Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பம் என்பது உற்சாகமான காலமாக இருந்தாலும், அது நிச்சயமற்றதாகவோ அல்லது கவலையாகவும் கூட இருக்கலாம். கர்ப்ப காலத்தில், பெரும்பாலான பெண்கள் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், வேலை செய்யுமிடத்தில் கர்ப்பமாக இருப்பது ஒரு சில சவால்களை முன்வைக்கலாம். உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சில வேலைகளைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லது கவலைப்படுகிறீர்கள் என்பதை உங்களுடைய முதலாளியிடம் எப்படிச் சொல்வது என்று நீங்கள் கவலைப்படலாம்.
பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது தொடர்ந்து வேலை செய்யலாம். உங்களுடைய வேலையின் பாதுகாப்பானது, வாழ்க்கைக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்கள் உடல்நிலை அல்லது உங்கள் கர்ப்பத்தில் உங்களுக்கு ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா என்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. உங்களுடைய வேலையைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் அல்லது உங்களுடைய வேலையானது உங்களுக்கு ஏதேனும் ஆபத்துகளை ஏற்படுத்தினால், நீங்கள் உங்களுடைய மருத்துவர்களைத் தொடர்புகொள்ளவும். இதில் இருக்கும் சில அபாயங்கள்:
கதிர்வீச்சு, இரசாயனங்கள் அல்லது பிற ஆபத்தான பொருட்களின் வெளிப்பாடு.
நீண்ட நேரம் நின்று கொண்டு இருத்தல் மற்றும் நீண்ட நேரம் ஏறுதல்
அதிக எடையை தூக்குவது அல்லது சுமப்பது
கனரக இயந்திரங்களிலிருந்து வரும் அதிக சத்தமான ஒலிகள் அல்லது அதிர்வுகள்.
வெப்பம் அல்லது குளிர் போன்ற தீவிரமான வெப்பநிலை.
நீங்கள் வேலை செய்யும் மணிநேரங்களின் எண்ணிக்கை மற்றும் நாளின் தருணத்தையும் கூட நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு காரணியாகும். ஒவ்வொரு வாரமும் 40 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் குறைப்பிரசவம் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் மூன்று மாதங்களில் ஆபத்து அதிகமாக இருக்கும். பகலில் வேலை செய்பவர்களை விட வாரத்திற்கு குறைந்தது இரண்டு இரவுப் பணிகளில் வேலை செய்யும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் ஒரு ஆய்வு முடிவு செய்துள்ளது. சர்க்காடியன் ரிதம் மற்றும் மெலடோனின் ஹார்மோனின் உற்பத்தி போன்றவை நஞ்சுக்கொடியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது இதற்கான பதிலாகும்.
ஆரம்பகால கர்ப்பத்திற்கான அறிகுறிகள் காரணமாக, வேலை செய்வது பாதுகாப்பானதா இல்லையா என்பதை நீங்கள் எல்லா வகையான வழிகளிலும் உணரலாம். இருப்பினும், வேலை செய்யும்போது இந்த அறிகுறிகளை எப்படி சமாளிப்பது என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
பெரும்பாலான பெண்களுக்கு, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உங்களுடைய தூண்டுதல்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்கவும். ரொட்டி, சுடப்பட்ட உணவுகள் மற்றும் ஆப்பிள் சாஸ் போன்ற மென்மையான உணவுகளால் செய்யப்பட்ட சிறிய உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளை நாள் முழுவதும் சாப்பிடுவதும் உதவும். இந்த மாதிரியான சமயத்தில் இஞ்சி தேநீர் அல்லது இஞ்சி சாறு சிறிது நிவாரணம் அளிக்கும்.
மேலும், உங்களுக்கு கடுமையான மசக்கை இருந்தால், உங்கள் கர்ப்பத்தைப் பற்றி உங்கள் முதலாளியிடம் தெரிவிப்பது நல்லது. இருந்தாலும், நீங்கள் வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது குளியலறையை அடிக்கடி பயன்படுத்துவதற்காக வெளியேறினாலோ என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். கர்ப்ப காலத்தில் வைட்டமின் பி6 எடுத்துக்கொள்வது குமட்டலைத் தணிக்கும் என்பதால் இது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உங்களுக்கு கடுமையான குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் மற்றும் எடை குறைவு இருந்தால், உங்களுடைய மருத்துவர் உங்களுக்கு ஒரு சில மருந்துகளை பரிந்துரைக்கலாம்.
கர்ப்பத்தின் போது நீண்ட நேரம் வேலை செய்வதால் சோர்வு ஏற்படும், எனவே கர்ப்பத்தின்போது ஆதரவு தேவைப்படும். ஆனால் வேலை நேரத்தில் ஓய்வெடுப்பது என்பது சவாலானதாக இருக்கும். மெலிந்த இறைச்சி, கோழி, கடல் உணவு மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்ற இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதால் சோர்வை குறைப்பதற்கு உதவும். சோர்வு என்பது இரும்புச்சத்து குறைபாடு பற்றிய எச்சரிக்கையாக இருந்தாலும், உங்களுடைய உணவை மாற்றியமைத்துக் கொள்வது சோர்வைக் குறைப்பதற்கு உதவும்.
அவ்வப்போது எழுந்து ஒரு சில நிமிடங்கள் நடப்பதும், அடிக்கடி சிறு சிறு இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்வதும் மிகவும் உதவியாக இருக்கும். உங்களுடைய கண்களை அவ்வப்போது மூடி திறப்பதும் மற்றும் அவ்வப்போது எழுந்து சென்று விளக்குகளை அணைப்பது நன்மை பயக்கும். உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள் மற்றும் நிறைய திரவங்களை அடிக்கடி குடிக்கவும். வேலை செய்யாத செயல்களை மீண்டும் அளவிடுவதன் மூலம் வேலைக்குப் பிறகான ஓய்வெடுக்கும் நேரத்தை அதிகமாக்கலாம். தினமும் இரவு குறைந்தது எட்டு மணி நேரமாவது நன்றாகத் தூங்குங்கள். குழந்தைக்கு இரத்த ஓட்டம் எளிதாக்குவதற்கும் மற்றும் வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் நீங்கள் பக்கவாட்டில் படுத்துத் தூங்கவும். கூடுதல் வசதிக்காக நீங்கள் தலையணைகளையும் பயன்படுத்தலாம்.
உட்காருதல் மற்றும் நிற்பது போன்ற அன்றாட நடவடிக்கைகள் கர்ப்பமாக இருக்கும்போது சங்கடமாக இருக்கும். சில மணிநேரத்திற்கு ஒருமுறை நடப்பது தசை பதற்றத்தை எளிதாக்கும் மற்றும் கால்கள் மற்றும் பாதங்களில் திரவம் தேங்குவதைத் தடுக்க உதவும். இதற்கு நீங்கள் மற்ற உத்திகளையும்கூட பயன்படுத்தலாம்.
நாற்காலியைப் பயன்படுத்தும் போது, முதுகிற்கு ஆதரவு தருவதற்கேற்றவாறு எப்போதும் நேராக உட்காரவும் அல்லது சிறிய தலையணை அல்லது குஷனை பயன்படுத்தவும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை எளிதாக்குவதற்கு, குறிப்பாக உடல் எடை மற்றும் தோரணை மாறும்போது, கீழ் முதுகிற்கு ஆதரவு தருவதற்கேற்றவாறு இருக்கும் சரிசெய்யக்கூடிய நாற்காலியையும் நீங்கள் பயன்படுத்தலாம். கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கு, உட்காரும்போது கால்களை சற்று தூக்கிய நிலையில் வைத்தவாறு உட்காரவும்.
ஃபுட்ரெஸ்ட், சிறிய ஸ்டூல் அல்லது பெட்டியின் மீது கால் வைப்பது, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பவர்களுக்கு உதவும். மேலும், உங்களுடைய கால்களுக்கு போதுமான ஆதரவை வழங்கும் செளகரியமான காலணிகளை அணியுங்கள். நின்று கொண்டிருக்கும்போது அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொள்ளவும், அடிக்கடி கால்களை மாற்றி வைத்து நிற்கவும். சப்போர்ட் மற்றும் கம்ப்ரஸ்ஸன் ஹோஸ் கூட இதற்கு உதவும்.
எந்தவொரு எடையையும் தூக்கும் போது, சரியான ஆதரவு கொடுத்து தூக்கினால் உங்களுடைய முதுகு பாதுகாப்பாக இருக்கும். மேலும், எடையைத் தூக்கும்போது உடலையும் இடுப்பையும் நேரிடையாக வளைக்காமல், முழங்கால்களை வளைத்து தூக்கவும். மேலும், கால்களால் எடையைத் தூக்கும் போது எடையை உடலுக்கு அருகில் வைக்கவும்.
உங்கள் முதுகு மற்றும் இடுப்புப் பகுதியில் வயிற்றில் ஏற்படும் சிரமத்தை எளிதாக்குவதற்கு கர்ப்பத்திற்கு சப்போர்ட் செய்யும் பெல்ட்டை அணிந்து கொள்ளுங்கள். மேலும், வலியைக் குறைப்பதற்கு, ஹீட் பேண்டுகள் அல்லது ஐஸ் பேக்குகளைப் பயன்படுத்தவும்.
வேலை செய்யும்போது ஏற்படும் மன அழுத்தமானது தேவையான ஆற்றலை வெளியேற்றிவிடும். மேலும், தினமும் செய்ய வேண்டிய செயல்பாடுகளுக்கான பட்டியலை உருவாக்கி, அந்தந்த வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வேலை செய்யுமிடத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க முயற்சிக்கவும். மேலும், அந்த வேலையை வேறொருவரிடம் ஒப்படைக்க முயற்சிக்கவும். உங்களுக்கு ஆதரவு தரும் சக பணியாளர், நண்பர் அல்லது அன்புக்குரியவருடன் பகிர்ந்துகொள்வதன் மூலமும் நீங்கள் அதைப்பற்றிப் பேசலாம். மெதுவாக சுவாசிப்பது அல்லது தியானம் போன்ற தளர்வு நுட்பங்களை முயற்சிக்கவும். மேலும், நினைவாற்றல் மற்றும் தியானத்திற்கென்று பல செயலிகள் உள்ளன. உங்களுடைய மருத்துவர் அதை அங்கீகரிக்கும் வரைக்கும், நீங்கள் மகப்பேறுக்கு முந்தைய யோகா வகுப்பில் சேரலாம்.
உங்களுடைய வேலையை பாதுகாப்பானதாக்க, உங்கள் முதலாளியால் உங்களுக்கென்று குறிப்பிட்ட பாதுகாப்பான தங்குமிடங்களை கொடுப்பார். மேலும், உங்களுடைய கர்ப்பம் காரணமாக உங்கள் வேலைக்கான கடமைகளை தற்காலிகமாகச் செய்ய முடியவில்லை என்றால் உங்கள் முதலாளி உங்களுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடையும் காட்ட மாட்டார். இருந்தாலும், மற்ற ஊழியர்கள் உங்களை தற்காலிக மாற்றுத் திறனாளியாக கருதுவதற்கு வாய்ப்புள்ளது. தற்காலிக குறைபாடுகளைக் கொண்ட மற்ற ஊழியர்களுக்கு கிடைக்கும் நடவடிக்கைகளைப் போல உங்களுக்கும் கொடுக்கப்படலாம், அதாவது உங்களுக்கு லேசான வேலைச்சுமை, வெவ்வேறு பணிகள் அல்லது இயலாமை அல்லது ஊதியம் இல்லாத விடுப்பு கூட வழங்கப்படலாம். மேலும், வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு பணியிடங்கள் பலவிதமான கொள்கைகளைக் கொண்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே இது தொடர்பாக நீங்கள் உங்களுடைய மனித வள மேலாளர் துறையை தொடர்பு கொள்ளவும்
உங்களுடைய கர்ப்பத்தைப் பற்றி உங்கள் முதலாளியிடம் எப்போது சொல்ல வேண்டும் என்பதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை. இருந்தாலும், உங்கள் கர்ப்பத்தைப் பற்றி எப்போது பகிர வேண்டும் என்பதற்கான சில பரிசீலனைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன:
நீங்கள் வேலை செய்யும்போது அதிக எடை தூக்குதல், இரசாயனங்கள் அல்லது பிற ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், நீங்கள் இந்தச் செய்தியை கூடுமானவரைக்கும் மிக விரைவிலேயே உங்கள் முதலாளியுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
குறிப்பாக உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது கூடுதல் மருத்துவர் வருகை அல்லது ஓய்வு தேவைப்படும் அளவில் கர்ப்ப சிக்கல்களை அனுபவித்தால், நீங்கள் உங்களுடைய கர்ப்ப செய்தியை முதலாளியிடம் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களுக்கு ஒரு பதவி உயர்வு அல்லது செயல்திறன் மதிப்பாய்வு போன்ற ஏதாவtஹொரு நல்ல செய்தி வருவது மாதிரி இருந்தால், இந்த கர்ப்பம் பற்றிய செய்தியானது உங்கள் மதிப்பீட்டைப் பாதிக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், சிறிது காலம் வரைக்கும் நீங்கள் காத்திருக்கலாம்.
உங்களுக்கு வேலை கொடுத்தவர் இந்தச் செய்தியை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நீங்கள் கவலைப்பட்டால், இதைப்பற்றி அவரிடம் பக்குவமாகச் சொல்வதற்கு சரியான நேரத்தைத் தேர்வு செய்து அவரிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லலாம்.
மேலும், உங்களுடைய முதலாளியிடம் இதுதான் குறிப்பிட்ட வாரம் என்று சொல்ல முடியாது, ஆனால் இறுதியில் உங்களுடைய மகப்பேறு கால உடல் அமைப்பானது அவருக்கு நேரடியாகத் தெரிவித்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூடுதலாக, மற்றவர்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் செய்திகளைக் கேட்பது நல்லது. உங்களுடைய முதலாளியிடம் கூறுவதற்கான சில குறிப்புகள்:
உங்கள் கர்ப்பத்தைப் பற்றி சொல்வதற்கு முன்பு, நீங்கள் உங்களுடைய பணியிடத்தின் கொள்கைகளைப் பாருங்கள். இந்தத் தகவலானது பணியாளர் கையேட்டில் அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கும். இந்தத் தகவலைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உதவிக்கு மனிதவள மேலாளரைத் தொடர்புகொள்ளவும்.
மற்றவர்கள் மூலமாக உங்களுடைய கர்ப்பத்தைப் பற்றி உங்களுடைய முதலாளி தெரிந்து கொள்வதற்கு முன்பு, நீங்களே உங்களுடைய முதலாளியிடம் உங்கள் கர்ப்பத்தைப் பற்றி சொல்வதற்கு ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ளவும். உங்களிடமிருந்து உதவி எதிர்பார்ப்பதற்கும், எந்தவொரு பிரச்சினைக்குமான கேள்விகளைக் கேட்கவும், தீர்வுகளைக் கண்டறியவும் இது உதவியாக இருக்கும்.
உங்களுடைய கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தை பிறந்த பிறகு, உடன் பணிபுரிபவர்களுடனான கடமைகளை மாற்றுவதற்கான யோசனைகளின் பட்டியலைக் கொண்டு வாருங்கள் இது உங்களுடைய அடுத்த இடைவேளைக்கான சாத்தியமான கவரேஜ் ஆகும்.
உங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு எவ்வளவு காலம் வரைக்கும் வேலைக்கு வர முடியாது என்பதை முதலாளியிடம் விவாதிக்கவும். இதைப்பற்றி நீங்கள் இன்னும் முடிவு செய்யாவிட்டாலும்கூட, நேர்மையாக இருங்கள்.
ஒட்டுமொத்தமாக, உங்களுடைய தொனியை நேர்மறையாக வைத்திருங்கள். நீங்கள் குழுவின் மதிப்புமிக்க உறுப்பினர் என்பதையும், நீங்கள் கர்ப்பமாக இருப்பதால் அது மாறாது என்பதையும் உங்களுடைய முதலாளிக்கு உணர்த்துங்கள்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பமாக இருக்கும் போது பயணம் செய்வது சரியா?(Is It Okay To Commute While Pregnant?In Tamil)
உங்களுடைய பிரசவ நேரம் நெருங்கும்போது மகப்பேறுக்கு முந்தைய ஒவ்வொரு சந்திப்புகளிலும் உங்களுக்கு ஓய்வு தேவைப்படும். இந்த சமயத்தில் நீங்கள் ஏதாவது சிக்கல்களைச் சந்தித்தால், கூடுதல் சந்திப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் உங்களுடைய மருத்துவரை தவறாமல் சந்திப்பதுதான் ஆரோக்கியமான கர்ப்பத்தை பராமரிப்பதற்கான முக்கியமான திறவுகோலாகும். எனவே, நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி உங்களுடைய வேலை கொடுப்பவரிடம் வெளிப்படையாக சொல்லுங்கள் மேலும் இதற்கான ஒரு நெகிழ்வான அட்டவணையை அவரிடம் கேட்கவும். உங்களுடைய வேலை செய்யும் இடத்தைப் பொறுத்து, நெகிழ்வான அட்டவணைகள் மாறுபடலாம், இதில் பின்வருவன அடங்கும்:
பகல் பொழுதில் தாமதமாக வந்து தாமதமாகச் செல்வது அல்லது சீக்கிரமாக வந்து சீக்கிரமாகச் சென்றுவிடுவது.
தாமதமாக வந்தாலோ அல்லது சீக்கிரமாகச் செல்ல வேண்டுமென்றால், உங்களுடைய மதிய உணவு இடைவேளையை மாற்றிக் கொள்ளவும்.
வார விடுமுறை நாளில் மற்றும் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் அதிக நேரம் வேலை செய்து கொள்ளலாம்.
உங்களுடைய நிறுவனத்தில் நெகிழ்வான அட்டவணைக்கான விருப்பம் வழங்கப்படவில்லை என்றால், உங்களுடைய சந்திப்புகளைத் திட்டமிடுவதற்கு பின்வரும் உதவிக்குறிப்புகளைக் கவனியுங்கள்:
முடிந்தால், உங்களுடைய மதிய உணவு நேரத்திலோ அல்லது ஒரு விடுமுறை நாளிலோ சந்திப்பதற்குச் செல்லுங்கள்.
அவர்கள் வேறு ஏதாவதொரு நேரத்தைக் கொடுத்தால், அதற்கேற்றவாறு மருத்துவரைச் சந்திப்பதற்கு, நீங்கள் உங்களுடைய மருத்துவரைக் கேளுங்கள். சில மருத்துவர்கள் தங்களுடைய மருத்துவமனையில் பிஸியான வேலை அட்டவணைகளுக்கு இடையில் உங்களைச் சந்திப்பதற்கு மாலை அல்லது வார இறுதி சந்திப்புகளை வழங்கலாம்.
உங்களுடைய வேலைக்கு முன்கூட்டியே கவரேஜ் கிடைக்கும் வகையில், உங்கள் சந்திப்புகளைப் பற்றி உங்கள் முதலாளிக்கு முன்கூட்டியே தெரிவிக்க முயற்சிக்கவும்.
சந்திப்பிற்குத் திட்டமிடும்போது, மிகவும் அதிகமான கூட்டத்தில் நிற்பதைத் தவிர்ப்பதற்கு உங்கள் காலெண்டரை கையில் வைத்திருக்கவும்.
மகப்பேறு நன்மைகள் சட்டம் 2017ன் படி, பிரசவகால விடுப்புக்குத் தகுதிபெறுவதற்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 80 நாட்களாவது வேலை செய்திருக்க வேண்டும், என்று தகுதித் தேவைகள் என்று கூறுகின்றன. மேலும் குறிப்பிடப்பட்ட 80 நாட்களின் காலமானது கடந்த 12 மாதங்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். இருந்தாலும், ஒருவேளை கருச்சிதைவு ஏற்பட்டால், இழப்பு ஏற்பட்ட நாளிலிருந்து ஆறு வார விடுமுறைக்கான பலன்கள் மட்டுமே உங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. வாடகைத் தாய்க்கு 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.
எப்படி இருந்தாலும், இந்தியாவின் மகப்பேறு விடுப்புச் சட்டம் 2007இன் படி, விடுப்பு காலம் முழுவதும் இழப்பீட்டுத் தொகையானது, உண்மையில் இல்லாத காலத்திற்கான தினசரி வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. முதலில், இந்தியாவில் பிரசவ கால விடுப்பானது ஆறு மாதங்களுக்கு மட்டுமே இருந்தது. பிறகு, 2017 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின்படி, இது கூடுதலாக இன்னும் 6 மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டது. இந்தியாவில், குறைந்தபட்சம் பத்து தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து பெண்களுக்கும் சுமார் 6 மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். அதே நேரத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்க்கு 12 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுப்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இருந்தாலும், மகப்பேறு நன்மைகளுக்கான சட்டம் 2017 ஆனது மகப்பேறு விடுப்பு காலத்தை 26 வாரங்களாக உயர்த்தியது.
உங்களுடைய நிலுவைத் தேதி நெருங்கும்போது, உங்களின் திட்டமிடல்களில் ஏதாவது மாற்றம் கூட ஏற்படலாம். குறைப்பிரசவம் போன்ற உடல்நல சிக்கல்களை நீங்கள் சந்தித்தால், வேலையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்லி உங்களுடைய மருத்துவர் பரிந்துரைக்கலாம். குறைப்பிரசவத்திற்கான ஒரு சில அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன:
வயிற்றுப் பிடிப்பு மற்றும் அசௌகரியம்.
பிறப்புறுப்பிலிருந்து நீர், இரத்தம் அல்லது வெள்ளைப்படுதல் போன்றவை வெளியேறுதல்.
அளவுக்கதிகமான வெளியேற்றம்.
முதுகு வலி
வலி அல்லது வலியற்ற சுருக்கங்கள் அடிக்கடியும், அவ்வப்போதும் வரும்.
சவ்வுகளின் முறிவு, பனிக்குடம் உடைதல் என்றும் அழைக்கப்படுகிறது.
உங்களுடைய நிதி நிலைமை, உங்கள் வேலையின் பங்கு, கர்ப்ப காலத்தில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், உங்களுடைய மற்றும் உங்கள் பணியாளரின் விருப்பத்தேர்வுகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்து நீங்கள் வேலை செய்வதை நிறுத்த திட்டமிடுங்கள். பல பெண்களின் கூற்றுப்படி, பிரசவ கால விடுப்புக்கான சிறந்த நேரம் 34-36 வது வாரங்களாகும். நீங்கள் 36 வது வாரத்தில் இருந்து பிரசவ கால விடுப்பைத் தொடங்க விரும்பினால், நீங்கள் கர்ப்பமாக இருக்கும் 26 வாரங்களுக்குள் உங்களுடைய திட்டங்களைப் பற்றி நீங்கள் உங்கள் முதலாளியிடம் தெரிவிக்க வேண்டும். இருந்தாலும், உங்களுடைய நிலுவைத் தேதி அல்லது அதற்கு முன்னதாகவே உங்களுடைய முதலாளி ஒத்துக்கொண்டால், உங்களுடைய பிரசவ கால விடுப்பை 6 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கலாம். நீங்கள் உங்களுடைய நிலுவைத் தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் வேலை செய்ய விரும்பினால், அதற்காக உங்கள் முதலாளி மருத்துவச் சான்றிதழையும் கேட்கலாம். நீங்கள் அவரிடம் கொடுக்கும் மருத்துவச் சான்றிதழில் நீங்கள் வேலையைத் தொடரலாம் என்றும் நீங்கள் வேலை செய்வது பாதுகாப்பானது என்றும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இருந்தாலும், குறைப்பிரசவம் மட்டும் சிக்கலாக இருக்காது, கர்ப்ப காலத்திலும் கூட நீங்கள் இதை அனுபவிக்கலாம், மேலும் இது உங்களுடைய வேலை செய்யும் திறனை பாதிக்கும். இந்த சிக்கல்களைத் தவிர, உங்களின் தூங்கும் முறை அல்லது வீக்கம் போன்ற பிற உடல் நிலைகள் உங்களுடைய வேலையை சங்கடப்படுத்துகின்றன. இந்த மாதிரியான சிக்கல்கள் மற்றும் அறிகுறிகள் ஏதாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் உங்களுடைய மருத்துவரிடம் விவாதிக்கவும். வேலை செய்யும்போது நீங்கள் எப்படி செளகரியமாக இருப்பது அல்லது குறிப்பிட்ட இணக்கத்தினைப் பெறுவதற்கு அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பை எழுதி வைத்திருப்பது போன்ற பரிந்துரைகள் உங்களுடைய மருத்துவரிடம் இருக்கக்கூடும். வேலை பாதுகாப்பாக இல்லை என்றால் நீங்கள் சிறிது நேரம் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி உங்களுடைய மருத்துவரும் பரிந்துரைக்கலாம்.
உங்களுடைய கர்ப்ப காலத்திலும் மற்றும் அதற்குப் பிறகும் உங்களால் பாதுகாப்பாக வேலை செய்ய முடியும் என்றாலும் கூட, முதலில் உங்களுடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொள்வது முக்கியம். இருந்தாலும், ஒவ்வொரு கர்ப்பமும் மற்றும் வேலைக்கான சூழ்நிலைகளும் தனித்துவமானவை. எனவே, கர்ப்ப காலத்தில் வேலை செய்வது தொடர்பான ஏதேனும் விவரங்களுக்கு நீங்கள் உங்களுடைய நிறுவனத்தின் மனிதவளத் துறையைத் தொடர்பு கொள்ளவும். உங்களுடைய உடல்நலம் அல்லது உங்களுடைய குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உங்களுடைய வேலைக்கான பொறுப்புகள் தொடர்பான கேள்விகள் ஏதாவது இருந்தால் அதற்காக நீங்கள் உங்களுடைய மருத்துவரைத் தொடர்பு கொள்வது மற்றொரு நல்ல ஆதாரமாகும்.
pregnancy complications in tamil, working women during pregnancy in tamil, maternity leave in tamil, how to schedule timings during pregnancy in tamil, Is safe working during pregnancy in tamil
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |