பது மிகவும் உதவியாக இருக்கும்; இது உங்களை ஹைட்ரேட்டடாக வைத்திருக்கும், மேலும் நீங்கள் சோர்வாக உணர மாட்டீர்கள்.

    2. முதல் டிரைமெஸ்டரில் உடலுறவு கருச்சிதைவை ஏற்படுத்துமா?

    இல்லை, கர்ப்ப காலத்தில் உடலுறவு கருச்சிதைவை ஏற்படுத்தாது.

    3. அன்னாசி பழச்சாறு எவ்வளவு கருச்சிதைவை ஏற்படுத்தும்?

    அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற புரோட்டியோலிடிக் என்சைம் உள்ளது. புரோமிலைன் அதிகப்படியான கருச்சிதைவை ஏற்படுத்தும் என்று சான்றுகள் காட்டுகின்றன. எனவே, அன்னாசிப்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

    4. இந்தியாவில் கருக்கலைப்பு மாத்திரையின் பெயர் மற்றும் விலை

    மைஃபேப்ரிஸ்டோன் (Mifepristone) 200 மற்றும் மிஸோப்ரோஸ்டால் (Misoprostol) 200, ரூ. 1000

    5. கருக்கலைப்பு மாத்திரைகள் கருப்பையை சேதப்படுத்துமா?

    கருக்கலைப்பு மாத்திரைகள் பெண்ணுறுப்பில் ஏற்படும் இரத்தப்போக்கு, தசைப்பிடிப்பு, முழுமையடையாத கருக்கலைப்பு மற்றும் கருப்பையில் இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும். எந்தவொரு சிக்கல்களையும் தவிர்க்க, கருக்கலைப்பு மாத்திரையை உட்கொள்வதற்கு முன்பு ஒரு மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    6. வேகமாக குணமடைய கருக்கலைப்புக்குப் பிறகு என்ன சாப்பிட வேண்டும்?

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது இரும்புச்சத்து சப்ளிமெண்ட்ஸை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் ஹீமோகுளோபின் அளவைப் பராமரிக்கலாம்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    foot top wavefoot down wave

    AWARDS AND RECOGNITION

    Awards

    Mylo wins Forbes D2C Disruptor award

    Awards

    Mylo wins The Economic Times Promising Brands 2022

    AS SEEN IN

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.

    Product Categories

    baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |